>

ad

How to fill UGC online ONLINE application form 2021 (in Tamil)



🔴 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பூர்த்திய செய்கின்ற மாணவர்களுக்கு அவ்வப்போது எழுகின்ற சந்தேகங்கள் பலவற்றுக்கு விடை தருவதாக இந்தப் பதிவு அமையப் போகின்றது.  (கேஷூ மற்றும் அவரது குழுவினரின் முகநூல் பதிவினை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவு தொகுத்துத் தரப்படுகினற்து.)

🔴 முதலாவதாக தாள் ஒன்று, பென்சில் ஒன்று, சிவப்பு, நீல நிற பேனைகள் என்பவற்றை அருகில் வைத்துக்கொண்டு இந்தப்பதிவை கவனமாக வாசியுங்கள். 

🔴 பல்கலைக்கழக கைநூல் என்பது நீங்கள் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக தெரிவாகின்ற பாடநெறிகளின் பட்டியலும் விண்ணப்பத்தினை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்த விளக்குமும் அடங்கிய புத்தகமாகும். 

🔴 பல்கலைக்கழகங்களுக்கு சரியான முறையில் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிதற்காக  அந்தப் புத்தகம் உங்கள் கைவசம் இருக்க வேண்டும். புத்தகத்தின் அச்சுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால்,  PDF விடிவிலான புத்தகத்தையேனும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல்கலைக்கழக கைநூல் இல்லாமல் விண்ணப்பித்தல் குறித்து விளங்கிக்கொள்வது முடியாமல் போய்விடலாம். அத்துடன் அந்தப் புத்தகத்தை நுணிப்புல் மேய்வது போன்று அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று ஆங்காங்கே வாசித்துக்கொண்டு சென்றால் வாய்ப்புகள் பல உங்கள் கைகளை விட்டு நீங்கிவடலாம். எனஈவ ஈநரமெடுத்து அந்தப் புத்தகத்ததை முழுமையாக வாசியுங்கள். 

 பல்கலைக்கழக கையேட்டினைப் பதிவிறக்கம் செய்வதற்காக பரீட்சை இலக்கம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதாகவும் 500/- கட்டணம் செலுத்தி அதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதாக பல்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுருக்கின்றது. எனஈவ அதனைப் பதிவிறக்கம் செய்து எமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது, ஊடக தர்மத்திற்கு முரணானது என்பதனால் Lankajobinfo.com தளம் குறித்த புத்தகத்தை தறவிறக்கம் செய்து பதிவேற்றுவதிலிருந்து தவிந்துகொண்டது.  மாணவர்கள் என்ற வகையிலும் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற வகையிலும் நாட்டின் சட்டத்தையும் அடுத்தவர்களின் உரிமைகளையும் மதிக்கவேண்டும் என்ற அடிப்படையில் புத்தகத்தை உரிய முறையில் பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து உங்களது உயர்கல்விப் பயணத்தை ஆரம்பிப்பது உங்களுக்கு சிறந்ததாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

🔴இந்தப் புத்தகம் 283 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. அந்தப் புத்தக்தில் இருக்கின்ற அனைத்து விடயங்களும் முக்கியமானவை என்பதால் புத்தகத்தை முழுமையாக வாசிக்குமாறு வேண்டிக்கொள்வதுடன் விண்ணப்பித்தல் தொடர்பான முக்கியமான சில விடங்கள் இங்கு குறிப்பிடப்படிகின்றன. நீங்கள் எந்த துறையில் உயர் தரம் படித்த போதிலும் உங்களுக்கு விருப்பமான துறைக்கான பாடநெறிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கான திறன் உங்களிடம் இருக்கும் என்பதாக நம்புகின்றோம். அவ்வாறு இல்லையாயின் பாடநெறிகளைத் தெரிவு செய்துகொள்வதற்காக உங்களுக்கு உயர் தரம் கற்பித்த ஆசிரியர்களின்  உதவியினை நாடிக்கொள்ளுங்கள். 

🔴👉நீங்கள் பாடநெறிகளைத் தொரிவு செய்யும் போது பொறுமதியானதும் தரத்தில் உயர்ந்ததுமான பாடநெறிகள் முதன்மைப்படுத்தப்படல் வேண்டும்.

🔴👉 புத்தகத்தின் 25 ஆவது பக்கத்தில் இருந்து பாடநெறிகள் குறித்த விபரமும் அந்தப் பாடநெறிகள் பயில முடியுமான பல்கலைக்கழகங்களின் விபரமும் தரப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள். 

🔴👉36 ஆம் பக்கத்தில் இருந்து 106 ஆம் பக்கம் நீங்கள் தெரிவு செய்கின்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதாயின் உங்களிடம் இருக்க வேண்டிய தகைமைகள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது உயர் தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களும் சித்தியடைந்திருப்பதுடன் பொதுப்பரீட்சையில் 30 % வீதத்திலும் அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் சில பாடநெறிகளுக்கு இன்னும் சில தகைமைகள் கேட்கப்படுதுண்டு. உதாரணமாக  சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்திற்கு திறமைச் சித்தி இருக்க வேண்டும் அல்லது உயர் தரப் பரீட்சையில் குறிப்பிட்ட ஒரு துறையில் குறிப்பிட்ட ஒரு பாடத்தை எடுத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில மேலதிகத் தகைமைகள் கேட்கப்படும்.  இந்தப் பகுதியில் உங்களது தகைமைக்குப் பொறுத்தமான பாடநெறிகளுக்கு பென்சில் ஒன்றினால் சரி அடையாளம் இட்டுக்கொள்ளுங்கள்.  

🔴👉 கலைப் பிரிவில் அதிக அளவான பாடங்கள் இருப்பதனால் அவைகள் 4 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு குறித்த பல்கலைக்கழக பாடநெறிகளுக்காக உயர் தரத்தில் இந்தப் பாடங்கள் கட்டாயமாக செய்திருக்க வேண்டும் என்தாக குறிப்பிடப்பட்டிருக்கும். 36 ஆம் பக்கம் தொடக்கம் 46 ஆம் பக்கம் வரையில் கலைப் பிரிவிற்கான படங்களைப் பயின்றவர்களுக்கு தெரிவு செய்யமுடியுமான பாடநெறி விபரங்கள் தரப்பட்டுள்ளன. 

🔴👉 இப்போது நீங்கள் ✔  அடையளம் இட்டுள்ள பாடநெறிகளை உங்களது விருப்பத்திற்கு அமைய வரிசைப்கடுத்தி ஒழுங்கபடுத்திக்கொள்ள வேண்டும். அதாவது அதிக விருப்பம் உள்ள பாடங்கள் முதலாவது அதை விட குறைந்த விருப்பமுள்ள பாடநெறிகள் அதற்கு அடுத்தும் என ஒழுங்கு முறையாக எழுதிக்கொள்ளுங்கள். அதனுடன்   uni code குறியீட்டையும் இணைக்கவேண்டும். 

🔴👉137 ஆம் பக்கத்திலிருந்து  unicode  பட்டியல் தரப்பட்டிருக்கும். நீங்கள் 36 ஆம் பக்கத்திலிருந்து பாடநெறிகளைத் தெரிவு செய்து  ✔ அடையாளமிட்ட அனைத்து பாடநெறிகளும் பட்டியல் படுத்தப்பட்டு அந்த பாடநெறியின் எதிரில்  அதற்கான unicode  களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

🔴👉 இந்த பகுதியிலும் நீங்கள் ஆரம்பத்தில் தெரிவு செய்த பாடநெறிகளை ✔ இட்டுக்கொள்ளலாம். இந்தப் பகுதியல் இருந்து தான் நீங்கள் பாடநெறிகளை உங்களது விருப்பத்திற்கு அமைய வரிசைப் படுத்தப் போகின்றீர்கள்.  

🔴👉 வரிசைப்படுத்துவது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகின்றேன். நீங்கள் 20 பாடநெறிகளை தெரிவு செய்து விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு ஓரளவு விருப்பமான பாடநெறி ஒன்றை  3 வதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அத்துடன் உங்களுக்கு மிக மிக விருப்பமான பாடநெறியினை 15 வதாக குறிப்பிட்டுள்ளீர்கள் என எடுத்துக்கொள்வோம். இனி பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு உங்களுக்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் போது ஒன'றுலுரஞந'தஞ கீழ' நோக்கியே பரிசீலிக்கும். அந்த வகையில் உங்களது பட்டியலில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பாடநெறி தெரிவாகுமானால் அதன் பின்னர் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தப் பாடநெறியும் அதன் பின்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு முன்னர் குறிப்பிட்டிருக்கும் பாடநெறிகளே உங்களுக்கு விருப்பமான பாடநெறழகளாக கருதப்படும்.  எனவே 15 வது குறிப்பிட்டிருக்கும் பாடநெறி உங்களுக்கு கிடைக்காமல் போகலம்.

🔴👉எனவே நீங்கள் இதுவரை  ✔ அடையாளமிட்ட பாடநெறிகளை ஒரு தாளில் 1,2,3,4  என உங்களது விருப்பத்திற்கு அமைய வரிசைப்படுத்தவும். அத்துடன் பாடநெறிகளுக்கு முன்னால் அதற்கான unicode இனைக் குறிப்பிடவும். 

🔴👉 36 ஆம் பக்கத்திலிருந்து நீங்கள் வாசித்துக் கொண்டு செல்லும் போது சில பாடநெறிகளுக்காக தகுதிகாண் பரீட்சை (Aptitude Test) இற்கு விண்ணப்பித்து அந்தப் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தப் பாடநெறிகளையும் உங்களது தாளில் மேற்படி வரியைில் அடங்கும் விதமாக எழுதிக்கொள்ளுங்கள். 

Aptitude Test என்றால் என்ன? எதற்காக நடாத்தப்படுகின்றது? யாருக்காக நடாத்தப்படுகின்றது? அதன் நடைமுறகைள் என்ன என்பது குறித்த தௌிவினைப் பெற்றுக்கொள்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
 

🔴👉 இந்தப் பாடநெறிகளைத் தெறிவு செய்யும் போது இறுதிப் பகுதியில் தரப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் Z-score புள்ளிகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டாம். அந்த புள்ளிகள் தரப்பட்டிருப்பது ஒரு தகவலுக்காக மாத்திரமே. உதாரணமாக சென்ற வருடம் கூடிய Z-score வெட்டுப்புள்ளியைக் கொண்டிருந்த பாடநெறி இந்த வருடம் குறைந்த Z-score வெட்டுப்புள்ளியைக் கொண்டிருக்கலாம். எனவே சென்ற வருட புள்ளிகளின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான பாடநெறிகளைத் தெரிவு செயவெதால் சில நேரம் நீங்கள் சில பாடநெறிகளை தவறவிடுவீர்கள். உங்களுக்கு 50 பாடநெறிகள் தெரிவு செய்வதற்கு தகைமை இருக்குமானால் அந்த 50 பாடநெறிகளையும் உங்களது விருப்பத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். இங்கு Z-score குறித்து கருத்தில் கொள்ள வேண்டாம்.  
Z-score என்றால் என்ன? அது எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என்ற கட்டுரையை கீளுள்ள லிங்கில் வாசித்து அறிந்துகொள்ளலாம்


🔴👉 இப்போது நீங்கள் வரிசையாக உங்களுக்கு விருப்பமான பாடநெறிகரளை எழுதிக்கொண்டுள்ளீர்கள். அத்துடன் Unicode களையும் எழுதிக்கொள்ள மறந்துவிடவேண்டாம்.  

🔴👉இனி விண்ணப்பிக்க ஆரம்பியங்கள் அதற்கு முன்னர் தகுதிகாண் பரீட்சை (aptitude test) என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

🔴👉 நீங்கள் எழுதி தாளில்  தகுதிகாண் பரீட்சை (aptitude test) எழுத வேண்டும் என்ற அடிப்படையிலான பாடநெறிகளுக்கு சிவப்பு நிறப் பேனையினால் கோடிட்டு குறித்துக்கொள்ளுங்கள். 

தகுதிகாண் பரீட்சையின் (aptitude test) அடிப்படையில் பாடநெறிகளை வழங்குகின்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிவிபரங்களைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.

🔴👉 மெலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகாண் பரீட்சை (aptitude test) தொடர்பான பாடநெறிகள் இங்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்ன்ற போது குறிப்பிடப்படவேண்டும் என்பதுடன் குறித்த பல்கலைக்கழகங்களுக்கும் அந்தப் பாடநெறிகளுக்காக வேறாக விண்ணப்பிக்கவேண்டும்.

.

🔴👉 தகுதிகாண் பரீட்சைகளுக்கான (aptitude test) விண்ணப்பங்கள் தேசிய பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும். குறித்த பல்களைக்கழக இணையத்தளங்களிலும் பார்வையிடலாம். இதுவரையில் விண்ணப்பம் கோரப்பட்ட பாடநெறிகள் மற்றும் பல்ககலக்கழக விபரங்கள் எமது இணையத்தளத்தில் பரிவேற்றப்பட்டுள்ளன. உங்களுக்கு வசிதிக்காக அதனை இங்கு குறிப்பிடுகின்றோம்.

தகுதிகண் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடநெறிகள் மற்றும் விண்ணப்பங்கள்

 

இந்த விண்ணணப்பங்கள் மே 31 ஜூன் 6 என வித்தியாசமான முடிவுத் திகதிகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்லைன் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் தகுதிகாண் பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத்திகதி அமைந்திருப்பதால் அதற்கான விண்ணப்பங்களமைுதல் சமர்ப்பியுங்கள்.


🔴👉 இந்த தகுதிகாண் பாடநெறிகளுக்கு பாடநெறிகளுக்கு பரீட்சைக் கட்டணமாக ஒரு தொகை செலுத்த வேண்டும்.


🔴👉 இனி நீங்கள் குறித்துக்கொண்ட பாடநெறிகளை ONLINE மூலமாக விண்ணப்பிக் வேண்டும்.  

ஒன்லைன் விண்ணப்பிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் குறித்து கீழே உள்ள பதிவினை வாசித்துக்கொள்ளவும்


🔴👉 இந்த விண்ணப்பமானது ஒன்லைன் மூலமும் தபால் மூலமும் என இரண்டு முறைகளில் விண்ணப்பிக்கப்படவேண்டும். பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதால்  Online மூலம் விண்ணப்பது மாத்திரம் போதுமானதாகும். எனினும் பின்னர் இந்த விண்ணப்பத்தை கட்டாயமாக தபாலில் அனுப்ப வேண்டும்.  

இனி விண்ணப்பிப்பதற்கான ஒழுங்கு முறைகள் குறித்து பார்க்கலாம். 


1.பல்கலைக் கழக கையேட்டின் 5 ஆம் பகுதியில் தரப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அடைய  ugc account ஒன்றினை உருவாக்கி விண்ணப்பத்தினைப் பீர்த்தி செய்ய ஆரம்பியுங்கள். 

விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் விடுகின்ற தவறுகள் குறித்து கீழே உள்ள பதிவினையும் வாசித்துக்ெகாள்ளுங்கள் 


2.பூர்த்தி செய்த  application இனை printout எடுத்துக்கொள்ளவும் . .(பூரணப்படுத்தியதன் பின்னர் PDF வடிவில்   download செய்துகொள்ளலாம்.  )

3.print out இல் இரண்டு இடங்களில் உங்களது கையொப்பத்தினை இடவேண்டும்.. 


4.இப்போது நீங்கள்  printout  எடுத்த விண்ணப்பத்தை தௌிவாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். Camscaner எனும் மொபைல் செப்ட்வெயாரைப் பாவித்து உங்களது தொலைபேசியின் மூலமாக ஸ்கேன் செய்துகொள்ளலாம்.  

5.ஸ்கேன் செய்யப்பட்ட படத்ததை அல்லது PDF இனை  [email protected] எனும்  e-mail முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களிடம் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு,  school leaving certificate, கிராம சேவையாளர் சான்றிதழ் என்பன இருந்தால் அவற்னையும் ஸ்கேன் செய்து இதனுடன் அனுப்பி வைக்கலாம். (குறித்த ஆவணங்கள் இல்லை என்றால் தற்கோதைய நிலையில் பிரச்சினை இல்லலை அவணங்களைப் பின்னர் அனுப்பலாம் என்தாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.)


8.அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டதும் உங்களது printout எடுத்த விண்ணப்பத்தை பாடசாலைக்கு எடுத்துச் சென்று அதிபரின் கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிராம சேவையாளரின் சான்றிதழ் பெற வேண்டும்.  

9.அதன் பின்னர் விண்ணப்பிக்கின்ற பாடநெறிகளுக்கு சாதாரண தரப் பரீட்சையின் பாடங'கள் அவசியமானால் உங்களது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறிற்றினை  a4 size  கடிதக்கூண்டில் (envelop) இடுங்கள். 

10. இங்கு நீங்கள்  (envelop) இல் இட வேண்டியது பாடசாலை அதிபர் உறுதி செய்கின்ற பெறுபேற்றுச் சான்றிதழ் மாத்திரமாகும். இந்தப் பெறுபேறுகள் உங்களுக்கு திரும்பக் கிடைக்காது என்பதாக கவலைப்பட வேண்டாம்.  நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவீர்களானால் உங்களது பெறுபேறுகள் குறித்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும். அவ்வாறு தெரிவாகவில்லை எனில் அவை உங்களுக்கு மீண்டும் வீட்டுக்கே அனுப்புவைக்கப்படும்.  

11.நீங்கள் தனிப்பட்ட முறையில் (private) உயர் தரப் பரீட்சை எடுத்திருந்தால் உங்களது school leaving certificate  இனை சமாதான நீதவன் ஒருவரிடம்  (JP) உறுதிப்படத்தல் கையெழுத்தினை வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக மூலப் பிரதியே அனுப்பி வைக்கப்படவேண்டும். மூலப் பிரிதிகள் அனுப்படாமை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம். 

12...unicodes சம்பந்தமான விடங்களை பூர்தி செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்கவும். unicodes பிழையாக இரு்குமானால் குறித்த பாடநெறிக்கான வாய்ப்பினை இழக்க நேரிடும்.

uni codes என்றால் என்ன? uni codes இன் அடிப்படையில் பாடநெறிகளின் தரத்தினை எவ்வாறு அடையாளம் காணம் என்பது குறித்து தனிப்பதிவென்று அடுத்து பதிவிடப்படும்

🔴 121 ஆம் பக்கம் முால் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யும் முறை குறித்து தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது ஏதும் சந்தேகங்கள் அல்லது தௌிவின்மை இருந்தால் 1919 எனும் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து தேெவையைான விளக்கங்களபை் பெற்றுக்கொள்ளலாம். 

உங்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக நுழைவு கிடைக்க வேண்டும் என்பதாக lankajobinfo.com ஊடாக வாழ்த்துகின்றோம்.