இலங்கையில் க.பொ.த (உ/த) சித்தியுடன் உயர் அர சேவைக்கு அதிக அளவிலானவர் உள்வாங்கப்படுகின்ற பதவியாக முகமைத்துவ உத்தியோகத்தர் பதவியைக் குறிப்பிடலாம். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களானது மத்திய அரசி்ன் காரியாலயங்களுக்காகவும் மாகாண சபையின் காரியலயங்களுக்காகவும் வேறு வேறாக விண்ணப்பம் கோரப்படுவதுண்டு. மத்திய அரசின் காரியாலயஙயகளில் சுமார் 3000 வெற்றிடங்கள் வரை வருடாந்தம் உருவாவதுடன் மாகாண சபைகளிலும் மொத்தமாக அதே அளவிலான வெற்றிடங்கள் உருவாகின்றன. இந்த அளவவில் அதிகமான வெற்றிடங்களும் உருவாகுவதுண்டு.
எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு அரச சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பாக முகாமை உத்தியோகத்தர் சேயினைக் குறிப்பிடலாம். குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது.
முகாத்துவ சேவை உத்தியோகத்தர் என்பவர் யார்?
பொதுவாக அனைத்து காரியாலங்களிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் இந்தப் பதவியினரே காணப்படுவர். ஆரம்ப காலங்களில் கசாளர், லிகிதர், தட்டச்சாளர், களஞ்சியசாலைப் பொறுப்பாளர் என்பதாக காரிய பணிகளுக்கு தனித்தனி பதவிகளாக அமைத்து அவற்றுக்கான ஆட்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டளவில் இந்த அனைத்து வேவைகளையும் ஒன்றாக இணைத்து முகாமை உதவியாளர் சேவை என்பதாக சேவைப் பிரமாணக் குறிப்பு மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து கடந்த வருடங்களில் இந்த சேவையின் பெயர் முகாமை சேவை உத்தியோகத்தர் என்பதாக மாற்றியமைக்கப்பட்டது.
முகாமை உத்தியோகத்தர் பதவியில் பதவி உயர்வுகள் என்ன?
முகாமை உத்தியோகத்தர் பதவிகளில் ஆரமப்பத்தில் தரம் III இற்காகவே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பின்னர் 10 வருட சேவைக் காலத்தின் பின்னர் தரம் II இற்கு பதவி உயர்வு பெறுவார்கள் அதனை அடுத்து இன்னும் 10 வருடங்களில் தரம் I இற்கு பதவி உயர்வு பெறுவார்கள்
ஏனைய உயர் பதவிக்கான வாய்ப்புக்கள்
முகாமை உத்தியோகத்தர் உயர் சேவை.
முகாமை உத்தியோகத்தர் சேவையில் 5 வருட சேவைக்காலத்தைப் பூர்தி செய்தவர்கள் முகாமை உத்தியோகத்தர் உயர் சேவை பதவிக்காக விண்ணப்பிக்கலாம். இது முகமை சேவை உத்தியோகத்தர்களை நிர்வகிக்கின்ற ஒரு பதவியாகும். நிர்வாக உத்தியோகத்தர், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் போன்றோர் இந்த சேவையிலிருந்தே நிமனம் பெறுகின்றனர்.
நாடலாவிய சேவைகள் -
நாடலாவிய சேவைகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலமாக 30 வயதுக்குக் குறைந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ஊடாக குறிப்பிட்ட விகிதத்தினர் ஏற்கனவே அர சேவயில் இருப்பவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
முகாமை சேவை பதவியில் இருக்கின்ற ஒருவர் தனது 10 வருட சேவைக் காலத்தினைப் பூர்தி செய்யும் போது , அல்லது 5 வருட சேவைக் காலத்துடன் பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்கும் போது இலங்கை நிர்வாக சேவை, இலங்கைக் கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை வெளிநாட்டு சேவை போன்ற இலங்கையின் அரச சேவையின் அதி உயர் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக இந்த சேவைகளுக்கு 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் அர சேவையில் இருப்பவர்களாயின் இலங்கை வௌிநாட்டு சேவைக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் ஏனைய மூன்று சேழவகளுக்கு 50 வயது வரையானவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வௌிநாட்டு தூதரங்களுக்கான முகாமை உதவியாளர் சேவை
வௌிநாட்டு தூதரங்களுக்கான முகாமை உதவியாளர் சேவைக்காக வருடாந்தம் நடாத்தப்படுகின்ற பேட்டிப் பரீட்சைக்கு முகாமை உதவியாளர் சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் குறித்த பரீட்சையில் சித்தியடையுமிடத்து வௌிநாட்டு தூதரகம் ஒன்றில் 5 வருங்களுக்கு சேவையாற்றலாம். அதன் பின்னர் தான் முன்னர் சேவையாற்றிய அதே பதவிக்கு மீண்டும் இணைக்கப்படுவர். இந்த சேக்காலம் ஓய்வூதியத்துடனான சேவக்காலமாக கருதபப்படும். இவர்கள் செல்கின்ற வௌிநாட்டின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப கொடுப்பனவுகளும் தங்குமிடம் விமானட் டிக்கட் என பல சலுகைகள் வழங்கப்படும்.
இந்த சேவைக்கான வயதெல்லை என்ன?
18 வயதுக்குக் குறையாலும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
முகாமை சேவை உத்தியோகத்தருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்
சம்பளத்திட்டமாக 28,940.00 - 10x300 - 11 x 350 -10 x 560 - 10 x 660 - ரூா 47,990.00 என்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.
ஆரம்ப சம்பளம் 28,940.00
வாழ்க்ைகச் செலவுக் கொடுப்பனவு 7800.00
வேறு கொடுப்பனவு 2500.00
என 39,240 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். இதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.
முகாமை சேவை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்கைமைகள் என்ன?
(அ) கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
அத்துடன்
(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல். பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) பாடங்களில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?
எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் 40 வீதம் புள்ளிகளைப் பெறுவதுடன் இரண்டு பாடங்களிலனதும் புள்ளிகளின் கூட்டுத் தொகை மொத்தப்புள்ளியில் 50% வீத்திலும் அதிகமாக எடுப்பவர்கள் சித்தியடைந்நதவர்களாக கருதப்படுவர்.
அந்த பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்ப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற சனத்தொகைக்கு அமைவாக விகிதாசார அடிப்பயைடலி ஆட்கள் சேர்துக்கொள்ளப்படுவர்.
குறிப்பு; இங்கு இரண்டு பாடங்களில் 100 புள்ளிகள் பெறுகின்றவர்கள் சித்தியடைந்தவர்களாக கருதப்பட்ட போிலும் சென்ற வருடங்களில் நடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்வர்களின் ஆகக் குநை்த மொத்தப் புள்ளி 160 என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் ஒரு பாடத்தில் 80க்கும் அதிகமான பள்ளிகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு
01) மொழியாற்றல் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்.
இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின்
பரீட்சார்த்தியின் கருத்துக்களை வெளியிடுதல்,
கிரகித்தல்,
எழுத்துக்களின் பிரயோகம்,
மொழியும் மற்றும் கட்டுரையும்,
கொடுக்கப்பட்ட கடிதம் ஒன்றுக்கான பரும்படியத் தயாரித்தல்,
கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப வரைபுகளையும் அட்டவணைகளையும் தயாரித்தல்,
கொடுக்கப்பட்ட பந்தியை சுருக்கி எழுதுதல்,
கொடுக்கப்பட்டுள்ள பல வாக்கியங்களின் கருத்தை தனி வாக்கியமாக
எழுதுதல்,
எளிய இலக்கணப் பயன்பாடு
தொடர்பான அறிவைப் பரீட்சிப்பதற்கான விடயம் சார்ந்த வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்
02) உளச்சார்பு.-
இந்த வினாப்பத்திரம் விண்ணப்பதாரிகளின்
கணக்குத்திறன்,
தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல்,
பொதுவான நுண்ணறிவு
போன்றவற்றை அளவிடும் விதத்தில் விடயம் சார்ந்த கேள்விகளைக் கொண்டிருக்கும். பல்தேர்வு மற்றும் சுருக்க விடை வகையிலான 50 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும். குறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல
வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
1 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
நேர்முகப் பரீட்சை
மேற்படி பரீட்சையில் சித்தியடைகின்றவர்களின் கல்வித் தகைமைகளைப் சான்றிதழ்கள் ஊடாக உறுதி செய்து கொள்வதற்காக நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். நேர்முகப் பரீட்சைக்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை
நேர்முகப் பரீட்சையில் தெரிவாகின்றவர்கள்ள நேரடியாக வெற்றிடங்கள் காணப்படுகின்ற காரியாலயங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுவர். அவர் இணைத்துக்கொள்ளப்பட்டு 3 மாத காலங்களுக்குள் அவர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வென்றின் ஊடாக அவர்களது கடமை என்ன என்பது குறித்து பயிற்சி வழங்கப்படும்.
இறுதியாக.
அரசாங்க பதிவிகளைப் பொறுத்தவரையல் ஆரம்ப மட்டப் பதவிகள்தான் அரசாங்க சேவையில் கால் பதிப்பதற்கான சிறந்த தெரிகும். நீங்கள் இந்த சேவைக்காக கல்வித் தகைமைகளைப் பெற்றவர்களாயின் இந்த சேவைக்கான பரீட்சைக்கான ஆயத்தங்களை இப்பொழுதே மேற்கொள்ள ஆரம்பியுங்கள். கல்வித் தகைமை இல்லாதவர்கள் கல்வித் தகைமைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடந்த வருடத்துக்கான பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு முடிந்துவிட்டன. அதற்கான பரீட்சைகள் கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டுவிட்டன. எப்படியும் அதன் பின்னர் இந்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படலாம். அத்துடன் 9 மாகாண சபைகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அடிக்கடி இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. சிறிய பதவி என்பதற்காக விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டும். இந்தப் பதவியில் இணைந்து உங்களது உயர் கல்வித் தகைமைகளையும் அமைத்துக் கொண்டு உயர் பதவிகளுக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.