லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்களது w&op விபரங்களை மீண்டும் பதிவு செய்துகொள்ள வேண்டுமா?
அறிமுகம்
விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான பழைய இலக்கம்: 82/83 மற்றும் M/F வகுதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய அங்கத்தவர்களை இணைய வழியில் (online) மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதாகவும் அவ்வாறு பதிவு செய்வதற்கான இறுதித் திகதி 2021.12.31 எனும் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் திகதிக்கு பின்னர் கிடைக்கின்றவிண்ணப்பங்கள் நிராகரிக்கபடும் என்பதால் உங்களது நிறுவனத்தில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவித்து உரிய முறையில்பதிவு செய்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் பொது நிருவாகச் சுற்றறிக்கை : 26/2017(vii) ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்டையில் அரச ஊழியர்கள் அனைவரும் மேற்படி (online) அடிப்படையில் தாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதனைச் சரிபார்த்துக் கொள்வதற்கு உதவியாக இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.
>
விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்தின் பின்னணி
1898 ஆம் ஆண்டு விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய கட்டளைச் சட்டம் மற்றும்1983 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க விவைகள் /தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஒய்வூதியச் சட்டத்தின் கீழ் அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதாக சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரச ஊழியர்கள் அனைவரும் தத்தமது மாதாந்தச் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதிய நிதிக்காக பங்களிப்புச் செய்தல் வேண்டும்
மேற்படி சட்டங்கள் மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்களின் அடிப்படையில் அரச ஊழியர்கள் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கின்றனர். இதற்காக ஆரம்ப காலங்களில் ஆண்களுக்காக பொது 86 என்ற படிவமும் பெண்களாயின் 86 (அ) என்ற படிவமும் பூரணப்படுத்தப்பட்டு. 82/83 மற்றும் F/M என்ற குறியீடுகளுடன் இலக்கமிடப்பட்டு விதவைகள்/ தபுதார்ர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய அட்டை ஒன்று வழங்கப்பட்டது.
அரச ஊழியர் ஒருவர் மரணிக்கும் போது அவரில் தங்கி வாழ்கின்றவர்கள் பெறுகின்ற நலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
இந்த அடிப்டையில் விதவைகள்/ தபுதார்ர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பதிவு இலக்கம் வழங்கப்படுவதற்கு பதிலாக ஒன்லைன் மூலமாக பதிவு செய்கின்ற நடைமுறை 2015.03.12 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இங்கு பொது 86 மற்றும் 86 (அ) படிவங்களுக்குப் பதிலாக PD-01 எனும் படிவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அந்த அடிப்படையில் 2015.03.12 ஆம் திகதிக்குப் பின்னர் நியமனம் பெறுகின்ற அனைத்து அரச ஊழியர்களும் புதிய படிவத்தின் ஊடாக ஒன்லைன் அடிப்படையில் பதிவு செய்யப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து 2017.10.12 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் : 26/2017 ஊடாக 2015.03.12 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்றுக்காண்டு விதவைகள்/தபூதாரர் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்காக பதிவு செய்திருக்கின்ற அனைத்து அரச ஊழியர்களும் ஒன்லைன் அடிப்படையில் மீண்டும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த செயற்பாடானது 2018.03.31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய்யப்படவேண்டும் என்பதாக குறித்த சுற்றுநிருபத்தின் ஊடாக குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட 26/2017(i), 26/2017(ii), 26/2017(iii), 26/2017(iv) என்ற சுற்றுநிருபங்களின் ஊடாக இறுதித் திகதிகள் நீடிக்கப்பட்டு தற்போது 26/2017(v) இலக்க சுற்றறிக்கையின் ஊடாக 2021.07.31 பதிவு செய்து கொள்வதற்கான இறுதித் திகதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது பெயர் விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தில் ஒன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை எவ்வாறு சரி பார்த்துக்கொள்வது?
உங்களது பெயர் ஒன்லைன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்குமானால் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான ஒரு அங்கத்தவர் அட்டை உங்களது சுய விவரக் கோப்பு பராமரிக்கப்படுகின்ற காரியாலயத்தினால் வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு வழங்கப்பட்டதா இல்லையா என்பது நினைவில் இல்லை எனில் இலங்கை ஒய்வூதியத் திணைக்களத்தின் https://portal.pensions.gov.lk/wopcard/?q=node/21 எனும் இணைய தள முகவரிக்குச் சென்று உங்களது அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பரிசோதித்துக் கொள்ளலாம். உங்களது பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பின் உங்களுக்கான பதிவட்டை குறித்த இணைய தளத்தில் காட்சிப்படுத்தப்படும். அதனை நீங்கள் pdf வடிவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்தும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
உங்களிடமிருப்பது பழைய அடையாள அட்டையாளின் V அல்லது X என்ற எழுத்தை ஆங்கில கெப்பிட்டலில் குறிப்பிட வேண்டும். புதிய இலக்கங்கள் இருப்பவர்கள் குறித்த இலக்கங்கள் 12 இனையும் உடசெலுத்த வேண்டும். புதிய அடையாள அட்டை பழைய டையள அட்டை என இரண்டு இலக்கங்களும் இருப்பவர்களது புதிய இலக்கமானது சில நேரம் பதியப்படாமல் இருக்கலாம் எனவே புதிய இலக்கத்தில் தரவுகள் இல்லை எனில் பழைய இலக்கத்தை உட்செலுத்தி பரிசோதித்துக் கொள்ளலாம்.
எனது தகவல்கள் ஒனலைன் பதிவில் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்.?
உங்களது பதிவுகள் மேலே குறிப்பிட்ட பக்கத்தில் இல்லை எனில் https://portal.pensions.gov.lk:5080/wop_rereg/index.php/add எனும் இணைய தள முகவரியில் உங்களது தகவல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவுசெய்வதற்காக உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டருக்கின்ற (82 / .., F / ..., M / ....) என்ற அடிப்டையிலான இலக்கங்கள் அவசயமாகும் என்பதாகவும் அவ்வாறு அந்த இலக்கம் உங்கள் வசம் இல்லையெனின், நீங்கள் கடமையாற்றுகின்ற நிறுவனத்தில் தனிநபர் கோவைக்குப் பொறுப்பாக உள்ள அலுவலரை அணுகி உங்களது விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நீங்கள் பதிவனை மேற்கொள்வதற்கான ஓய்வூதிய திணைக்களத்தின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தேவைப்படுமிடத்து உங்களது சுயவிவரக் கோப்புக்கு பொறுப்பான முகாமை உதவி உத்தியோகத்தரை நாடவும்.
நீங்கள் ஒரு முறை பதிவு செய்து விட்டீர்களானால் உங்களது பதிவு உறிதிப்படுத்தப்பட்டது என்பதாக ஒரு குறுந்தகவல் உங்களது தொலைபேசிக்கு வந்துசேரும். நீங்கள் இட்ட பதிவுகளை உங்களது அலவல கோப்புக்கு பொறுப்பான முகாமை சேவை உத்தியோகத்தர் பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னரே இந்த குறுந்தகவல் உங்களுக்கு கிடைக்கப் பெறும். இந்த குறுந்தகவல் உங்களை வந்தடைந்த குறைந்தது ஒரு மாத காலமாவது ஆகலாம். அதுவரையில் நீங்கள் உள்ளிட்ட தகவல்களை சரிசெய்துகொள்ளவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
எனது புதிய இலக்கம் கிடைத்திருக்கின்றது ஆனால் அதில் பெயரில் அல்லது முகவரியில் சிறிய மாற்றம் காணப்படுகின்றது. நான் என்ன செய்யவேண்டும்.
இவ்வாறான திருத்தங்களை மேற்கொௌ்வதற்கான வசதிகள் குறித்த மென்பொருளில் வழங்கப்படவில்லை. எனினும் விதவைகள் அநாதைகள் இலக்கம் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் சரியாக இறுந்து ஏனைய தகவல்களில் சிறிய மாற்றங்கள் இருப்பது ஒரு பிரச்சினையல்ல. அவ்வாறான சிறிய திருத்தங்களுக்கு ஓய்வு பெறும் போது சத்தியக் கடதாசி வழங்குவதன் ஊடாக சரிசெய்துகொள்ளமுடியும்.