இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன?
இலங்கை வௌிநாட்டு சேவை என்பது இலங்கையின் முதல்தர சேவையாகக் கருதப்படுகின்றது. இலங்கை நிர்வாக சேவையுடன் ஒப்பிடும் போது அதிலும் ஒருபடித்தரம் கூடிய சேவையாக இதனைக் குறிப்பிடலாம். இந்தப் பரீட்சையும் மிகவும் போட்டித் தன்மையுடைய பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் வெற்றிகொள்ளவேண்டும் என்ற ஆர்வவமும் விருப்பமும் இருப்பவர்களுக்கு இந்தப் பதவி குறித்தும் பரீட்சை அமைப்புக் குறித்தும் விளக்கம் தருவதற்காக விளக்குகின்ற கட்டுரையினை
LANKAJOBINFO.COM இணையத்தளம் உங்களுக்காக தயாரித்துத் தருக்கின்றது.
இலங்கை வௌிநாட்டுச் சேவை என்பது யாது?
இலங்கை நிர்வாக சேவை என்பது உள்நாட்டில் நிர்வாகம் தொடர்பான தீர்மாகங்களை மேற்கொள்வதற்கான பதவியொன்றாகும். அது போன்று வௌிநாடுகளில் அமைந்திருக்கின்ற இலங்கையின் தூதுவராலயங்கனைச் சேவைத் தளமாகக் கொண்டு அந்த காரியாலத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக இலங்கை வௌிநாட்டு சேவையின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளுடனான இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்புகளை பேணிக்கொள்வது பிராந்திய, பல்தரப்பு அமைப்புகள்,
அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடனான தொழில் தொடர்புகளைப் பேணுவது மற்றும்
இலங்கைப் பிரசைகளையும் உள்ளடக்கி வெளிநாடுகளில் இலங்கையின் நலன்களை ஊக்குவித்தல் போன்ற பணிகளை வௌிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகத்தினைக் காரியாலயமாகக் கொண்டு இயங்குவது வௌிநாட்டுச் சேவையில் இருப்பவர்களுக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்பாகும்.
இலங்கை வௌிநாட்டுச் சேவைக்காக ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?
இந்த சேவைக்காக 100% திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையிலேயே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.
இந்த சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன.
இந்த பரீட்சை வருடாந்தம் சடைபெறுவதில்லை ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றிடங்கள் உருவானதும் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை நாடத்தப்படும். இறுதியாக இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2017 ஆம் ஆண்டு கோரப்பட்டது. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் கோரப்பட்டிருக்கின்றது.
இலங்கை வௌிநாட்டுச் சேவையின் சம்பள அளவு என்ன?
இலங்கை நிர்வாக சேவையின் சம்பள திட்டமாக
47615-10X1335 -8X1630 - 17X2170 என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர்
ஆரம்ப சம்பளம் - 47,615.00 ஆகும் அத்துடன் பல கொடுப்பனவுகள் இவர்களுக்காக வழங்கப்படும். இவர்கள் சேவையாற்றும் நாடுகளுக்கு ஏற்ப இலட்சக்கணக்கிலான சம்பளம் இவர்களுக்குண்டு.
எனினும் நியமனம் பெறுகின்றவர்கள் ஏதாவது வெளிநாட்டில் அமைந்துள்ள தூதுவர் காரியாலயத்தில் பணிபுரியும் போது அந்த நாட்டுக்கு ஏற்புடைய சம்பளம் வழங்கப்படும்.
வௌிநாடு செல்வதற்கு திரும்ப வருவதற்கான பயணச் செலவு அரசாங்களம் ஏற்கும்.
அவ்வாப்போது நாட்டுக்கு வருவதற்காக சம்பளத்துடனான லீவு வழங்கப்படும்.
நியமனம் பெறுபவர்கள் திருமணமானவராயின் மனைவி பிள்ளைகள் என அவர்களது குடும்பம் தங்கியிருக்கு இருப்பிடம் வழங்கப்படும்.
திருமணமாகாதவராயின் குடும்பத்தில் ஒருவரை தன்னுடன் அழைத்துச்செல்லலாம்.
நியமனம் பெறுவபர் அவரது குடுப்பத்தவர்களுக்கான மருத்துவச் செலவு வழங்கபடும்.
இரண்டு பிள்ளைகளுக்கான கல்விச் செலவு பூரணமாக கிடைக்கப்பெறும்.
இவைதவிர தீர்வையற்ற வாகனம் வாங்குவதற்கான சலுகைகள் போக்குவரத்து வலுகைகள் என பல சலுகைகள்வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும். 2021.04.9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் 2021 பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
திறந்த போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை என்ன?
விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு 22 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 28 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். (5 வருட சேவைக்காலம் அவசியமாகும்)
கல்வித் தகைமை என்ன?
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் இதற்கான கல்வித் தகைமையாகும்.
வேறுதகைமைகள் என்ன?
உலகத்தில் எந்தப் பகுதியிலும் சேவையாற்றுவதற்கான உடல் தகைமையினைப் பெற்றிருத்தல்வேண்டும்.
இந்தப் பரீட்சைக்காக எத்தனை முறை தோற்றலாம்?
ஒரு பரீட்சார்த்தி திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சேவை மூப்பு பரீட்சைகளகளில் 3 முறை மாத்திரமே பங்குபற்றலாம்.
பரீட்சைக்குத் தோற்ற முடியாதவர்கள் யார்?
எந்த மத்திலும் உள்ள துறவிகள் இந்தப் பரீட்சையில் தோற்ற முடியாது.
ஆட்சேர்ப்பு முறை எவ்வாறு அமையும்?
எமுத்துப் பரீட்சையில் 7 பாடங்களிலும் ஆகக் குறைந்தது 350 புள்ளிகளைப் பெறுபவர்கள் நேர்முகப் பரீட்சையில் சாண்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு நேர்முகப் பரீட்சையிலும் எழுத்துப்பரீட்சையிலும் பெறும் புள்ளிகளில் அதிக அளவு புள்ளி பெறுவோர் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
இந்தப் பாடங்களின் உள்ளடங்கம் என்ன?
முதலாம் பகுதி
i, பெது விவேகம் - 1 1/2 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
II. கிரகித்தல் - 2 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
இரண்டாம் பகுதி
iiiபொது வினாத்தாள் - 03 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
iv உலக விவகாரங்கள் I 03 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
v. உலக விவகாரங்கள் II 03 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
vi. சுருக்கி எழுதுதல் 1 நிமிடங்கள் 100 புள்ளிகள்
vii. மொழித்தேர்ச்சித் திறன் வினாத்தாள் 03 மணித்தியாலங்களும் 100 புள்ளிகள்
முதலாம் பகுதியில் உள்ள வினாத்தாள்கள் இரண்டிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெறுவதுடன் இரண்டிலும் பெற்ற புள்ளிகளின் கூட்டுத்தொகை 100 ஆக இருப்பவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்படுவர்.
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?
i. பொது விவேகம் - (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
1 பொது விவேகம்
நாம் பொதுவான சொல்லாடலில் குறிப்பிடும் நுண்ணறிவு அல்லது பொது உளசார்பு என்பதாகக் குறிப்பிடப்படுகின்ற பாடமே இந்த வினாப்பத்திரத்தில் உள்ளடக்கபட்டுள்ளது. இந்த வினாப் பத்திரத்தில் 50 பல்தேர்வு வினாக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் இதற்கான காலம் 1 1/2 மணித்தியாலயங்களாகும்
இந்தப் பரீட்சையை வெற்றிகொள்வதற்கு குறித்த காலவரையறைக்குள் அனைத்து கேள்விகளுக்குமான விடைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நுண்ணறிவு சம்பந்தமான இலகு வழிமுறைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நுண்ணறிவு வினாக்களைப் பெறுத்தவரையில் சரியான நேரத்தில் விடையளிக்கவேண்டுமாயின் அந்த வினாக்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அல்லது அது போன்ற வினாக்களுக்கு விடையளித்து பழகியிருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் ஆயிரம் வினாக்களையாவது நேரம் வைத்து செய்து பழகிவந்தால் நிச்சயம் இந்த வினாப்பத்திரத்தின் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடையினை வழங்கி பூரண புள்ளிகளைப் பெறலாம்.
நுண்ணறிவு செயன்முறைகள் பயிற்சிகள் என்பன உள்ளடக்கப்பட்ட ஏராளமான நூல்கள் புத்தகக் கடைகளில் பெற்று பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நுண்ணறிவு பயிற்சிகள் தொடர்பான விளக்கங்கள் வழங்குவதற்காக பல யூடியூப் செனல்கள் காணப்படுகின்றன அவற்றினைப் பார்வையிட்டு பயிற்சி பெறலாம்.
கிரகித்தல்
இந்தப் பரீட்சையில் கிரகித்தல் திறம் மட்டிடப்படும். இந்த விணாப்பத்திரம் 2 மணித்தியாலயங்களைக் கொணடது 100 புள்ளிகள் வழங்கப்படும்.
பொது வினாத்தாள் -
இந்த வினாத்தாள் 03 மணித்தியாலங்கள் கொண்டது. இதற்காக 100 புள்ளிகள் வழங்கப்படும். இந்த வினாத்தாள் இலங்கையின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சுற்றாடல், தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச கரிசனைக்குரிய விடயங்கள் அத்துடன் விஞ்ஞான மற்றும் தொழினுட்பவியல் அபிவிருத்திபற்றிய விடயங்களில் ஊடாக பரீட்சார்த்திகளின் அறிவை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிக்கு விடையளிப்பதற்காக இலங்கையின் சமூக பொருளாதார அரசில் காலாசார விஞ்ஞான தொழிநுட்ப விடயங்கள் தொடர்பான நாளாந்தம் ஏற்படுகின்ற மாற்றங்கள் சம்பவங்கள் தொடர்பாக அறிந்திருப்பது அவசியமானதாகும்.
இதற்காக நாளாந்த பத்திரிகைகள் தொலைகாட்சி செய்திகள் என்பவற்றின் ஊடாக சமகால நிகழ்வுகளை குறித்துக்கொண்டு அவை தொடர்பான கட்டுரைகளை வாசித்தல் மூலமாக இது தொடர்பான அறிவினை வளர்த்துக்கொள்ளலாம்.
உலக விவகாரங்கள் I-
இந்த வினாத்தாள் 03 மணித்தியாலங்கள் கொண்டது. இதற்காக 100 புள்ளிகள் வழங்கப்படும். இந்த வினாத்தாள் சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி மீதான உலகப்போககுகள் இலங்கை மீதான அவற்றின் இயைபு பற்றி பரீட்சார்த்தியின் திறமையை ஆய்ந்தறிவதற்காக தற்போதைய உலக அரசியல் போக்குகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு, மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள், மோதல் நிலைமைகள் மற்றும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இயக்கங்களின் உருவாக்கம் மீதான வினாக்களைக் கொண்டிருக்கும்.
இதற்காக பத்திரிகை தொலைக்காட்சி செய்திகளுக்கு மேலதிகமான BBC CNN போன்ற நிறுவனங்களின் இணையத்தளத்தினை அவதானித்துக்கொள்வது பொறுத்தமானதாகும். அத்துடன் உள்ளநாட்டு இந்தியா போன்ற தமிழ் செய்தி வளங்களும் தளங்களின் வௌிநாட்டுச் செய்திகள் பகுதியை வாசித்துக்கொள்ளலாம். இவைகள் தொடர்பிலும் யூடியூபில் பலதகவல்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன.
உலக விவகாரங்கள் II .-
இந்த வினாத்தாள் 03 மணித்தியாலங்கள் கொண்டது. இதற்காக 100 புள்ளிகள் வழங்கப்படும் இந்த வினாத்தாள் சர்வதேச அமைப்புகள், பிராந்திய பொருளாதாரத் தொகுப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தாக்கம் அத்துடன் சுற்றாடல் மற்றும் நிலபேறுடைய அபிவிருத்தி மற்றும் இலங்கைக்கு இவற்றின் இயைபு போன்ற விடயங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி பொருளாதார அபிவிருத்தியின் சமீபத்திய போக்குகள் மீதான வினாக்களைக் கொணடிருக்கும்.
இந்த வினாவுக்கு விடையளிப்பதற்காக உலக பொருளாதாரம் குறித்து பரந்த அளவிர் அறிந்துகொள்வது அவசியமாகும்.
சுருக்கம் எழுதுதல்.-
இந்த வினாத்தாள் 1 மணித்தியாலயம் நிமிடங்கள் கொண்டது. இதற்காக 100 புள்ளிகள் வழங்கப்படும் இந்த வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இது வழங்கப்பட்டுள்ள பந்திகளில் உள்ள விடயங்களின் அர்த்தத்தை கிரகித்து அவற்றை கவர்ச்சிகரமாகவும் சுருக்கமாகவும் தெரிவிப்பதற்கான பரீட்சார்த்தியின் இயலுமையை ஆயுந்தறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொழித்தேர்ச்சித்திறன் பரீட்சை -
இந்த வினாத்தாள் வேட்பாளரின் மொழித்தேர்ச்சித் திறனை ஆய்ந்தறிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. (சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று வினாத்தாள்கள் உள்ளன என்பதுடன் இந்த வினாத்தாளுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள மொத்தப்புள்ளிகள் 100 ஆகும். வினாத்தாளுக்கான
காலப்பகுதி 03 மணித்தியாலங்களாகும்.) சிங்கள மற்றும் தமிழ்மொழி மூலங்களில் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் ஆங்கில மொழியிலும் பரீட்சை வினாத்தாளொன்றுக்குத் தோற்றுதல் வேண்டுமென்பதுடன் ஆங்கில மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் சிங்கள மொழியில் அல்லது தமிழ் மொழியில் பரீட்சை வினாத்தாளொன்றுக்குத் தோற்றுதல் வேண்டும்.
இந்தப் பரீடசைின் கடந்தகால வினாப்பத்திரங்கள் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு கிடைக்கப்பெறுமிடத்து இந்த இணையத்தளத்தில் பதிவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இறுதியாக.
இந்தப் பரீட்சை இலகுவானதல்ல வினாத்தாள்களைப் புரிந்துகொண்டு அவைகள் தொடர்பில் உரிய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளுமிடத்து இந்தப் பரீட்சை மிக இலவான ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை எனவே முயற்சிப்போம் வெற்றிபெறுவோம்.
கல்வி தொழில் சார்ந்த தகவல்களையும் வேலைவாய்ப்புச் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்
வட்சப் குழுக்கள்
எமது முகநூல் பக்கம்.