தகவல் தொழிநுட்ப துறை என்பது இன்றைய உலகில் பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது. அதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வகையான தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கணனித் துறையில் தமது உயர்கல்வியினை தொடர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கணனித்துறையில் பிரவேசிக்க எண்ணமுள்ளவர்கள் அந்தத்துறையில் பட்டப்படிப்புத் தரத்திலான பாடநெறி ஒன்றினைப் பயில்வது அவர்களது உயர் கல்விக்கான தேவையையும் தொழில்கல்விக்கான தேவையையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள உதவியாக அமையும். அத்துடன் கணனித்துறையின் பட்டம் ஒன்றினைப் பெற்றிருப்பது அந்தத்துறையில் உயர்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உதவியாக அமையும்.
அந்த வகையில் தகவல்தொழில்நுட்ப பாடநெறிகள் குறித்தும் அதனை வழங்குகின்ற நிறுவனங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கஇருக்கின்றோம்.
University of Vocational Technology
இலங்கை வாழ்க்கைதொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தின் ஊடாக
Bachelor of Technology in Network Technology
Bachelor of Technology in Multimedia & Web Technology
Bachelor of Technology in Software Technology
என்ற அடிப்படையல் 3 வகையான பகுதி நேர (Part Time) பட்டதாரிப் பாடநெறிகளை வழங்குகப்படுகின்றது. இந்தப் பாடநெறிகளுக்காக சனி ஞாயிறுகளில் வகுப்புக்கள் நடாத்ப்படும். எனவே தொழில் ஒன்றில் ஈடுபட்டுள்ளவர்களும் தமது விடுமுறை தினங்களைப் பயன்படுத்தி இந்தப் பாடநெறியினைப் பயிலலாம்.
இந்த பாடநெறிக்காக பதிவு செய்வதற்கு (NVQ 5) அல்லது அதற்குச் சமமான தகைமை இருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பு http://www.univotec.ac.lk/ இணையதளத்தில் அல்லது 0112630700 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
NVQ என்றால் என்ன? என்ற எமது முன்னைய பதிவில் NVQ தரங்கள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது. பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பாடசாலையின் ஊடாக Bachelor of Information Technology (BIT) வௌிவாரிப் பட்டப்படிப்பு பாடநெறி நடாத்தப்படுகின்றது. க.பொ.த (உ/த) பரீட்சையின் எநத்தவெரு பிரிவிலும் 3 சித்திகளைப் பெற்றவர்கள் இந்த பாடநெறிக்காக விண்ணப்பிக்கலாம்.
உயர் தரப் பரீட்சையில் 3 சித்திகள் இல்லையாயின் இந்த நிறுவனம் வழங்குகின்ற (FIT -Foundation In Information Technology ) எனும் ஆரம்ப நிலைப் பாடநெறியினைப் பயின்று அடுத்ததாக (BIT) பாடநெறிக்காக பதிவு செய்துகொள்ளலாம்,. பல்கலைக்கழகம் உயர் தரத்திற்கு சமமானது என்பதாக ஏற்றுக்கொள்கின்ற தகைமைகளுடனும் இந்த பாடநெறிக்கு பதிவு செய்துகொள்ளலாம்.
3 வருடம் கொண்ட இந்த பாடநெறியின் முதலாவது வருடத்தை பூர்த்திசெய்யும் போது (Diploma in Information Technology - DIT) எனும் டிப்லோமா சான்றிதழையும் இரண்டு வருடம் பூர்த்திசெய்யும் போது (Higher Diploma in Information Technology - HDIT) எனும் உயர் டிப்லோமாவையும் மூன்றாவது வருட முடிவில் BIT எனும் பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பாடநெறி தொடர்பான விபரங்களை http://www.bit.lk/ எனும் இணையத்தளம் ஊடாக அல்லது 0114720511 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கை தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் அதன் பாடநெறிகள் குறித்த விளக்கம்
மொறட்டுவை பல்கலைக்கழகத்தினாலும் Bachelor of Information Technology (BIT) எனும் வௌிவாரிப் பட்டப்படிப்புப் பாடநெறி நடாத்தப்படுகின்றது. இந்தப் பாடநெறிக்காகவும் உயர் தரத்தில் ஏதாவது ஒரு பரிவில் 3 பாடங்களும் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் உயர்தரத்திற்கு சமமான தகைமைகள் அல்லது தொழில் தகைமை ஊடாக இந்த பாடநெறியில் இணையலாம். இந்தப் பாடநெறி தொடரபான விபரங்களை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான சில பாடநெறிகள் காணப்படுகின்றன. இந்தப் பட்டமானது உள்வாரியான பட்டமாக இருப்பது இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் சிறப்பம்சமாகும்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தினால்
• Bachelor of Technology - Computer Engineering • Bachelor of Software Engineering
எனும் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன. இந்தப் பாடநெறிகளுக்கு பதிவு செய்வதற்காக குறித்த பாட ங்களில் க.பொ.த உயர் தரம் சித்தியடைந்திருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்கின்ற தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் திறந்த பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞான பீடத்தினால் நடாத்தப்படுகின்ற விஞ்ஞான பட்டப்படிப்பு (Bachelor of Science) பாடநெறியில் மற்றைய இரண்டு பாடங்களுடன் கணனி விஞ்ஞானத்தை ஒரு பாடமாக பயிலலாம். இந்த பாடநெறியில் பதிவு செய்வதற்காக விஞ்ஞானப் பிரிவில் உயர் தரம் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்த பாடநெறியின் ஊடாக கணனிக்கான பட்டப்படிப்பு என்பதாக சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விஞ்ஞான பட்டப்படிப்பு என்பதாகவே சான்றிதழ் வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற விரிவுறைகள் மற்றும் செயற்பாட்டுப் பயிற்சி என்பவற்றில் பங்குகொல்ல முடியம் என்பது திறந்த பல்கலைக்கழக பாடநெறிகளில் காணப்படுக்னிற முக்கிய அம்சமாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ou.ac.lk/ எனும் இணைய முகவரியில் அல்லது 0112 881000 எனும் தொலைபேசி இலக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி படநெறிகள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றுக்கொள்ள முடியுமானவைகளாகும். மேற்குறிப்பிட்ட இணையத்தள முகவிரகளுக்கு செல்வதள் ஊடாக பாடநெறிகளின் விபரங்களையும் அது தொடர்பான கைநூல்களையும் பெற்றுக்கொள்ளலாம். தொழில் இல்லாதவர்கள் கூட இந்த பாடநெறியினைப் பயின்று உயர் பதவிகளுக்கு செல்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.