>

ad

அரச நியமனம் ஒன்றினைப் பெற்ற பின்னரான நடவடிக்கைகள்

புதிதாக அரச நியமனம் வழங்கும் போதும் பெற்றுக்கொள்கின்ற போதும் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் 


யாரேனும் ஒருவர் அரச பணிகளில் நியமனம் ஒன்றைப் பெற்றுக் கொண்டதும் ஒருவகையான பதட்டத்திற்கு உள்ளாகின்றனர். எனக்கு நியமனம் கிடைத்துவிட்டது ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியாதே என்பது அவர்களது பதட்டுத்துக்கான முதன்மைக் காரணமாகும். அந்தப் பதட்டத்தைப் போக்குவதற்காகவும் முதல் நியமனம் பெற்று பல வருட காலமாகிவிட்டதே எனது நியமனம் பெற்றதன் பின்னர் நான் செய்ய வேண்டிய நியமனம் சம்பந்தமான விடயங்களைப் பூரணப்படுத்திவிட்டேனா என்பதாக அடிக்கடி சிந்திக்கின்றவர்களுக்கும் உதவியாக இந்த பதிவு எழுதப்படுகின்றது.

ஒரு அரச நியமனம் பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து அதற்கான பரீட்சைக்கோ அல்லது நேர்முகப் பரீட்சைக்கோ தோற்றி அவற்றில் வெற்றி கண்டுவிட்டால் உங்களது பெயரில் எழுதப்பட்ட நியமனக் கடிதம் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும்.

இந்த நியமனக் கடிதமானது அரச சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் அடங்கிய கோவையின் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனக்கடிதத்தின்  பிரகாரம் தயாரித்து வழங்கப்படுகின்றது.  இந்த நயமனக்கடித்தில் நியமன அதிகாரி கையொப்பமிடுவார். 


நியமனக் கடித்தம் ஒன்றில் உள்ளடங்கும் விடயங்கள் வருமாறு
  1. குடியரசுக்கு பக்கச்சார்பாக இருந்துகொள்வதுடன் சேவையினை அல்லது கடமையினை மேற்கொள்கின்றபோது முழுமையாக இரகசியங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பது
  2. அரசசேவையில் இருக்கும் போது இன்னுமொரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கோ வேறு ஒரு தொழிலில் ஈடுபடவோ முடியாத என்பது
  3. நியமனத்தின் வ​கை என்ன என்பது  (நிரந்தரமானதா?தற்காலிகமானதா?)
  4. மூன்று வருடங்கள் தகுதிகாண் காலப்பகுதிக்கு அல்லது ஒரு வருடம் சேவையாற்றும் காலப்பகுதி என்பதற்கு உற்படிகின்றது என்ற விடயம் (இங்கு முதலாவது அரச சேவைக்கு பிரவேசிக்கின்றவர்களுக்கு 3 வருட தகுதிகாண் காலப்பகுதியும். இந்தக் காலப்பகுதியில் தொழிலுக்கு பொறுத்தமானவரா என்பது பரிசீலிக்கப்படும்.  - ஒரு அரச சேவையில் இருக்கின்றவர் வேறு ஒரு அரச சேவைக்கு விண்ணப்பித்து தெரிவாகின்ற போது 1 வருடம் சேவையாற்றும் காலப்பகுதியாக வழங்கப்படும். ஒரு வருடத்துக்குள் அவர் இந்த சேவைக்குப் பொறுத்தமானவர் என்பதனை  நிரூபிக்கவேண்டும்.
  5. ஓய்வூதியத்துடனானதா? இல்லையா என்ற விடயமும். விதவைகள் தபுதாரர்கள் அநாதை ஓய்வூதியத்திட்டத்திற்கு அல்லது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற விடயமும் பங்களிப்புச் செய்ய வேண்டிய விகிதமும்
  6. குறித்த நியமனத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளும் நியதிகளும் உள்ளடக்கப்படுகின்ற சேவைப் பிரமாணக் குறிப்பு அல்லது இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் குறித்த விடயங்கள்
  7. நியமனம் பெற்ற திகதி முதல் 5 வருட காலப்பகுதிக்குள் இரண்டாவது தேசிய மொழிக்கான திறனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயமும் அது தொடர்பான நிபந்தனைகளும். (இங்கு தேசிய மொழி என்பது சிங்களம் மற்றும் தமிழ் மாத்திரமாகும். இதில் ஒரு மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு அடுத்த மொழி இரண்டாவதுமொழியாகும்.)
  8. சம்மபள திட்டம் மற்றும் உரிய சம்பளப் படிநிலை
  9. வினைத்திறன் தடை தாண்டல் குறித்த விபரங்களும் அந்த பரீட்சையில் சித்தியடையாத போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களும்
  10. அரச சேவைகள் ஆணைக்குழுவினால் ஏற்படுத்தப்படுகின்ற சட்டதிட்டங்கள் நியமங்கள் நடைமுறைகள் என்பன அனைத்துக்கும் கட்டுப்பட்டு தனக்கு வழங்கப்படுகின்ற சேவைக்குரிய கடமைகள் பொறுப்புக்கள்  என்பவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பதாகவும் அதே நேரம் தாபனவிதிக் கோவை நிதிப் பிரமாணம் மற்றும் அரசின் ஏனைய சட்டத்திட்டங்கள் விதிமுறைகள் சுற்றுநிருபங்கள் அத்துடன்அவைகள் தொடர்பாக அவ்வப்போது வௌியிடப்படுகின்ற திருத்தங்கள் என்பவற்றுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதாகவும்
  11. அரச சேவையாளர்களின் பிணை சட்டமூலத்திற்கு அமைய பிணை வைக்க வேண்டும் என்பதாகும் (இது எல்லா வேகை்குமல்ல)
  12. நாட்டின் எந்தப் பகுதியிலும் சேவையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் தனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புகளுக்கு ஏற்ப எந்த தினத்திலும் எந்த நேரத்திலும் கடமையினை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நியமனம் ஒன்றினை வழங்கும் போதும் நியமனம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும்போதும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்

  • நியமன அதிகாரி நியமனமொன்றை வழங்கியதும் நியமனத்தினைப் பெற்றுக்கொண்ட ஒருவர் குறித்த நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களுக்கு கட்டுப்பட்ட அடிப்படையில் அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதாக அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக உரிய படிவத்தின் பிரகாரம் நியமனஅதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • குறித்த நியமனத்தினை ஏற்பதற்காக சமூகம் தந்திருப்பது நியமனத்துக்கு உரியவரா என்பதனை உரிய நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • நியமனத்தினைப் பெற்று ஒரு மாத காலங்களுக்குள் அரசியல் யாப்பின் 4 வது மற்றும் 7 வது பின்னினைப்பின் பிரகாரம் நிறுவனத் தலைவரின் முன்னிலையில் உரிய  சத்தியத்தை/பிரகடனத்தினை வழங்க வேண்டும். நியமனத்தினைப் பெற்றவரின் கால தாமதத்தின் காரணணணமாக குறித்த காலப்பகுதிக்குள் குறித்த கருமம் நிகழாமலிருக்குமாயின் குறிப்பிட்ட கால எல்லை முடிவடையும் போது நியமனம் செல்லுபடியற்றதாகிவிடும்.
    • 4வது பின்னினைப்பு பொது 278 குடியரசிற்கு பக்கச்சார்வேன் என்பது 
    • 7 வது பின்னினைப்பு அரசியல் யாப்பினைப் பாதுகாப்பதாகவும்  வேறு ஒரு இராச்சியம் அமைக்கப்படுவதனை அனுமதிப்பதில்லை என்ற சத்தியம்.
  • நியமனம் ஒன்றினை குறித்த படிவத்தினைப் பூரணப்படுத்தி ஏற்றுக்கொண்ட ஒருவர் அந்த தினத்திலேயே நிறுவனத் தலைவரிடம் சேவையை ஏற்க வேண்டும்.
  • நியமனத்தினை ஏற்ற ஒருவர் நிறுவனத் தலைவரிடம் சேவையைப் பெறுப்பேற்கின்ற தினத்திலேயே கீழ் வருகின்ற ஆவணங்களை நிறுவனத் தலைவரிம் சமர்ப்பிக்க வேண்டும்.
    1. தேசிய அடையாள அட்டையின் உறுதி செய்யப்பட்ட பிரதி
    2. பிறப்புச் சான்றிதழ்
    3. பதவியுடன் தொடர்புடைய தகைமைகளை உறுதி செய்கின்ற கல்வி/தொழில் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதியில் (போலியல்லாத சான்றிதழ் என்பதாக சான்றிதழுக்கு உரியவரால் கையொப்பமிடப்படவேண்டும் என்பதுடன் மூலப் பிரதிகளுடன் ஒப்பிட்டு சரி பார்த்த பின்னர் சரியானது என்பதாக அதிகாரியினால் சான்றுப்படுத்தி கையொப்பம் இட்டபின்னர் நகல் பிரதியினை காரியாலத்தில்  வைத்துக்கொண்டு மூலப் பிரதி உரியவரிடம் ஒப்படைக்கப்படும்) 
    4. திருமணமானவராயின் விவாக சான்றிதழ், துணைியின் பிறப்புச்சான்றிதழ், மற்றும் குழந்தைகள் இருப்பின் அவர்களின் பிறப்புச் சான்றிதழின் சான்றுறுதிப்படுத்திய பிரதி
    5. பொது 160 படிவத்தின் அடிப்படையில் சேவை ஒப்பந்தம்.
    6. பொது 261  படிவத்தின் பிரகாரம் சொத்துக்கள்  குறித்த விபரம்
    7. அத்துடன் செத்துக்கள் பொறுப்புக்கள் விபரம்
    8. நிலையான மற்றும் தற்காலிக வதிவிடத்தின் முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சள் முகவரி
  • நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருட காலத்துக்குள் பயிற்சி ஒன்று வழங்கப்படவேண்டும். சேர்த்துக்கொள்வதற்கான ஒழுங்குவிதி அல்லது சேவைப் பிரமானக் குறிப்பு என்பவற்றில் பயிற்சி குறித்து குறிப்பிடப்பட்டிருப்பின் அதற்கு ஏற்றவகையில் பயிற்சி வழங்கப்படவேண்டும்.
  • நியமித்தலை வர்த்தமானியில் பிரசுரிப்பது சட்டரிதியான அவசியப்பாடாக இருக்குமிடத்து அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பது நியமன அதிகாரியின் பொறுப்பாகும்.
  • நியமனம் பெற்று மூன்று மதங்களுக்குள் அரச வைத்தியசாலை ஒன்றின் மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடம் வைத்திய 169 ஆம் எனும் படிவத்தின் ஊடாக மருத்துவ பரிசோதனை அறிக்கையினைப் பூரணப்படுத்த வேண்டும். தகுதியற்ற வைத்திய அறிக்கை கிடைக்குமிடத்து சேவையை முடிவுறச் செய்துவிட்டு குறித்த வைத்திய அறிக்கையின் பிரதியுடன் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறியத் தருவதற்கான அதிகாரம் குறித்த பொறுப்பான அதிகாிக்குண்டு.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டவைகளாகும்.

இவை தவிர ஆசிரியர்கள் பதவியினைப் பொறுப்பேற்கின்றபோது சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர்   லொக் புத்தகத்தில் குறிப்பிடல் வேண்டும். அதனது பிரதி காரியாயத்திற்கு ஒப்படைக்கப்படல் வேண்டும்.

இந்த ஆக்கம் lankajobinfo.com இணையதளத்தினால் தொகுக்கப்பட்டது


அரச சேவை குறித்து அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது வட்சம் குழுவுடன் இணைந்திருங்கள்.