பல்கலைக்கழக நுழைவுக்கான Aptitude Test என்றால் என்ன? அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும், பரீட்சையில் என்ன வினாக்கள் கேட்கப்படும் என்பதாக பலரும் கேட்கின்றனர் என்பதனால் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தப்பதிவினை lankajobinfo.com இணைத்தளம் தொகுத்து வழங்குகின்றது.
Aptitude Test என்பதன் பொருள் தகுதிகாண் பரீட்சை என்பதாகும். அதாவது ஒருவர் ஒரு துறைக்கு உள்வாங்கப்படும் போது அவர் அதற்கான உரிய தகுதிகளைப் பெற்றுள்ளாரா என்பது குறித்து தகுதிகாண் பரீட்சை ஒன்றின் மூலமாக பரிசோதிக்கப்படும். குறித்த துறையில் காணப்படுகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கான தகுதியானது குறித்த அந்த நபரிடம் காணப்படுகின்றதா என்பதைப் பரிசோத்திப்பதற்கன பரீட்சை என்றும் இதனைக் குறிப்பிடலாம். பொதுவான இந்தப் பரீட்சைகள் இரணுவத்துடன் தொடர்பான தொழில்களுக்கும் கல்கலைக்கழகங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் போதும், மேலும் சில துறைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் போதும் இந்தப் பரீட்சை முறை பயன்படுத்தப்படுவதுண்டு.
பல்கலைக்கழகங்களுக்கு இந்த பரீட்சை முறை எதற்காக?
பொதுவாக பல்கலைக்கழக படநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் போது அவர்கள் உயர்தரம் பயின்ற துறையை அடிப்படையாகக்கொண்டே சேர்த்துக்கொள்ளப்படிவதுண்டு. வைத்திய கற்கைக்காக விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதனை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். உரிய துறையில் உயர்தம் சித்தியடைந்து தான் பயின்ற துறையுடன் தொடர்புடைய பாடநெறிகளைப் பயில்வதற்கு வாய்ப்பினை இழந்தவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கி உயர்தரத்தில் எந்தத் துறையில் பயின்றவர்களும் பயிலலாம் என்ற அடிப்படையிலான சில பாடநெறிகள் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றன.
மேற்படி தங்களது உயர்தரம் பயின்ற பிரிவிற்கு உரிய பாடநெறிகளுக்கு தெரிவாகாத மாணவர்கள் இந்தப் பாடநெறிகளுக்காக விண்ணப்பிப்பார்கள். எனினும் இவ்வாறான பாடநெறிகளின் உள்ளடக்கம் என்ன என்பது குறித்து பொரும்பாலும் அவர்கள் அறிவதில்லை, அல்லது இந்த பாடநெறியின் உள்ளடங்குகின்ற விடயங்களில் ஒரு பகுதியையேனும் அவர்கள் உயர்தரத்தில் பயின்றிருக்க மாட்டார்கள். எனவே இந்தப் பாடநெறியினைப் பயில்வதற்கு போததுமான திறமை காணப்படாத மாணவர்கள் குறித்த பாடநெறிகளுக்கு பிரவேசித்து அதனைத் தொடரமுடியாமல் சிலவேளைகளில் சங்கடத்திற்கு உள்ளாகலாம். இந்த சங்கடப்படுகின்ற நிலையிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக இந்த தகுதிகாண் பரீட்சை நடாத்தப்படுகின்றது.
உதாரணமாக .....
ஒரு மாணவர் சட்டத்துறை சார்ந்த பட்டப்படிப்பினை தொடரும் நோக்கத்தில் உயர் தரத்திற்காக புவியியல் , வரலாறு, மொழி ஆகிய பாடங்களை பயின்றுள்ளார் என வைத்துக்கொள்வோம். சட்ட்ததுறைக்கு உள்வாங்கும் தரத்திலான உயர் தர துறையில் அவர் பயின்றுள்ளார் என்பதால் அவரால் சட்ட பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியும். எனினும் சட்டத்துறைக்கு அதிக போட்டி காணப்பட்டமை காரணமாக சட்டத்துறையில் அனுமதி கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்தினாலும் தகவல்தொழில்நுட்பத் துறையில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாகவும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் Bachelor of Science in Information Systems (BSc IS) Degree எனும் பாடநெறிக்காக விண்ணப்பிக் நினைக்கின்றார். அந்தப் பாடநெறிக்காக அவரது z-score அடிப்பயைடில் சேர்த்துக்கொள்வதாக இருந்தால் அந்தப் பாடநெறிக்கு அவர் உள்வாங்கப்படுவார் என்ற போதிலும் அந்தப் பாடநெறியினை தொடர்வதற்கு போதுமான தகைமை அல்லது தகுதி அவரிடம் காணப்படவில்லையாயின் அவர் சங்கடங்களுக்கு உட்பட நேரிடலாம்.
குறித்த தொழிநுட்ப விஞ்ஞான பாடநெறியானது கணிதச் செயற்பாடுகள், பிரச்சினை தீர்த்தல், மென்பொருள் வடிவமைத்தல், வலைபின்னல், கணனி மொழிகள், என அவர் எதிர்பார்க்காத பல விடயங்கள் அந்தப் பாடநெறியில் உள்ளடங்கியிருக்கும். அவருக்கு அந்தப் பாடநெறி சில காலங்களில் புரிந்துகொள்ள முடியாத நிலை உருவாகி பாடநெறியினை விட்டுச் சென்றுவிடவேண்டிய நிலை ஏற்படலாம்.
இவ்வாறான நிலை ஏற்படாமலிருப்பதற்காகவே தகுதிகாண் பரீட்சைகள் ஊடாக மாணர்களின் தகுதிகள் மட்டிடப்பட்டு இணைத்துக்கொள்ளப்படிகின்றனர். மேற்படி பரீட்சையில் சித்தியடைகின்றவர்கள் பாடநெறியின் உள்ளடக்கத்தினை புரிந்துகொள்வார்கள் என்பதாக கருதப்படுகின்றது.
Aptitude Test இன் உள்ளடக்கம் என்ன?
தகுதிகாண் பரீட்சையில் என்ன கேட்பார்கள்? நான் என்னென்ன பாடங்களைப் படித்துவிட்டுச் செல்லவேண்டும்? என்ற கேள்விகள் பொதுவாக பல மாணவர்களிடமும் காணப்படுகின்றதன. மேற்குறிப்பிட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளுக்காக மாணவர்கள் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சையில் பொதுஅறிவு நுண்ணறிவு என்பன மாத்திரமே பரிசோதிக்கப்படுகின்றன.. பொது அறிவு விடயங்கள் குறித்த அறிவும் விடயங்களைப் பரிந்துகொள்கின்ற அறிவும் போதுமான அளவில் இருக்கின்ற ஒருவரால் பாடநெறியின் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதாக அனுமானிக்கப்படுகின்றது.
இந்த வினாத்தாள்களில் பொது அறிவு, இலங்கை மற்றும் உலக நடப்பு விவகாரங்கள், கணித பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற அடிப்படையிலேயே வினாக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். பொதுவாக உயர் தர பொது வினாப்பத்திரத்திற்கு சமமானதாக இருக்கலாம். எனினும் பெரும்பாலான தகுதிகாண் பரீட்சைகள் ஆங்கில மொழியில் மாத்திரமே நடாத்தப்படுகின்றளன.
இந்தப் பரீட்சையில் சித்திடைந்தால் அடுத்த கட்டம் என்ன?
இந்தப் பரீட்சையில் சித்தியடைவார்களானால் அவர்கள் உண்மையில் வெற்றியாளர்களாவே கருதவேண்டும். இந்தப் பரீட்சைகளில் குறிப்பிட்ட தொகையினர்கள் மாத்திரமே சித்தியடைகின்றனர் என்பதுவே அவர்களை வெற்றியாளர்கள் என்பதாகக் குறிப்பிடுகின்றோம். அவ்வாறு தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைபவர்கள் தங்களது உயர்த தரப் பெறுபேறு மறறும் z-score என்பன கருத்தில் கொள்ளப்படாத நிலையில் பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பிருக்கின்றது. எனினும் அதனை உறுதியாக குறிப்பிட முடியாது. 2017 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தின் Bachelor of Science in Information Systems (BSc IS) Degree பாடநெறிக்காக 100 பேர்களே உள்வாங்கப்பட்ட நிலையில் 331 மாணவர்கள் தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்கள். எனவே அந்தப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் பாடநெறியினைப் பயில்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
சித்தியடையாதவர்களின் நிலை என்ன?
இந்த பரீட்சைக்கு முகம் கொடுத்து அந்தப் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் அந்தப் பாடநெறிக்கு பிரவேசிக்கின்ற வாய்ப்பு மாத்திரமே இல்லாமல் போகும். அந்த நிலையில் நீங்கள் விண்ணப்பித்திருக்கின்ற அல்லது விண்ணப்பிக்கப் போகின்ற அடுத்த பாடநெறிகளுக்கு இந்த பெறுபேறு எந்தப் பாதிப்பினையும் ஏற்படித்தப்போவதில்லை.
இந்தப் பட்டம் External , internal எந்த வகையைச் சாரும்?
இந்தப் பாடநெறிகள் மற்றைய பாடநெறிகள் போன்றே internal என்ற அடிப்படையிலேயே நடைபெறும். வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்கினறவர்கள் பயிலுகின்ற பாடநெறிகளைப் போன்றது என்பதனால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் இந்தப் பாடநெறிகளைப் பயில்பவர்களுக்கும் வழங்கப்படும்.
இந்தப் பாடநெறிகளுக்கு பணம் கட்டவேண்டுமா?
இந்தப் பாடநெறிகள் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்கினறவர்கள் பயிலுகின்ற பாடநெறிகளைப் போன்றது என்பதனால் இந்தப் பாடநெறிகளுக்காக கட்டணம் அறவிடப்படுவதில்லை. எனினும் பரீட்சைக்கான விண்ணப்பப்பக் கட்டணமாக ஒரு தொகை அறவிடப்படுவதுண்டு.
இந்தப் பாடநெறிகளுக்காக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்
இந்தப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது குறித்த பல்கலைக்கழகங்கள் தேசிய பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தும். அத்துடன் அந்தந்த பல்கலைக்கழகங்களிவ் இணையத்தளத்திலும் பதிவேற்றப்படும். அந்த விளம்பரங்களுக்கு அமைய விண்ணப்பிக்கவேண்டும். (குறித்த விளம்பரங்கள் லங்காஜொப் இன்போ இணையத்திலும் பதிவடப்படும். )
இந்தப் பாடநெறிகளுக்கான தகைமைகள் என்ன?
பொதுவாக இந்தப் பாடநெறிகளுக்காக 3 S சித்திகள் போதுமானது. சில பாடநெறிகளுக்கு சாதாரண தரப் பரீட்சையில் சில பாடங்களில் விசேட சித்திகள் இருக்கவேண்டும் என்பதாகக் குறிப்பிடப்படும். எவ்வாறாயினும் தகைமைகள் என்ன என்பது குறித்து உரிய பாடநெறிகளுக்கான