அரச ஊழியர்கள் என்ற வகையில் லீவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. லீவுகள் குறித்த சரியான தௌிவில்லாமல் இருப்பது பல விதமான சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுப்பதற்கு காரணமாக அமையலாம். அந்த வகையில் லீவுகளின் வகைகள் மற்றும் அதற்கான நடைமுறைகள் என்பன குறித்து இந்தப் பதிவுஆராய்கின்றது.
5. லீவு அனுமதி பெறுவதற்காக உள்நாட்டில் கழிக்கும் விடுமுறையபின் 7 நாட்களுக்கு முன்னதாக லீவுக்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்டவேண்டும்.
6. வௌிநாட்டில் கழிக்கும் விடுமுறையாயின் மூன்று மாங்களுக்கு முன்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
7. மிகவும் அவசரமான சந்தர்ப்பமொன்றில் சேவைக்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றபோது டெலிமெய்ல், தொலைபேசி, எஸ்.எம்.எஸ். ஈமெய்ல் என்பவற்றின் ஊடாக லீவுக்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ( இ.நி. சுற்றுநிருபம் இல 24/2013 )
லீவு வகைகள்
01.காரியாலயத்திலிருந்து வௌியே செல்வதற்கான லீவு
எந்த ஒரு அரச ஊழியரும் அனுமதியின்றி தனது காரியாலயத்திலிருந்து வௌியே செல்லமுடியாது.
வாய்மொழி மூல அனுமதி வழங்கப்பட்டிருந்தலுமோ அல்லது விடுமுறை தினத்தில் வேலைக்காக வந்திருந்த போதிலோ வௌியே அவர்களால் வௌியே செல்ல முடியாது. ஏதேனும் சேவை நிமித்தம் வௌியே செல்வதாயின் உரிய புத்தகத்தில் பதிவுசெய்து அதற்கான அனுமதி பெற்ற பின்னரே வௌியே செல்ல வேண்டும்.
02. நாளின் ஒரு பகுதியிக்காக லீவு பெறல்
குறுகிய லீவு.-
இது சேவை நாளின் 1 1/2 மணித்தியாலயத்துக்காக பெறலாம்.
ஒரு நாளின் ஆரம்பம் நடுப்பகுதி அல்லது மாலை நேரம் என எந்த நேரத்திலும் இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாதத்தில் இரண்டு தினங்கள் இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்
அரை நாள் லீவு
இந்த லீவைப் பெற்றுக்கொள்வதமற்காக 3 1/2 மணித்தியாலயங்கள் வேலை செய்யவேண்டும்
கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய உரிய நேரத்தை விட பிந்தி வருபவர்கள் தனது சாப்பாட்டுக்கான 1/2 மணித்தியாலயத்தையும் சேர்த்து 4 மணித்தியாலயம் வேலை செய்ய வேண்டும்.
வேலை செய்த நேரம் லீவுக்கான நேரத்திலும் பார்க்க குறைவாக இருக்குமாயின் முழு நாள் லீவாக பதியப்படும.
03. அமய லீவு
(தாபனக் கோவையின் XII ஆவது அத்தியாயம் 05 ஆம்பிரிவில் இந்த லீவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லீவு தொடராக 6 நாட்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கு 21 நாட்களுக்கு இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவன்றி ஓய்வுக்கான லீவு பெற்றுக்கொண்டநாளுக்கு முன்னர் அல்லது பின்னர் அமய லீவு வழங்க முடியாது.
இந்த லீவு எந்த விதத்திலும் பணிக்கு தடையாக அமையக் கூடாது.
புதிதாக சேவைக்கு வருகின்ற ஒருவர் இந்த லீவினைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த ஒரு காலப்பகுதி சேவையாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஜனவரி 01 திகதி தவிர்ந்த வேறு தினங்களில் அல்லது வேறு மாதங்களில் சேவையில் இணைகின்ற புதிய உத்தியோகத்தர்கள் வருடத்தின் சேவைக்காலத்துக்கு ஏற்ற வகையில் இந்த லீவுகளை கணக்கிட்டு வழங்கலாம்.
04. பிணி லீவு
(தாபனக் கோவையின் XII ஆவது அத்தியாயம் 8 ஆம்பிரிவில் இந்த லீவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது)
சுகயீனம் காரணமாக 2 நாட்களுக்கு அதிகமான தினங்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியாத போது இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக வைத்திய அறிக்கை அவசியமானதாகும்.
அரச வைத்திய அதிகாரி ஒருவரிடம் வைத்திய அறிக்கை பெறுவதாயின் வைத்திய 170 படிவத்தில் பெறவேண்டும்
ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஒருவரிடம் பெறுவதாயின் ஆயுர்வேத 40 எனும் படிவத்தில் பெறவேண்டும்.
மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுமாயின் எந்தக் கால அளவுகளாயினும் இந்தலீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இது சம்பளத்துடனான மருத்துவ லீவு
அரை சம்பள மருத்துவ லீவு
சம்பளமற்ற மருத்துவ லீவு என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
உத்தியோத்தரின் ஓய்வு லீவுகளிலிருந்து இந்த வைத்திய லீவுகள் கழிக்கப்படுகின்றது. எனினும் 6 நாட்களுக்கு குறைவான லீவுகளை உத்தியோகத்தரின் விருப்பத்தின்படி அமய லீவுகளிலிருந்து கழிக்கலாம்.
05.பதில் லீவு.
விடுமுறை தினங்களில் (சனி/ஞாயிறு/அரசவிடுமுறை) பணியாற்றுபவர் ஒருவர் அந்த தினத்திற்கு பதிலாக கிழமை நாட்களில் இந்தவகை லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இது சாதாரணமாக லீவுகளிலிருந்து குறைக்கப்படுவதில்லை.
ஒரு நாளின் வில மணித்தியாலயங்கள் பணியாற்றியிருப்பின் அந்த மணித்தியாலயங்களுக்கு லீவு பெறலாம்.
இந்த லீவிற்காக அரசாங்கம் மேலதிக செலவென்றினை ஏற்க நேராமல் இருக்கவேண்டும்.
விடுமுறை தினமொன்றில் வேலை செய்துவிட்டு அந்த வேலைசெய்த தினத்திலிருந்து ஒரு வருடம் முடிவதற்குள் இந்த லீவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வௌிநாடுகளில் விடுமுறையினைக் கழிப்பதற்காக மாற்றீடு லீவு எடுக்க முடியாது.
06. ஓய்வு லீவு
வருடம் ஒன்றிற்கு ஆசிரியர்களாயின் 21 தினங்களும் ஏனையவர்களுக்கு 24 தினங்களும் இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
முன்னைய வருடங்களில் சேமித்த பிணி லீவுகளையும் இணைத்து வருடத்துக்கு 48 நாட்கள் வரை லீவு பெற்றுக்கொள்ளலாம்.
பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாட்டில் இருப்பாரானால் மூன்று வருடங்களின் லீவுகளைப் பெறலாம் ( ஆகக் கூடிய அளவு 72 நாட்கள்)
ஓய்வு லீவானது உள்நாட்டிலாயின் சனி ஞாயிறு அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்தே கணக்கெடுக்கப்படும். வௌிநாடுகளில் கழிப்பதாயின் அவைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
முதல் நியமனம் பெற்ற ஒருவர் 24 நாட்கள் ஓய்வுலீவினைப் பெறுவதற்காக 9 மாதங்கள் சேவையாற்றியிருக்க வேண்டும். அதாவது சேவையில் இணைந்து 9 மாதங்களின் பின்னரே இந்த லீவினைப் பெற உரித்துடையவாகின்றார்.
07.அவசர விபத்து லீவு
பெற்றுக்கொள்ள முடியுமான சந்தர்ப்பங்கள் பின்வருமாறு
கடமையினை மேற்கொள்ளும் போது
கடமையினை மேற்காள்ளாத போதிலும் சேவைக்குரிய எல்லைக்குள் ஏதேனும் ஒன்றினை செய்யும்போது.
கடமையினை மேற்கொள்வதற்கான ஏதாவது ஒரு செயலைச் செய்யும்போது
சேவைக்காக வீட்டிலிருந்து செல்லும் போது அல்லது சேவையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது
சேவை நிலையத்திலிருந்து கடமைக்காக பயணம் ஒன்றுசெல்கின்ற போது அல்லது திருமப வருகின்ற போது விபத்தொன்றில் காயம் ஏற்படுமாயின் இந்த லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்
இந்த லீவினைப் பெற்றுக்கொள்வதற்கு கீழ் குறிப்பிடும் நிபந்தனைகள் பேணப்படவேண்டும்.
நாட்டின் ஏதாவது ஒரு சட்டத்தினை மீரியிருக்கலாகாது
குறித்த விபத்து உத்தியோகத்திரின் அல்லது உதவியாளரின் கவனயீணத்தினால் ஏற்பட்டதாக இருக்கக்கூடாது
காயத்தின் தன்மைக்கு அமைய வைத்தியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் லீவு வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் ஒரு வருடம் வரையான சம்பளத்துடனான விடுமுறையும்
அதன் பின்னர் 6 மாதம் வரை அரைச் சம்பள விடுமுறையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த லீவு அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்படவேண்டும்.
உத்தியோகத்தரின் சாதாரண லீவிலிருந்து இது கழிக்கப்படுவதில்லை
ஒரு வருட லீவின் பின் முன்னைய வருடங்களில் சேமித்த லீவுகளை பெற்றுக் கொள்ளலாம்
சேவையில் இருக்கும்போது அல்லது சேவையின் தன்மையைப் பெறுத்து நோய்வாய்படுமிடத்து இந்தலீவினைப் பெறலாம். அதாவது பாடசாலையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் விளையாட்டுப் பயிற்சி வழங்கும் போது கால் உடைவு ஏற்படல், அல்லது அலுவலகத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டு காயம் ஏற்படல் ( இந்தகாயத்துக்கு ஓய்வு அவசியம் என வைத்தியர் சிபாரிசு இருக்கவேண்டும்)
06 மாதங்கள் வரை சம்பளமற்ற லீவு
அதன் பின் 6 மாதங்கள் வரைஅரைச் சம்பள லீவு
உத்தியோகத்தரின் சாதாரண லீவிலிருந்து இது கழிக்கப்படுவதில்லை
உத்தியோகத்திரின் கவனக் குறைவாக இருக்கக்கூடாது.
கடமையினை மேற்கொள்வதன் அடிப்படையில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
அரச வத்திய அதிகாரி ஒருவரின் வைத்திய சான்றிதழ் அவசியமாகும்.
இந்த லீவு அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்படவேண்டும்.
கடமையில் இல்லாத நிலையிலும் எதிர்பாராத நிலையில் காயங்கள் ஏற்படுகின்ற போது கீழ்வரும் அடிப்பயைடில் லீவு பெறலாம்
வைத்தியக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய
நிறுவன பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பேரில் அமைச்சின் செயலாளர் அனுமதிக்க வேண்டும்
சம்பளத்துடனான விசேட சுகயீன லீவு வழங்கப்படும்.
சாதாரண லீவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை.
09. கடந்தகால லீவுகளிலிருந்து கழித்தல்
தாபன விதிக் கோவையின் XII ஆவது அத்தியாயம் 8 ஆம் பிரிவிற்கு அமைவாக யாரேனும் ஒரு உத்தியோகத்தரின் ஓய்வு லீவுகள் முடிவடைந்ததும் கடந்த வருடங்களில் மீதப்படுத்திக்கொண்டுள்ள ஓய்வு லீவுகளிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.
நிறுவனத் தலைவரால் இந்த லீவுக்கான அனுமதி வழங்கலாம்.
குறித்த லீவானது வைத்திய காரணத்துக்காக பெற்றதாயின்
உத்தியோகத்தருக்கு நன்மையாகும் விதத்தில் ஏதாவது இரண்டு வருடங்களில் மீதமாயுள்ள லீவுகளைக் கழிக்கலாம்.
வைத்திய காரணமில்லையாயின்
குறித்த வருடத்துக்கு கிட்டிய முன்னை இரண்டு வருடங்களின் மீதமாயுள்ள லீவுகளைக் கழிக்கலாம்
ஒரு வருடத்தில் கடந்த இடண்டு வருடங்களில் சேகரித்த லீவுகளை மாத்திரமே பெற முடியும்.
இரண்டு வருட லீவுகளின் கூட்டுத்தொகை 48 ஐ விட அதிகரிக்கலாகாது
நோய்வாய்ப்படல்/ திடீர் விபத்துக்கு முகம் கொடுக்கும்போது
உத்தியோகத்தரின் வரவு, வேலை, நடத்தை என்பன சிறந்ததாக கருதுமிடத்து ஒரு வருடத்தில் இரண்டாவது முறையும் லீவு வழங்கலாம்.
அமைச்சின் செயலார் திருப்பியடைந்த நிலையில் அவராகவே விருப்பி அனுமதிக்கவேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் மொத்த கடந்தகால லீவுகளின் தொகை 96 ஐ விட அதிகரிக்கலாகாது.
கீழ் வரும் காரணங்களுக்காக கடந்கால லீவுகளைப் பெறலாம்.
உத்தியோகத்தர் நோய்வாய்ப்படல்
குடும்பத்தில் ஒருவர் நோய்வாயப்படல்
குடும்பத்தில் ஒருவர் மரணித்தல்
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நடாத்ததகப்படும் மதச் சடங்குகள்
அலுவலரின் திருமணம்
வீட்டார்களுக்கு தொற்று நோய் பீடித்தல்
சேவையுடன் தொடர்புபடாத விடயம் ஒன்றுக்கான வழக்கில் நீதிமன்றத்தில் முன்நிற்க வேண்டி ஏற்படல்
விண்ணப்பித்தல்
விண்ணப்பத்தில் லீவுக்கான காரணம் குறிப்பிடப்பட்டு எஎந்த வருட லீவுகிளிலருந்து கழிக்க வேண்டும் என்பதனைக் குறிப்பிட வேண்டும்
அந்த வருடங்களில் சேகரித்த லீவு விபரம் குறிப்பிடப்படவேண்டும்.
லீவுக்கான அனுமதி பெற்ற பின்னர் அது தொடர்பாக லீவு ஏட்டில் குறிப்பிடப்படல் வேண்டும்.
குறித்த லீவு நிறை வடைந்ததன் பின்னர் அதிக நாட்கள் சேவைக்கு வராத உத்தியோகத்தருக்கு கடந்த கால லீவு வழங்கலாகாது
நோய்வாய்ப்படல் என்ற காரணம் தவிர்ந்த ஏனையகாரணங்களுக்கு லீவு வழங்கப்பட்டு அது தொடர்பில் கீழ் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் அரைச் சம்பள லீவாக பதிவுசெய்யப்படும்.
சேவைக்கு மீண்டும் வராமல் ஓய்வு பெறுதல்
பலவந்தமாக ஓய்வுபெறச்செய்தல்
லீவுக்குப்பின் சேவைக்கு வந்து லீவு நாட்களை விட குறைந்த காலம் பணியாற்றி விட்டு ஓய்வு பெறல்
இவ்வாறு அரைச்சம்பளமாக கழிக்கப்படும் தொகை உத்தியோகத்தருக்கான எந்தக் கொடுப்பனவிலிருந்தும் கழித்துக் கொள்ளலாம்.
10 இளைப்பாறுகைக்கு முந்திய லீவு.
ஓய்வு லீவுகளுக்கு உரித்துடைய அலுவலர்களுக்கும் பிணி லீவு உரித்துடைய ஆரம்பமட்ட ஊழியர்களுக்கும் இளைப்பாறுவதற்கு முந்திய லீவினைப் பெறலாம்.
பெற்றுக்கொள்ள முடியுமான லீவு நாட்கள்.
முன்னைய ஏதாவது இரண்டு வருடங்களில் சேகரித்துக்கொண்டுள்ள பிணி/ஓய்வு லீவுகள் மற்றும்.
ஒய்வு பெறுகின்ற வருடத்திற்குரிய பிணி/ஓய்வு லீவுகள் என்பவற்றின் கூட்டுத்தொகையினைப் பெறலாம்.
நாட் சம்பளம் பெறுகின்ற ஊழியராயின்
ஓய்வு பெறுகின்ற வருடத்துக்குரிய பிணி லீவுகளையும் அதற்கு முன்னைய வருடத்தில் மீதமுள்ள பிணி லீவுகளையும் ஓய்வு பெறுகின்ற வருடத்துக்கு உரிய மீத முள்ள அமய லீவுகளையும் பெறறுக்கொள்ளலாம் .
வினைத்திறன் இல்லாமை காரணமாக ஓய்வு பெறச் செய்யப்படுகின்ற ஒருவருக்கு ஓய்வு பெறும் போது கீழ் குறிப்பிடப்படுகின்ற வகையில் மாத்திரமே இந்த லீவு உரித்தாகின்றது.
ஏதாவது விசேட காரணம் இருக்குமாயின் குறித்த காரணம் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்படடல் வேண்டும்.
தாமாக விலகிக்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்கு இந்த லீவு பெற முடியாது.
(அரச நிர்வாக சுற்றறிக்கை 19/2010 இற்கு அமைய மேற்குறிப்பிட்ட ஓய்வுக்கு முந்திய லீவுகள் வழங்கும் போது 2007.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் மீதப்படுத்திக்கொண்டுள்ள ஓய்வு/பிணி லீவுகள் மற்றும் அமய லீவுகளின் கூட்டுத்தொகை 3 மாதங்களுக்கு அதிகரிக்காத அடிப்படையில் உத்தியோகத்தரின் விருப்பத்திற்கு அமைய ஓய்வுக்கு முந்திய லீவு வழங்கப்படவேண்டும் என்பதாக குறிப்பிடப்படுகின்றது. )
லீவு தொடர்பான மற்றைய விபரங்கள் அடுத்தபதிவில்..
இந்தக் விபரங்கள் lankajobinfo,com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.