>

ad

Things To Do Before Applying university Online (Sri Lanka) 2022





அறிமுகம்

2021 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) மாணவர்கள் பல்கலைக்கழக பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான திகதிகள் குறிக்கப்பட்டு பல்கலைக்கழக கையேடு வௌியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் 2022.09.23 ஆம் திகதி வரை ஏற்பக்கடும் என்பதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. எனவே பொறுமையாக உங்களது விண்ணப்பிக்கும் செயன்முறைகளை ஆரம்பியுங்கள் அதற்கு உதவியாக lankajobinfo.com இணையத்தளம்  சில விடங்களை உங்களுக்காகத் தொகுத்துத் தருகின்றது.


விண்ணப்பிப்பதற்கு போதுமான தகைமை உள்ளதா என்பதை சரிபார்த்தல்.


  1. இலங்கையில் ஒருவர் 3 முறைகள் மாத்திரமே உயர்தர பரீட்சை எழுதலாம். எனவே உங்களது இந்தப் பெறுபேறு மூன்று முறைகளுக்கு மேற்பாடாத அமர்வொன்றில் பெற்றுக்கொண்டதாக இருக்கவேண்டும்.
  2. பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகக் குறைந்த தகைமை உயர்தரப்பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்
  3. அத்துடன் பொதுப் பரீட்சையில் 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்வேண்டும். (இந்தப் பாடத்தில் இந்த முறை போதுமான புள்ளிகளைப் பெறாத போதிலும் சென்ற முறைகளில் 30% மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தால்  விண்ணப்பிக்கத் தகுதி  பெற்றவர்களாகின்றனர்.)
இந்தத் தகைமைகள் உங்களிடம் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு முறை உயர் தர பரீட்சை எழுதுவதற்கான ஆயத்தங்களை இப்போதே ஆரம்பித்துக்கொளுங்கள். (உங்களுக்கான வழிகாட்டல்கள் அடுத்த பதிவுகளில் தரப்படும்)

மேற்படி தகைமையைப் பூர்திசெய்தவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் குறித்து முக்கியமான சில விடயங்கள் கீழே தரப்படுகின்றன. அவற்றைக் கவனமாக வாசித்துவிட்டு விண்ணப்பிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள கையேட்டினைப் பெற்றுக்கொள்ளுதல்.


பல்கலைக்கழக கையேடு என்பது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மிகவும் முக்கியமான ஒரே வழிகாட்டியாகும். உங்களது உயர்கல்விக்கான எதிர்காலமே இந்த கையேடுதான் எனும் அளவுக்கு அது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.  உங்களது விண்ணப்பத்திற்கு அவசியமான அனைத்து தகவல்களும் அத்துடன் அதற்கு தேவையா ஆலோசனைகளும் அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.. இந்த கையேட்டினை PDF வடிவில் பெறுவதை விட அச்சிட்ட ஒன்றினைக் கொள்வனவு செய்துகொளவது வசதியானதாக இருக்கும். 

கையேட்டினைப் பெற்றுக்கொண்டதும் அந்தப் புத்தகத்தை நேரமெடுத்து ஒருமுறை முழுமையாக வாசித்துக்கொள்ளுங்கள். தௌிவில்லாத பகுதிகளை திரும்பத்திரும்ப வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள். 

மிக முக்கியம்-

புத்தகத்தில் 5 வது பகுதி மிக முக்கியமானது. அந்தப் பகுதியில் தான் விண்ணப்பிக்கும் முறை குறித்த விளக்கம் தரப்பட்டிருக்கும். எனவே அந்தப் பகுதியை பல தடைவைகளாவது வாசித்து கிரகித்துக்கொள்ளுங்கள்.

கையேட்டில் இறுதியில் தரப்பட்டிருக்கும் 2019 ஆண்டின் பாடநெறிகளுக்கான Z-Score குறித்த தகவல்கள்


உண்மையில் இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் இந்த வருட விண்ணப்பத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒரு தகவலுக்காக மாத்திரமே இந்தப் பகுதி புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சென்ற வருடத்தின் வெட்டுப்புள்ளிகளின் நிலை என்ன என்பதனை மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக இந்தப் பகதி உங்கள் பார்வைக்கு தரப்பட்டிருக்கலாம். 

 இந்த வருடத்துக்கான  Z-Score புள்ளிகள் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் முடிவடைந்த பின்னரே வௌிவரவிருக்கின்றது. இந்த வருடத்துக்கான புள்ளிகள் சென்ற வருடத்தைப் போன்று அமையப் போவதில்லை. இந்த வருடம் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் வித்தியாசமானதாகவே  Z-Score அமையப்போகின்றது. சிலவேளை சென்ற வருடத்திலும் பார்க்க குறைந்த அளவில் வெட்டுப்புள்ளகள் அமையலாம் என்பதால் சென்ற வருடத்திலும் பார்க்க குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள் உள்வாங்கப்படலாம். எனவே உங்களுக்கு விருப்பமான பாடநெறிகளுக்கு விண்ணப்பியுங்கள். ஒருவர் இத்தனை பாடநெறிகளுக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை உங்களுக்கு எத்தனை பாடநெறிகள் விருப்பமோ அத்தனை பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 125 பாடநெறிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Z-score என்றால் என்ன? அது எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என்பது குறித்த பதிவை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்.


ஒன்லைன் பதிவுக்கான முன்னாயத்தங்களைச் செய்துகொள்ளுதல்


கடந்த வருடங்களில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்கும்போதும் அதன் பின்னரும் நடைமுறைச்சிக்கல்கள் சிலவற்றை சந்திருக்கின்றனர். இந்த வருடம் விண்ணப்பிக்கின்ற மாணவர்கள் அந்த வழமையான சிக்கல்களை எதிர்நோக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளவேண்டி ஆயத்தங்கள் சிலவற்றை உங்களுக்காகத் தருகின்றோம்.

01. கட்டாயமாக Email Address ஒன்றினை இப்போதே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்களது பல்கலைக்கழப் பிரவேசம் அல்லது கல்வியல் கல்லூரி பிரவேசம் என்பன தொடர்பிலான தகவல்கள் அனைத்தும் இந்த E-Mail ஊடாகவே பரிமாற்றப்படுகின்றது. அதிகமான மாணவர்கள் தங்களது E-Mail கணக்கை அடிக்கடி மாற்றுகின்ற பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். சிலருக்கு E Mail கணக்கின் Password மறந்துவிடுவதுண்டு. அவ்வாறு மற்ந்துபோன கடவுச்செல்லை அதனை மீளப்பெற முயற்சிக்கும் போது சிலநேரம் விண்ணப்பதற்கான அல்லது பல்கலைக்கழக பிரவேசத்திற்கான காவைரையறை முடிவடைந்துவிடலாம். எனவே முன்னேற்பாடாக நிரந்தர் E-Mail கணக்கொன்றை உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனது பாஸ்வேர்ட் இனை எழுதியாவது வைத்துக்கொள்ளுங்கள். (பாஸ்வேர்ட் மறந்துபோகுமிடத்து அதனை மீட்பதற்கு அது குறித்து தெரிந்தவர்களது உதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.)

உங்களுக்கான அனைத்து தகவல்களும் E Mail ஊடாகவே கிடைக்கப்பெறும் என்பதனை மறந்துவிடவேண்டாம். மின்னஞ்சலுக்கு அனுப்பப்டும் Verification Link இல்லாமல் அடுத்த செயற்பாடுகளுக்கு (Process ) பிரவேசிக்க முடியாத நிலை ஏற்படலாம். மின்னஞ்சலுக்கு பிரவேசிக்க முடியாமல் போகுமானால் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற பல்கலைக்கழகம் எது என்பதைக் கூட அறிய முடியாலம் போய்விடும்.

எனவே கட்டாயமாக உங்களுக்கான மின்னஞ்சல் ஒன்றினைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.


02. தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கம்.


பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான விண்ணப்பச் சென்முறையில் மின்னஞ்சல் முகவரி போன்றே உங்களது தனிப்பட்ட தொலைபேசி எண் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. உங்களிடம் இருக்கின்ற தொலைபேசியில் #132# எனும் இலக்கத்தினை டயல் செய்து குறித்த இலக்கம் உங்களது பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 

தொலைபேசி இலக்கங்கள் அடுத்தவர்களின் அடையாள அட்டை இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்து சிம் அட்டை தொலைந்துவிட்டால் மீள எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம் என்பதால் உங்களது அடயாள அட்டை இலக்கத்தில் உங்களது பெயரில் தொலைபேசி இலக்கம் இருக்கின்றது என்பதனை உறுதி செய்துகொள்வது மிக முக்கியமானதாகும்.

மாணவர்களுக்கு தொலைபேசி இலக்கம் இல்லையாயின் தந்தை தாய் அல்லது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களின் தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்தலாம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்கிற்கு (Account) பிரவேசிப்பதற்காக ( Log ) உங்களது தொலைபேசிக்கு OTP code அனுப்பி வைக்கப்படும் . இந்த இலக்கத்தை வழங்கும் போதே அந்த கணக்கில் உங்களால் பிரவேசிக்க முடியுமாக அமையும் என்பதனைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடிகளையும் செய்துகொள்ளவும்.

03. பாடநெறிகளைத் தெரிவுசெய்தல்


பாடநெறிகளைத் தெரிவு செய்யும் பேது நீங்கள் உங்களது உயர் தரப் பரீட்சையில் எடுத்த பாடங்களுக்கு பொறுத்தமானவைகளைத் தெரிவு செய்யுங்கள். இந்த தகவல்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான கையேட்டில் தெளிவாகத் தரப்பட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில் உங்களது உயர் தரப் பாடபிரிவுக்கு ஏற்ற படநெறிகளையும் பல்கலைக்கழகங்களையும் வேறாக குறித்துக்கொள்ளுங்கள். அத்துடன் யுனிகோட் மற்றும் கையேட்டில் குறித்த தகவல் உள்ள பக்க எண் என்பவற்கை குறித்த தகவலின் பக்கத்தில் எழுதிக்கொள்ளுங்கள். இவ்வாறு குறித்துக்கொண்ட பாடநெறிகளை விண்ணப்பிக்கும் போது உங்களது விருப்பத்திற்கு அமைய ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிடவும் விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ளவும் வசதியாக அமையும்.


04. தேசிய அடையாள அட்டையினை ஸ்கேன் செய்துகொள்ளல்.

ஒன்லைன் விண்ணப்பம் பூரணப்படுத்தும் போது ஆரம்பத்திலேயே தேசிய அடையாள அட்டையின் ஸ்கேன் பண்ணப்பட்ட பிரதி ஆவணமாக பதிவேற்றம் செய்யவேண்டும். எனவே முன்னதாகவே அதனை ஸ்கேன் செய்து கணனியில் அல்லது பென்ட்ரைவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஸ்கேன் செய்யுமிடத்திலிருந்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுவது பாதுகாப்பாக இருக்கும். தொலைபேசியில் புகைப்படமாகவும் எடுத்துக் பதிவேற்றம் செய்யலாம். தற்போது தொலைபேசி கெமராவைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யக்கூடி அப்லிகேசன்கள் app store இல் கிடைக்கின்றன அவற்றைப் பயன்படுத்தியும் ஸ்கேன் செய்துகொள்ளலாம். தௌிவில்லாத அடையாள அட்டைகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமையும் என்பதால் குறித்த ஆவணம் மிகவும் தௌிவாக இருக்கின்றதா என்பதில் கவனமாக இருந்துகொள்ளுங்கள். 

விண்ணப்பம் பூர்த்தி செய்தல். 


இந்த வருடமும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமே பூர்த்தி செய்ய வேண்டும் எனபதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
அத்துடன் விண்ணப்பம் குறித்து கீழ் வரும் விடயங்களைக் கவனத்தில்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கின்றது. இது குறித்து புத்தகத்தின் 5 வது பகுதியில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  1. ஒன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்களை சரியாக ஒன்லைனில் பூரணப்படுத்தல்வேண்டும்.
  2. விண்ணப்பம் ஆங்கில மொழியில் மாத்திரமே நிரப்பப்படவேண்டும்.
  3. குறித்த விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்தியதன் பின்னர் அதனை பிரின்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  4. குறித்த விண்ணப்பத்தில் உரிய இடத்தில் கையொப்பமிடவேண்டும்.
  5. கையொப்பமிடப்பட்ட பிரதி கருப்பு வௌ்ளை நிறத்தில் ஸ்கேன் செய்யப்படல் வேண்டும்.
  6. ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
  7. அத்துடன் கையொப்பமிட்ட பிரதி தபால் மூலமாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்டல் வேண்டும்.
 இந்த வருடம் 41755 மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்கப்படவிருக்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் பொதுவாக விடுகின்ற தவறுகள் என்ன என்பது குறித்தும் விண்ணப்பத்தினைப் பூர்த்திசெய்வதற்கான சில வழிகட்டல்களுடனும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரையில் மேலே குறிப்பிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி போதுமான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு யாருக்கேனும் பயன்தரும் என்ற நோக்கில் பகிரவேண்டுமானால் இந்த பதிவின் லிங்கின் ஊடாகப் பகிந்துகொள்ளுங்கள். தயவு இசய்து இந்தப் பதிவை அனுமதியின்றி copy பண்ணவேண்டாம். lankajobinfo.com


எமது பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொளள் கீழ் குறிப்பிடும் முகநூல் பக்கம் வட்சப் குழுமங்கள் என்பவற்றுடன் இணைந்திருங்கள்.