>

ad

அரச பதவி வாய்ப்புக்களும் அவற்றுக்கான சம்பள விபரங்களும்.




அறிமுகம்


அரச சேவையைப் பொறுத்தவரையில்  அனைத்து பதவிகளுக்குமே குறிப்பிட்ட ஒரு கல்வித் தகைமையினை அடிப்படையாக வைத்தே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு குறிப்பிட்ட கல்வித்தகைமையினை பெற்றுக்கொண்டவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களில் குறிப்பிட்ட தொகையினரை நேர்முகப் பரீட்சை ஊடாகவோ அல்லது போட்டிப் பரீட்சை ஊடாகவோ அல்லது இந்த இரண்டு முறைகள் ஊடாகவே சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற பதவிகள் என்ன?  பதவிகளுக்கான தகைமைகள் என்ன? அந்தப் பதவிகளுக்காக வழங்கப்படுகின்ற சம்பளங்கள் என்ன என்பது குறித்த ஓரளவு விளக்கத்தினை இந்தப் பதிவு உங்களுக்கு தரவிருக்கின்றது. அதன் அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கின்ற பதவிக்கான தகைமைகளை அமைத்துக்கொள்வதற்கு இந்தப் பதிவு உதவியாக அமையும். 

அர சேவைகளின் ஒவ்வொரு பதவிக்குமாக தனித்தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு கணப்படுகின்றது. சேவைப் பிரமாணக் குறிப்பில் அந்தப் பதவிக்குரிய அனைத்து விடயங்களும் குறிப்பிடப்பட்டுருக்கும்.  அந்த சேவைப் பரிமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களின் அடிப்படையிலே அனைத்து அரச பதவிகளுக்கும் ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் அமைக்கப்படுகின்றது. 

அரச சேயைின் பிரிவுகள்


பொதுவாக அரச சேவையின் அனைத்து விதமான பதவிகளும் நான்கு பிரிவுகளுக்குள் உள்ளடக்கப்படுகின்றது. இந்த 4 விதமான வேகளும் சம்பளம், கல்வித் தகைமை, சேவையின் தன்மை  என்பவற்றின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றது. 

  1. ஆரம்ப மட்ட சேவை 
  2. இரண்டாம் மட்ட சேவை
  3. மூன்றாம் மட்ட சேவை
  4. நிர்வாக மட்ட சேவை 

ஆரம்ப மட்ட சேவை-


அலுவலக ஊழியர்கள், சிற்றூழியர்கள், சாரதிகள், என ஆரம்ப மட்டத்தில் பல விதமான பதவிகள் காணப்படுகின்றன. இந்தப் பதவிகளுக்கான  03/2016 இலக்க சம்பளத்திட்டத்திற்கு அமைய  PL என ஆரம்பிக்கும் சம்பளத்திட்டம் வழங்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் இவர்களது ஆரம்ப சம்பளமாக  24250/= என்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் இவர்களது உச்ச சம்பள அளவாக 38990 எனும் சம்பள அளவு குறிப்பிடப்படுகின்றது. 
  • தொலைபேசி இயக்குநர்
  • ஆவணப் பொறுப்பாளர்
  • புத்தகம் கட்டுநர்
  • நகல் பிரதி பொறி இயக்குநர்
  • ‍படப் பிரதி பொறி இயக்குநர்
  • என்ற அடிப்படையில் பொதுவான பதவிகள் இந்த சேவையில் இணைபவர்களுக்காக வழங்கப்படுகின்றன.

இந்தப் பதவிகளுக்காக 

  • விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதினை விட மேற்படாதிருத்தலும் வேண்டும் என்பதோடு இலங்கை பிரஜையாகவும் இருத்தல் வேண்டும்
  • க.பொ.த சா/தர பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத தவணைகளில் 06 பாடங்களில் 02 திறமைச் சித்திகளுடன் சித்தியெய்திருத்தல் வேண்டும்
என்பதாக சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்துடன் சாரதிப் பதிவக்கு விண்ணப்பிப்பதற்காக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் மற்றும் விவசாயத் திணைக்ளம், விலங்குகள் உற்பத்தித் திணைக்ளம் போன்றவற்றில் நிலவுக்கின்ற சில பதவிகளுக்காக விசேட தகைமைகள் சில எதிர்பார்க்கப்டுவதுண்டும்.

இந்தப் பதவிகளுக்காக தெரிவு செய்யும் போது எழுத்து மூலப் பரீட்சைகள் நடாத்தப்படுவதில்லை, அதிகமான பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சையில் சில பொது அறிவு வினாக்களைக் கேட்டுப் புள்ளி வழங்குதல் மற்றும் கல்வித் தகைமை, ஏனைய தகைமைகளுக்காகப் புள்ளி வழங்குதல் என்ற அடிப்படையில் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்தப் பதவிகளுக்கான விளம்பரங்கள் பத்திரிகை ஊடாகவே பெரும்பாலும் விளப்பரப்படுத்தப்படுகின்றன.

இரண்டாம் நிலை சேவை


அரச நிர்வாக சுற்றறிக்கை 3/2016 இன் அடிப்படையில் MN-1 முதல்  MN-04 வரையான சம்பளத்திட்டத்திற்கான பதவிகள் இந்தப் பிரிவில் அடங்குகின்றன. MN-1 முதல்  MN-04 வரையான சம்பள அளவு கொண்ட பதவிகளுக்கான சம்பளங்களின் அளவில் வேறுபாடுகள் காணப்படுவதுடன் அந்த சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான கல்வித் தரங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

சம்பளக் குறியீடுகள் சம்பளம் வழங்கும் முறைகள் என்பன குறித்த விளக்கத்தினை கீழ் குறிப்பிடும் லிங்கில் உள்ள கட்டுரை மூலமாக விளங்கிக் கொள்ளலாம்

MN-1 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


இந்த சம்பளக் குறியீட்டுக்கான பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும் போது போட்டிப் பரீட்சை ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டும். 

இந்தப் பதவிக்காக கல்வித் தகைமையாக க.பொ.த (சா/த) பரீ்சையில் கணிதம் மற்றும் மொழிக்காக சிறமைச் சித்தியுடன் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். +

அத்துடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடப்படுகின்றது. 

விவசாய பரிசோதனை உதவியார், விவசாய உத்தியோகத்தர், சமூர்தி உத்தியோகத்தர் போன்ற பதவியினர் இந்தப் பரிவில் உள்ளடங்குகின்றனர். 

இந்தப் பதவியனர்களுக்கான சம்பளம் 27,140 எனும் தெகையில் ஆரம்பித்து 45,540 எனும் உச்ச அளவு வரை வழங்கப்படுகின்றது. 

MN-2 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


இந்த சம்பளக் குறியீட்டுக்கான பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும் போது போட்டிப் பரீட்சை ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டும். 

இந்தப் பதவிக்காக கல்வித் தகைமையாக க.பொ.த (சா/த) பரீ்சையில் கணிதம் மற்றும் மொழிக்காக சிறமைச் சித்தியுடன் சாதாரண தரப் பரீட்சையில் 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் ஒரே அமர்வில்  சித்தியடைந்திருக்க வேண்டும். 

அத்துடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் மூன்று பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடப்படுகின்றது. 

முகாமை உதவியாளர்கள், கிரம சேவை உத்தியோகத்தர்கள் போன்ற பதவியினர் இந்தப் பரிவில் உள்ளடங்குகின்றனர். 

முகாமை உதவிளாளர் பதவி குறித்த முழுமையாள விபரம் அடங்கிய விளக்கத்தினை  கீழ் வரும் லிங்கில் பார்வையிடலாம் 

கிரம உத்தியோகத்தர் பதவி குறித்த விபரங்கள்
இந்தப் பதவியனர்களுக்கான சம்பளம் 28,940 எனும் தெகையில் ஆரம்பித்து 47,990 எனும் உச்ச அளவு வரை வழங்கப்படுகின்றது. 

இதற்கு சமாந்தரமாக காணப்படுகின்ற ஆசிரியர் சேவையில் GE 1-2016 எனும் சம்பளத்திட்டத்தில் 3-11 எனும் தரத்திலான ஆசியர்கள் உயர் தர தகைமையுடன் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவர்களது சம்மபளம் 27,740 என்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.  (இது மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் தேட்டப்பகுதிகளுக்கே இவ்வாறன நியமனங்கள் வழங்கப்படுகின்றது.)

ஆசிரியர் பதவிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான தகைமைகள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான முழு விபரம் அடங்கிய கட்டுரை

MN-3 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


இந்த சம்பளக் குறியீட்டுக்கான பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும்  கல்வித் தகைமையாக க.பொ.த (சா/த) பரீ்சையில் கணிதம் மற்றும் மொழிக்காக சிறமைச் சித்தியுடன் சாதாரண தரப் பரீட்சையில் 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் ஒரே அமர்வில்  சித்தியடைந்திருக்க வேண்டும். 
அத்துடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் மூன்று பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக டிப்லோமா அல்லது NVQ 4 - 05 எனும் தரத்திலான கல்வித் தகைமையினைப் பெற்றிருக்க வேண்டும்.  

விவசாய போதனாசிரியர்கள் போன்ற பதவிகள் இந்த தரத்தில் வழங்கப்படுவதுண்டு. 


இந்தப் பதவியனர்களுக்கான சம்பளம் 31,040 எனும் தெகையில் ஆரம்பித்து 57,550 எனும் உச்ச அளவு வரை வழங்கப்படுகின்றது.

இதற்கு சமாந்தரமாக காணப்படுகின்ற ஆசிரியர் சேவையில் GE 1-2016 எனும் சம்பளத்திட்டத்தில் 3 அ எனும் தரத்திலான ஆசியர்கள் உயர் தர தகைமையுடன் ஆசிரியர் கலாசாலையில் பெற்றுக் கொண்ட டிப்லோமா ஒன்றுடன் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.  மேலே குறிப்பிட்ட சம்பள அளவுக்கு கிட்டியதக அமைகின்றது. 

 
MN-4 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 

இந்த சம்பளக் குறியீட்டுக்கான பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும்  கல்வித் தகைமையாக பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும்.   இந்தப் பதவியனர்களுக்கான சம்பளம் 31,490 எனும் தெகையில் ஆரம்பித்து 54,250 எனும் உச்ச அளவு வரை வழங்கப்படுகின்றது.


அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள்.  


இதற்கு சமாந்தரமாக காணப்படுகின்ற ஆசிரியர் சேவையில் பட்டதாரி ஆசிரியர்கள்  GE 2-2016 எனும் சம்பளத்திட்டத்தில் 3 இ எனும் தரத்தில் இணைத்துக்கொள்ளப்டுவர்.  

மூன்றாம் நிலை உத்தியோகத்தர்கள்.



MN-5 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


ஒரு பட்டப் படிப்புடன் குறித்த துறையுடன் தொடர்புடைய அடிப்படையிலான போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலமாக பதவியல் இந்தத் தரத்தில் இருப்பவர்கள்  இணைத்துக்கொள்ளப்படுவார்கள்,

இந்த சம்பளக் குறியீட்டுக்கான பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படும்  கல்வித் தகைமையாக பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும்.   இந்தப் பதவியனர்களுக்கான சம்பளம் 34,605 எனும் தெகையில் ஆரம்பித்து 63,460 எனும் உச்ச அளவு வரை வழங்கப்படுகின்றது.

வௌிக்கள உத்தியோகத்தர்கள், நன்னடத்ததை உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் அதிகாரிகள், என பல பதவிகள் இந்தத் தொகுதியில் காணப்படுகின்றன. 

இதற்கு சமாந்தரமாக காணப்படுகின்ற அதிபர் சேவையில GE 4-2016 எனும் சம்பளத்திட்டத்தில்மேலே குறிப்பிட்ட சம்பள அளவுக்கு கிட்டியதக அமைகின்றது. 

MN-6 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


இவர்கள் MN-5 இலும் பார்க்க சிறிதளவு அதிகமான சம்பளத்தைப் பெறுகின்றவர்கள். சமூர்தி முகாமையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோர் இந்தத் தரத்தில் அடங்குகின்றனர். 

MN-7 சம்பளத் தரத்தினைக் கொண்ட பதவிகள். 


முகாமை உதவியாளர்கள் பதவியில் இருப்பவர்களிலிருந்து நிர்வாக உத்தியோகத்தர் பதவிக்கு இணைக்கப்படுகின்றனர். 

நிர்வாக மட்ட சேவை 


இது அரச சேயைில் உயர் மட்ட சேவையாகும். இவர்களது சம்பள அளவு  SL 1-2016 எனும் சம்பளக் குறியீட்டில் குறிப்பிடப்படுகின்றது. 47,615 ரூபாவில் சம்பளம் ஆரம்பித்து 120,700 வரையில் சம்பளம் வழங்கப்படுகின்றது. 

இலங்கை நிர்வாக சேவை, கணக்காளர் சேவை, இலங்கை கல்வி நிர்வாக வேவை என்ற அடிப்படையில் இந்த தரத்திலானவர்களுக்கான பதவிகள் காணப்படுகின்றன. 

இலங்கை நிர்வாக சேவை குறித்த கட்டுரை 

இலங்கை கல்வி நிர்வாக வேவை குறித்த கட்டுரை 

இலங்கை வௌிநாட்டு சேவை குறித்த கட்டுரை

அரச சேவையில் கல்வித்தரங்களின் அடிப்படையில் பலவிதமான பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அவ்வப்போது கோரப்படுகின்றன. ஏதேனும் பதயினை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அந்தப் பதிவிக்கான தகைமைகளை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். பதவிகளும் அவற்றுக்கான சம்பளங்களும் அடங்கிய சுற்றுநிருபம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அதனைத் தரவிறக்கம் செய்து உங்களுக்குப் பெறுத்தமான பதவிக்கான தகைமைகளை உருவாக்க முயற்சிப்பது உங்களது எதிர்கால இலக்குகளை அடைந்துகொளள் உதவியாக அமையும். 

எமது இணையத்தளம் அரச சேவையின் ஏனைய பதவிகள் குறித்தும் முழு விபரத்தினை உங்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. எனவே இணைந்திருங்கள்.