தேசிய இளைஞர் படையணியின் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி நிலையங்களில் மூன்று மாத பாடநெறி (மென் திறன்) க்காக மாணவர் இணைப்பு இடம்பெறுகின்றது. இந்தப் பாடநெறி வதிவிடமற்ற, முழு நேர, இலவசமாக நடாத்தப்படும் பாடநெறியாகும். பாடநெறிக்கு விண்ணப்பித்தல்.-
தேசிய இளைஞர் படையணி பயிற்சிப் பாடநெறி இடம்பெறும் நிலையங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. தாங்கள் விரும்பிய நிலையத்தை தெரிவு செய்து குறித்த மாவட்டத்தின் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்திற்கு பதிவு செய்யப்பட்ட தபாலில் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் அனுப்பும் போது காகித உறையின் இடது பக்கத்தில் ''2022 ஆம் கல்வியாண்டின்ன் முதலாம் கட்டம்."" என குறிப்பிடப்படுவதுடன் மின்னஞ்சலில் அனுப்பும் போது மின்னஞ்சலின் விடயம் என்ற இடத்திற்கு ''2022 ஆம் கல்வியாண்டின்ன் முதலாம் கட்டம்."" எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் 2022.02.10 ஆந் திகதியாகும்.
குறிப்பு இந்த அறிவித்தலானது 2021.12.24 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலிலிலே பிரசுரமானது. முடிவுத்திகதியாக 2022.01.10 எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே முடிவுத் திகதி நீடிக்கப்படவேண்டும். விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்கத்தவறவேண்டாம்.