>

ad

அரச ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய பொது நடத்தையும் பொது ஒழுக்கமும்.

தாபன விதிக் கோவையின் இரண்டாவது பகுதி
XLVIIம் அத்தியாயம்​

லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்

https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html


பொது நடத்தைகளும் ஒழுக்கமும்

லிகிதராக அசே சேவையில் இணைந்த திரு பிரசன்ன தற்போது முகமை உதவியாளர் சேவையில் தரம் 1 இல் சேவையாற்றுகின்றார். தறபோது அவர் நிதி உதவியாளராக வீரகம பிரதேச செயலகத்தில் பணிபுரிகின்றார். மக்களுக்கு மிகவும் பெறுமதியான சேவையாற்றுகின்ற இக்காரியாலயத்தில் அபிமானம் பெற்றவராகவும்  பிரதேசிவாசிகள் பலருக்கு அறிமுகமானவராக பிரசன்ன விளங்கினார். அனைத்து பணிகளிலும் மும்முரமாக ஈடுபடும் பிரசன்வைக் குற்றம் சாட்டி முறைப்பாடொன்று நிறுவனத் தலைவரான திரு அரவிந்தவிற்கு சென்ற வாரம்  ​வந்திருந்தது.  பணிகளை நிறைவேற்றுவதற்காக பிரசன்ன மக்களிடம் கைம்மாறு பெறுகின்றார் என அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த்து. அதுமட்டுமன்றி பல்வேறு கருமங்களை செய்து தரும் வாக்குறுதியின் அடிப்படையில் பிரசன்னவின் மனைவி மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த  முறைப்பாட்டைத் தொடர்ந்து பிரசன்ன கவனமாக தனது பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

 

முறைப்பாடு சம்பந்தமாக புலனாய்வு செய்த போது கடந்த நாளொன்றில் பிரசன்னவின்  தூரத்து உறவுக்காரர் ஒருவர் வந்து  பிரசன்னவுக்கு  பரிசுப் பொதி ஒன்றை வழங்கியதுடன்  அவரது மனைவியிடம்  முன்னொரு நாள் பெற்றுக் கொண்ட கடன் ஒன்றை மனைவியிடம் ஒப்படைக்குமாறு பிரசன்னவிடம்  கொடுக்க முயன்றதாகவும் பிரசன்ன அதனை மனைவியிடமே ஒப்படைக்க பணித்தகவும்.  இந்த  சம்பவத்தை  அவதானித்த ஒருவர் தப்பெண்ணம் கொண்டு முறைப்படு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.  இதற்கிடையில்  காரியாலயத்தில் பணிபுரியும் செல்வி சமன்மலியின் திருமண வைபவத்திற்காக  உத்தியோகத்தர்கள்  ஆயத்தங்களை மேற் கொண்டனர்..  இதற்கு முன்னர் ஏற்பட்ட விவாக மரண நிகழ்வுகளுக்காக உத்தியோகத்தர்களை கலந்து கொள்ளச் செய்வதற்கு அன்பளிப்பு பட்டியல்  உருவாக்குவதற்காகவும்  ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும் ஈடுபட்டு வந்த பிரசன்ன இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபடாது ஒதுங்கிக் கொண்டார்.  எனினும் பிந்திய நத்தார் பண்டிகையின் போது உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில் வழங்குவதற்காக பணம் சேகரித்து போன்று இம்முறை  சித்திரைப் புத்தாண்டுக்கும்  பணம் சேகரிப்பதற்கு பிரசன்ன முன் வந்ததன் காரணம் உத்தியோகத்தர்கள் குறை சொல்லக் கூடும் என்ற அச்சத்திலாகும். 

 

இதற்கிடையில் நிர்வாக உத்தியோகத்தரான திரு ரத்னசூரிய இளைப்பார இருப்பதால் அவருக்கான பிரியாவிடை வைபவத்திற்கு பணம் சேகரிக்கும் பணி பிரதான முகாமை உத்தியோகத்தரான அஜித் இனால் மேற்கொள்ளப்பட்டது.  காணி சம்பந்தப்பட்ட பிரிவில் கடமையாற்றுகின்ற திரு மஹிந்த பணக்கஷ்டத்தில் இருப்பதால் அவரிடம் நிதி பெறாமல் இருக்க தீ​ர்மானித்தனர். அத்துடன் அந்த வைபவத்தின் போது முன்னால் பணிப்பாளருக்கு ஒரு பரிசு வழங்கவும் முடிவெடுத்திருந்தனர். எனினும் போதுமான பணத்தை சேர்த்துக் கொள்ள முடியவில்லை.  முன்னைய தினம் ஒன்றில் காரியாலயத்துக்கு வந்த அரவிந்தவுடன் தொடர்புடைய இந்திய  அரச  தலைவர் ஒருவர் மூலமாக இரண்டு பரிசுப் பொதிகள்  கிடைத்தன. அதில் ஒன்றை முன்னால் பணிப்பாளருக்கும் மற்றையதை ரத்னசூரியவுக்கும் வழங்குவது குறித்து அரவிந்தவிடம்  ஆலோசித்தனர். அத்துடன் தேவைப்படும் மேலதிகப் பணத்தை சிரப்பரிடம் பெற்று  பின்னர் திரும்பக் கொடுப்பதற்காக அனைவரும் உடன்பட்டனர்.                                      

 தொடரும்....

 வினாக்கள்

01. அரச உத்தியோகத்தர்களின் பொதுவான நடத்தை “ஒழுக்கம் என அழைக்கப்படும்” அதனடிப்படையில் பிரசன்ன மக்களிடம் கைம்மாறு பொருள் பெற்றது ஒழுக்க மீறலாக கருத முடியுமா?


·         முடியும். உத்தியோகத்தர்களின் பொது நடத்தை குறித்து தாபனக்கோவையின் இரண்டாம் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்வதற்காக பணம் அல்லது பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பிரசன்ன பரிசில்கள் பெற்றதாக புலனாய்வு விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு ஒழுக்க மீரல்கள் இடம் பெறவில்லை.


2. பிரசன்னவுக்கு எதிரான முறைப்பாட்டில் பிரசன்னவின் மனைவி தான் புரியும் கடமைகளுக்காக கைமாறு பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காரணி பிரசன்னவைப் பாதிக்குமா?

·         அம்முறைப்பாடு உண்மையாக இருப்பின் பிரசன்னவை நிச்சயமாகப் பாதிக்கும். நிறைவேற்றப்பட்ட சேவையின் பெறுமதிக்காக அளிக்கப்படும் பொருட்கள் அல்லது பரிசுகள் என்பவற்றையோ அல்லது  வேறுவிதமான இலாபங்கள் பிரயோசனங்களை அலுவலர் அல்லது குடும்ப உருப்பினர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுக்கொள்ளலாகாது என தாபனவிதிக்கோவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசன்னவின் மனைவி மீதான குற்றச் சாட்டு பிரசன்னவுக்கு ஒழுக்க மீறலாக அமையும்.


3. “மக்களிடம் பரிசுப் பொருட்களைப் பெறுவது கூடாது என்ற போதிலும் வெளி நாடுகளிலிருந்து கிடைக்கும் பரிசில்களைப் பெற்றுக் கொள்ளலாம்” இக்கூற்றுடன் உடன்படுகின்றீரா?



·         ஆம். அலுவலர் ஒருவர் தன்னால் நிறைவேற்றப்பட்ட பணி ஒன்றுக்காக பரிசில்கள் பெறுவது கூடாது என தாபன.விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்  வெளிநாட்டு அரச  தலைவர் அல்லது பிரதிநிதி ஒருவரிடமிருந்து அரச அலுவலர் ஒருவருக்குக் கிடைக்கப் பெறுகின்ற பரிசுகளானவை அரச பிரதிநிதி ஒருவர் என்ற வகையில் தான் வகிக்கின்ற பதவிநிலைக்காக  கிடைக்கப் பெற்ற பரிசுகளாகக் கருதப்படல் வேண்டும்.

·         வீரமக பிரதேச்செயலகத்திற்கு இந்திய அரச தலைவரிடமிருந்து கிடைத்த பரிசை ஏற்க முடியும்

 

4. அரவிந்தவுக்கு இந்திய அரசிடம் இருந்து  கிடைத்த பொதிகளை தனதாக்கிக் கொள்ள முடியுமா?

·         அரவிந்த அப்பொதிகளைத் தனதாக்கிக் கொள்வதாயின் அப்பொதிகளின் பெறுமதி ரூபா 5000 இற்கு குறைவானது என சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்


5. அரவிந்தவுக்கு  கிடைத்த இரண்டு பொதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை?

·         இந்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு  தலைவர்கள் கொடுக்கின்ற பரிசுகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடல் வேண்டும்


6. இந்தியாவிலிருந்து கிடைத்த ஒரு பொதியின் பெறுமதி 7000 ரூபா என அரவிந்த கூறுகின்றார்.  அப்பொதி தற்பொழுது துறைமுகத்தில் இருக்கின்றதெனில் குறித்த காரியாலயத்தில் அலுவளர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளும் வழி முறை யாது?

·         பொதியின் பெறுமதி 5000 ரூபாவுக்கு மேட்பட்டது என்பதால் அதற்காக விதிக்கப்படும் தீர்வைக் கட்டணங்களைச் செலுத்திப் பெற்றுக் கொள்ள அரவிந்த உத்தேசிப்பதாயின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அந்தப் பரிசுகள் தொடர்பில் தகுந்த ஒரு முறையைக் கையாள வேண்டும்.


7. மற்றைய பொதியின் பெறுமதி 4000 ரூபா என சுங்கப் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். அப்பரிசுப் பொதியை அரவிந்த தனதாக்கிக் கொள்ளலாமா?

·         பெற்றுக்கொள்ள முடியும். பொதியின் பெறுமதி ரூபா 5000 இலும்  குறைவு என்பதால் சுங்கத் தீர்வை இன்றி அதனைப் பெற்றுக் கொள்ளலாம்


8. “எக்காரணத்திற்காகவும்  அரச நிருவனங்களில் நிதி சேகரித்தல்  மற்றும் நிதி உதவிப் பத்திரங்கள் ஒவ்வரிடமும் அனுப்பி பணம் சேகரிப்பது தடுக்கப்பட்டுள்ளது” இக்கூற்றை ஏற்றுக் கொள்கின்றீரா?

·         எற்கமுடியாது. அரச நிருவனங்களில் நிதி சேகரித்தல்  மற்றும் நிதி உதவிப் பத்திரங்கள் ஒவ்வரிடமும் அனுப்பி பணம் சேகரிப்பது தடுக்கப்பட்டுள்ளது என தாபன விதிகளில் கூறப்பட்டுள்ள அதேநேரம் அலுவலர் ஒருவர் இடம்மாறிச்  செல்கையில் அல்லது அரச சேவையிலிருந்து விலகிச் செல்கையில் இப்பிரிவின் விதிகள் தளர்த்தப்படலாம் எனினும் திணைக்களத் தலைவரின் அல்லது செயலாளரின் அனுமதியுடன் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.


9. ரத்னசூரிய ஓய்வுபெறல் பொருட்டு நிதி சேகரிக்க முடியுமா?

முடியும். அரச நிர்வாக அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் நிதி சேகரிக்க முடியும்.


10. “தனது கடமைகளை சரிவர நிறைவேற்றுமிடத்து அரச உத்தியோகத்தர் ஒருவர் பணக் கஷ்டத்தில் இருப்பது ஒரு பிரச்சனையல்ல.” விளக்குக

·         அலுவளர் ஒருவர் எத்தகைய ஒரு காரணாத்தைக் கொண்டும்  பாரிய அளவிலான பணக் கஷ்டத்தை எதிர் நோக்குவராயின் அவரின் வினைத்திறன் வீழ்ச்சியடைவதற்கும். அவ்வாறான பணக்கஷ்டம் இராத சந்தர்ப்பத்தில் அவர் மேல் இருந்த திறமையும் நம்பிக்கையும் குறைவதற்கு காரணமாகும் குற்றமாகக் கருதப்படும் என்பதனால் அனைத்து அலுவலர்களும் பணக்கஷ்டம் இல்லாதவர்களாக இருந்து கொள்ள வேண்டும்.


11. மகிந்த தொடர்பாக அரவிந்த எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் யாவை?

·         அலுவலர் ஒருவர் பணக்கஷ்டத்தில் இருப்பதானது ஒழுக்க மீறலாகும். அது பொதுவான நடத்தைகளுக்கு புறம்பான காரியமாகும் எனவே அவர் ஒழுக்கம் மீறியுள்ளார் எனக்கருதி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.


12. மகிந்த வெளியொருவரிடம் கடன் பெற்றுள்ளார் எனக் கொள்வோம், அந்த கடனுக்கு பிணையாக தனது இம்மாத சம்பளப் பற்றுச் சீட்டை வைத்துள்ளார் என அறியக் கிடைக்கின்றது எனில், இது தொடர்பான உங்களது அபிப்பிராயம் என்ன?

·         அலுவளர் ஒருவரின் சம்பளம் பொதுவாக அவ்வுத்தியோகத்தரால் சம்பளப் பட்டியலில் கையொப்பமிடுவதன் மூலம் பெறல் வேண்டும். “கொண்டுவருபவருக்குச்  செலுத்தவும்” என்ற வகையில் குறிப்பிட்டுள்ள சம்பளப் பற்றுச்சீட்டை எவரேனும் பிணையாக வைத்து கடன் பெறுவது அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதை உறுதி செய்கின்றது. எனவே அவர் ஒழுக்கம் மீறியுள்ளார் எனக்கருதி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.


13. நீங்கள் இக்காரியாலயத்தின் சிரப்பர் (காசாளர்) எனில் உங்களது வசமிருக்கும் அரச பணத்திலிருந்து வைபவத்திற்கான செலவுகளுக்காக பணம் வழங்கும் முறைமையைக் குறிப்பிடுக.

·         அரச சேவையைச் சேர்ந்த சிற்ப்பர் ஒருவர் அல்லது நிதிப் பொறுப்பாளர் ஒருவர் அனுமதியின்றி எந்த ஒரு அலுவலருக்கும் முற்பணம் வழங்குவதும் கடனுக்கு பணம் வழங்குவது முழுமையாகத்  தடை செய்யப்பட்ட விடயமாகும். அத்துடன் அலுவலரிடமுன்ன அரச நிதியைக் கடனாகப் பொறுவது தடுக்கப்பட்டுள்ளது. இவை மிகப்பெறிய குற்றமாகையால்  அத்தகைய குற்றச் சாட்டொன்றுக்கு ஆளாகிய உத்தியோகத்தருக்கு எதிராக வழக்குத்  தாக்கல் செய்யவும், முறை சார் ஒழுக்காற்று விசாரணை நடாத்தவும்  ஒழுக்காற்று அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

n

 பதெடர்ச்சி அடுத்த பதிவில்

இஎமுத முநூல் குழுமம்

.fawww.facebook.com/LankaJobinfocom-157301272736519


வட்சப் குழுக்கள்