>

ad

How to fill UGC Online Application 2022 - Common Mistakes Should Avoid - Tamil






அறிமுகம்

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு முக்கியமான விடயமாகும். இந்த ஒன்லைன் பதிவினை மேற்கொள்ளும் போது மாணவர் பொதுவாக சில தவறுகளை விடுகின்றனர். அவ்வாறு அவர்களுக்கு ஏற்படக்கூடிய 3 விதமான தவறுகள் குறித்தும் அத்துடன் சில ஆலோசனைகளையும் இந்தப் பதிவின் ஊடாக தரலாம் என விரும்புபிகின்றோம். 

விண்ணப்பத்தினைப் பூர்த்திசெய்வதற்கான சாதணங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளவது ?


விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து எனது முன்னைய பதிவில் விளக்கமாக தரப்பட்டுள்ளது கீழ் குறிப்பிடும் லிங்கின் ஊடாக அதனை வாசித்த பின்னர் இந்தப் பகுதியை வாசிக்கவும். 


 பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்பது நாங்கள் அறிந்த விடயமாகும். எனவே இந்த விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்காக கணனி அறிவு ஓரளவு அவசியப்படுகின்றது. அத்துடன் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்வதனால் ஆங்கிலம் பிழையின்றி தட்டச்சு செய்யத்தக்க ஆங்கில அறிவும் அவசியமாகும். மேற்படி விடயங்களில் போதிய அறிவு இல்லையாயின் தெரிந்த ஒருவரின் உதவியை நாடுங்கள்.

அடுத்து விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான தொலைபேசியைப் பயன்படுத்துவதை விட கணனி ஒன்றினைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். உங்களிடம் கணனி வசிதி இல்லாவிடின் நீங்கள் இலவசமாக கணனியினைப் பயன்படுத்த முடியுமான அரச நிறுவனங்களின் பட்டியல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கையேட்டில்  148 ஆம் பக்கம் முதல் 156 வது பக்கம் வ​ரை தரப்பட்டுள்ளது.  அந்த நிறுவனங்களின் கணனிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

  • இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் மத்திய நிலையங்கள்
  • கல்வி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மாகாண மற்றும் வலய கணனி வள நிலையங்கள் 
  • நெனசல நிலையங்கள்

என்ற அடிப்படையில் நாடு பூராவும் அமைந்திருக்கும் நிறுவனங்கள் அவற்றினது முகவரி தொலைபேசி இலங்கங்கள் என்பன தரப்பட்டிருக்கின்றன. அந்த தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்களைத் தொடர்பு கொண்டு  அங்கு சென்று அங்கிருக்கும் கணனிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் அங்கிருக்கும் அலுவலர்களிடம் தொழிநுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம். 

Unicode -  என்றால் என்ன 

விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்காக  Unicode குறித்து அறிந்திருப்பது மிக முக்கியமான விடயமாகும். 

இலங்கையில் காணப்படுகிக்னற ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியானன குறியீட்டு இலக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன இதுவே Unicode  என்பதாக அழைக்கப்படுகின்றது. 
நீங்கள் தெரிவு செய்யும் பாடநெறறி அந்தப் பாடநெறிகளைத் தெடரமுடியிமான பல்கலைக்கழகம் என்பவற்றை இணைத்து இந்த Unicode அமைக்கப்பட்டிருக்கும். பாடநெறி ஒவ்வொன்றுக்குமான Unicode  என்னென்ன என்ற விபரம் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கையேட்டில் 137 ஆம் பக்கம் முதல் 142 ஆம் பக்கம் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்கள் தெரிவு செய்கின்ற பாடநெறி என்ன அந்தப் பாடநெறியினை எந்தப் பல்கலைக்கழகத்தில் பயில உத்தேசிக்கின்றீர்கள் என்ற விடயத்தை விண்ணப்பப்டிவத்தில் இந்த Unicode  ஊடாக குறிப்பிடல் வேண்டும்.


உதாரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பாடநெறியினைப் பயிலவதற்கு விரும்புகின்றவர் ஒருவர் அதற்கான Unicode  ஆக 001A என்பதாக குறிப்பிடவேண்டும். இது போன்று நீங்கள் தெரிவு செய்கின்ற பாடநெறி மற்றும் அதற்கான பல்கலைக்கழகம் என்பவற்றைக் குறிக்கின்ற குறியீட்டினை உங்களது தெரிவாக இடவேண்டும். 





பாடநெறி ஒன்றினை எவ்வாறு தெரிவு செய்வது ?


நீங்கள் பாடநெறி ஒன்றினைத் தெரிவு செய்வதில் உங்களது z-score முக்கியமான பங்குவகிக்கின்றது. உங்களுக்கு கூடிய z-score இருக்கும் போது மாத்திரமே சிறந்த பாடநெறிகளை உங்களால் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாக விஞ்ஞானப் பரிவில் உயர்ந்த z-score பெற்றிருக்கவேண்டும். ஆனால் z-score குறைந்துள்ளது என்பதனால் விண்ணப்பிப்பதற்கு தடையில்லை. அந்த அடிப்படையில் உங்களால் முடியுமான பாடநெறிகளைத் தெரிவு செய்துகொள்ளுங்கள். அத்துடன் உங்களுக்கு  உங்களுக்கு கிட்டிய பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்வதை கவனத்தில் கொள்ளவும். 

z-score குறைவாக உள்ளவர்கள் தரத்தில் கூடிய பாடநெறிகளை மாத்திரம் தெரிவு செய்வதுடன் மாத்திரம் நின்றுவிடாதீர்கள் z-score அளவு குறைவாக இருக்கும் போது தரத்தில் உயர்ந்த பாடநெறிகள் கிடைக்காமல் போகலாம். எ

எத்தனை பாடநெறிகளைத் தெரிவு செய்யலாம்?


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கையேட்டுக்கு அடை 200க்கும் அதிகமான பாடநெறிகள் தரப்பட்டிருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு 125 பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு தரப்பட்டிருக்கின்றது. எனவே உயர் தரத்தில் நீங்கள் பயின்ற பாடங்களுக்கு பொறுத்தமான அத்தனை பாடநெறிகளைகயைும் விண்ணப்த்தில் குறிப்பிடுங்கள் அத்துடன் பெறுமதியான பாடநெறிகளை முதலாவது தெரிவாகுவும் பெறுமதி குறைந்த பாடநெறிகளை இறுதியாகவும் குறிப்பிடுங்கங்கள். தெரிவு செய்கின்ற பாடநெறிகளை தெரிவின் அடிப்படையிவ் ஒழுங்குபடுத்துகின்ற முறை கீழே தரப்பட்டுள்ளது. 



Aptitude test பாடநெறிகளுக்காக விண்ணப்பித்தல்

 
தகுதிகாண் பரீட்சை அல்லது பொது உளசார்ப்பு பரீட்சை மூலம் தெரி செய்கின்ற பாடநெறிகளுக்காக அந்தந்த பல்ககைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்பது போன்றே இந்த ஒன்லைன் விண்ணப்பத்திலும் அந்தப் பாடநெறிகள் குறிப்பிடப்படவேண்டும்.

தகுதிகாண் பரீட்சை மூலம் பலகலைக்கழகம் தெரிவு செய்கின்ற முறை குறித்த பதிவினை கீழ்வரும் லிங்கில் வாசிக்காலம். 


பல்கலைக்கத்திற்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் விடுகின்ற தவறுகள்.

தவறு  01

பிழையான Unicode வழங்குதல்

நீங்கள் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்கின்றீர்கள். உங்களது விண்ணப்பங்கள் கணனி மென்பொருள் ஊடாகவே வகைப்படுத்தப்படுகின்றன. எனவே நீங்கள் பிழையான Unicode வழங்குமிடத்து நீங்கள் எந்த பாடநெறியினைத் தெரிவு செய்திருக்கின்றீர்கள் என்பதனையும்  அதற்காக தெரிவு செய்த பல்கலைக்கழகம் எது என்பதையும்  கணனி மென்மென்பெருளினால புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடலாம். இது உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்ட காரணமாக அமையும். அவ்வாறு பிழையான ஒரு தகவலை பின்னர் யாராலும் சரி செய்ய முடியாமல் போய்விடலாம். எனவே Unicode வழங்கும் போது மிகவும் கவனமெடுத்து சரியான தெரிவினை வழங்குங்கள்.


தவறு  02

பலர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதில்லை.

உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்து விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற மாணவர்வர்களில் சில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதில்லை . எனது z-score குறைவாக உள்ளது எனவே நான் இந்த முறை விண்ணப்பிப்பதில்லை. மீண்டும் ஒரு முறை உயர் தரம் செய்துவிட்டு அடுத்த முறை  விண்ணப்பிக்கின்றேன் என்பதாக அவர்கள்  கருதுவார்கள். 

அவ்வாறு மீண்டும் ஒரு முறை உயர் தர பரீட்சை எழுதுகின்ற முயற்சியில் எந்தத் தவறுமில்லை. மீண்டும் ஒரு முறை உயர் தரம் எழுதுகின்ற அதே நேரம் இந்த முறை விண்ணப்பத்தையும் பூரணப்படுத்துங்கள். அடுத்த முறை இந்த மிறையிலும் பார்க்க குறைந்த புள்ளிகள் வரலாம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களினால் பரீ்டசை எழுத முடியாமல் போகலாம். எனவே இந்த முறை விண்ணப்பித்துவிட்டு அடுத்த முறை குறித்து பின்னர் முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆகக்குறைந்த தகைமை உங்களிடம் இருக்குமானல் நீங்கள் கட்டாயமாக பல்கலைக்கழக நுழைவுக்காக விண்ணப்பியுங்கள். 

தவறு  03

இன்றும் சிலர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பார்கள் ஆனால் அவர்களால் விண்ணப்பிக்கமுடியுமான சிறந்த தெரிவுகளை விட்டு விட்டு அதனிலும் குறைந்த வெட்டுப்புள்ளிகளுக்குரிட பாடநெறிகளை தெரிவு செய்வார்கள்.

குறைந்த z-score இருக்கின்றதே என்பது குறித்து யோசிக்காமல் முடிந்த வரை பாடநெறிகளுக்கு விண்ணப்பியுங்கள்,.சில நேரம் உஙகளுக்கு அந்தப் பாடநெறிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். அவ்வாறு வாய்ப்புக்கிடைப்பதற்காக நீங்கள் அவற்றுக்கு விண்ணப்பித்திருக்கவேண்டும். உங்களுக்கு 125 பாடநெறிகள் வரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு தரப்படுகின்றது. எனவே நீங்கள் முடியுமான அளவு பாடநெறிகளை தெரிவு செய்யுங்கள்

தவறு 04

போதுமான அளவு பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை,

உதாரணமாக சிலர் மருத்துவ பாடநெறிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிப்பார்கள. அதனிலும் குறைந்த பாடநெறிகளுக்கு அவர்கள் விண்ணப்பிப்பதில்லை எனவே இந்த அவர்களுக்கு மருத்துவத் துறையில் வாய்ப்புக்கிடைக்காவிட்டால் அந்த வருடம் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். நீங்கள் விண்ணப்பிக்காத ஒரு பாடநெறிக்காக உங்களைத் தெரிவு செய்யும் உரிமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனவே முடிந்த அளவு பாடநெறிகளை உங்களது விருப்பத் தெரிவுக்கு ஏற்ப குறிப்பிடுங்கள்.




பல்கலைக்கழ விண்ணப்பம் என்பது உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற விடயம் என்பதனால் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யும் போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் விபரங்கள் இருப்பின் இன்னுமொரு பதிவின் ஊடாக உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கின்றோம். விண்ணப்பிக்கின்ற அனைவரதும் எதிர்காலம் நலமாக அமைய வாழத்துக்கள். 

lankajobinfo.com