நிரந்தர, தற்காலிக, அமைய அல்லது பயிலுனர் என்ற எந்த வகையான நியமனம் பெற்றவர்களும் உரித்துடையதாகும்.
சம்பளத்துடனான பிரசவ விடுமுறை
அனைத்து குழந்தைப் பிரசவங்களுக்கும் உரித்துடையதாகும்.
லீவு 84 தினங்களுக்கு பெறலாம்.
பிரசவம் நிகழ்ந்து 4 வாரங்களாகும்வரை உத்தியோகத்தரை கடமைக்கு வருவதற்கு இடமளிக்கப்படுவதில்லை
இந்த லீவு பெறுவதற்காக வைத்திய அறிக்கை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்அவசியமாகும்.
சனி ஞாயிறு அரச விடுமுறைகள் தவிர்ந்த அடிப்படையில் வேலை நாட்கள் மாத்திரம் கணக்கிடப்படும்.
இது பூரணமாக வழங்கப்படுகின்ற விசேடமான லீவாகும்.இது மற்றைய லீவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை
பிறக்கும் போது குழந்தை மரணித்தாலோ அல்லது குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குள் குழந்தை மரணித்தாலோ, குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் விடுமுறை உரித்தாகின்றது.
அரைச் சம்பள லீவு
மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
சம்பளமற்ற பிரசவ லீவு
மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
கடன் ஏதும் இருப்பின் அவைகளை அறவிடுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கருச் சிதைவு ஏற்படும் போது
வைத்திய அறிக்கையில் குறிப்படுகின்ற அளவான லீவினை உத்தியோகத்தரின் ஓய்வு லீவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தாய்ப்பால் ஊட்டுவதற்காக வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லல்
அரைச் சம்பள பிரசவ லீவு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த சலுகையினைப் பெறலாம். குழந்தைக்கு 6 மாதமாகும்வரையில் மாத்திரமே இந்த லீவு வழங்கப்படும்.
கர்ப்பம் தரித்து 5 மாதம் பூர்த்தியானதும் அரை மணிநேரம் தாமதமாகி வருவதற்கும் அரை மணி நேரம் முன்னதாக செல்வதற்கும் அனுமதி வழங்கலாம்.
அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற பிரசவ லீவு காலத்தில் குழந்தை மரணிக்குமாயின் அதிலிருந்து 7 நாட்களில் லீவு செல்லுபடியற்றதாகிவிடும்.
சம்பள ஏற்றம், பதவி உயர்வு, ஓய்வுதியக் கணிப்பு என்பவற்றுக்கு இந்தலீவு பதிப்பினை ஏற்படுத்தாது.
அவசியப்படுமிடத்து லீவினை இரத்துச் செய்து விட்டு சேவைக்கு செல்ல முடியம்.
தந்தயைாருக்கான லீவு
மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்ததற்காக இந்த லீவு பெறலாம்.
03 தினங்கள் வழங்கப்படும்.
குழந்தைபிறந்த தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பெற வேண்டும்.
திருமணச் சான்றிதழ், குழந்தை பிறப்பு தொடர்பான வைத்திய சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை சமர்ப்பித்து இந்த விசேட லீவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
19. அரச பரீட்சைகளில் பங்குபற்றுவற்கான லீவு
வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்காக உரித்தாகும்
முதலாவது முறையாக முகம் கொடுப்பதற்கு மாத்திரம் வழங்கப்படும்.
பிரயான கொடுப்பனவு மற்றும் வேறு கொடுப்பனவுகள் இதற்கு இல்லை
ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறாக முகம் கொடுப்பதாயின் முதல்தடவை மாத்திரம் பெறலாம்.
ஏனைய அரசகரு மொழித் தேரச்சியைப் பெறுவதற்கான பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக ( அ.நி.சு. 2/2016)
முதலாவது முறை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
அரச கருமமொழிகள் திணைக்களம் / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் என்பவற்றினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்காக மாத்திரம். வழங்கப்படும்.
20. கட்டாய லீவு.
உத்தியோகத்தர் தனது கடமைகளை மேற்கொள்வது பொது நலனுக்காக அல்ல என்பதாகக் கருதப்படும் போது கட்டாய லீவு வழங்கப்படலாம்.
வைத்திய காரணங்கள் அல்லது விசேட (ஒழுக்காற்று) காரணங்கள்
நியமன அதிகாரியே இந்த லீவினை வழங்குவார்.
ஆரம்பமாக சேமித்துள்ள லீவுகளில் இருந்து கழிக்கப்படும்.
அதன் பின்னர் சம்பளமற்ற லீவாக கணிக்கப்படும்.
21.அரைச் சம்பள லீவு .
உத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு லீவுகள் முடிந்ததன் பின்னர் சுகயீனங்களுக்காக இந்த லீவினைப் பெறலாம்.
இங்கு ஓய்வு லீவுகள் எனப்படுவது நடப்பு வருடத்தின் ஓய்வு லீவுகள், கடந்த வருடத்தில் மீதப்படுத்தியுள்ள ஓய்வு லீவுகள், முன்னைய லீவுகள் என்பவற்றைத் குறித்தும்
அரைச்சம்பள லீவு பெறமுடியுமான உச்ச கால அளவு சேவைக் காலத்தின் 1/6 பகுதியாகும்
தொடராக 12 மாதங்களுக்கு மேல் வழங்கமுடியாது
பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாட்டில் லீவினை கழிக்க முட்படும்போது
அவருக்கான ஏனைய லீவுகள் முடிந்த பின்னர் எடுக்கலாம்.
மொத்த அரைச் சம்பள லீவினையும் அல்லது அதன் ஒரு பகுதியை சம்பளமற்ற லீவாக்குவதற்கு லீவு வழங்கும் அதிகாரம் பெற்றவருக்கு அதிகாரமுண்டு.
கீழ்வருகின்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையில் லீவினைக் கழப்பதற்கு வழங்க முடியும் (பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு)
அரைச் சம்பள லீவு 3 மாதங்களுக்கு அதிகரிக்கலாகாது.
நடப்பு வருடம் மற்றும் அதற்கு முன்னைய இரண்டு வருடங்களின் ஓய்வுலீவுகள் முடிந்திருக்கவேண்டும்.
லீவில் இருக்கும் போது உத்தியோகத்தர் ஓய்வு பெற்றாலோ அல்லது சேவையிலிருந்து நீங்கினாலோ கடைசியாக பணியாற்றிய தினத்திலிருந்து பெற்ற சம்பளத்தினை மீளவழங்க வேண்டும்.
பதவி நிலையல்லாத உப நிலைகளில் உள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு மருத்துவச் சான்றிதழில் அடிப்படையில் இலங்கையில் கழிப்பதற்கு இந்த லீவினைப் பெறலாம்.
சம்பளத்திற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் பெறும் போது அதிலும் அரைப்பகுதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு வருடத்தில் ஆரம்பித்து அடுத்த வருடத்திற்கு தொடருக்கின்ற லீவுகள் இடையீ டிலா லீவாகக் கருதப்பட்டு முழுக் காலத்திற்கும் அரைச் சம்பளமாக கருதப்படல் வேண்டும்.
அரைச் சம்பள லீவுக்குப் பிறகு பூரண சம்பளத்துடனான லீவு பெற முடியாது.
முழுச் சம்பளத்துடனான லீவுக்குப் பின்னர் அரைச் சம்பள லீவு பெறலாம்.