முஸ்லிம் அரச ஊழியர்களுக்காக அவர்களது மதக் கிரியைகளை நிரைவேற்றுவதற்காக.
வௌ்ளிக்கிழமைகளில் 12.00 மணி முதல் 2 மணித்தியாலய லீவு வழங்கப்படுகின்றது.
அவசியப்படுமிடத்து இந்த 2 மணி நேர லீவுக்காக கடமைக்கான நேரம் தவிர்ந்த நேரங்களில் சேவையாற்றவேண்டும்.
சேவையின் அவசியப்பாடு கருதி இந்த லீவினை வழங்காமல் இருக்கலாம் ( அ.நி.சு 21/2016)
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் நடைபெறுகின்ற வகுப்புகளில் பங்குபற்றுவதற்கான அனுமதி
ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிகரிக்கலாகாது.
9.30 மணிக்கு முன்னர் ஆரம்பிக்கவேண்டும் அல்லது 3.15 இன் பின்னர் ஆரம்பாமாக வேண்டும்.
கடமைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படலாகாது
அதிக அளவானவர்கள் ஒரே நேரத்தில் லீவு பெற்றுக்கொள்ள முடியாது
அவசியப்படுமிடத்து இந்த லீவுக்காக கடமைக்கான நேரம் தவிர்ந்த நேரங்களில் சேவையாற்றவேண்டும்.
பதவி உயர்வுக்கான பாடம் ஒன்றுக்காக தொழிற்சங்கம் ஒன்று அல்லது அரச சேவையாளர்களின் ஒன்றியம் ஒன்று என்பன ஏற்பாடு செய்கின்ற வகுப்பு ஒன்றில் பங்குபற்றுவதற்காக மேற்படி வாய்ப்பிற்கான சலுகைகளை அதிகரிப்பதற்கான அதிகாரம் திணைக்களத் தலைவருக்ககு காணப்படுகின்றது
தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதறக்காக (ஆகக் குறைந்த கால அளவு)
ஜனாதிபதி தேர்தலுக்காக 4 மணித்தியாலயம்
பாராளுமன்றத் தேர்தலுக்காக 4 மணித்தியாலயம்
மக்கள் கருத்துக்கணிப்புக்காக 4 மணித்தியாலயம்
மாகாணசபைத் தேர்தலுக்காக 2 மணித்தியாலயம்
அரசாங்க அங்கீகாரம் பெற்ற விஞ்ஞான அல்லது தொழில்சார் சங்கமொன்றினால் அல்லது நிறுவனமொன்றினால் சர்வதேச மாநாடு ஒன்று நடாத்தப்படும் போது அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு
செல்வதற்கான அனுமதியினை அரசு வழங்கவேண்டும்
முழுச் சம்பளத்துடனான லீவுவழங்கப்படும்
“அரசாங்கம் அங்கீகரித்த” விஞ்ஞான அல்லது தொழில்சார் சங்கம் என்பதன் பொருள் அரசாங்கத்திடமிருந்து வருடாந்தம் உதவித் தொகையினைப் பெற்றுக்கொள்கின்ற நிறுவனங்கள் அல்லது சங்கங்கள் என்பதாகும்.
மாநாடு நடைபெறுகின்ற காலம் மற்றும் பயணத்துக்காக செலவாகின்ற ஆகக் குறைந்த காலம் என்பன லீவாக வழங்கப்படும்
அமைச்சின் செயலாளர் அனுமதிப்பார்.
விளையாட்டுக்களில் அல்லது விளையாட்டுக்களுடன் தொடர்புடைய ஏனைய பணிகளில் ஈடுபடுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
கீழ்க்குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களில் சம்பளத்துடனான விசேட லீவு வழங்கப்படும்.
இலங்கை அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரராயிருத்தல்
தேசிய விளையாட்டு அணியொன்றின் உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல்
சர்வதேசப் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்கு பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றுவதற்காக
விளையாட்டு அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட பயிற்சியளித்தல் , நடுவர்களாகப் பணியாற்றுதல் தொடர்பான சர்வதேச மாநாடு/ பாடநெறியில் பங்கு பற்றுவதற்காக
திணைக்களத் தலைவரினால் லீவு அனுமதிக்கப்படும்
கீழ் குறிப்பிடும் சந்தர்ப்பங்களிலும் மேற்குறிப்பிட்ட சலுகை கிடைக்கப்பெறும்
தேசிய விளையாட்டு வீரர் ஒருவராக விளையாட்டுத அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவர் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்வதற்காக
இலங்கை அரச சேவைகள் விளையாட்டுச் சங்கம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற உள்நாட்டு போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக
மேற்படி போட்டியில் நடுவராக கலந்துகொள்வதற்காக
தொழிற்சங்க உறுப்பினர் ஒருவர் XXV ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய.
சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு XXIIIஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய.
தனிப்படுத்தலுக்கான நோய்களினால் பீடிக்கப்படுமாயின் XXV ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய
சில சங்கங்கள் மற்றும் நிறுவனங்களினால் நாடாத்தப்படுகின்ற வருடாந்த மாநாட்டுக்காக (அ.நி.சு 7/2014)
சம்பளத்துடனான லீவு வழங்கப்படும்
புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படும். (இது தங்களுக்கு உரிய புகையிரத ஆணைச்சீட்டுகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும்)
நோய் தொற்றுக் காப்புக்கான சத்திர சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
(ரியுபெக்டமிக்காக) பெண் ஒருவருக்கு 7 நாட்கள் லீவு
(வாசெக்டமிக்காக) ஆண் ஒருவருக்கு 3 நாட்கள்
இத்தாஃ லீவு
முஸ்லிம் பெண்களுக்கு இது உரித்தாகும்
சேவைக்காலத்தில் உள்ள பயன்படுத்தான ஓய்வு/பிணி லீவுகளை மாற்றீடு செய்யலாம்
கணவன் மரணித்தால் 4 மாதங்கள் 10 நாட்கள் லீவு உரித்தாகும்
விவாகரத்துப் பெற்றால் 03 மாதங்கள்
இந்த நாட்களின் அளவுஅதிகரிக்கும் போது அரைச் சம்பள லீவாக கணிக்கப்படும்
சேவா வனிதா உறுப்பினர் ஒருவரான அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
சேவாவனிதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மாதம் ஒன்றிற்கு ஒரு மணித்தியாலய லீவினை வழங்குதல் வேண்டும..
லீவில் இருக்கின்ற ஒருவர் யுத்த நிலவரம் காரணமாக மீண்டும் சேவைக்கு வர முடியாமல் போகுமிடத்து
விசேட லீவு வழங்கப்படும்
இதற்காக மாவட்டச் செயலாளரிடம் உறுதிச் சான்றிதழ் பெற வேண்டும்
ஏதேனும் சந்தேகமிருந்தால் பாதுகாப்புப் பிரிவின் செயலாளரிடம் வினவப்படும்
சேவை நிறுத்தத்திற்கு உட்படாத அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் தனக்கு எதிராக நடாத்தப்படும் ஒழுக்காற்று விசாரணையில் முன்னிற்பதற்காக
விசேட லீவுவழங்கப்படும்
இந்தவிசாரணை முடிவில் குற்றவாளியாக்கப்படுமிடத்து அவரது வருடத்தின் லீவிலிருந்து கழிக்கப்படும்.
13. கடமை லீவு
மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளல், பொருட் கொள்வனவு அல்லது வழங்கல் தொடர்பான கலந்துரையாடல், பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பரீட்சித்தல், ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் போன்ற
அரச நடவடிக்கைகளுக்காக அரசு மூலமாக வௌிநாடு அனுப்பப்படல்
கடமைக்கான காலம் மற்றும் பயணத்திற்கான காலமும் லீவாக வழங்கப்படும்
இலங்கை இராணுவத்தில் அல்லது கடற் படையில் அல்லது விமானப் படையில் அல்லது தொண்டர் படையில் பணியாற்றுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
பணிக்காக அழைக்கப்படும் போது
வருடாந்த பியற்சி முகாம்களுக்காக அழைக்கப்படும் போது
வார இறுதி முகாம்கள்/ யுத்த பயிற்சியல் பங்கு கொள்வதற்கு கடமை லீவு வழங்கப்படும்
விசேட பொலிஸ் சேவையில் இருக்கும் ஒரு அலுவளர்
கடமைக்கு அழைக்கப்படும் போது
பயிற்சி முகாம் ஒன்றிற்கு செல்வதற்காக கடமை லீவு வழங்கப்படும்.
ஒழுக்காற்றுவிசாரணை ஒன்றின் போது
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக முன்னிற்கும்போது
குறித்த விசாரணைக்கு செல்வதற்காக
குறித்த ஆவணங்களைப் பரிசோதிப்பதற்காக கடமை லீவு வழங்க்படும்
ஒழுக்காற்று விசாரணையின் போது திணைக்களத் தலைவர் ஊடாக அழைக்கப்படுகின்ற சாட்சி ஒருவருக்கு கடமை லீவு வழங்கப்படும்
நியதிச்சட்ட சபையொன்றின்/ கூட்டுத்தாபனமொன்றின் சட்ட திடடங்களின் கீழ் நடாத்தப்படுகின்ற ஒழுக்காற்று விசாரணை ஒன்றின்போது கடமை லீவு வழங்கப்படும்.
நிறுவனத் தலைவர் ஊடாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்ற விடயங்களுக்கு வரையறுக்கப்படுகின்றது.
நீதிமன்றம் செலவதற்காக கடமை லீவு வழங்கல்
உத்தியோகப் பதிவியின் ஊடாக நீதிமன்றம் அழைக்கப்படல்
கடமையின் தன்மையைப் பொறுத்து நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும் போது
அரச சாட்சி ஒருவராக முன்னிற்கும் போது
தொழிற்சங்க உருப்பினர் ஒருவராக தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அலலது குறித்த மாநாடு தனது திணைக்களத்தின் பணிகளுக்கு உரியது எனும் போது கடமை லீவு பெறலாம்
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியரான அரச சேவையாளர்
அவசரமாக நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது
மாதம் ஒன்றிற்று 3 நாட்களிலும் அதிகரிக்காத அடிப்படையில் கடமை லீவு வழங்கப்படும்.
14. முழுச் சம்பளத்துடனான கற்கை லீவு
கற்கைக்காக அல்லது பயிற்சிக்கான காலத்துக்கும் அதற்காக பயணிப்பதற்கான காலத்துக்கும் லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
கீழ்வரும் சந்தர்ப்பங்களில் முழுச்சம்பத்துடனான உள்நாட்டு/வௌிநாட்டு கற்கை லீவு பெறலாம்
உரிய தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட அரசாங்கச் செலவிலான திணைக்களப் பயிற்சி முறைமையொன்றிற்கு /புலமைப் பரிசில் முறைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,
அரசாங்க வேண்டுகோளின் பேரில் புலமைப்பரிசிலுக்கு இணைத்து்ககொள்ளப்படல்
தனது பதவியுடன தெடார்புடையதும் ஆட்ச்சேர்ப்பு/ பதவியுயர்வு பிரமாணக் குறிப்பின் பிரகாரம் கற்கை/ பயிற்சி பாடநெறி ஒன்றிற்காக அரசாங்கத்தின்/ வெளிநாட்டு அரசாங்கமொன்றின் / முகவர் நிறுவனமொன்றின் செலவில் வெளிநாடு செல்லல்
திணைக்கள பயிற்சி வேலைத் திட்டம் ஒன்றினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதும், அவரது தொழில்சார் காலப் பகுதியினுள் கற்பதற்காக வழமையாக அரசாங்க செலவில் அவர் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டி இருக்கின்றதுமான, கற்கை /பயிற்சி பாடநெறி ஒன்றிற்காக வெளிநாட்டு முகவர் நிறுவனமொன்றினால்/ வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் ஒன்று அலுவலரின் முயற்சியினால் பெற்றுக்கொள்ளப்படும் போது.
வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அல்லது முகவர் நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்படுகின்ற செயலமர்வொன்றில், பயிற்சி நெறியொன்றில், தொழில்நுட்பப் பயிற்சி நெறியொன்றில், தொழில்சார் ஆலோசனைப் பாடநெறியொன்றில், கல்விச் சுற்றுலாவொன்றில் கலந்து கொள்வதற்காக (குறித்த அழைப்பு அரசிற்கு ஊடாக குறித்த அலுவளரின் பெயர் குறிப்பிட்டுஅனுப்பப்பட்டிருக்கவேண்டும்.
தற்காலிக ஊமியர் ஒருவர் சம்பளத்துடனான கற்கை லீவு பெறுவதற்கான உரிமை அற்றவதாவார்.
தகுதிகாண் காலப்பகுதியில் உள்ள அலுவளர் ஒருவர் கீழ் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் பெறலாம்
தனது சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைய கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்காக உள்நாட்டு அல்லது வௌிநாட்டு அரசுகளின் செலவில் வௌிநாடு செல்லல்
குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிமேதகு ஜனாதிபதி/ கௌரவ பிரதமர்/ கொளரவ ஆளுனர் களின் அனுமதியினைப் பெற்றிருத்தல்.
இந்த லீவினைப் பெற முன்னர் உரிய முறையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.. (XV ஆம் அத்தியாத்தின் 4 ஆம் பிரிவு)
XV ஆம் அத்தியாத்தின் 10 ஆம் பிரிவின் கீழ்அலுவளருக்கு உரிய அனுமதி கிடைத்திருக்கவேண்டும்.
முழுச்சம்பளத்துடனான உள்நாட்டு கற்கை லீவுகளுக்களுக்காக கட்டாயசேவைக் காலம் ஒன்றிற்காக மீண்டும் வந்து சேவையாற்ற வேண்டும்.
6 மாதங்களுக்கு குறைந்த காலமாயின் - கட்டாயசேவைக்காலம் இல்லை
6 மாதங்களுக்கு அதிகரிக்குமாயின் - ஆகக் கூடிய காலம் 5 வருடங்கள் என்ற அடிப்படையில் பெறுகின்ற லீவுக்கான காலத்தின் இரண்டு மடங்கு சேவையாற்ற வேண்டும்.
கட்டாய சேவைக்காலம் கிட்டிய மாதங்களில் கணக்கிடப்படவேண்டும்.
தனது பதவியுடன் தொடர்புடையதும் ஆட்ச்சேர்ப்பு/ பதவியுயர்வு பிரமாணக் குறிப்பின் பிரகாரம் பட்டப்பின்படிப்பு அல்வது உயர்பட்டம் ஒன்றினை பெறவேண்டி இருந்து கற்கை லீவு பெறாதவிடத்து
அவ்வப்போது வேலை நாட்கள் 10 என்ற உச்ச அளவுக்கு அமைய சம்பளத்துடனான கற்கை லீவு பெறலாம்.
இது ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும்.
பரீட்சைக்கு முகம்கொடுக்காமை அல்லது பரீட்சையில் சித்தியடையாமையினை காரணமாகக் காட்டி மீண்டும் லீவு கோர முடியாது.