சுய விவரக்கோவை (Personal File) என்பது அரச ஊழியர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. அரச ஊழியர்களின் முதல் நியமனம் தொடக்கம் அவர்கள் ஓய்வு பெறும்வரையான சேவை தொடர்பான அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுவதற்காக இந்த சுய விபரக்கோவை பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு ஆசிரியரின் முதல் நியமன் தொடக்கம் ஓய்வு பெறல் வரையான காலப்பகுதியில் இந்த சுய விபரக் கோவையில் சேர்க்கப்படவேண்டிய 112 ஆவணங்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் தமது சுய விபரக்கேவையில் உள்ளடங்கவேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை சரி பார்த்துக்கொள்ள இந்த பட்டியல் உதவியாக அமையும்.
01.முதலாவது நியமனக் கடிதம் : நிரந்தர/ பயிலுனர்/ பட்டதாரி பயிலுனர்/ மாணவர் ஆசிரியர்/ பயிற்றப்படாத ஆசிரியர் / ஆசிரிய உதவியாளர்/ ஒப்பந்த / தற்காலிக நியமனக் கடிதம்
02.முதலாவது நியமனம் நிரந்தர நியமனமல்லாவிடின் ஓய்வூதியக் கொடுப்பனவுடனான நிரந்தர நியமனக் கடிதம்.
03.முதலாவது நியமனம் தற்காலிக நியமனமாயின் பின்னர் வழங்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதம்
04.முதலாவது நியமனம் சம்பளமற்ற நியமனமாயின் பின்னர் வழங்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதம்
05.சாதாரண பயிலுனர் நியமனத்தினை பட்டதாரி பயிலுனர் நியமனமாக மாற்றியிருப்பின் குறித்த கடிதம்.
06.பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
07.முதலாவது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் என்பவற்றுக்கிடையே வித்தியாசங்கள் காணப்படுமாயின் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட நியமனக் கடிதம்.
08.பெயர் மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டிருப்பின் அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழின் 13 ஆம் இலக்க பந்தியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ) அல்லது / மற்றும் திறைசேரி 185 ஆம் இலக்க பிரகடணம்.
09.தேசிய அடையால அட்டையின் பிரதி
10.ஒப்பந்த பத்திரம் (பொது 160)
11.பிரகடணம் (பொது 278)
12.சத்தியப் பத்திரம் அல்லது உறுதியுரை (அரசியல் யாப்பின் 6 வது திருத்தத்திற்கு அமைய)
13.சொத்துக்கள் விபரம் (பொது 261)
14.முதல் நியமனத்திற்கு அமைய சேவையை ஏற்றுக்கொண்டதற்கான லொக் குறிப்பு அல்லது / பயிலுனர்/ பட்டதாரி பயிலுனர்/ மாணவர் ஆசிரியர்/ பயிற்றப்படாத ஆசிரியர் / ஆசிரிய உதவியாளர்/ ஒப்பந்த / தற்காலிக நியமனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் அது குறித்த லொக் குறிப்பு.
15.முதல் நியமனத்தின் அடிப்படையில் சேவையை பெறுப்பேற்கும் போது தான் நியமனம் பெறுகின்ற பாடசாலையில் சேவை பெறுப்பேற்காது கல்வி அமைச்சிலோ அல்லது கல்வித் திணைக்களத்திலோ அல்லது வலயக் கல்விக் காரியாலயத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ சேவை பெறுப்பேற்றிருப்பின் அதற்கான சான்று
16.சேவை பொறுப்பேற்றல் கடிதம் மற்றும் அதற்கான லொக் குறிப்பு
17.வைத்திய அறிக்கை ( பொது 169)
18.மாகாண ஆசியரியர்காயின் அவர்ளது முதல் நியமனம் 1990.01.01 ஆம் திகதிக்கு முன்னராயின் மத்திய அரசின் சேவையிலிருந்து மாகாண சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட கடிதம்
19.முதலாவது நியமனத்திலிருந்து இற்றைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பத்திரம் ( பொது 53 அ) History sheet
20.திருமணமானவராயின் திருமணச் சான்றிதழ்
21. திருமணமானவராயின் கணவனின் அல்லது மனைவியின் பிறப்புச் சான்றிதழ்
22.விவாகரத்துப் பெற்றிருப்பின் விவாகரத்துக்கான சான்றிதழ்
23.துணைவர் மரணித்திருப்பின் மரண சான்றிதழ்
24.குழந்தைகள் இருப்பின் அவர்களது பிறப்புச் சான்றிதழ்
26.அனைத்து தொழில் பயிற்சிகள் தொடர்பான சான்றிதழ்கள் ( ஆசிரியர் பயிற்சி. கல்வியல் பட்டப்பின்படிப்பு பேன்றன)
27.அனைத்து கல்வி மற்றும் தொழிற் பயிற்சி சான்றிதழ்களினதும் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
28.தகுதிகாண் காலப் பகுதியின் பின்னர் சேவை நிரந்தரமாக்கியதற்கான கடிதம்.
29.தகுதிகாண் காலப் பகுதி நீடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான கடிதம்.
30.ஆசிரியர் பதிவிலக்கம்
31.விதவைகள் / தபுதாரர்கள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
32.மேற்படி பதிவு செய்து பெற்ற பதிவிலக்கம் கொண்ட அட்டை
33.தேசிய பாடசாலை ஒன்றில் அல்லது வேறு ஒரு மாகாண பாடசாலை ஒன்றில் சேவையாற்றிவிட்டு அங்கிருந்து இடமாற்றம் பெற்று மாகாணப் பாடசாலை ஒன்றிற்கு வந்திருப்பின் அல்லது மாகாணப் பாடசாலை ஒன்றில் சேவையாற்றிவிட்டு தேசிய பாடசாலை ஒன்றிற்கு வந்திருப்பின். மத்திய அரிசிலிருந்து அல்லது முந்தைய மாகாண சபையிலிருந்து விடுவித்ததற்கான கடிதம்.
34.மேற்படி முறைகளில் இடமாற்றம் பெற்று வந்திருப்பின் மாகாண சேவைக்கு அல்லது மத்திய அரசின் சேவைக்கு உள்வாங்கியதற்கான கடிதம்.
38.சம்பளமற்ற விடுமுறைகளுக்காக சேகரித்துக்கொண்டுள்ள விடுமுறைகள் மாற்றீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கான அனுமதிக்கடிதம்.
39.சம்பளமற்ற விடுமுறைகளுகள் பெற்றிருப்பின் விடுமுறை தரப்படுத்தல் கடிதமும் சம்பளத்திலிருந்து குறைப்பதற்கு அனுமதி வழங்கிய கடிதமும்.
40.இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்கு அமைய உள்வாங்கிய கடிதம் அல்லது முதல் நியமனக் கடிதத்தை திருத்திப் பெற்ற கடிதம்.
41.புதிய சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் வினைத்திறன் தடை தாண்டலுக்கான மொடியூல் பூரணப்படுத்தியிருப்பின் அதற்கான கடிதம்.
42.சேவையில் தர உயர்வு பெற்றிருப்பின் அது குறித்த கடிதம்.
43.தர உயர்வுக்கு அமைய சம்பள மாற்றம் செய்ததற்கான கடிதம்
44.ஏதாவது சம்பள உயர்வுகள் ஏற்பட்டிருப்பின் சம்பள திருத்தம் செய்த கடிதம்.
45.இடமாற்றங்களுக்கான கடிதம்.
46.இடமாற்றத்தின் அடிப்படையில் சேவை பெறுப்பேற்ற கடிதம்
47.தற்காலிகமாக இடமாற்றம் பெற்றிருப்பின் அதற்கான கடிதம், அதற்கான கால நீடிப்பு செய்திருப்பின் அதற்கான கடிதம்
48.கல்விக்கான விடுமுறை பெற்றிருப்பின் அதற்கான கடிதம்.
49.கல்வி விடுமுறைக்கான பிணை அல்லது வேறு பிணைகள்
50.வெளிநாட்டு விடுமுறை பெற்றிருப்பின் அந்த விடுமுறைக்கு அனுமதி பெற்ற கடிதம்
51.வெளிநாட்டு விடுமுறை பெற்று மீண்டும் நாட்டுக்கு வந்ததனை தெரிவிப்பதற்கான கடிதம்.
52.வொளிநாட்டு விடுமுறைகள் திருத்தப்பட்டிருப்பின் அதற்கான கடிதம்
53.அரசுக்கு சொந்தமான வீடுகளில் தங்கியிருப்பின் குறித்த வீட்டுக்கான வாடகையினை சம்பளத்தில் கழித்த கடிதம்
54.பாரட்டுதல் அல்லது குறைகள் குறிப்பிடல் தொடர்பான கடிதம். (இருக்குமாயின் - பொது – 230 B)
55. சேவை மதிப்பீட்டு சான்றிதழ் (உதாரணம்: குரு பிரதீபா)
56. ஒழுக்காற்று கட்டளை ( இருக்குமாயின்)
57. ஒழுக்காற்று கட்டளையினை செயற்படுத்தியதற்கான கடிதம் (இருக்குமாயின்)
58.ஒழுக்காற்று கட்டளை தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பின் அந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் ஏதும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் குறித்த கடிதம் (இருக்குமாயின்)
59.மொழித் தேர்ச்சி குறித்த சான்றிதழ் (இருக்குமாயின்)
60.பெயரில் வித்தியாசங்கள் இருப்பின் குறித்த திருத்தக் கடிதம்
61.பெயரில் மாற்றம் குறித்த உறுதி மொழி
62.பிக்கு ஒருவராக மாறியிருப்பின் அதற்கான சான்றிதழ்
63.கடன் அட்டை
64.ஏதாவது நோய் ஒன்று தொடர்பாக வைத்தய குழு ஒன்றுக்கு முன்வைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான அறிக்கை
65.இலங்கை அதிபர் சேவைக்கு விண்ணப்பித்திருப்பின் குறித்த விண்ணப்பப்படிவத்தின் பிரதி
66.குறித்த அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பின் நியமனக் கடிதம்
67.குறித்த சேவையில் பதவியேற்றதற்கான கடிதம் மற்றும் லொக் பதிவு
68.குறித்த சேவைக்கான சம்பள மாற்றத்திற்கான கடிதம்
69.இது போன்று இலங்கை நிர்வாக சேவைக்கு, இலங்கை கல்வியலாளர்சேவை என்பவற்றுக்கு விண்ணப்பித்திருப்பின் விண்ணப்பம் மற்றும் மேலே குறிப்பிட்டது போன்று கடிதங்கள்
70.ஆசிரியர் சேவைக்கு முன்னர் வேறு ஒரு அரசாங்க சேவையில் இருந்திருப்பின் குறித்த நியமனக் கடிதம் மற்றும் குறித்த சேவையிலிருந்து விடுவிப்புக் கடிதம்.
அரச சேவை குறித்த விளக்கப்பதிவுகள் எமது இணையத்தளத்தில் தொடராக பதிவேற்றப்படவுள்ளன எனவே எமதுமுகநூல் பக்கத்தில் அல்லது வட்சப் குழுமத்தில் இணைந்திருந்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள