ஒவ்வொரு சம்பளப் பரிமாற்றங்களுக்கான சுற்று நிருபங்கள் வௌியிடப்படும் போது 100 க்கும் அதிகமான பக்கங்களுடன் அனைத்து பதவிகளுக்குமான சம்பளங்களை வகைப்படுத்திய அட்டவணைகளை உள்ளடக்கியதாக வௌியிடப்படுவதுண்டு. இந்த அட்டவணையினைப் புரிந்துகொள்வதற்கான இலங்கை ஆசிரியர் சேவையின் சம்பள அட்டவணையினை இங்கு இணைத்துள்ளேன்.
இங்கு குறிப்பிடப்படுகின்ற சம்பளத்திட்டங்களுக்கு அமைய ஆசிரியர்களின் சம்பள அட்டவணையில் இவ்வாறு உள்ளடக்கப்படுகின்றது.
சம்பள அட்டவணையில் அதன் நிரல்கள் இலக்கமிடப்பட்டிருக்கும். அந்த வகையில்
நிரல் 1 - ஆண்டுகளின் எண்ணிக்கையினைக் குறிக்கும்
நிரல் 2 - சேவைக் காலம் குறிப்பிடப்படும்
நிரல் 3 - குறித்த சேவையின் தரம் குறிப்பிடப்படும்
நிரல் 4 - முதல் நியமனம் பெறுகின்றது முதல் வருடாவருட சம்பளப் படிநிலைகளும் பதவி உயர்வு பெறுகின்ற போது கிடைக்கின்ற சம்பள நிலைகளும் குறிப்பிடப்படும்
நிரல் 5,6 மற்றும் 7 - ஒரு பதவியிலிருந்து அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெறாத போது அவசருக்கு வழங்கப்படும் சம்பள நிலை இந்த நிரலில் குறிப்பிடப்படும்.
அந்த அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவைக்குரிய GE -1-2016 எனும் சம்பளத் திட்டத்தின் சம்மபள நிலைகள் எவ்வாறு அட்டவணைப்படுத்தப்படுகின்றன என்பதனை நோக்குவோம்.
GE 1-2016 27,740 - 6 X 300 - 7 X 380 - 2 X 445 - 33,090
குறித்த சம்பள திட்டமானது இலங்கை ஆசிரியர் சேவையின் 3 II, 3I (இ), 3I (ஆ), 3I (அ) எனும் தரங்களுக்குரிய சம்பள நிலைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர் சேவையின் 3 II, ஆம் தரத்தில் நியமனம் பெறுகின்ற ஒருவருக்கு அவரது ஆரம்பச் சம்பளமாக 27,740 வழங்கப்படும். இவ்வாறு 3 II ஆம் தரத்தில் நியமனம் பெறுகின்றவர்களுக்கு 300 ரூபா வீதம் 6 படியேற்றங்கள் (increments) வழங்கப்படும். இதனையே அட்டவணையின் 4ம் நிரலில் 1 ஆவது வடருத்திற்கு நேராக 27,740 என்பதாகவும் அதனுடன் 300 ரூபாய் வீதம் சேர்த்து 27,740 +300 = 28,040, + 300 = 28,340 . +300 = 28,640 என்ற அடிப்படையில் அடுத்த 6 வருடங்கள் வழங்கப்படும். அவ்வாறு 6 வருடங்களின் முடிவில் கிடைக்கின்ற சம்பள நிலையாக 29540 குறிப்பிடப்படுகின்றது. இந்த தொகை தொடக்கம் அடுத்த 7 சம்பளப் படியேற்றங்கள் கூட்டுகின்ற தெகை வரையான படிநிலைகள் இலங்கை ஆசிரியர் சேவை 3I (இ) மற்றும் 3I (ஆ) தரங்களுக்கான சம்பள நிலைகளாகும். அதற்கு அடுத்து வருகின்ற நிலை 3I (அ) தரத்திற்குரியதாகும்.
இதன் அடிப்படையில்தான் ஆசியர்களை பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற விளம்பரங்கிளில் பதவிக்கான சம்பளத் திட்டத்தினைக் குறிப்பிட்டு ஆசிரியர் சேவையின் 3 II, தரத்திற்கு 1 வது சம்பள நிலை வழங்கப்படும் எனவும். ஆசிரியர் சேவை 3I (இ) , 3I (ஆ) மற்றும் 3I (அ) ஆகிய தரங்களுக்கு முறையே 7 ஆம் 9ஆம் 14 ஆம் சம்பள நிலைகள் வழங்கப்படும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இங்கு இன்னும் ஒரு விடயத்தினையும் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை ஆசிரியர் சேவையின் 3 II ல் பதவி பெறுகின்ற ஒருவர் தனது 6 வது வருடம் பூர்த்தியாகும் முன்னர் அடுத்த தரத்திற்கான தகைமைகளைப் பெற்றுக்கொண்டு பதவி உயர்வினைப் பெறுகின்ற போது அவர் தகைமை பெறுகின்ற திகதி முதலே அடுத்த தரத்திற்கான ஆரம்பச் சம்பள தரத்தினைப் பெறுகின்றார். அவ்வாறு அறு வருடங்களில் அவர் பதவி உயர்வினைப் பெற்றுக்கொள்ளாத போது 5 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள 29540 என்று ஆரம்பிக்கின்ற தெகையினை ஆறாவது வருடம் முதல் பெற்றுக்கொள்வார். இவ்வாறு 10 வருட காலத்திற்கு 300 ரூபா வீதம் சம்பள ஏற்றம் பெறுவார். இறுதியா 32,240 ரூபா எனும் உச்ச சம்பள அளவினை அடைந்த பின்னர் அவருக்கு அதற்குமேல் சம்பள ஏற்றங்கள் வழங்கப்படமாட்டாது. அவர் அடுத்த தரத்திற்காக பதவி உயர்வுக்கன தகைமைகளைப் பெறும் வரை அல்லது ஓய்வு பெறும் வரை இந்த சம்பள அளவையே பெற்றுக்கொள்வார்.
இதே அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவை 3I (இ) தரத்தில் நியமனம் பெறுகின்ற டிப்லோமாதாரிகள் உரிய காலத்தில் பதவி உயர்வுக்கான தகைமைகளைப் பெறாவிட்டால் அவர்கள் பத்து வருட முடிவில் 6 ஆம் நிரலில் இருக்கின்ற சம்பளங்களைப் பெறுவார்கள். அதன் உச்ச சம்பள அளவு வந்ததும் அதன் பின்னர் சம்பள ஏற்றங்கள் இடம்பெறாது.
ஆசிரியர் சேவையின் 3 II மற்றும் 3I (இ) இல் இருப்பவர்கள் பட்டம் ஒன்றைப் பெறுவது ஊடாகவோ அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொள்வதன் ஊடாக மாத்திரமே தங்களது அடுத்த தரங்களுக்கு செல்ல முடியும் என்பதனால் இவர்களுக்கு உச்ச சம்பள அளவு என்ற சிக்கல் காணப்படுகின்றது. ஆனால் ஆசிரியர் சேவையில் 3I (ஆ) முதல் I ஆம் தரம் வரையில் பதவி உயர்கள் சேவைக்காலத்ததை வைத்தே இடம்பெறுவதனால் இவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதில்லை
சம்பளப் பரிமாற்றங்கள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எம்முடன் இணைந்திருங்கள்
எமது வட்சப் குழுக்கள்