>

ad

Agrahara Insurance Scheme And Benefit - In Tamil

அக்ரஹார காப்புறுதி தொடர்பான விளக்கமும் இழப்பீட்டுக்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டிய விடயங்களும்.



Agrahara Claim Details in Tamil

லங்கா ஜொப் இன்ஃபோ தளத்தில் வௌியான அரச ஊழியர்களுக்கு பயன் தருகின்ற அனைத்து ஆக்கங்களிளையும் கீழ்வரும் லிங்கில் பார்வையிடலாம்.

https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html

பின்னனி


அக்ரஹார என்பது அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக பங்களிப்புச் செய்ய வேண்டிய ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் குறித்து பலருக்கும் சரியான தௌிவுகள் இல்லாமையினால் இழப்புத்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும்போது பல விதமான சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அல்லது இதனை  பெற்றுக்கொள்வதற்கான முறைகள் என்ன என்பது தெரியாமையினால் பலர் இந்த உதவித் தொகைகளை பெற்றுக்கொள்வதில்லை. அத்தகையவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த கட்டுரை அமந்துள்ளது.


அறிமுகம்


2005 ஆம் ஆண்டின் வரவுசெல திட்டப் பிரேரணைகள் மூலம் அரசாங்க அலுவலர்களுக்கு அறிப்படுத்தப்பட்ட திட்டமே அக்ரஹார காப்பீட்டுத் திட்டமாகும். அதன் அடிப்படையில்  1997.01.31 ஆந் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 5/97 மற்றும் அதனுடன் தொடர்புடையதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்குப் பதிலாக அக்ரஹார தொடர்பிலான 12/2005 ஆம் இலக்க சுற்றறிக்கை  2005.01.01 ஆந் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பகின்றது நிரந்தர ஒய்வூதியத்திற்கு உரித்துடைய அனைத்து அரசாங்க மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள அலுவலர்களும் இதற்குத் தகைமை பெறுவார்கள். அத்துடன் பகுதி  அளவிலான அரச ஊழியர்களும் தகுதி பெறுகின்றனர்.

அக்ரஹார காப்புறுதி என்றார் என்ன?
 
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படுகின்ற மருத்துச் செலவுகளில் குறிப்பிடப்பட்ட சிலவற்றை இந்தக் காப்பீட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் விபத்தென்றினால் மரணமடைதல் அல்லது இயற்கை மரணம் என்பவற்றின் போதும் இந்த காப்புறுதியின் ஊடாக இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. காப்புறுதிசெய்தவர் திருமணமாகாதவராயின் அவரது தாய் தந்தையருக்கு 70வயது வரையில்  இழப்பீட்டினைப் பெறலாம். திருமணமானவராயின் அவரது கணவன்/மனைவி  மற்றும் 21 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் அவர்கள் தொழில்செய்யாதவர்களாயின் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

பங்களிப்புத்தொகை


2015 ஆம் ஆண்டில் ஒருவரது மாதாந்த பங்களிப்புத் தொகையாக ரூபா 75 அறவிடப்பட்டதுடன் அது காலப் போக்கில் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ 125 அரவிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மாதாந்தம் 300 ரூபா பங்களிப்புச் செய்கின்ற அடிப்படையில் வௌ்ளித் திட்டம் (SILVER) இதற்கு மேலதிகமாக மாதாந்தம் 600 ரூபா பங்களிப்புச் செய்கின்ற அடிப்படையில் தங்கத்திட்டம்  (GOLD)  என்ற அடிப்படையில் அங்கத்தவர்களின் சுய விருப்பத்தின் பேரில் பங்களிப்புச் செய்வதற்கான முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



காப்பீட்டு நலன்கள் எதுவரையில் பெற்றுக்கொள்ளலாம்?

அரச பதவியிலி்ருந்து ஒருவர் தானாக விலகிவிடுவாரானால் அல்லது விலக்கப்படுவாறாயின் இந்தக் காப்புறுதி திட்டத்தின் நலன்கள் முற்றுப்பெறும். அது தவிர பதவியில் இருக்கும் காலமெல்லாம் அவர்களால் இந்தக் காப்புறுதியின் ஊடாக வழங்கப்படுகின்ற இழப்பீடுகளை பெற்றுக் கொள்ளலாம். 


அரச பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பங்களிப்பு இழப்பீடு என்பன உண்டா?

ஓய்வு பெற்றவர்களுக்காக 200 ரூபா பங்களிப்புடன் 2016.04.29 ஆம் திகதி முதல் "அக்ஹார பாதுகாப் புத்திட்டம்" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  2016. 01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெறுகின்ற அனைவரும் கட்டாயமாக இந்தக் காப்புறுதித் திட்டத்தில் பங்களிப்புச் செய்யவேண்டும். இவர்கள் தமது 70 வயதுவரையில் பங்களிப்புச்  செய்து நலன்களைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் 70 வயதிற்குப் பின்னர் 600 ரூபா பங்களிப்புச் செய்து நலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு பங்களிப்புச் செய்யும் போது அரச ஊழியர்கள் 125 ரூபா மாதாந்த பங்களிப்பில் பெற்றுக்கொள்கின்ற இழப்பீட்டுகளுக்கே இவர்கள் உரிமையுடையவாராகின்றனர். ஓய்வுபெற்றவர்கள் அதிக மாதாந்த பங்களிப்பு செலுத்துவதானது வௌ்ளித்திட்டம் என்றோ அல்லது தங்கத் திட்டம் என்றோ பொருள்படாது.

மூன்று விதமான காப்புறுதித்  திட்டங்கள் காணப்படுவது ஏன்?


தங்கத் திட்டம், வௌ்ளித் திட்டம், சாதாரண திட்டம் என்ற மூன்றுவகையான காப்புறுதித்திட்டங்கள் காணப்படுகின்றன அவைகளுக்காக பங்களிப்புத் தொகைகளில் வித்தியாசங்கள் காணப்படுவது போன்றே இழப்பீட்டுதெகைகள் மற்றும் இழப்பீட்டு வகைகளிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறைந்த பங்களிப்புத் தொகையுடைய காப்புறுதித் திட்டத்தில் வழங்கப்படுகின்ற இழப்பீட்டிலும் பார்க்க  கூடிய பங்களிப்புத் தொகைக்கான காப்புறுதித் திட்டத்தற்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான முழு விபரங்கையும் இந்த ஆக்கத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விபரங்களும் விண்ணப்பங்களும் அடங்கிய ஆவணத்தினைப் பதிவிறக்கிப் பார்வையிடலாம். 

இழப்பீட்டுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்.


குறித்த இழப்பீட்டுக்கான விண்ணப்பப்படிவத்தினை முறையாகப் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் உங்களது காரியாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ப்பிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடங்கள் தொடர்பில்  கவனிக்க வேண்டிய விடயங்கள் இந்த பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக்காக விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததும் அதன நிலை குறித்து எவ்வாறு அறிந்துகெள்வது?

விண்ணப்த்தை காரியாலயத்தில் சமர்ப்பித்த பின்னர் அவைகள் காப்புறுதி நிறுவனத்திடம் அனுப்பி வைக்கப்டும். உங்களது விண்ணப்பம் காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பப்ட்ட பின்னர் http://www.nitf.lk/en/ag_gold_silver1.php எனும் இணைய முகவரி ஊடாக தேசியஅடையால அட்டை இலக்கத்தினை உட்செழுத்தி  இழப்பீட்டின் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம்

சாதாரண காப்புறுதிதிட்டத்தில் இருக்கின்ற ஒருவர் வௌ்ளி அல்லது தங்க திட்டத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள முடியுமா? 


முடியும். குறித்த திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உங்களது கரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.  விண்ணப்பித்நததன் பின்னர் குறித்த திட்டத்திற்குரிய முதலாவது பங்களிப்புத் தவணை அறவிடப்பட்டு மூன்று மாதங்களின் பின்னரே புதிய திட்டத்தின் அடிப்படையிலான இழப்பீடுளுக்கு உரித்துடையவராவார்.


இவ்வாறு வௌ்ளி அல்லது தங்க திட்டத்திற்கு தமது சுய விருப்பத்தின் பேரில் மாற்றிக் கொண்டவர்கள் மீண்டும் ஆரம்ப திட்டமான மாதாந்தம் 125 ரூபா பங்களிப்புத் திட்டத்திற்கு அல்லது தஙக திட்டத்திலிருந்து வௌ்ளித் திட்டத்திற்கு ஓய்வு பெறும்வரை மாற்றமுடியாது என்தாக குறிப்பிடப்படுகின்று. 

எனினும் வௌ்ளித் திட்டத்தில் பங்களிக்கின்ற ஒருவர் அதிலும் உயர்ந்ததிட்டமான தங்க திட்டத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

இழப்பீடு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது கவனத்தில்கொள்ளவேண்டிய விடயங்கள்


01.  வைத்தியசாலையிலிருந்து வௌியேறி 90 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
02. நீங்கள் அனுப்புகின்ற அனைத்து ஆவணங்களும் நிறுவனத் தலைவரினால் அத்தாட்சிப்படுத்தப்படவேண்டும்
03, கணவன் மனைவி ஆகிய இருவரும் அரச் சேவையில் இருப்பார்களாயின் விண்ணப்பம் நோயாளி பங்களிப்புச் செய்கின்ற காப்பீட்டுத் திட்டத்தின் ஊடாகவே விண்ணப்பிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு விண்ணப்பிப்பதாயின் கவணவன் மனைவி இவர்களில் யாரேனும்ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.

03 தன்னிடம் தங்கி வாழ்பவர்களுக்காக இழப்பீடு கோரும் போது அரச சேவையில் இல்லாத மனைவிக்கு அல்லது கணவருக்காகவாயின் விவாகச்சான்றிதழின் நிழற்படமும், பிள்ளைகளுக்காயின்  பிறப்புச் சான்றிதழின் நிழற் பிரதியும் இணைக்கபடல்வேண்டும்.

04. காப்புறுதி செய்துள்ள அரச ஊழியர் திருமணமாகாதவராயின் தந்தை தாய் ஆகியோருக்காக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் 70 வயதுக்குக் குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.  இந்த நோக்கத்திற்காக விண்ணப்பிக்கும் போது கீழ்வரும் ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும்.

 •காப்புறுதி செய்யப்பட்டவரினட பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று
• தாயின் /தகப்பன் பிறப்புச் சான்றிதழின் அல்லது   தேசிய 
ஆளடையாள அட்டையினது நிழற்படப்பிரதிகள்.
• காப்புறுதிசெய்யப்பட்டவர் விவாகமாகாதவர் என்பதாக உறுதிப்படுத்தும் நிறுவனத் தலைவரின்  கடிதம்.
• காப்புறுதிசெய்யப்பட்டவரின் தாயும் தகப்பனும் அவரில் தங்கிவாழ் வோராக உள்ளனரென்றும், அவர்கள் வருமானமெதனையும் உழைக்கவில்லை  என்றும் பிரதேச செயலாளரால் உறுதிப்படுதத்ப்பட்ட கிராம சேவகரின் சான்றிதழ்

05 காப்றுதி செய்தவர் இழப்பீடு கோருகின்ற விடயம் தொடர்பில் வேறு ஏதாவது காப்புறுதி நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரியிருப்பின் அந்த நிறுவனத்திற்கு சமர்ப்பித்த எல்லாப் பற்றுச்சீட்டுகளினதும் பிரதிகளையும்  பெறுகின்ற இழப்பீட்டு தொகையினைக் குறிப்பிட்டு மற்றைய நிறுவனம் வழங்கிய கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 

06 இழப்பீடுக்கான அனைத்து கோரிக்கைகளுடனும் கீழ்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். 
 
6.1 மருத்துவமனையில் தங்கியிருத்தல் அல்லது இதயம் தொடர்பான சிகிச்சை அல்லது புற்று நோய்தொடர்பான இழப்பீடுகளுக்காக
  • நோய் குறித்த மருத்துவ அட்டை ( வைத்தியசாலையில் சேர்ந்த திகத, அஙடகிருந்து வௌியான திகதி குறிப்பிட்டு வைத்தியசாலையில் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டதோ அந்த வைத்தியரின் கையொப்பம் பெறப்படவேண்டும். 
  • தனியார் மருத்துவமனையாயின் கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டுகளும் மருந்து வாங்கியபற்றுச் சீட்டுகளும் இறுதிப் பற்றுச்சீட்டுகளுமை மூலப்பிரதி
  • பெயர்களும் திகதிகளும் மாற்றப்பட்ட ஆவணங்கள் பற்றுச்சீட்டுகள் நிராகரிக்கப்படும். 
  • தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போது மேற்கொள்கின்ற ஏனைய செலவுகள் தனித்தனியாக குறிப்பிடப்படவேண்டும். விசேடவைத்திய நிபுணர் சாதாரணவைத்தியர் கொடுப்பனவுகள் வெவ்வேறாக குறிப்பிடப்பட வேண்டும். 
6.2 மகப்பேற்றுக்காக ( இரண்டுதடவைகள் மாத்திரமே வழங்கப்டும்)
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் குறந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்பினை உறுதிப்படுத்தும் ஆவணஙகளின் பிரதி இணைக்கப்டவேண்டும்.
  • அரசாங்கள மருத்துவமனையில் நோய் நிவாரண அட்டை வழங்கப்படாவிடின் கருத்தரித்ததை உறுதிப்படுத்த வழங்கப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்டவேண்டும்.  மருத்துவமனையில் சேர்ந்த திகதி அங்கிருந்து விடுவிக்கப்ட்டதிகதி என்பன குறிப்பிடப்படவேண்டும்
மகப்பேற்றுக்காக சாதாரண காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாராண பிரசவத்திற்கு அரசாங்க மருத்துவமனைக்கு நாளொன்று 500 ரூபா வீதம் 5 நாட்களுக்கு 2500 ரூபாவும்..தனியார் வைத்தியசாலையாயின் நாளொன்றுக்கு 2000 ரூபா வீதம் 5 நாட்களுக்கு 10,000 ரூாவும் ரூபாவும் தனியார் மருத்துவமனையில் சிசேரியன் ஆயின் 40,000 ரூபாவும்  பெறலம்.

மகப்பேற்றுக்காக வௌ்ளி திட்டத்தின் கீழ் சாராண அல்லது சிசேரியன் அல்லது கருச்சிதைவு என்பவற்றுக்காக அரசாங்க மருத்துவமனைக்கு நாளொன்று 1500 வீதம் 5 நாட்களுக்கும் .தனியார் வைத்தியசாலையாயின் 20,000 ரூபாவும் தனியார் மருத்துவமனையில் சிசேரியன் ஆயின் 60,000 ரூபாவும்  பெறலம்.

இது தங்கத் திட்டமாயின் சாராண அல்லது சிசேரியன் அல்லது கருச்சிதைவு என்பவற்றுக்காக அரசாங்க மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 3000 வீதம்  (ஆகக்கூடியது 5 நாட்களுக்கும்).தனியார் வைத்தியசாலையாயின் 50,000 ரூபாவும் தனியார் மருத்துவமனையில் சிசேரியன் ஆயின் 100,000 ரூபாவும்  பெறலம்.


6.3 மூக்குக் கண்ணாடியாயின் கீழ்வரும் ஆவணங்களின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
  • கண் பரிசோதிப்பதற்கான வைத்தியர் ஒருவரை நாடியிருப்பின் அதற்கான பற்றுச் சீட்டும் வைத்தியரின் ஒப்பமும் பதவி இலட்சினையும்.
  • கண் பரிசோதித்தது அரசாங்க வைத்திசாலையிலாயின் அதற்குரிய ஆவணங்களும் வைத்தியரின் கையொப்பமும் இலட்சினையும்.
  • மூக்குக்கண்ணாடி கொள்வனவு செய்ததற்கான பற்றுச்சீட்டின் மூலப்பிரதி விற்பனை நிலையத்தின் அலுவலக முத்திரையுடன் பணம் செலுத்தப்பட்டது என்பதாக இலட்சனை பொறிக்கப்ட்டிருக்கவேண்டும்.  
இந்த இழப்பீடு 3 வருடங்களுக்கு ஒருமுறை சாதாரண காப்பீட்டு திட்டதிற்கு 3500 ரூபாவும்  வௌ்ளி திட்டத்திற்கு ரூபா 3500 ம் தங்க திட்டத்திற்கு 5000 ரூபாவும் வழங்கப்டும், 

தங்களது தேவைப்பாடுகளுக்கு அமைய கீழே குறிப்பிடப்படுகின்ற சுற்றுநிருபங்களையும் தேசிய காப்பீட்டுஅறக்கட்டளை நிதியத்தின் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களையும் பரிசீலித்து தங்களுக்குப் பொறுத்தமான திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

இவை தவிரழங்கப்டுகின்ற இழப்பீட்டு தொகை விபரங்களை http://www.nitf.lk/en/insurance.html  தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.அத்துடன்அவசியமான விண்ணப்பப்படிவங்களையும் பதிவிறக்கிக்கொள்ளலாம்.
அக்ரகார காப்பீடு குறித்த அரச நிர்வாக சுற்றறிக்கைகள். 






அக்ஹார குறித்த அனைத்து படிவங்களையும் பதிவிறக்க 


இந்த ஆக்கம் லங்கா ஜொப் இன்ஃபோ இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்படுகின்றது.