இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்காகத் தயார்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டி
இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன?
இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை என்பது மிகவும் போட்டித் தன்மையுடைய பரீட்சையாகும். சுமார் 100 வெற்றிடங்களுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடுவார்கள். எனவே வர்த்தமானி அறிவித்தலிரல்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டபின்னர் பரீட்சைக்காக ஆயத்தமாவதில் இந்தப் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கான திறன் கிடைத்துவிடப்போவதில்லை. இந்தப் பரீட்சையில் வெற்றிகொள்ளவேண்டும் என்ற ஆர்வவமும் விருப்பமும் இருப்பவர்கள் தங்களது இலக்கினை அடைந்துகொள்வதற்காக இந்த பரீட்சையை இலக்காகக் கொண்டு பல மாதங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவை என்றால் என்ன என்பது குறித்தும் அதற்காக தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் விளக்குகின்ற கட்டுரையினை LANKAJOBINFO.COM இணையத்தளம் உங்களுக்காக தயாரித்துத் தருக்கின்றது.
இலங்கை நிர்வாக சேவை என்பது யாது?
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள என பலவகையான உயர் பதிவிகள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வாறான உயர் பவிகளுக்காக இந்த இலங்கை நிர்வாக சேவை உத்ததியோகத்தர்களே நியமிக்கப்படுகின்றனர். இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் தீர்மானங்கள் மேற்கொண்டு செயற்படுத்துகின்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டடிருக்கின்ற பதவிகளுக்காக இவர்கள் நியமிக்கப்படுவார்கள். இலங்கை நிர்வாக சேவை என்பது மிகவும் மரியாதைக்குரியதும் பொறுப்பு வாய்ந்துமான உயரிய சேவை ஒன்றாக் கருதப்படுகின்றது. இவர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பள அளவு அடுத்த சேவைக்கு வழங்கப்படுகின்றசம்பள அளவைவிட அதிகம் என்பதுடன் மற்றைய நிலைகளில் சேவையாற்றுகின்ற அரச ஊழியர்களிலும் பார்க்க அதிகளவிலான சலுகைகள் நிர்வாகசேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்க்படுகின்றன.
இலங்கை நிர்வாக சேவையின் வரலாறு
1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்ததன. அதன் பின்னர் அப்பிரதேசங்களின் நிர்வாக நடவடிக்கைகள் மதுரையிலிருந்து செயற்பட்டு வந்த கிழக்கிந்திய வர்த்தக கம்பனி (East India Company) அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டது இதனால் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக 1802 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொளவதற்காக அலுவலர்கள் சிலர் பிரித்தானியாவினால் நியமனம் செய்யப்பட்டனர்.
இது இந்நாட்டின் சிவில் சேவையின் ஆரம்பமாக இருந்ததுடன், பின்னர் இந்தச் சேவை பிரித்தானிய சிவில் சேவையை அடிப்படையாகக் கொண்டு 1833 இல் இலங்கை சிவில் சேவை (Ceylon Civil Service-CCS) எனப் பெயரிடப்பட்டது. இது 1963 ஆம் ஆண்டு அப்போது காணப்பட்ட பிராந்திய வருமான நிர்வாக அலுவலர் சேவையையும் உள்ளடக்கி இலங்கை நிர்வாக சேவையென (Ceylon Administrative Service-CAS) பெயரிடப்பட்டது. பின்னர் 1972 இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து இலங்கை நிர்வாக சேவையென (Sri Lanka Administrative Service-SLAS) பெயரிடப்பட்டு இந்நாட்டின் முதற்தர சிவில் சேவையாக இயங்கி வருகின்றது.
இலங்கை நிர்வாக சேவைக்காக ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?
பொதுவாக வருடாந்தம் ஒவ்வொருவருடத்திற்கும் இலங்கை நிர்வாக சேவைக்காக ஆட்கள் சேர்க்கப்படுவதுண்டு. குறித்த வெற்றிடங்களுக்காக மூன்று அடிப்படைகளில் கீழ் குறிப்பிடப்படுகின்றவாறு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
01. திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில்
குறித்த பதவிக்காக குறிப்பிட்ட ஏதாவது ஒரு சேவையில் இத்தனை காலம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் உரிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளவர்கள் திறந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். எனினும் அவர்களின் வயதெல்லை மிகக் குறுகியதாக இருக்கும் . குறித்த வருடத்தின் பதவி வெற்றிடங்களில் 75% ஆனவர்கள் திறந்த போட்டிப் பரீட்சை ஊடாகவே தெரிவாகின்றனர்.
02. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
அரச சேவையில் ஏற்கனவே இருக்கின்றவர்களுக்கும் இந்த சேவையில் இணைவதற்காக சந்தர்ப்பம் வழங்கும் அடிப்படையில் குறிப்பிட்ட காலம்சேவை அனுபவம் இருக்கின்ற அதே நேரம் போதுமான கல்வித் தகுதகளையும் பெற்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவு செய்யப்படுவர். இந்தப் பதவிக்கான வருடத்தின் பதவி வெற்றிடங்களில் 20% ஆனவர்கள் தெரிவாகின்றனர்.
03. சேவை மூப்பின் அடிப்படையில் போட்டிப் பரீட்சை
அரச சேவையில் பலகாலம் வேலை செய்கின்றவர்கள் அவர்களது சேவைக்காலத்தினை மாத்திரம் கருத்தில்கொள்ளப்பட்டு பரீட்சை மூலமாக இணைத்துக்கொள்ளப்படுகின்ற முறை சேவை மூப்பு அடிப்படையில நியமித்தல் எனப்படும் வருடத்தின் பதவி வெற்றிடங்களில் 5% ஆனவர்கள் தெரிவாகின்றனர்.
இந்த மூன்று பிரிவுகளில் திறந்த போட்டிப் பரீட்சை குறித்த விளக்கம் இந்தப்பதிவில் தரப்படுகின்றது. மற்றைய பதவிகளுக்கான பரீட்சை விபரங்கள் தனிப்பதிவுகளாக தரப்படும்.
வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.
இந்த சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன.
ஒவ்வொரு வருடமும் வெற்றடமாகின்ற பதவிகளின் எண்ணிக்கை இத்தனைதான் என்றுசொல்ல முடியாது என்றபோதிலும் கடந்த காலங்களில் 100 முதல் 200 வரையான வெற்றிடங்களுக்காக ஆ்ட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர்
ஆரம்ப சம்பளம் - 47,615.00
வா.செ. கொடுப்பனவு 7,800.00
விசேட கொடுப்பனவு 10,000.00
வேறு கொடுப்பனவு 2,500.00
தொலைபேசி கொடுப்னவு 2,500
என மொத்த சம்பளமாக 70,415 ரூபா கிடைக்கப்பெறும்.
இதில் ஆரம்ப சம்பளத்தில் 7% விதவைகள் தபூதாரர் அனாதைகள் நிதியத்திற்கு கழிக்கப்படும்.
இவைதவிர தீர்வையற்ற வாகணம் வாங்குவதற்கான சலுகைகள் போக்குவரத்து வலுகைகள் என பல சலுகைகள்வழஙக்கப்படும்.
அத்துடன் பட்டப்பின் படிப்புகளுக்காக அரச செலவில் சம்பள விடுமுறையுடன் வௌிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.
திறந்த போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை என்ன?
விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு 22 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 28 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
திறந்த போட்டிப் பரீட்சைக்கான கல்வித் தகைமை என்ன?
பலகலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் இதற்கான கல்வித் தகைமையாகும்.
இந்தப் பரீட்சைக்காக எத்தனை முறை தோற்றலாம்?
ஒரு பரீட்சார்த்தி திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சேவை மூப்பு பரீட்சைகளகளில் 2 முறை மாத்திரமே பங்குபற்றலாம். ஒருவர் இந்த மூன்றிலும் இரண்டிரண்டு முறை தோற்ற முடியும்.
பரீட்சைக்குத் தோற்ற முடியாதவர்கள் யார்?
எந்த மத்திலும் உள்ள துறவிகள் இந்தப் பரீட்சையில் தோற்ற முடியாது.
ஆட்சேர்ப்பு முறை எவ்வாறு அமையும்?
எமுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் ஊடாக சேர்த்துக்கொள்ளப்படுவர். நேர்முகப் பரீட்சையானது சதாரண மற்றும் கட்டமைக்கப்பட்ட என்ற அடிப்படையில் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்
எழுத்துப்பரீட்சை எவ்வாறு அமையும்?
எழுத்துப் பரீட்சை இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
01. பொதுப் பரீட்சை முதலாவது பகுதி
ஒவ்வொரு வினாப்பத்திரத்திற்கும் 40% அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெறுவதுடன் இரண்டு வினாப்பத்திரங்களினதும் மொத்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை 100 அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு புள்ளிகளைப் பெறுகின்ற விண்ணப்பதாரிகள் மாத்திரம் இலங்கை நிர்வாக சேவைகளுக்குரிய பரீட்சையின் இரண்டாம் பகுதிக்கு அழைக்கப்படுவா்
இப்பரீட்சையில் கீழ்க் குறிப்பிடப்படும் இரண்டு பாடங்களைக் கொண்டிருக்கும்.
நுண்ணறிவு - 1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாளுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
பரீட்சார்த்தியிடம் காணப்படும் தர்க்கிக்கும் ஆற்றல், மாற்றீடு, பொருள்கோடல், தொடர்புகளைக் காணல், பெயர்ப்பு, சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றல், காரண காரியத் தொடர்புகளைப் புரிந்து கொள்ளல், எதிர்வுகூறல், தகவல் ஒழுங்கமைப்பு, வடிவங்களை இனங்காணல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் போன்ற திறன்களை மதிப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் பல்தேர்வு வகை வினாக்களைக் கொண்டமைந்தது
கிரகித்தல் - 1 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாளுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
பரீட்சார்த்தியிடம் காணப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ளும் திறன், தொடர்பாடல் ஆற்றல், சாராம்சப்படுத்தல், விவரித்தல் மற்றும் படைப்பாற்றல் போன்ற ஆற்றல்களை மதிப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் புறவய வினாக்களைக் கொண்டமைந்தது
இரண்டாவது எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?
திறந்த போட்டிப் பரீட்சை 5 பாட்ங்களைக் கொண்டதாக இருக்கும்
1 சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியும் போக்குகளும் (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்) இது 3 மணித்தயாலயம் கொண்டதாகும்.
2 முகாமைத்துவ உளச்சார்பு (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்) இது 3 மணித்தயாலயம் கொண்டதாகும்.
3 ஆக்கபூர்மான பகுப்பாய்வு ரீதியான தொர்பாடல் திறன் (மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) இது 3 மணித்தயாலயம் கொண்டதாகும்.
இந்தப் பாடங்களின் உள்ளடங்கம் என்ன?
(1) சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியும் போக்குகளும்
இ- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் பற்றிய விடய அறிவு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படுகின்ற நிலைமைகளுடன் தொடர்புடையதாக ஆக்கபு{ர்வமாக, பகுப்பாய்வு ரீதியாக மற்றும் விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றல், முந்துரிமை பற்றி சிந்திக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்காலத்தை எதிர்வுகூறக் கூடிய ஆற்றல் சம்பந்தமாக பரீட்சார்த்தி கொண்டுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பகுதிக்கு விடையளிப்பதற்காக இலங்கையின் சமூக பொருளாதார அரசில் காலாசார விஞ்ஞான தொழிநுட்ப விடயங்கள் தொடர்பான நாளாந்தம் ஏற்படுகின்ற மாற்றங்கள் சம்பவங்கள் தொடர்பாக அறிந்திருப்பது அவசியமானதாகும்.
இதற்காக நாளாந்த பத்திரிகைகள் தொலைகாட்சி செய்திகள் என்பவற்றின் ஊடாக சமகால நிகழ்வுகளை குறித்துக்கொண்டு அவை தொடர்பான கட்டுரைகளை வாசித்தல் மூலமாக இது தொடர்பான அறிவினை வளர்த்துக்கொள்ளலாம்.
(iv) முகாமைததுவ விவேகம்.
முகாமைத்தவ கோட்பாடுகள் குறித்த பரீட்சாத்தியின் அறிவினை இந்த வினாத்தாள் ஊடாக மதிப்பிடப்படும்.
சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான காரணங்களை இனங்காணல், தீர்மானம் மேற்கொள்ளல், நபர்களுக்கிடையிலான தொடர்புகளைப் பேணல், தொடர்பாடல் திறமை, சுய ஒழுக்கக் கொள்கை மற்றும் உபாய முறைகளைத் தயாரித்தல், மனவெழுச்சிசார் நுண்மதி எனும் வகையில் பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படும் சம்பவங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை ஆதாரமாகக் கொண்டு பரீட்சார்த்தியிடமுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பரீட்சைக்காக முகாமைத்துவம் சம்பந்தமான புத்தகங்களை வசிப்பதுடன் சம்பவங்கள் ஊடாக வினாக்களுக்கு விடையளிக்கின்ற முறைகள் குறித்து அறிந்துகொள்ளல்வேண்டும்.
(V) ஆக்கபூர்வமான பகுப்பாய்வு ரீதியலிவான தெடர்பாடல் திறன்
தரப்பட்ட தலையங்கங்கள் / தொனிப்பொருட்கள் பலவற்றிலிருந்து பரீட்சார்த்தி தானாகவே தெரிவு செய்யும் தலையங்கங்கள் / தொனிப்பொருட்கள் ஊடாக கருத்துக்களையும் தகவல்களையும் பகுப்பாய்தல், தொகுத்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பில் பரீட்சார்த்தி வெளிப்படுத்தும் தர்க்க ரீதியான மற்றும் சிந்தனை சக்தியை அளவிடுவதைப் போன்றே சிக்கலான பந்தியொன்றை, ஆவணமொன்றை அல்லது நிருபமொன்றை ஊகித்துணர்ந்து கொள்ளவும் அதன் பிரதான கருத்துக்களை தனது சொற்களில் சுருக்கி சரியாகவும் தெளிவாகவும் தெரிவிப்பதில் பரீட்சார்த்தியிடமுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது
இது மொழி வினாப்பத்திம் போன்றது எனலாம் 250 முதல் 300 சொற்களுக்குள் தரப்பட்ட தலையங்கத்தில் கட்டுரை ஒன்றினை எழுதுதல் இந்த வினாப்பத்திரத்தில் முதல் பகுதியாகும். சொற் சுருக்கத்துடனும் பொருள் செறிவுடனும் விடயங்களை தர்க்க ரீதியில் முன்வைக்கும் ஆற்றல் இதன் ஊடாக பரீட்சிக்கப்டுகின்றது.
ஒரு பந்தியை தந்து அதனைக் கருத்து சிதைவடையாமல் மூன்றில் ஒன்றாக சுருக்கி எழுதுவது இரண்டாவது வினாவாகும்.
தரப்படுகின்ற வாக்கியங்களைச் சுருக்கி எழுதுவதும் தடித்த எழுத்தில் தரப்படுகின்ற ஒரு சொல்லுக்கு விளக்கம் எழுதுவதும் மூன்றாவது வினாவாகும்.
தரப்படுகின்ற பந்தியைக் கவனமாக வாசித்து தரப்படுகின்ற வினாக்களுக்கு அந்த பந்தியைத் தழுவி விடை எழுதுவது நான்காவது வினாவாகும்.
உங்களது வசதி கருதி கடந்தகால வினாப்பத்திரங்களின் தொகுப்பினை கீழ் குறிப்பிடும் லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது. அவைகளைத் தரவிறக்கம் செய்து பிரதி எடுத்துக்கொண்டு அதற்கு அமைவாக இன்று முதலே தயாராக ஆரம்பியுங்கள்.
பரீட்சையிக்கான ஒவ்வொருபாடத்திலும் 50 புள்ளிகளைப் பெறுபவர்கள் அந்தப் பாடத்தில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர். இவ்வாறு அனைத்து பாடங்களிலும் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைபவர்களில் அனைத்துப் பாடங்களிலும் பெற்ற புள்ளிகளி்ன் கூட்டுத்தொகையாக கூடிய புள்ளி பெறுகின்றவர்கள் சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
சாதாரண நேர்முகப் பரீட்சையில் பதவிக்காக கல்வி வயது போன்ற தகைமைகள் பரிசோதிக்கப்பட்டு அவைகளின் ஊடாக தகுதிகளைப் பூர்தி செய்பவர்கள் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
இறுதியாக.
இந்தப் பரீட்சை இலகுவானதல்ல என்பது உண்மைதான் என்ற போதிலும் எங்களைப் போன்ற சாதாரண பட்டம் ஒன்றினைப் பெற்றவர்களே இதில் சித்தியடைந்து பதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர் என்பதனை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். வினாத்தாள்களைப் புரிந்துகொண்டு அவைகள் தொடர்பில் உரியபயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளுமிடத்து இந்தப் பரீட்சை மிக இலவான ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை எனவே முயற்சிப்போம் வெற்றிபெறுவோம்.
கல்வி தொழில் சார்ந்த தகவல்களையும் வேலைவாய்ப்புச் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்