>

ad

A/L Fail? Do Natural Science and Engineering Foundation (Advance Certificate in Science )


2023 ஆம் ஆண்டுக்ககான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள.

விண்ணப்ப முடிவுத் திகதி 2023.01. 17

விண்ணப்ப விபரம் இறுதியில் தரப்பட்டுள்ளது


உயர் தரப் பரீட்சையில் சித்தி கிடைக்கவில்லையா? வாருங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான அல்லது பொறியில் பட்டப்படிப்பு ஒன்றினை பயில ஆரம்பிப்போம். நீங்கள் எந்தத் துறையில் உயர் தரம் பயின்றிருப்பினும் இந்தப் பாடநெறியினைப் பயின்றுவிட்டு விஞ்ஞான அல்லது பொறியில் பட்டப்படிப்பு பாடநெறிக்காக உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அறிமுகம். 

உயர் தரம் சித்தியடையாதவர்களுக்கும் பட்டப்படுப்பினைத் தொடர்கின்ற வாய்யினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற அடிப்படையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் சில ஆரம்பத் தகைமைக்கான பாடநெறிகளை வழங்குகின்றது. அந்த அடிப்படையிலான Natural Science and Engineering Foundation (Advance Certificate in Science ) எனும் பாடநெறி குறித்து இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

உயர் தரத்தில் சித்தியடையாதவர்கள் மாத்திரமன்றி சாதாரண தரத்தினை நிறைவு செய்தவர்கள் கூட இந்தப் பாடநெறிக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றவர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் BSc/Engineering என்ற இரண்டில் ஒரு பட்டப்படிப்பிற்காக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பாடநெறியின் உள்ளடக்கம்

இந்தப் பாடநெறியில் Biology, Chemistry, Physics, Combined Maths போன்ற பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. Engineering பட்டப்படிப்பினை தொடர்வதற்கு விரும்புகின்றவர்கள் இந்தப் பாடங்களில் 3 பாடங்களைக் கட்டாயமாக பயில வேண்டும். இந்தப் பாடநெறியின் பின்னர் பட்டப்படிப்பிற்காக பதிவு செய்யும் போது க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரு முறையேனும் தோற்றியிருக்க வேண்டும் என்பது ஒரு தகைமையாகக் கருதப்படுகின்றது. எனினும் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

உயர் தரத்தில் மேற்படி பாடங்களை பயின்றவர்களுக்கான சலுகைகள்


மேற்படி பாடங்களில் உயர் தரம் கற்று அவற்றில் சில வற்றில் சித்தி பெற்றிருந்தால் இங்கு குறிப்பிடப்படும் பாடங்களில் உயர் தரப் பரீட்சையில் சித்தியடையாத பாடங்களை மாத்திரமே பயில வேண்டும். இரண்டு வருட கால அளவு கொண்ட இந்தப் பாடநெறி முழுவதுமான Level 2 என்ற மட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

இங்கு மேலே குறிப்பிடப்படுகின்ற பாடங்களில் உயர்தரம் கற்ற மாணவர் ஒருவர் அந்தப் பாடத்தில் உயர் தரத்தில் சித்தியடையாத பாடநெறிக்கு உள்வாங்குவதற்கான selection test இற்கு முகம் கொடுத்து சித்தியடைய முடியுமாயின் நேரடியா இரண்டாவது வருடத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த நுழைவுப் பரீட்சை ஒவ்வொரு பாடத்திற்கும் வேறு வேறாக நடாத்தப்படும். குறித்த பரீட்சையில் சித்தியடையாவிட்டால் இரண்டு வருடங்களும் அவர் படிக்க வேண்டும்.

உயர் தரத்தில் மேற்குறிப்பிட்ட பாடறங்களைப் பயிலாத ஒருவராயின் அவர் கட்டாயமாக இரண்டு வருடங்களையும் பயில வேண்டும். பாடநெறிகளுக்கான வகுப்புக்கள் வார இறுதி நாட்களில் நடைபெறும்.

பாடநெறிக்கான சான்றிதழ்

இந்தப் பாடநெறிக்கான பாடங்களை உயர் தரத்தில் ஒரு பாடமாக பயிலாாவர்கள் குறித்த பாடநெறியின் 3 பாடங்களைப் பயின்று பரீட்சை சித்தயடைவார்களானால் அவர்களுக்கு certificate course completed என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். உயர் தரத்தில் குறித்த பாடங்களை பயன்று உள்வாங்குவதற்கான பரீட்சையில் சித்திடைகின்றவர்கள் ஒன்று அல்லது இரண்டு பாடங்களைப் பயிலும் போது அவர்கள் இந்தப் பாடநெறிக்காகப் பயின்ற பாடங்களுக்காக மாத்திரம் பெறுபேற்று அடடையினைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த இரண்டு விதமான சான்றிதழ்கள் பெற்றவர்களும் பட்டப்படிப்புக்காக விண்ணப்பிப்பதற்கான தகைமையாக இவற்றைச் சமர்ப்பித்து பட்டப்படிப்புக்காக பதிவு செய்து கொள்ளலாம்.

கட்டண விபரம்

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திப் பொறுத்த வரை பாடநெறிகளுக்காக கட்டணம் அறவிடப்படும் ஒரு முறை காணப்படுகின்றது. ஒவ்வொரு பாடநெறிகளிலும் உள்டங்குகின்ற பாடநெறிகள் credit களின் அடிப்படையில் குறிப்பிடப்படும். ஒரு credit இற்கு ரூபா 1130.00 கட்டணமாக அறவிடபதகின்றது.

அந்த அடிப்படையில் இந்தப் பாடநெறிக்கான ஒவ்வவொரு பாடமும் 10 credit களைக் கொண்டிருக்கின்றன. மூன்று பாடங்களும் பயில்வதானால் 30 credit களுக்கான கட்டணம் செலுத்தவேண்டும். அத்துடன் பதிவுக்கட்டணம் வருடத்தில் இரண்டு தவணைகளாக செலுத்தலாம்.






Download  Guide Book