ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சானது 2021.05.19 ஆம் திகதி ED/02/29/02/02/06 இலக்கம் கொண்ட சுற்றுநிருபம் ஒன்றினை வௌியிட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பைத் இங்கு தருகின்றோம். சிங்கள மொழியிலான சுற்றுநிருபம் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஒரே இலக்கமிடப்பட்ட 2018.04.09, 2018.05.24, 2020.03.18 , 2020.12.09 ஆகிய தினங்களில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபங்களுக்கு மெலதிகமாக இந்த சுற்றுநிருபம் வௌியிடப்படுகின்றது.
அதற்கமைய 2019.10 23 ஆம் திகதி வரையில் சேவைக்காலம் மற்றும் ஏனைய தகைமைகள் என்பவற்றைக் கருத்தில் கொள்ளப்பட்ட அடிப்படையில் வினைத்திறன் தடை தாண்டல் தொழில் தகைமைகள் என்பவற்றிலிருந்து விடுவித்தாகக் கருதி பதவி உயர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் PSC/EST/7/2/1(11)/2012 இலக்கம் கொண்ட 2020.02.20, 2020.11.11, 2021.04.27 திகதியிடப்பட்ட கடிதங்களுக்கு அமைவாக அடுத்த பதவி உயர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் வினைத்திறன் தடை தாண்டலை நிறைவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 2019.10.23 ஆம் திகதி முதல் 2021.10.22 ஆம் திகதிவரையில் திகதி நீடிக்கப்பட்ட இடைக்கால விதிறைகளுக்கு அமைய குறித்த பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கவேண்டும்.
அதன் அடிப்படையில் மேற்படி நிபந்தனைகளுக்கு அமைய தரம் உயர்வு பெறுகின்ற ஆசிரியர்கள் தான் முன்னர் இருந்த தரத்திற்கு அமைய பூரணப்படுத்தப்படவேண்டி வினைத்திறன் தடை தாண்டல் விபரம் கீழே தரப்படுகின்றது.
அடுத்த பதவி உயர்வுக்கு முன்னர் 1 வது தடை தாண்டல் பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் -
2016.10.23 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 3-1 (ஆ) அல்லது 3-1 (அ) தரத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 2016.10.23 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் கல்வியியல் பட்டத்தின் அடிப்படையில் 2-11 தரத்திற்கு நேரடியாக நியமனம் பெற்றவர்கள் .
அடுத்த பதவி உயர்வுக்கு முன்னர் II வது தடை தாண்டல் பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் -
2015.10.23 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான திகதியொன்றில் செல்லுபடியாகின்ற அடிப்படையில் தரம் 2-11 இற்கு நியமனம்/ அல்லது தரம் உயர்வு பெற்றவர்கள்.
அடுத்த பதவி உயர்வுக்கு முன்னர் III வது தடை தாண்டல் பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் -
2015.10.23 ஆம் திகதி அல்லது அதன் பின்னரான தினம் ஒன்றில் செல்லுபடியாகினற் அடிப்படையில் 2-1 தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவர்கள்.
அதன் அடிப்படையில் 2019.10.23 ஆம் திகதி முதல் 2021.10.22 ஆம் திகதிவரயான காலப்பகுதியில் தங்களது பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்கின்ற ஆசிரியர்கள் பதவி உயர்த்தப்படுகின்ற தரத்திற்கான வினைத்திறன் தடை தாண்டலுடன் பதவி உயர்வுக்கு முந்திய தரத்துக்கான வினைத்திறன் தடை தாண்டலையும் என்ற அடிப்படையில் 2 தடை தாண்டல்களையும் அடுத்த பதவி உயர்வுக்கு முன்னர் பூர்திசெய்யவேண்டும்.
அத்துடன் 2019.10.23 ஆம் திகதி முதல் 2021.10.22 ஆம் திகதி வரை இலங்கை ஆசிரியர் சேவையில் 1 இற்கு தரத்திற்கு பதவி உயர்வு பெறுகிக்றவர்கள் வினைத்திறன் தடை தாண்டல் செயற்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கு மேலும் தரம் உயர்வுகள் இல்லாதபோது அவர்களது சம்பள படியேற்றங்கள் தெடார்ச்சியாக வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் 2021.10.22 ஆம் திகதியின் பின்னர் தரம் உயர்வு திகதி வருகின்ற அனைத்து ஆசிரியர்களும் தமது தரம் உயர்வுகளுக்காக வினைத்திறன் தடை தாண்டலினை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதனை அறியத்தருகின்றேன்.
பீ.கே.எஸ்.சுபோதனி.
மேலதிகச் செயலாளர் ( நிர்வாகம்)
கல்வி அமைச்சின் செயலாளருக்காக.
சிங்கள சுற்றுநிருபம் அன்பு ஜவஹர்ஷா அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து பெறப்பட்டது.