ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்குதல் மற்றும் தரம் உயர்வு வழங்குதல் என்பன தொடர்பில் ஆசிரியர்கள் மத்தியில் பல விதமான தெளிவின்மைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. காலத்துக்கு காலம் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் மற்றும் அவை தொடர்பாக வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்கள் என்பன இந்த தெளிவின்மை ஏற்படக் காரணமாக அமைகின்றது.
இந்த தெளிவின்மைகளைப் போக்குவதற்கான ஒரு முயற்சியாக ஆசிரியர் நியமனங்கள் வழங்குகினற முறைகள் குறித்தும் ஆசிரியர் பதவி உயர்வு வழங்குகின்ற முறைகள் குறித்தும் இந்த பதிவு விளக்குகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பி மற்றும் 2019.04.22 ஆம்திகதி விசேட வர்த்தமான ஊடாக வௌியிடப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமானக் குறிப்பின் திருத்தங்களின் அடிப்படையில் இங்கு விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு யாருக்கு பயன்படும்
ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்தப் பதிவு உங்களைத் தயார் செய்து கொள்ள உதவும்
நீங்கள் ஆசிரியர் பதவியிலிருந்தால் அடுத்த கட்டத்துக்கு உங்களைத் தரம் உயர்திக்கொள்வதனைத் திட்டமிட்டுக்கொள்ள உதவும்.
ஆசிரியர் சேவைக்கு ஆட்களைச் சேர்துக்கொள்ளல்
புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்;பிற்கு அமைய 5 விதமான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் சேவை 3ii
ஆசிரியர் சேவை 3i (இ)
ஆசிரியர் சேவை 3i (ஆ)
ஆசிரியர் சேவை 3i (அ)
ஆசிரியர் சேவை 2ii
ஆசிரியர் சேவை 3ii
க.பொ.த உயர் தர பெறு பேற்றினை மாத்திரம் பெற்றிருப்பவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்காளாயின் அவர்கள் ஆசிரியர் சேவை 3ii எனும் தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள்
ஆசிரியர் சேவை 3i (இ)
கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதாவது ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற NVQ 6 ஆம் மட்டம் அல்லது அதற்கு கூடிய நிலையிலானதும் இரண்டு வருடங்களுக்கு குறையாத காலஅளவு கொண்ட டிப்லோமா சான்றிதழ் பெற்றவர்கள் ஆசிரியர் சேவை 3i (இ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.
ஆசிரியர் சேவை 3i (ஆ)
கல்வியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள்.
ஆசிரியர் சேவை 3i (அ)
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்கின்ற பாட விதானங்களுக்கு உட்பட்ட அடிப்படையிலான பட்டம் ஒன்றினைப் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.
ஆசிரியர் சேவை 2ii
இந்த நியமனங்கள் இரண்டு முறைகளில் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கல்வியலுக்கான BEd பட்டம் ஒன்றினைப் பெற்றிருப்பவர் ஆசிரியர் சேவை 2ii எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.
அல்லது
மேலே குறிப்பிடப்பட்ட ஆசிரியர் சேவை 3i (அ) தரத்திற்கு தகைமையாக கருதப்படுகின்ற ஏதாவது ஒரு பட்டத்துடன் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்அனுமதிவழங்கப்பட்ட ஏதாவது ஓரு நிறுவனத்தில் கல்வியியல் பட்டப்பின்படிப்பு டிப்லோமா PGDE பெற்றிருப்பவர்கள் நேரடியாக ஆசிரியர் சேவை 2ii எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.
எப்படியாயினும் எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்காக நியமனங்கள் வழங்கப்படும் போது அதிகமானவர்கள் ஆசிரியர் சேவை 2ii எனும் தரத்தில் இணைத்துக் கொள்வதற்காகவே திட்டமிடப்பட்டிருக்கின்றன எனவே புதிதாக ஆசிரியர் சேவை ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்கள் இதற்கான தகைமைகளை வளர்த்துக்கொள்வது அவர்களது ஆசிரியராகும் கனவினை நனவாக்கிக்கொள்ள உதவியாக அமையும்.
இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை :
18 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு அதிகரிக்காமலும் இருக்கவேண்டும்.
இணைத்துக்கொள்ளும் முறைகள்.
ஆசிரியர் சேவை 3ii இ 3i (ஆ), 3i (அ) ஆகிய பதவிகளுக்காக எழுத்துப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டு அந்தப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படுகின்றது. நுண்ணறிவு மற்றும் பொது அறிவு என்ற இரண்டு வினாத்தாள்கள் இந்தப் பரீட்சைக்காக வழங்கப்படும். ஒவ்வொரு வினாத்தாளுக்கும் தலா 100 புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் 40 வீதம் அல்லது அதிலும் அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்கள் சித்தியடைந்தவர்களாவர். இவ்வாறு சித்தியடைந்தவர்களில் அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவி வெற்றிடங்களின் அடிப்படையில் இணைத்துக்கொளளப்படுவர்.
ஆசிரியர் சேவை 3i (ஆ) என்ற கல்வியியல் கல்லூரியில் கற்று வெளியானவர்களாவர்களே நியமிக்கப்பகின்றனர். இவ்வாறு வெளியாகின்றவர்கள் காணப்படுகின்ற வெற்றிடங்களில் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை ஒன்றின் ஊடாக நியமனம் வழங்கப்படும். இந்த நேர்முகப் பரீட்சையானது சான்றிதழ்களை பரிசோதிப்பதற்காகவே நாடாத்தப்படும் என்பதுடன் இதற்கான புள்ளகள் வழங்கப்படுவதில்லை. தற்போதைய நிலைமைகளின் பிரகாரம். கல்வியில் கல்லூரிகளில் பயின்று வெளியாகின்றவர்கள் அனைவருமே பொதுவாக நியமனம் பெறுவதற்கான வாய்ப்புடையவர்களாகின்றனர். ஆனால் கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளும்போது அசிரியர் நியமனம் கட்டாயமாக வழங்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்ற அடிப்படையிலேயே இணைத்துக்கொள்ளப்படுகின்றர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆசிரியர் சேவை 2ii பதவிக்கும் எழுத்து மூலப் பரீட்சைகள் நடாத்தப்படுவதில்லை என்பதுடன் காணப்படுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை ஒன்றின் ஊடாக தெரிவு செய்யப்பட்டு செயன்முறைப் பரீட்சை ஒன்றின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும். இந்த நேர்முகப் பரீட்சையானது சான்றிதழ்களை பரிசோதிப்பதற்காகவே நாடாத்தப்படும் என்பதுடன் இதற்கான புள்ளகள் வழங்கப்படுவதில்லை.
சம்பளம்.
2020 ஆண்டின் பின்னர் ஆசிரியர் நியமனம் பெறுகின்றவர்களது ஆரம்ப சம்பள விபரம் கீழே குறிப்பிடப்படுகின்றது.
ஆசிரியர் சேவை 3ii - 27இ740ஃஸ்ரீ
ஆசிரியர் சேவை 3i (இ) 29இ540ஃஸ்ரீ
ஆசிரியர் சேவை 3i (ஆ) 30இ300ஃஸ்ரீ
ஆசிரியர் சேவை 3i (அ) 32இ200ஃஸ்ரீ
ஆசிரியர் சேவை 2ii 33இ300ஃஸ்ரீ
(இந்த பதிவில் சம்பளத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன். சம்பளம் வழங்கும் முறைகள் மற்றும் பதவி உயர்வுகளின் போது சம்பளம் சீராக்கம் செய்யப்படுகின்ற முறைகள் தொடர்பாக வேறாக ஒரு பதிவினைத் தருவதற்காக முயற்சிக்கின்றேன்.)
அரச கரும மொழித் தேர்ச்சி
சிங்களம் மற்றும் தமிழ் என்பன அரச கரும மொழிகளாகும். நீங்கள் ஆங்கில மொழியில் பதவியினைப் பெற்றிருப்பீர்களாயின் உங்களது தாய் மொழிக்கான தேர்ச்சியினை உங்களது தகுதி காண் காலத்துக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகவும் அடுத்த மொழிக்கான தேர்ச்சியினை பொது நிர்வாக சுற்றறிக்கை 1/2014 இற்கு அமைய பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
நியமித்தலும் தரம் உயர்த்தலும்
ஆசிரியர் சேவையைப் பொறுத்த வரையில் தரம் உயர்வு வழங்குவதில் மேற்படி இரண்டு சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரம் உயர்த்தல் குறித்து பார்ப்பதற்கு முன்னர் மேற்படி இரண்டு சொற்பிரயோகங்கள் குறித்து அறிந்துகொள்வது பல சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
மேலே ஆரம்ப நியமனங்களாக குறிப்பிடப்பட்ட முதல் 4 விதமான தரங்களில் இருப்பவர்கள் அவர்கள் தற்போதிருக்கும் தரத்திலும் பார்க்க அடுத்த தரத்திற்கான கல்வி சார்ந்த தகுதிகளைப் பூர்த்திசெய்யும் போது அந்த தரத்திற்கான நியமனங்களை வழங்குவது நியமித்தல் எனப்படும்.
ஏதாவது ஒரு தரத்தில் இருக்கின்ற ஒருவர் தனது அடுத்த தரத்திற்கு செல்வதற்கான சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்துகொள்கின்ற போது அடுத்த தரத்திற்கு அவர்களை மாற்றுவகின்ற செயற்பாடு தரம் உயர்தத்தல் எனப்படும்.
நியமித்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட 4 தரத்திலும் இருப்பவர்கள் தமது அடுத்த தரத்திற்கான கல்வித் தகைமைகளை பூர்த்திசெய்கின்ற தினமே அதற்கான நியமித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆசிரியர் சேவை 3ii தரத்தில் இருப்பவர்கள் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) தரத்திற்கு நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்களுக்கான பயிற்சினைப் பூர்த்தி செய்கின்ற போது அவர்கள் ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்திற்கு நியமிக்கப்படுகின்றனர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கல்வியயல் பட்டம் B.Ed ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது ஆசிரியர் சேவை 2ii தரத்தில் நியமக்கப்படுகுpன்றனர்.
ஆசிரியர் சேவை 3i (இ) தரத்தில் இருப்பவர்கள் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) தரத்திற்கு நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்களுக்கான பயிற்சினைப் பெறுகின்ற போது அவர்கள் ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்திற்கு நியமிக்கப்படுகின்றனர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கல்வியயல் பட்டம் B.Ed ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது ஆசிரியர் சேவை 2ii தரத்தில் நியமக்கப்படுகின்றனர்
ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்தில் இருப்பவர்கள் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) தரத்திற்கு நியமிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கல்வியயல் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது ஆசிரியர் சேவை 2ii தரத்தில் நியமக்கப்படுகுpன்றனர்
ஆசிரியர் சேவை 3i (அ) தரத்தில் இருப்பவர்கள் கல்வியியல் பட்டப்படிப்பு டிப்லோமா PGED ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது ஆசிரியர் சேவை 2ii தரத்தில் நியமக்கப்படுகுpன்றனர்
ஆசிரியர் சேவை 3i (அ) தரத்தில் இருப்பவர்கள் கல்வியியல் பட்டப் பின் படிப்பு டிப்லோமா PGED உடன் M.Ed பட்டத்தினைப் பெற்றிருப்பின் ஆசிரியர் சேவை 2ii தரத்தில் நியமிக்கப்பட்டு அந்தசேவையின் 5 வது சம்பளப் படிமுறையில் இருத்தப்படுவர். (5வது சம்பளப் படிமுறை என்பது ஆசிரியர் சேவை 2ii தரத்திற்கான ஆரம்பச் சம்பளத்துடன் 5 வருடங்களுக்கான சம்பள ஏற்றங்களை சேர்க்கும் போது வருகின்ற சம்பளமாகும்.)
தரம் உயர்த்தல்
ஆசிரியர் சேவை 3ii ஆசிரியர் சேவை 3i (இ) ஆகிய தரங்களில் இருப்பவர்களுக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் தரம் உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவே இந்த இரண்டு தரங்களிலும் முதல் நியமனம் பெற்றிருப்பவர்கள் தமது கல்வித் தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஆசிரியர் சேவை 3i (ஆ) அல்லது 3i (அ) தரத்திற்கு தங்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் பெற்றுக்கொள்ளத் தவறும் போது அவர்களது தரத்துக்குரிய சம்பளங்களில் உச்சத்தினை அடையும் போது அதற்கு மேல் சம்பள உயர்வு கிடைக்கப்பெறாது. )அதாவது சுமார் 10 சம்பள உயர்வுகளுடன் உச்ச சம்பள அளவில் அதே சம்பளத்தையே காலம் பூராகவும் எடுக்க நேரிடும்)
ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்தில் இருப்பவர்கள் 5 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்திசெய்வதன் ஊடாக 2 ii தரத்திற்கு தரம் உயர்வு பெறலாம்.
ஆசிரியர் சேவை 3i (அ) தரத்தில் இருப்பவர்கள் 3 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்திசெய்வதன் ஊடாக 2 ii தரத்திற்கு தரம் உயர்வு பெறலாம்.
ஆசிரியர் சேவை 2ii தரத்தில் இருப்பவர்கள்
பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவராயின ஆசிரியர் சேவை 2ii தரத்தில் 7 வருடங்கள் பூர்ததியாகும் முன்னர் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொண்டிருப்பின் 2ii தரத்தில் நியமனம் பெற்ற தினத்திலிருந்து 7 வருடங்களில் ஆசிரியர் சேவை 2i தரத்திற்கு உயர்த்தப்படுவார். அவ்வாறுபட்டம் பெறாதவிடத்து 9 வருடங்களின் முடிவில் ஆசிரியர் சேவை 2i தரத்திற்கு உயர்த்தப்படுவார்.
ஆசிரியர் சேவை தரம் 2ii ல் இருப்பவர்கள் முதலாவது வருடத்தில் அல்லது இரண்டாவது வருடத்தில் தங்களது பட்டத்தை பூர்த்தி செய்வார்களானால் அந்தத் திகதியில் ஆசிரியர் சேவை தரம் 2ii இற்கான சம்பள மட்டத்தில் 3 வது சம்பள மட்டம் கிடைக்கப்பெறும். மூன்றாவது அல்லது அதற்குப் பின்னர் பட்டம் பூர்த்தியாகுமாயின் சம்பளத்தில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை
இன்னும் விளக்கமாகக் கூறுவதாயின் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பட்டம் பெற்று அல்லது பட்டம் பெறாத நிலையில் ஆசிரியர் சேவை தரம் 2ii ன் மூன்றாவது சம்பள நிலையைப் பெற்ற தினத்திலிருந்து 7 வருடங்களில் 2i தரத்தில் இருத்தப்படுவார்கள்;.
(மூன்று வருடம் சேவைக்காலத்தின் முடிவில் மூன்றாவது சம்பள நிலை கிடைக்கும் அல்லது அதற்கு முன் பட்டம் பெற்ற தினத்தில் மூன்றாவது சம்பள நிலை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்க.)
ஆசிரியர் சேவை 3i தரத்திலிருந்து PGED பட்டப் பின்படிப்பினை பூர்த்தி செய்யாத நிலையில் தரம் 2ii இற்கு தரம் உயர்வு அல்லது நியமிப்புச் செய்யப்படுகின்ற ஒருவர் அவ்வாறு 2ii இற்கு வந்த தினத்திலிருந்து 7 வருட காலத்துக்குள் PGED பட்டப் பின் படிப்பினை பூர்த்தி செய்வாரானால் 7 வருடங்களில் 2-i தரத்தில் இருத்தப்படுவார்கள்;.
அதே போன்று ஆசிரியர் சேவை 3-i தரத்திலிருந்து PGED பட்டப் பின்படிப்பினை பூர்த்தி செய்த நிலையில் 2-ii இற்கு வந்த ஒருவரும் 7 வருடங்களில் 2-i தரத்தில் இருத்தப்படுவார்கள்;.
அதே போன்று ஆசிரியர் சேவை 2-ii தரத்திலிu[க்கும் போது 5 வருட காலப்பகுதிக்குள் கல்வியியல் பட்டப்பின்படிப்பு MEd செய்து முடிக்கின்ற பட்டதாரியாகவும் PGED உள்ளவாகவும் இருப்பவர் அல்லது கல்வியியல் பட்டம் இருப்பவர் 5 வருடங்களில் 2i தரத்தில் இருத்தப்படுவார்.
அத்துடன் ஆசிரியர் சேவை 2 ii தரத்திலிக்கும் போது 5 வருட காலப்பகுதிக்குள் கல்வியியல் பட்டப்பின் படிப்பு MEd செய்து முடிக்கின்ற பட்டதாரியாகவும் PGED உள்ளவாகவும் இருப்பவர் அல்லது கல்வியியல் பட்டம் இருப்பவர் MEd செய்து முடிக்கின்ற தினத்தில் ஆசிரியர் சேவை தரம் 2ii இற்கான சம்பள மட்டத்தில் 5 வது சம்பள மட்டத்தினபை் பெற்றுக்கொள்ளலாம்;.
மேலே குறிப்பிட்டது போன்று இன்னும் விளக்கமாகக் கூறுவதாயின் ஆசிரியர் சேவை தரம் 2ii ன் 5 வது சம்பள நிலையைப் பெற்ற தினத்திலிருந்து 5 வருடங்களில் 2i தரத்தில் இருத்தப்படுவார்கள்;.
(5 வருடம் சேவைக்காலத்தின் முடிவில 5வது சம்பள நிலை கிடைக்கும் அல்லது அதற்கு முன் MEd பெற்ற தினத்தில் 5வது சம்பள நிலை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்க.)
இலங்கை ஆசிரியர் சேவை 21 இல் இருப்பவர்கள் அனைவருமே 1 ஆம் தரத்தினை அடைவதற்கு 6 வருடங்கள் சேவைக் காலத்தினை பூர்த்தி செய்யவேண்டும்.
பதவி உயர்வினைப் பெற்றுக்கொள்ளல்.
இந்த நிலையில் தகுதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது நியமிப்புச் செய்தலுக்கான அல்லது தர உயர்வு பெறுவதற்கான விண்ணபங்கள் அதிபர் ஊடாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஊடாக வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். அவைகள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக் மாகாண அல்லது மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டு அவரது கையொப்பத்துடன் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்டவரின் கையொப்பத்துடன் நியமிப்பு அல்லது பதவி உயர்வுக்கான கடிதங்கள் வழங்கப்படும்.
மேற்படி தகைமைகளுடன் அந்தந்த தரங்களுக்குரிய வினைத்திறன் தடை தாண்டலுக்கான மொடியூல்களும் பூரணப்படுத்தப்படவேண்யது கட்டாயம் என்பதனையும் கவனத்தில் கொள்ளவும்.
ஆசிரியர் சேவைகளுக்கான மொடியூல் இலக்கங்கள்
ஆசிரியர் சேவை 3ii 3i மொடியூல் இலக்கம் 1-7
ஆசிரியர் சேவை 2ii மொடியூல் இலக்கம் 8-14
ஆசிரியர் சேவை 2i மொடியூல் இலக்கம் 15-20
இந்தப் பகுதியில் சந்தேகங்கள் இருப்பின் எமது முகநூல் பக்கத்திற்குச் சென்று மெசென்ஜர் ஊடாக சந்தேகங்களை முன்வைக்கலாம்.
சம்பளம் என்றால் என்ன ஒவ்வொரு தரங்களுக்குமான சம்பளம் செய்கின்ற முறைகள் குறித்து இன்னுமொருபதிவல் ஆராயலாம். இணைந்திருங்கள்.