>

ad

After (A/L) Plane Your Future - Guide(Tamil)



அறிமுகம்

2021 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளது. அந்த அடிப்படையில் இந்த முறை உயர் தரம் எழுதியவர்களில் 3 குழுவினர் இருப்பார்கள்

01. உயர் தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகின்றவர்கள்.
02. உயர் தரம் சித்தியடைந்தபோதிலும் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காதவர்கள்.
03. உயர் தரம் சித்தியடையாதவர்கள்.

நீங்கள் இந்த மூன்றில் எந்தக் குழுவுக்குள் அடங்குகின்றவர்கள் என்றாலும் உங்களது இதிர்காலத்தினைத் திட்டமிட்டுக்கொள்வதற்கு இந்தக் கட்டுரை மிகவும் உதவியாக அமையும்.  

மாணவர்கள் என்ற வகையில் நாங்கள் இவ்வளவு காலமும் பெற்றோரின் உழைப்பினைப் பயனபடுத்தி உண்டு, உடை அணிந்து, கல்விக்காவும் செலவழித்து பல வருடங்கள் கட்ந்து வந்திருக்கின்றோம். இவ்வாறு காலம் பூராவும் உங்களுக்குத் தெழவயான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான இயலுமை எங்களது பெற்றேர்களுக்கு இருக்கப்போவதில்லை. எனவே நாங்கள் எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன் எமது எதிர்கால்த்தையும் திட்மிட்டுக்கொண்டு தாய் தந்தையரையும் அரவணைத்துக்கொள்ளும் அளவுக்கு சம்பாதிக்கக்கூடிய ஒருவராக எங்களை மாற்றிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மிக அவரமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுடையவர்களாக இருக்கின்றோம். 

அவ்வாறு எமக்கு விருப்பமான துறையில் எம்மை ஈடுபடுத்தி அதன் ஊடாக போதுமான வருமானம் ஈட்டும் அளவுக்கு எங்களது எதிர்காலத் தொழிலை அமைத்துக்கொள்வதற்கான  திட்டம் ஒன்றினை அமைத்து அதனை இன்று முதல் நாங்கள் செயற்படுத்தப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளபோகின்றோம். அந்தத் திட்ட்திற்கான வழிகாட்டலை இந்தக் கட்டுரை உங்களுக்காக தரவிருக்கின்றது. 


பணம் ஈட்டிக்கொள்வதற்கான துறைகள்


உலகில் பணம் ஈட்டு வதற்கு இரண்டு வழிகள் தான் காணப்படுகின்றது.
01, சொந்தமாக தொழில் ஒன்றை ஆரம்பிப்பது
02. சொந்தமாக தொழில் ஆரம்பித்திருக்கும் ஒருவருக்கு எமது உழைப்பை வழங்கி ஊதியம் பெறுவது.

மேற்படி இரண்டு துறைகளில் முதலாவது துறையைத் தெரிவு செய்பவர்கள் சுமார் 10 வீதமானவர்களே காணப்படுகின்றனர். மீதி 90 வீதத்தினரும் இரண்டாவது துறையையே தெரிவு செய்வார்கள். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முதலாவது 'தறையின் வெற்றி தோல்வியானது அவர்களது திறமையையும் தன்னம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டடு அமைந்திருக்கின்றது. அத்த அடிப்படையில் அந்த துறை அவரவர் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடாத்திச்செல்ல விட்டுவிட்டு இரண்டாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் துறை குறித்து ஆராய்வோம். 

பொதுவாக உலகில் காணப்படுகின்ற அனைத்து தொழில்களும் கீழ்வருகின்ற 09 தொகுதிகளுக்குள் அடக்கமுடியும். 

01. Finance - நிதி நடவடிக்கைகளை முகாமைப்படுத்தல்

02. Operations unit - உற்பத்தி அல்லது உருவாக்கம் 

03. Accounting - வரவு செலவுகளைக் கணிப்பிட்டு அறிக்கையிடல்

04. Marketing ; உற்பத்திகள் அல்லது சேவைகளை சத்தைப்படுத்தல்

05. Administration - தொழில் துறைகளை நிர்வகித்தல்

06. IT - தகவல் தொழிநுட்பம்

07. Research & development - தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றுக்கு அமைய அபிவிருத்தித் திட்டங்களை அமைத்தல்

08. Supply Chain Management - உற்பத்திக்குத் தேவையானவற்றை வழங்குதல்

09. Human recourse Management  - மனித வளங்களை நிர்வகித்தல்

இவ்வாறு குறிப்பிடப்பட்ட தொழில் துறைகளில் உங்களது திறமை ஆர்வம் விருப்பு வெறுப்பு என்பவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொறுத்தமான துறை எது என்பதனைத் தெரிவு செய்வது உங்களது எதிர்காலத்திட்டமிடலின் முதலாது கட்டமாகும். 

உங்களது தொழில் துறையை எங்கிருந்து ஆரம்பிப்பது?


மேலே குறிப்பிட்ட துறைகளில் உங்களுக்கு பொறுத்தமான துறை என்ன என்பது குறித்து ஆராய்ந்து முடிவினை எடுத்துக்கொண்டதன் பின்னர். அந்த துறைக்குப் பொறுத்தமானவர்களாக உங்களை மாற்றிக்கொள்வதற்கான முயற்சியினை நீங்கள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளலாம்.  

அதற்காக மூன்று தெரிவுகள் உங்களுக்காகக் காண்ப்படுகின்றன.

01. குறித்த தொழில் துறை தொடர்பாக பாடநெறிகளைப் படிப்பது
02. குறித்த தொழில் துறையில் பயிலுநராக இணைந்து  அனுபவ ரீதியாக படிப்பது.
03.. தொழிலில் ஈடுப்பட்டுவதுடன் அந்தத் துறை சம்பந்த்மான பாடநெறிகளைப் பயில்வது.

உங்களது வசதி வாய்ப்பு, குடும்பப்பின்னனி திறமை என்பவற்றின் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட மூன்று முறைகளில் ஒன்றினைத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.  அதனை அடுத்து தொழிலுக் ஏற்ற அடிப்படையில் உங்களைத் தயார் செய்து கொள்வதற்கு திட்டமிடுங்கள்.

தொழல் வழங்குணர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?


நீங்கள் உங்களது உயர் தரதத்தினை நிறைவு செய்து கொண்டதன் பின்னர் விரும்பியோ விரும்பாமலோ தொழில் சந்தை என்ற ஒன்றினுள்  பிரவேசிக்கப்போகின்றீர்கள். பொதுவாக விற்பனையாளரும் கொள்வனவாளரும் சந்திக்கின்ற இடத்திற்கே சந்தை என்று குறிப்பிடப்படுகின்றது. இங்கு வழங்குநராக நீங்களும் பெறுநராக நீங்கள் பணியாற்றப் போகின்ற நிறுவனமும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப் போகின்றீர்கள்.  உங்களது அபிப்பிராயங்களும்  தொழில் வழங்குபவரின் அபிப்பிரதயங்களும் ஒத்துப் போகுமிடத்தே அங்கு கொடுக்கல் வாங்கல் நிகழ்கின்றது. விற்பவரினதும் வாங்குபவரினதும் அபிப்பிராயங்கள் ஒத்துப்போகாதவிடத்து அங்கு வியாபபரம் நடைபெறுவதில்லை. 

உதாரணமாக நீங்கள் சந்தைப்படுத்தல் தொடர்பான பாடநெறி ஒன்றினைப் பயின்றுள்ளீர்கள் அத்துடன் வங்கி சம்பந்தமான இன்னுமொரு படநெறியையும் பயின்றுள்ளீர்கள். இந்த நிலையில் நீங்கள் ஒரு தொழிலுக்காக விண்ணப்பிக்கின்றீர்கள். அது மனித வள முகாமையுடன் தெடா்புடைய தொழில் என்பதாக வைத்துக்கொள்வோம், இந்த நிலையில் தொழில் வழங்குபவர் எதிர்பார்க்கும் தகைமை உங்களிடம் இல்லை எனவே குறித்த தொழிலுக்கு நீங்கள் பொறுத்தமில்லாதவர் என்பதாகக் கருதப்பட்டு பின்னர் அறியத்தருகின்றோம் என்பதாகச் சொல்லி உங்களை அனுப்பி வைப்பார்கள்.  

இங்கு நீஸ்கள் விண்ணப்பிக்கும் தொழிலுக்கும் உங்களிடம் இருக்கின்ற தகைமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இனபதுவே நீங்கள் அந்தத் தொழிலுக்கு தகுதியற்றவர் என்பதாக இனம் காண்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.  எனவே எந்தத் தொழிலாயினும் அந்தத் தொழிலுக்கான சில விடயங்கள் இருக்கவேண்டும் என்பதாக தொழில் வழங்குநர்கள் எதிர்பார்பார்ப்பார்கள். அவைகள் தொழில் பெறுநரிம் இருக்கும் போது மாத்திரமே அந்தத் தெழிலுக்காக அவர் தெரிவு செய்யப்படுகின்றார். 

 

தொழில் வழங்குநர் தொழில் பெறுநரிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் 


01. கல்வித் தகைமை
02. தொழில் தகைமை -
03. ஆங்கில அறிவு.
04  தகவல்தொழில்நுட்பம்
05. நடத்ததை
06 .நுண் திறமைகள் 


கல்வித் தகைமை - 


இது பாடசாலையில் பெற்றுக்கொள்கின்ற கல்வி மற்றும் அதன் பின்னர் பெற்றுக்ெகாள்கின்ற பொதுவான கல்வியினைக் குறித்து நிற்கும்.  இந்தக் கல்விக்கும் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஆனாலும் நீங்கள் ஒரு புத்திசாலி என்பதனை நிரூபிப்பதற்கு இந்தக் கல்வி உங்களுக்கு உதவி செய்கின்றது. உங்களது அறிவின் அள்ளது உங்களது கிரகித்துக்கொள்ளும் திறன் எத்தகையது என்பது இந்த கல்வித் தகைமை ஊடாக மதிப்பிடப்படுகின்றது. 

இந்த கல்வித் தகைமையானது பாடசாலையுடன் நின்றுவிடுவதில்லை பல்கைலைக்கழகம் பட்டப்பின் படிப்பு என்பதாக தொடர்ந்துகொண்டே செல்கின்றது. இவ்வாறு கல்வி வழங்குகின்ற உயர்கல்வி நிறுவனங்கள் தங்களிடம் கல்வி பெற வருகின்றவர்களிலிருந்து ஒரு பிரிவினரை அந்தக் கல்வியை அடுத்வர்களுக்கு வழங்குவதற்கான திறமைகளைவழங்கி உருவாக்குகின்றது. அவர்களைத்தான் நாம் விரிவுரையாளர்கள் என்பதாக அழைக்கின்றோம். அடுத்தவர்களை தொழில் துறைகளுக்காக உருவாக்கி வௌியே அனுப்பி வைக்கின்றது. இவர்கள் தொழில்களுக்கான அநுபவங்களை அல்லது பயறி்சியைப் பெற்றுக்கொண்டு  தொழில் துறைகளிலும் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கின்றனர். 

நீங்கள் தொழில் ஒன்றை இலக்காக் கொண்டு உயர்கல்வியினைத் தொடரும் போது இந்த இடத்தில் உங்களது தொழில் இலக்குகளைப் பெறுத்து உயர்கல்விக்கான துறையையைம் அதில் எந்த அளவு வரையில் படிக்க வேண்டும் என்பதனையும் முடிவு செய்து கொண்டு அந்த இலக்கை நோக்கி உங்களது கல்வியைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். 

தொழில் தகைமை - 


தொழில் தகைமை எனப்படுவது ஒரு தொழிலை செய்வதற்கு அவசியமான அந்த தொழிலுக்கே உரிய கல்வியாகும் . இந்தக் கல்வி  பொதுவாக குறித்த தொழிலுக்கான பயிற்சியுடன் இணைத்தே வழங்கப்படும். இவ்வாறான கல்விகள் குறித்த தொழிலை மேற்கொள்பவர்களால் மாத்திரம் வழங்கப்படுபவைகளாகக் காணப்படும். 

உதாரணமாக நீங்கள் நீதிக் கணக்கீடு தொடர்பான துறையில் தொழில் பெறவேண்டுமாயின் நீங்கள் CIMA, CMA, CA, AAT ACCA பேன்ற தொழில் தகைமைகளைப் பெறவேண்டும். 

AAT போன்ற பாடநெறிகள் இலகுவாக ஆரம்பித்தி நிதித் துறையில் ஆரம்ப மட்ட்த்தில் காணப்படுகின்ற தொழில்களைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தொழிலை செய்கின்ற அதே நேரம் CA  அல்லது CIMA என தரத்தில் கூடிய பாடநெறிகளைப் பயின்று அதற்கேற்ப உங்களது தொழில் தரத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

இது பேன்று மேலே குறிப்பிட்ட 9 துறைகளுக்கும் வெவ்வேறாக பல வகையான பாடநெறிகள் பல நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த பாடநெறிகள் மற்றும் அவற்றை வழங்குகின்ற நிறுவனங்கள் என்பன அரச அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலித்துக்கொண்டு, உங்களது தொழில் இலக்குக்கு ஏற்ப பாடநெறிகளையும் உங்களது நிதி நிலைமை என்பவற்றின் அடிப்படையில்  அவற்றைப் பயில்வதற்கான நிறுவனங்களையும் தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிடப்பிட்ட துறைகளுக்காக இலச பாடநெறிகள் வழங்குகின்ற அரச நிறுவனங்கள் நாடுபூராவும் காணப்படுகின்றன அவற்றைத் தெரிவு செய்வதை முதன்மைப் படுத்திக்கொள்ளுங்கள்.

ஆங்கில அறிவு -


கல்வியின் ஒரு படித்தரத்தைத் தாண்டும் போது ஆங்கில கல்வி இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடிமால் போய்விடலாம்.. அந்த அளவுக்கு ஆங்கில மொழி முக்கியத்துவம் வாய்ந்திருக்கின்றது. ஆங்கிலம் என்பது ஒரு மொழியல்ல அது ஒரு கலாச்சாரம் என்பதாகவும் சிலரால் நோக்கப்படுகின்றது. சரலமாக ஆங்கிலம் பேசுகின்ற ஒருவர் நேர்த்தியான ஒருவராக நோக்கப்படுகின்றார். அங்கில அறிவு ஒருவரினது ஆளுமையை அதிகரிக்கும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது எனவே உங்களது ஆங்கில அறிவையும் போதுமான அளவு வளர்த்துக்கொள்வதற்கான திட்டமிடல்களை அமைத்துக்கொள்ளுங்கள். 

தகவல்தொழில்நுட்பம் -


இன்றைய உலகம் தகவல் தொழில் நுட்பத்துடன் பின்னிப் பிணைந்திருப்பாதாகக்  காணமுடிகின்றது. அனைத்து தொழில்களுக்குமாக ஏதோ ஒரு அளவில் தகவல் தொழில்நுட்ப அறிவு அவசியப்படுகின்றது.  எந்த தொழிலுக்கு செல்வதாயினும் MS-Word, MS-Excell, MS- Power point, Ms-Access போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கான அறிவினையேனும் பெற்றிருப்பது அவசியமாகும். Graphics Designing, Video Editing என்பன குறித்தும் அறிந்துகொள்வது உங்களது எதிர்காலத்திற்கு பயன்படுவதாக அமையும்.

எண்ணப்பாடு-


மனிதர் என்ற வகையில் எண்ணப்பாடு என்பது எப்போதும் சிறந்ததாக அமைய வேண்டும். தொழில் துறையில் நீங்கள் பிரவேசிக்கும் போது உங்களிடம் சில எண்ணப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதாக தொழில் வழங்குநர்கள் எதிர்பார்ப்பார்கள். அவைகள் கீழே குறி்பிடப்படுகின்றது.

01. Positive Attitude - 

சூழ்நிலைக்கு இசைவாக்கம் என்பதாக இதனைக்குறிப்பிடலாம். அதாவது எல்லா விடயங்களும் முடியாது என்று சொல்பவர்களை யாருக்கும் பிடிக்கப்போவதில்லை. எல்ல விடயங்களையும் சவாலாக ஏற்று செயற்படுகின்றவர்களைத்தான் வியாபார உலகம் வரவேற்கின்றது.  சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை இசைவாக்கம் செய்து கொள்கின்ற திறன்களை வளர்த்துக்கொள்வது  Positive Attitude  இனை உங்களுக்குள் உருவாக்க உதவும். 

02. humble - பணிவு 


எல்லாம் எனக்குத் தெரியும் நான் தான் இங்கு எல்லாமே என்று இருக்கின்றவர்களையும் வியாபார உலகம் ஏற்பதில்லை. உங்களிடம் பணிவு என்ற பன்பு இருக்கும் போது மக்கள் உங்களிடம் வருவதற்கும் உங்களுடன் உறவாடுவதற்கும் விரும்புவார்கள். இந்த பண்பு உங்களை வளர்ப்பதற்கு நிச்சயம் உதவியாக இருக்கும். எனவே பணிவினை வளர்த்துக்கொள்வதனையும் உங்களது திட்டமிடலில் இணைத்துக்கொள்ளுங்கள்.

03. integrity - நேர்மை


எல்லாவிடயங்களிலும் நேர்மையாக நடந்துகொள்வது என்பது ஒரு மனதனின் தரம் மென்மேலும் வளர்ச்சியடைய காரணமாக அமையும். நான் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக நடந்துகொள்வேன் என்ற சுய ஒழுங்கொன்றை வளர்த்துக்கொள்ள ஆரம்பத்திலிருந்தே முயற்சிக்கவேண்டும். உங்களது பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் கைநூலை உரிய பணத்தைச் செலுத்தி பதிவிறக்கம் செய்வதிலிருந்து உங்களது உயர்கல்வி வாழ்க்கையை நேர்மையாக ஆரம்பியுங்கள் என்பதாக முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த அடிப்படையில் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு கட்டத்தில் நேர்மையாக நடந்துகொள்வதற்கான சுயகட்டுப்பாட்டை உருவாக்கிக்கொள்வது நீங்கள் தொழில் துறையில் மிளிர்வதற்கும் மக்களை உங்களின் பக்கம் கவந்திழுப்பதற்கும் ஒத்தாசையாக அமையும். 

4. Empathy-

புரிதல் என்பதாக தமிழில் இதற்கு பொருள் கொடுத்தாலும் அதனை விட இதன சற்று ஆழமான பொருள் இந்தச் சொல்லுக்கு உண்டு என்பதாகக் குறிப்படுகின்றது. இன்றைய அவசர உலகில் அழிந்து போகின்ற ஒரு பண்பாக இதனைக் குறிப்பிடலாம். ஒருவரது நிலையில் நின்று யோசித்து அவரது நிலையைப் புரிந்து கொள்வது புரிதல் என்பதற்கு வரைவிலக்கணமாகக் குறிப்பிடலாம். அனைவரும் மனிதர்கள் அவர்களது உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளப்பழகிக் கொள்வதும் உங்களது திட்டத்தில் உள்ளடக்கட வேண்டும். 

5.நுண் திறமைகள் -  Soft Skills

 
பொதுவாக தொழில்துறைகளில் அனைத்திலும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான துறைகளுக்கு கீழ் குறிப்பிடப்படுகின்ற நுண் திறமைகளில் ஒன்றோ பலதோ அவசிப்படலாம்.

01. விடயங்களை முன்வைக்கும் திறன். - Presenting Skills
02. அடுத்தவர்களுடனான உறவு - interpersonal skill 
03. ஆக்கத்திறன் - Creativity
04.   பகுப்பாய்வுத் திறன் -Analytic

மேற்குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் எவரிடமும் பரிபூரணமாக இல்லை. எனினும் தொழில் துறைக்குள் பிரவேசிப்பதற்காக முனைகின்றவர்கள் என்ற அடிப்பயைடில் மேற்படி திறன்களை சிறிது சிறிதாக வளர்த்துக்ெகொள்வதனையும் உங்களது திட்டமிடலில் உள்ளடக்கிக் கொள்ளுங்கள். 

உங்களுக்கு பொறுத்தமான தொழிலை எவ்வாறு தெரிவு செய்வது?


இந்தக் கேள்வி தான் பலரையும் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிடக் காரணமாக அமைகின்றது. சிலர் வாலிப வயதைத் தாண்டி வயோதிப வயதை எட்டும் நிலையிலும் தனக்குப் பொறுத்தமான தொழில் எது என்பதைக் கண்டுகொள்ளாமலேயே ஏதோ ஒரு தொழிலைச் செய்துகொண்டிருக்கின்றனர். உங்களது தொழில் எது என்பதனை தெரிவு செய்வது அவ்வளவு கடினமான விடயமல்ல 3 விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவீர்களானால் உங்களுக்குப் பொறுத்தமான தொழிலை மிக இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளலாம். 

விருப்பம்  Desire 

மனதர்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான விருப்பங்கள் காணப்படும். இங்கு எனது தந்தையின் விருப்பம் என்ன? எனது சகோதரர்தகளின் விருப்பம் என்ன என்பதை விட உங்களது விருப்பம் என்ன என்பதே முக்கியமானதாகும். நீங்கள் விருப்பமான துறையை முதலில் தெரிவு செய்துகொள்ளுங்கள். அடுத்தவர்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக  உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் கால் பதித்துவிட்டீர்களாயின் அந்தத் துறையில் இறுதிவரை உங்களால் பயணிக்க முடியாமல் போய்விடும். அந்தத் துயைில் இருந்து திரும்பிவிட்டீர்களாயின் இவ்வளவு காலம் மேற்கொண்ட சிரமங்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அதன் பின்னர் புதிய துறை ஒன்றினை மீண்டு அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க நேரிடும். எனவே உங்களது விருப்பம் ஆசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

இயலுமை Ability.


நீங்கள் விரும்புகின்ற அந்தத் துறையில் பணியாற்றுவதற்கான திறமை உங்ளிடம் உள்ளதா? அல்லது அந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியுமா என்பது அடுத்த விடயமாகும். இந்த உங்களது இயலுமை, உங்களது இயலாமை என்பவற்றைக் கணக்கிட்டு அந்தத் துறையில் பயணிக்க உங்களால் முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள்.

பொறுமதி value  


என்னதான் விருப்பமான துறையாக இருந்தாலும் அதனைச் செய்வதற்கான இயலுமை உங்களிடம் இருந்தாலும் அந்தத் துறைய பெறுமானம் அற்றதாக இருக்குமானால் அதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. குறித்த துறையினைத் தெரிவு செய்வதன் காரணமாக உங்களுக்கும் நாட்டுக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்குமா என்பதனையும் கருத்தில் கொண்டு உங்களது தொழில் துறையைத் தெரிவு செய்துகொள்ளுங்கள். 


இறுதியாக


மேலே தொழில் துறைக்கு உங்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற பொதுவான தகைமைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாக நீங்கள் தெரிவு செய்கின்ற தொழில் துறைக்கு பிரதத்தியேகமாக சில தகைமைகள் அவசியப்படலாம். நீங்கள் தெரிவு செய்கின்ற தொழிலின் அடிப்பயைடில் உங்களிடம் இருக்க வேண்டிய தகைமைகள் என்ன என்பதை அடையாளம் காணுங்கள். இதற்காக நீங்கள் தெரிவு செய்கின்ற துறையில் தொழில் புரிக்கின்ற அல்லது தொழில் புரிந்த 3 பேர்களிடமாவது ஆலேசனை கேட்டுக்கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் அடுத்த 5 வருடத்துக்கு என்ன செய்யவேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிடல் ஒன்றை அமைத்துக்கொள்ளுங்கள். 


நீங்கள் விரும்புகின்ற துறைக்கான தகைமைகள் என்ன என்பதை இனங்காண்பதற்கான இலகுவான வழிமுறை.


படிமுறை 01. 


உங்களுக்கு விருப்பமான தொழிலை தெரிவு செய்தல் -

இந்தக்கட்டுரையின் ஆரம்பப்பகுதியில் தொழில் துறைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஒவ்வொரு துறையிலும் நூற்றுக்கணக்கான தொழில்கள் காணப்படுகின்றன.  அந்த துறைகளை ஆராய்ந்து அவற்றின் தொழில் வாய்ப்புக்களை பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றில் உங்களுக்கு விருப்பமான துறையினைத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.


படிமுறை 02


அதற்கான தகைமைகளை உருவாக்கிக்கிக்கொள்ளல்.

ஒவ்வாரு தொழிலுக்கும் பிரவேசிப்பதற்கான பல வகையான தகைமைகள் அவசியப்படுவதுண்டு. நீங்கள் விரும்புகின்ற தொழிலைத் தெரிவு செய்த பின்னர் அந்த தொழிலுக்காக நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தகைமைகள் என்ன என்பதனைப் பட்டியலிட வேண்டும். இதற்காக தொழில்களுக்கு ஆட்சேர்த்தல் தொடர்பான விளம்பரங்களைப் பார்வையிடலாம். :-

தொழில்களுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் விளம்பரங்கள் பதியப்பட்டிருக்கும். அந்த விளம்பரங்களில் முக்கியமாக குறித்த தொழிலுக்கான தகைமை குறிப்பிட்ப்பட்டிருக்கும். கணக்காளர் ஒருவராயின் அவருக்கு இருக்க வேண்டிய கல்வித்தரம் என்ன? அவருக்கு இருக்க வேண்டிய தொழில் தகைமை என்ன? ஏதும் அனுபவங்கள் தேவையா? என்ற அடிப்படையில் அனைத்து தொழில்களுக்குமான தகைமைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விளம்பரங்களிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் தொழிலுக்கான தகைமைகள் என்ன என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். 


இங்கு முக்கியமாக தொழில்களைப் பெறுத்த வரையில் அதில் பல படித்தரங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக முகாமைத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் Trainee, Executive , manager, Director என்ற அடிப்படையில் குறித்த தொழிலில் காணப்படுகின்ற தரங்களுக்கான பிரத்தியேக தகைமைகள் குறித்தும் விளம்பரங்களில் பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். 

அடுத்ததாக அந்தத் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த நிறுவனத்தில் என்ன பாடநெறியினை பயில வேண்டும் என்பதாக ஆரய்ந்து பார்த்து தேவையான தகவல்களைத் திரட்டிக்கொள்ளுங்கள்.

படிமிறை 03


உங்களது தெழிலை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தல்.

இப்போது நீங்கள் உங்களுக்கு விருப்பமான துறை என்ன என்பதைத் தெரிவு செய்து விட்டீர்கள், அந்தத் துறையில் எந்த பதவிக்காக செல்வது என்பதையும் அதரிவு செய்துவிட்டீர்கள். அதற்குத் தேவையான தகைமைகள் என்ன என்பதையும் கண்டறிந்துவிட்டீர்கள். அந்த தகைமைகளைப் பெற்றுக்கொள்ள தேவையபான பாடநெறிகள் என்ன என்பதையும் அவற்றை வழங்குகின்ற நிறுவனங்கள் என்ன என்பதையும் அறிந்துள்ளீர்கள் இனி அடுத்த ஐந்து வருடத்துக்கான இலக்கினை அமைத்துக்கொண்டு உங்களது தொழிலுக்கான பயணத்தை ஆரம்பியுங்கள்.

உதாரணமாக ஆசிரியராக வேண்டும் என்றால் அதற்கு அவசியமான பட்டப்படிப்பை எந்த நிறுவனத்தில் பெற்றுக்கொள்வது அந்தப் பட்டப்படிப்பை எந்தக் காலத்தில் பூர்த்தி செய்வது ஆசிரியராக வேண்டுமாயின் என்ன தகைமைகள் தேவை,  பட்டம் பெற்ற பின்னர் ஒரு பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டுமாயின் அந்தப் பரீட்சைக்கு என்னென்ன வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றது. அந்தப் பரீட்சைக்கு எவ்வாறு தயாராக வேண்டும். என்ற வகையில் உங்களுக்கு விருப்பமான துறைக்கு அவசியமான ஆரம்பத் தகைமைகளை இனங்கண்டு அவற்றுக்கு ஏற்ற அடிப்படையில் தங்களைத் தயார் செய்து கொள்ளவதற்கான திட்டத்தினை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களது கேள்விகள் இருப்பின் கீழே கொமென்ட் இடும் பகுதியில் குறிப்பிடலாம். 

உங்களது எதிர்கால கனவுகளை அடைந்து கொள்ள lankajoninfo.com இணைத்தளம் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கும் என்பதுடன் உங்களது அடைவுகளுக்காகப் பிரார்த்திக்கின்றோம்.