>

ad

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறல்




#பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் வெளிநாட்டு பல்கலைகழகத்துக்கான அங்கீகார கடிதம் என்பது உங்களது வெளிநாட்டுப் பட்டம் உண்மையானது என்றோ அல்லது நீங்கள் அந்த பல்கலைகழகத்தில் படித்தீர்கள் என்றோ உங்களது வெளிநாட்டுப் பட்டம் அங்கீகரிக்கபடுகிறது என்றோ உறுதிப்படுத்தாது.

அக்கடிதம் வெறுமனே 13ம் திகதி பங்குனி மாதம் 1992ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலக்கம் 16/92 இன் படியான சுற்றறிக்கையின் படி இரண்டு வகையான பல்கலைக்கழக புத்தகத்திலுள்ள பட்டம் வழங்கும் நிறுவனத்தை மட்டுமே அங்கீகரிப்பதாக குறிப்பிடப்படும் (உங்களுடைய பட்டங்களை அல்ல).

1. International Association of Universities http://www.whed.net/home.php
2. Association of Commenwealth Universities https://www.acu.ac.uk/

மேலுள்ள இரு வலைப்பக்கத்திலுள்ள பல்கலைகழகங்கள் மட்டுமே அங்கீகரிக்கபடும். ஆனால் மேலுள்ள இணையத்தளங்களில் போலி பல்கலைகழகங்கள் மற்றும் காசுக்கு பட்டம் விற்கும் பல்கலைகழகங்கள் மற்றும்  அங்கீகரிக்கப்படாத பட்டங்களை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் இணையத்தளங்களை கொண்டிராத பல்கலைகழகங்களிற்கு போலியாக இணையத்தளங்களை வடிவமைத்து காணப்படும் பல்கலைகழகங்கள் உள்ளதால் நீங்கள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் வெளிநாட்டு பல்கலைகழகத்துக்கான அங்கீகார கடிதம் என்பது ஓர் உயரிய ஆவணமாக பார்க்க வேண்டாம். அது பல சமயங்களில் ஓர் வெற்று காகிதமாகவே மாறும்.

மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு எந்தவொரு வெளிநாட்டு பல்கலைகழகத்தையும் (Approved பண்ணவில்லை) Recognized மட்டுமே செய்கிறது.

UGC Approved foreign degrees என்டு எந்த பட்டங்களும் இல்லை ஆகவே UGC Approved foreign degrees என்ற விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள். 

நீங்கள் ஒரு வெளிநாட்டு பட்டத்தை பெற்று (படித்து / காசு கொடுத்து) UGC இடமிருந்து கடிதம் வாங்கி விட்டால் உங்களுடைய பட்டம் அங்கீகரிக்கப்பட்டதாக சந்தோசபடாதீர்கள். ஒரு வேளை உங்களுடைய பட்டம் வழங்கும் நிறுவனம் / பட்டம்  போலி என நிரூபிக்கப்படுமிடத்து அனைத்தும் இரத்து செய்யப்படலாம் (பட்டம் / வேலை). போலிப்பட்டங்களை வைத்துள்ள பலர் அரச சேவையில் உள்ளதாக தகவல்😂😂

கீழுள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நிறுவனம் போலியானது எனவே அதன் பட்டங்களும் போலியானது. ஆகவே இந்த UGC letter விசயத்தில ஏமாறாதீங்க மக்களே. 

குறிப்பிட்ட பல்கலைகழகத்திற்கு பட்டம் வழங்க அதிகாரத்தை வழங்கிய அமைப்போடு (For an example India - UGC India, NAAC,NBA Etc.) தொடர்பு கொண்டு 

1. உங்களுடைய வெளிநாட்டு பல்கலைகழகம் அங்கீகரிக்கப்பட்டதா?
2. அவர்கள் உங்களுடைய கற்கைநெறிக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்களா?
3. அவ் வெளிநாட்டு பல்கலைகழகம் இலங்கையில் ஏதும் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்தை பங்குதாரராக கொண்டுள்ளதா?
4. அவ் வெளிநாட்டு பல்கலைகழகத்தில் இலங்கையில் இருந்து கொண்டு வெளிவாரியாக படிக்கலாமா?

என்பது போன்ற தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெற்று உறுதிப்படுத்தி கொண்டு படியுங்கள். பட்ட சான்றிதழினை நேரடியாக குறித்த பல்கலைகழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி அதன் உண்மை தண்மையை ஆராயுங்கள் (போலி மின்னஞ்சல்களும் புழக்கத்தில் உள்ளன கவனம்)

கோணேஷ்வரன் சனூஜன்