தேசிய தொழில் தகைமை NVQ என்றால் என்ன என்பது குறித்து முன்னைய பதிவில் ஆராய்ந்தோம். தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் பெறுகின்ற NVQ சான்றிதழ் துணை புரிகின்றது என்பதனை நீங்கள் அறிந்திருப்பீர்கள். முன்னைய பதிவை வாசிக்காதவர்கள் கீழே குறிப்பிடும் லிங்கில் சென்று அந்தப் பதிவினை வாசித்து விட்டு இந்தப் பதிவை வாசிப்பது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
NVQ சான்றிதழ் ஒன்றினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் ? NVQ சான்றிதழுக்கான மட்டங்கள என்ன? NVQ சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான பயில வேண்டிய பாடநெறிகள் என்ன? எ அந்தப் பாடநெறிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் என்ன? என்ற அடிப்படையில் பல விதமான ஐயங்கள் பல மாணவர்களிடமும் காணப்படுவதனை அறியமுடிகின்றது. அந்த ஐயங்களுக்கு தௌிவிளை வழங்கும் அடிப்படையில் இந்தப் பதிவவினை lankajobinfo.com தளம் உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றது.
தேசிய தெழில் தகைமைக் கட்டமைப்பானது NVQ Level 1 முதல் 7 என்ற அடிப்படையில் 7 மட்டங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. எந்தவிதமான தொழில் அனுபவுமோ அல்லது இணவைதற்காக குறிப்பிடப்படுகின்ற கல்வித் தகைமைகளோ இல்லாத வர்கள் NVQ Level 1 ஆவது மட்டத்திலிருந்து தொழில் கல்வியை ஆரம்பிக்கலாம். அத்துடன் தொழில் தொடர்பான ஏதும் முன்அனுபவம் இருக்குமாயின் அந்த அனுபவத்தின் தன்மைக்கு அமைய அடுத்தடுத்த மட்டங்களிலிருந்து ஆரம்பித்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
NVQ 1 முதல் 4 (NVQ Level 1 – 4) வரையான பாடநெறிகள்.
NVQ 1 முதல் 4 (NVQ Level 1 – 4) வரையான பாடநெறிகள்.
NVQ Level 1 முதல் 4 வரையான பாடநெறிகள் சான்றிதழ் பாடநெறிகள் என்பதாக அழைக்கப்படும். NVQ Level 1 முதல் 4 வரையான சான்றிதழ் பாடநெறியினைப் பூர்த்திசெய்பவர்களுக்கு குறித்த மட்டத்திற்குரிய தேசிய சான்றிதழைப் (National Certificate) பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு தொழில் அனுபவம் எதுவுமே இல்லையாயின் தொழில் திறனுக்கான பாடநெறியினை NVQ Level 1 இலிருந்தே ஆரம்பிக்கலாம். அத்துடன் ஏதேனும் உரிய தகைமைகள் இருக்குமாயின் NVQ Level 4 இல் நேரடியாகவே பாடநெறிகளை ஆரம்பிக்கலாம். NVQ Level 4 தரத்திலான பாடநெறிகளை நேரடியாகவே பயல்வதற்கு தேவையா உரிய தகைமைகள் குறித்த பாடநெறியினை வழங்குகின்ற நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபட்டதாக காணப்படுவதுண்டு. இந்த மட்டத்திலான பாடநெறிகள் பொதுவாக 6 மாத கால அளவு கற்றல் நடவடிக்கையினைக் கொண்டதாகவும் மேலும் 6 மாதங்கள் குறித்த கற்கை தொடர்பான பயிற்சி பெறுவதாகவும் அமையும். சில பாடநெறிகளைப் பெறுத்தவரையில் இந்த கால அளவு மாறுபட்டதாக அமையலாம்.
NVQ Level 1 முதல் 4 வரையான மட்டங்கள் திறன்களின் அடிப்படையில் கீழ்குறிப்பிடுகின்ற விதத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.
1 வது மட்டம் (NVQ Level 1 ) - அடிப்படை அல்லது ஆரம்பத் தேர்ச்சியுடன் செயலாற்றுபவர்கள்
2 வது மட்டம் (NVQ Level 2 ) - தொடரான மேற்பார்வையின் கீழ் செயலாற்றும் திறன் உடையவர்கள்.
3 வது மட்டம் (NVQ Level 3 ) - ஓரளவு மேற்பார்வையின் கீழ் செயலாற்றும் திறன் உடையவர்கள்.
இந்த மட்டங்களுக்கான பாடநெறிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் இலங்கை பூராவும் வியாபித்துக் காணப்படுகின்றதன. தொழிற் பயிற்சி அதிகார சபை (VTA) தொழிநுட்பக் கல்லூரி (Technical College) இளைஞர்கள் சேவை மன்றம் (NYSE) தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) போன்ற அரச நிறுவனங்களும் அதற்கு மேலதிகமாக தனியார் நிறுவனங்களும் நாடுபூராவும் மேற்படி பாடநெறிகளை வழங்குகின்றன.
NVQ Level 5 பாடநெறிகள்.
இந்த மட்டத்திலான பாடநெறிகள் பயின்றவர்கள் மேற்பார்வையாளர்கள் எனும் தரத்திலானவர்களாக கருதப்படுகின்றனர். NVQ 5 மட்டத்தினை பூர்த்திசெய்பவர்கள் தேசிய டிப்லோமாவினைப் (National Diploma) பெற்றுக்கொள்ளலாம். இந்த மட்டத்திலான பாடநெறிகளிலிருந்து மேற்பாட்வையாளர்கள் (Supervisors) உருவாகின்றனர். யாரேனும் ஒருவரர் 5 ஆம் மட்டத்திலான பாடநெறிகளை பயில வேண்டுமாயின் அவர் NVQ Level 3 அல்லது NVQ Level 4 சான்றிதழ் ஒன்றினைப் பெற்றிருக்கவேண்டும். சில NVQ Level 5 பாடநெறிகளுக்காக உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பாடநெறியில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த மட்டத்திலுள்ள பாடநெறி ஒன்றினை பூர்த்திசெய்வதற்கு ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரையில் காலம் பயில வேண்டி ஏற்படுவதுண்டு. NVQ 5 மட்டத்திலான பாடநெறிகள் மாகாணத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைந்துள்ள தொழிநுட்ப கல்லூரிகள் மற்றும் நாடுமுழுவதும் காணப்படுகின்ற பல்கலைக்கழக கல்லூரிகள் (College of Technology) மற்றும் விவசாயக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களில் காணப்படுகின்றன.
NVQ Level 6 பாடநெறிகள்.
இந்த மட்டத்திலான பாடநெறிகள் உயர் தேசிய டிப்லோமா பாடநெறிகள் என்பதாக வகைப்படுத்தப்படுகின்றது. NVQ 6 எனும் மட்டத்தினை பூர்த்திசெய்பவர்களுக்கு உயர் தேசிய டிப்லோமாவினைப் (Higher National Diploma) பெற்றுக்கொள்ளலாம். இந்த பாடநெறியின் ஊடாக வௌியாகின்றவர்க முகாமையாளர்களாக (Managers) தகுதியை உடையவர்களாகின்றனர். NVQ 6 பயில்வதற்காக NVQ Level 5 மட்டத்திற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சில வேளைகளில் NVQ 5 மற்றும் 6 ஆம் மட்டங்கள் இரண்டையுமே ஒரே நிறுவனத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் பெற்றுக்கொள்ளலாம். NVQ 6மட்டத்திலான பாடநெறிகள் மாகாணத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைந்துள்ள தொழிநுட்ப கல்லூரிகள், நாடுமுழுவதும் காணப்படுகின்ற பல்கலைக்கழக கல்லூரிகள் (College of Technology) மற்றும் விவசாயக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களில் காணப்படுகின்றன.
NVQ Level 7 பாடநெறிகள்.
இந்த மட்டமானது பட்டப்படிப்பிற்கு சமமானதாக கருதப்படுகின்றது. இது தீர்மானம் எடுப்பதற்கு தகுதியானவர்களை உருவாக்கும் மட்டமாகக் கருதப்படுகின்றது. NVQ 7 மடத்திலான பாடநெறியினை பூர்த்திசெய்பவர்கள் தொழிநுட்ப பட்டம் (Bachelor of Technology) ஒன்றினைப் பெற்றுக்கொள்ளாலாம். இந்த மட்டத்தினைப் பூர்த்தி செய்பவர்கள் திட்டமிடல் திறமை கொண்டவர்காளக இருப்பார்கள் என்பதாக கருதப்படுவர் (Decision makers). இந்த தொழிநுட்ப பட்டத்தினைப் இரத்மலானையில் அமைந்துள்ள வாழ்க்கைத் தொழில் தெழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (univotec campus) பெற்றுக்கொள்ளலாம், NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருப்பது இந்தப் பாடநெறிகளுக்கு பதிவு செய்வதற்கு போதுமான தகைமையாகும். இந்த பாடநெறிகளுக்கு பதிவு செய்துகொள்வதற்காக NVQ Level 6 சித்திதயடைந்திருப்பது அவசியமில்லை. இந்த பட்டப்படிப்பு பாடநெறி 3 ஆண்டுகள் கால அளவினைக் கொண்டதாக இருக்கும்.
தற்போதளவில் இந்த NVQ சான்றிதழானது தகவல்-தொடர்பாடல் தொழிநுட்பம், மின்னியல் மற்றும் இலத்திரனியல், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, ஆடை உற்பத்தி, கட்டட நிர்மாணம், உற்பத்தி தொழில்நுட்பம், உயிரியல், ஒப்பனை அலங்காரம், சினிமாவும் கலையும், முகாமைத்துவம், இயந்திரவியல் தொழிநுட்பம், சுற்றுலாத்துறை என பல்வேறுபட்ட துறைகளுக்காக வழங்கப்படுகின்றது. சில அரச நிறுவனங்கள் இந்தப் பாடநெறிகளைப் பயில்கின்ற மாணவர்களுக்காக பலவிதமான சலுகைகளை வழங்குகின்றது. தெழில்பயிற்சி அதிகாரசபை சில பாடநெறிகளை இலவசமாகவே வழங்குகின்றது. சில பாடநெறிகளுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது. தொழில்நுட்பக்கல்வி மற்றும் பயிற்சிகளுக்கான திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற தொழிநுட்ப கல்லூரிகளில் முழுநேரப் பாடநெறிகள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன. குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்காக கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது.
NVQ பாடநெறிகள் வழங்கப்படுகின்ற துறைகள்
*Information Communication and Multimedia Technology * Building and Construction * Automobile Repair and Maintenance * Electrical, Electronics and Telecommunication * Textile and Garments * Finance Banking and Management * Metal and Light Engineering * Languages * Personal and Community Development * Hotel and Tourism * Teacher Training * Human Resources Management * Wood Related * Office Management * Art Design and Media (Visual & Performing) * Refrigeration and Air Conditioning * Aviation, Aeronautics, Marine and Navigation * Food Technology * Medical and Health Science * Printing and Packaging * Agriculture Plantation and Livestock * Gem and Jewellery * Leather and Footwear
NVQ பாடநெறிகள் நடாத்துகின்ற நிறுவனங்கள்.
பல்வேறுவகையான நிறுவனங்கள் வழங்குகின்ற பல்வேறுவகையான பாடநெறிகள் குறித்த விபரங்களை அந்தந்த நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளலாம். குறித்த நிறுவனங்களின் இணையத்தளத்திலும் போதுமான தகவல்கள் காணப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள NVQ பாடநெறி விபரங்களை கீழ்க்குறிப்பிடும் லிங்கின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.. பாடநெறி குறிறித்த முழு விபரங்கள் தரப்பட்டுள்ளன.
01. கொரியன் டெக் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பாடநெறிகள்.
டிசம்பர் 15 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன விண்ணப்ப முடிவுத் திகதி குறிப்பிடப்படவில்லை
03. NAITA (தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ) பயிற்சி நிறுவனத்தின் பாடநெறிகள்.
வருடத்தின் அனைத்து காலப்பகுதியிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. உங்களுக்கான மாவட்டத்தில் காணப்படுகின்ற 100 க்கும் அதிகமான பாடநெறிகள் விபரம் கிழ்க்குறிப்பிடும் லிங்கில் தரப்படுகின்றது.
04. SLIAT - இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம்.
இந்த நிறுவனத்தின் இலவசப் பாடநெறிகளுக்கான விண்ணப்பம் பொதுவாக ஜனவரி மாதங்களில் கோரப்படுகின்றன குறித்த நிறுவனத்தில் காணப்படுகின்ற பாடநெறிகள் தொடர்பான விளக்கத்தினை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்.
மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களில் பாடநெறிகள் தொடர்பான விபரங்களையும் நிறுவனங்கள் தொடர்பான விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் உங்களது எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாக உங்களுக்கு பொறுத்தமான பாடநெறிகளையும் தெரிவு செய்துகொள்ளலாம். NVQ எனும் துறை பிரபல்யம் பெற்றிருப்பதுடன் பலரும் இந்தப் பாடநெறிகளைப் பயில்வதற்கு முன்வருவதன் காரணமாக போலியான பல நிறுவனங்களும் பாடநெறிகளை நடாத்திவருகின்றன. எனவே பாடநெறியினை ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனம் மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றதா என்பதனை பரிசோததித்துக்கொள்ளுங்கள்.