விவசாயம் தொடர்பான துறையானது ஏனைய துறைகள் போன்றே புதிய பல கண்டுபிடிப்புக்களுடன் முன்னேறம் கண்டு வருகின்ற ஒரு துறையாகக் குறிப்பிடலாம். அந்த அடிப்படையில் இந்தத் துறைக்காக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், நிர்வாகிகள் என பல மட்டத்திலான தொழில் துறையினர் அவசியப்படுகின்றனர். விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற நாடு என்ற அடிப்படையில் இலங்கையும் விவசாயத் துறை சார்ந்த பல விதமான பட்டப்படிப்புகளை வழங்கி துறைசார்ந்த நிபுணர்களை உருவாக்குவதற்கான நடவடி்கைகளை மேற்கொற்கின்றது. அந்த அடிப்படையில் விவசாயத் துறையில் காணப்படுகின்ற கற்கைநெறிகள் குறித்து இந்தப் பதிவில் ஆரய இருக்கின்றோம்.
அறிமுகம்.
விவசாயத் துறையி சார்ந்த உயர் கல்விக்கான பாடநெறிகளைப் பயில்வதற்காக க.பொ.த் (உ/த) பரீட்சையில் குறிப்பிட்ட பாடங்களில் சித்தியடைந்து உரிய Zscore இனையும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலை காரணமாக தேசிய பல்கலைக்கழகங்களுக்கு விவசாயத் துறை சார்ந்த பாடநெறிகளுக்காக குறிப்பிட்ட அளவினரே இணைந்து கொள்கின்றனர். Zscore இன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் நுழைகின்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு தமது விவசாயத்துறை உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பல பாடநெறிகள் காணப்படிகின்றன.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம். / Open University
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் Bachelor of Industrial Studies Honours in Agriculture (BIS in Agriculture) பட்டப்படிப்பு நடாத்தப்படுகின்றது. இந்தப் பாடநெறியானது விவசாயத்துறையில் காணப்படுகின்ற வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது விவசாயத்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் இந்தப் பாடநெறியினைப் பயில்வதன் மூலம் அவர்களது தொழில் துறையினை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பாடநெறியானது Bachelor of Industrial Studies Honours in Agriculture என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்படும். இதற்காக உயர் தரத்தில் எந்தத் துறையிலும் 3 சித்திகள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விவசாயத்துறையில் விசேட பட்டத்திற்காக விண்ணப்பிக்கின்றவர்களுக்கு உயர் தர்ததில் உயிரியல் சார்ந்த பாடங்களில் சித்தி இருக்க வேண்டும். உயர் தரத்தில் சித்தியடையாதவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் Natural Science and Engineering Foundation (Advance Certificate in Science ) எனும் 2 வருட அல்லது ஒரு வருட ஆரம்பத் தகைமக்கான சான்றிதழ் பாடநெறியினைப் பயின்று விட்டு விவசாய விசேட பட்டத்திற்காக பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தப் பாடநெறிக்காக இறுதியாக 2020 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் விண்ணப்பம் கோரப்பட்டு ஜூன் மாதம் வரையில் விண்ணப்பத்திகதி நீடிக்கப்ட்டது. அந்த அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படலாம்.
வயம்ப பல்கலைக்கழகம் / Wayamba University of Sri Lanka
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை முகாமைத்துவ பீடத்தினால் (Faculty of Agriculture & plantation management) பெருந்தோட்ட முகாமை குறித்த விஞ்ஞான வெளிவாரி பட்டப்படிப்பு பாடநெறி / Bachelor of Science in Plantation Management (B.Sc. Plantation Management) (External Degree Programme) நடாத்தப்டுகின்றது. இந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த பட்டமானது 3 வருட கால அளவினைக் கொண்டது. இந்த பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களை http://www.wyb.ac.lk/ எனும் இணைய முகவரியில் அல்லது 031-2299704 எனும் தொலை பேசி இலக்கம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களது வசதிக்காக 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விண்ணப்பம் கோரப்பட்ட விபரங்கை கீழே தருகின்றோம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் ஒக்டோபர் மாதமாகும் போது குறித்த பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படலாம்.
விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான நிறுவனம் - கொழும்பு பல்கலைக் கழகம். / Institute for Agro-technology and Rural Sciences, University of Colombo
கொழும்புப் பல்கலைக் கழகத்தின் விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான நிறுவனம் Bachelor of Agro-technology எனும் பட்டப்படிப்பினை வழங்குகின்றது. இந்தப் பட்டப்படிப்பானது விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக சான்றிழ், டிப்லோமா, பட்டம் என்ற அடிப்படையில் ததைமைகள் இந்தப் பாடநெறியின் ஊடாக வழங்கப்படுகின்றது.
இந்த நிறுவனத்தின் பாடநெறிக் கட்டமைப்புக்கு அமைய 9 சான்றிதழ் பாடநெறிகளைக' கொண்ட இரண்டு வருடங்களும் 3 மாதங்களும் என்ற அடிப்படையில் பூர்த்தி செய்யும் போது Diploma in Agro-technology எனும் சான்றிதழ் பெறலாம்
அதன் பின்னர். ஒரு வருட காலத்தில் 4 சான்றிதழ் பாடநெறிகளைப் பயின்று Higher Diploma in Agro-technology எனும் உயர் டிப்லோமா சான்றிதழைப் பெறலாம்.
அதன் பின்னர் மேலும் 9 மாதங்கள் என தொடர்ந்து 4 வருடங்களில் Bachelor of Agro-technology (B.Ag-tech Degree Programme) எனும் பட்டப்படிப்புக்கான சான்றிதழைப் பெறலாம். தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில் இந்தப் பாடநெறியினைத் தெபடர முடியுமாக அமைவது இந்தப் பாடநெறியின் முக்கய அம்சமாகும்.
இந்த பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களைை http://uciars.cmb.ac.lk/ எனும் இணையத்தளத்தில் அல்லது 047-3620468 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயத்துறையுடன் தொடர்புடைய பல பாடநெறிகள் தேசிய தொழில் தகைமை தரப்படுத்தலுக்கு அமைய (NVQ 5) மற்றும் (NVQ 6) என்ற அடிப்படையில் பல நிறுவனங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இதன் ஊடாக தொழில்நுட்பவியல் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
இலங்கை விவசாயத் திணைக்ளத்தின் ஒரு வருட விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்லோமா / National Diploma in Agricultural Production Technology One Year ( NVQ Level 05)
இலங்கை விவசாயத் திணைக்ளத்தின் இரண்டு வருட விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்லோமா/ National Diploma in Agricultural Production Technology Two Year ( NVQ Level 06)
விவசாய உற்பத்தி தொழில்நுட்பவியலில் தேசிய டிப்ளோமா / Agriculture Production Technology ( NVQ Level 05 සහ 06)
விவசாய உபகரண பொறிமுறைத் தொழில்நுட்பவியலில் தேசிய டிப்ளோமா/ Diploma in Farm Machinery Technology ( NVQ Level 05 සහ 06)
அறுவடைக்குப் பினன் ரான தொழில்நுட்பவியலில் தேசிய டிப்ளோமா – ETB 26 / Post Harvest Technology விவசாய உபகரண பொறிமுறையாளர் சான்றிதழ / Farm Machinery Technology ( NVQ Level 05 සහ 06)
போன்ற பாடநெறிகளை தொழில் நுட்பக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பாடநெறிகளின் ஊடாக பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் உயர் டிப்லோமா சான்றிதழப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.
Sri Lanka Institute of Advanced Technical Education - SLIATE
இந்த நிறுவனத்தில் Higher National Diploma in Agriculture - HNDT (Agri) எனும் உயர் டிப்லோமா பாடநெறி காணப்படுகின்றது. க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 3 உயிரியல் பிரிவில் 3 பாடங்கள் சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
இந்த பாடநெறி தொடர்பான தகவல்களை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் பின்னர் எமது தளத்தில் பகிரப்படும்.
இவை தவிர அரச அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களும் விவசாயத்துறை சார்ந்த பல வகையான பாடநெறிகளை வழங்குகின்றன. அவைகள் குறித்தும் நீங்கள் இணையத்தில் தேடிப்பாரக்கலாம்.
இலங்கை ஒரு விவசாய நாடு என்ற விகையில் விவசாயத்துறையில் பலவிதமான வேழைலவாய்ப்புக்கள் நாளந்தம் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட பாடநெறிகளைப் பயில்வதன் ஊடாக சிறந்த தொழில் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் நாட்டின் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கான பங்களிப்பினையும் வழங்கலாம்.
.
அதே போன்று விவசாய பயிர் உற்பத்தி. மிருக வளர்ப்பு. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி , சத்துணவு விஞ்ஞானம், பூந்தோட்ட செய்கை, என்ற அடிப்படையில் விவசாயத்துறை பரந்து விரிந்திருக்கின்றது. எனவே இந்தத்துறை குறித்து இதற்கு மேலதிகமான பல தகவல்களை இணையம் மூலமாக பெறலம். அத்துடன் அந்து துறையில் இருப்பவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். எனவே இது சம்பந்தமாக தகவல்களை ஆராய்ந்து உங்களது உயர்கல்வியினைத் திட்டமிட்டுக் கெள்ளலாம்,