நான் கல்வியல் கல்லூரிக்கு தெரிவபவதற்கு எனது Z score போதுமானதா என்பதாக பல மாணவர்கள் கேட்கின்றனர்.
கலவ்வியல் கல்லூரிக்கு (Collage of Education) விண்ணப்பிப்பதற்காக காத்திருக்கின்ற மாணவர்கள், அதற்காக அவர்களைத் தயார் படுத்திக்கொள்வதற்காக இந்தக் கட்டுரை உதவியாக அமையப் போகின்றது. எனவே இதனைக் கவனமாக வாசித்து உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுமாறு lankajobinfo.com உங்களை அன்புடன் அழைக்கின்றது.
கல்வியியல் கல்லூரி நுழைவுக்கான கல்வித் தகைமை என்ன?
நீங்கள் உயர் தரப் பரீட்சையில் என்ன பெறுபேறுகளைப் பெற்ற போதிலும்கல்வியல் கல்லூரிக்கு பிரவேசமானது உயர் தரப் பரீட்சையின் பெறுபேறு மத்திரம் வைத்து தீர்மானுக்கப்படுவதில்லை.
நீங்கள் கல்வியியல் கல்லூரியில் பயில்வதற்கு உத்தேசிக்கின்ற பாடநெறிக்காக உங்களது மாட்டத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை, நீங்கள் உயர் தரத்திற்கு தோற்றிய மாவட்டம், உங்களது மாவட்டத்திலிருந்து கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கின்ற ஏனைய மாணவர்களின் பெறுபேறு என பல கரணிகள் கல்வியியல் கல்லூரி நுழைவுக்காக தகைமையினைத் தீர்மானிப்தில் தங்கியிருக்கின்றது.
அத்துடன் ஆரம்பக் கல்வி போன்ற பாடநெறிகளுக்காக உங்களது க.பொ,த (சா/த) பரீட்சையின் பெறுபேறு செல்வாக்குச் செலுத்துவதாக அமைகின்றது. 2018 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்வதற்காக 2020.09.04 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பரிசீலனை செய்வதன் ஊடாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.
2019 - 2020 ஆம் ஆண்டுக்கு எப்போது விண்ணப்பம் கோரப்படும்?
அந்த அடிப்படையில் 2019 2020 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2024 மர்ச் வௌியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி 2024.04.05 ஆகும்.
விண்ணப்பம் கோரப்படும் வரையில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் என்ன?
2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்காக இன்னும் 1 1/2 வருட காலம் அவகாசம் இருக்கின்றது. எனவே இந்தக் காலப்பகுதியைப் பயன்படுத்தி கல்வியியல் கல்லூரிக்கு நீங்கள் தெரி செய்யப்படுவதற்கான மேலதிகத் தகைமைகளை வளர்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் அதற்கு உதவியாக 2018 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர்களை சேரத்துக் கொள்வதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தகைமைகள் என்ன என்பதனை கீழே குறிப்பிடுகின்றோம்.
2019 - 2020 ஆண்டு கல்வியியல் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான கல்வித் தகைமைகள்
2019- 2020 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட க.பொ.த.(உஃதர) பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் க.பொ.த.(சா.தர) பரீட்சையில் முதல்மொழி (சிங்கள மொழி/தமிழ் மொழி) மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் அவற்றில் மூன்று (03) பாடங்களில் திறமைச்சித்திகள் பெற்றிருத்தல் கட்டாயமானதாகும். இந்த தகைமை இரண்டு அமர்வுகளில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால்.
பரீட்சைக்கு தோற்றிய முதல் அமர்வில் முதல்மொழி (சிங்கள மொழி/தமிழ் மொழி) உள்ளிட்டதாக ஐந்து (05) பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் திறமை சித்தி மூன்றினை (03) பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.
ஆங்கில மொழி மூலப் பாடநெறிகளுக்கான தகைமைகள்
ஆங்கில மொழி மூலத்தில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழித் தேர்ச்சியை பின்வருமாறு பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கில மொழிப் பாடநெறி தவிர்ந்த ஆங்கில மொழி மூலம் நடைபெறும் ஏனைய பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் க.பொ.த (சா. தர) பரீட்சையில் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்தபட்சம் திறமைச் சித்தி / ஆங்கில இலக்கிய பாடத்தில் சாதாரண சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
மேற்கத்தேய சங்கீத பாடநெறி ஆங்கில மொழிமூலம் நடாத்தப்படுகின்ற போதிலும், ஆங்கில மொழிமூலத்தைப் போல் ஏனைய மொழிமூலங்களில் க.பொ.த (உ.தர) பயின்ற மாணவர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஆங்கில மொழிமூலமாக நடைபெறுவதால் ஆங்கில மொழியில் பாடநெறியை பயிலக்கூடிய விண்ணப்பதாரிகள் மாத்திரம் இதற்கு விண்ணப்பிப்பது உகந்ததாகும
சித்திரம்ஃநடனம் (கீழைத்தேயம்)/ நடனம்(பரதம்) /சங்கீதம் (கீழைத்தேயம்) / சங்கீதம் (கர்நாடகம்)/ நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ.தர) பரீட்சையில் பெற்றுக்கொண்ட Z புள்ளிப்பெறுமான தொடரொழுங்கின்படி மாவட்ட அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவதோடு, தெரிவு மேற்கொள்ளப்படுவது
விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ.தர) பரீட்சையில் உரிய அழகியற் பாடத்துக்காக பெற்றுக்கொண்ட தரத்தை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி அவர்களின் z புள்ளிப்பெறுமானத்தை அதனுடன் பொருத்தி தயாரிக்கப்படும் முன்னுரிமை
தொடரொழுங்குக்கு அமைய மாவட்ட அடிப்படையில் விண்ணப்பதாரிகளை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உயர் Z புள்ளிப்பெறுமானத்தோடு உயரிய சித்தித் தரத்தை உரிய அழகியல் பாடத்துக்கு பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை உரித்தாகும்.
இவை தவிர நீங்கள் தெரிவு செய்யும் ஒவ்வொரு பாடநெறிகளுக்காகவும் பிரத்தியேகமான கல்வித் தகைமைகள் கோரப்படுகின்றன. அந்த அடிப்படையில் அரம்பக் கல்விப் பாடநெறிக்காக தகைமையினை மாத்திரம் உதாரணமாகத் தருகின்றோம்.
க.பொ.த. (உ.தர) பரீட்சையில் கலைப்பிரிவில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழிப் பாடங்களுடன் கற்றலை மேற்கொண்ட விண்ணப்பதாரிகள்
4.1.1.1 2019,2020 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கு கலைப்பிரிவில் தோற்றி சிங்கள மொழி/ தமிழ் மொழி பாடத்துடன் மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியிடைந்திருத்தல்.
மற்றும்
4.1.1.2 3.0 இல் 3.3.1 க்குரிய தகைமைகளுடன் க.பொ.த. (சா.தர) பரீட்சையில் முதல் மொழி (சிங்களம்/தமிழ்) மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்காக குறைந்தபட்சம் திறமைச் சித்தி மற்றும் ஆங்கில மொழி பாடத்திற்கு சாதாரண சித்தியுடன் சித்தியடைந்திருத்தல்.
அல்லது
க.பொ.த. (உ.தர) பரீட்சையில் சிங்கள மொழி /தமிழ் மொழிப் பாடம் இல்லாமல் ஏதேனும் ஒரு பாடத்துறையை கற்ற விண்ணப்பதாரிகள்.
4.1.2.1 2018 ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. (உ.தர) பரீட்சையில் கலைப் பாடத்துறையில் தோற்றி சிங்கள மொழி/ தமிழ் மொழி பாடம் இல்லாமல் வேறு மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்.
அல்லது
4.1.2.2 2018 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட க.பொ.த. (உ.தர) பரீட்சையில் விஞ்ஞானம் (பௌதிக விஞ்ஞானம்/ உயிரியல் விஞ்ஞானம்) வணிகம்,‘ஏனைய’ மற்றும் தொழினுட்ப பாடத்துறையில் தோற்றி மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்.
மற்றும்
4.1.2.3 3.0 இல் 3.3.1 க்குரிய தகைமைகளுடன் க.பொ.த. (சா.தர) பரீட்சையில் முதல் மொழி (சிங்களம்/தமிழ்) பாடத்தில் குறைந்த பட்சம் அதிதிறமைச் சித்தியும், கணிதத்திற்கு திறமைச் சித்தியும் ஆங்கில மொழி பாடத்தில் சாதாரண சித்தியுடன் சித்தி பெற்றிருத்தல்.
கவனத்திற் கொள்க .-
சேர்த்துக் கொள்ளப்படும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பக் கல்வித்துறைக்கு உள்வாங்கப்படும் மொத்த எண்ணிக்கையில் :
(i) க.பொ.த. (உ.தர) பரீட்சைக்குத் தோற்றி கலைப்பாடத்துறையில் சிங்கள மொழி/ தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்ற விண்ணப்பதாரிகளின் 60% வீதமும்,
(ii) க.பொ.த.(உ.தர) பரீட்சையில் சிங்கள மொழி/தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்காத கலைப் பிரிவின் விண்ணப்பதாரிகளில் 10% வீதம், விஞ்ஞானம் (பௌதிக விஞ்ஞானம்ஃ உயிரியல் விஞ்ஞானம்) விடயத்துறையின் விண்ணப்பதாரிகளில் 10% மற்றும் வணிக பாடப்பிரிவில் கற்றலை மேற்கொண்ட விண்ணப்பதாரிகள் 10% வீதமும்
(iii) க.பொ.த.(உ.தர) பரீட்சையில் “ஏனைய பாடத்துறையில்” கற்றலை மேற்கொண்ட விண்ணப்பதாரிகளில் 5% மற்றும் தொழினுட்பத் துறையில் கற்ற விண்ணப்பதாரிகளில் 5% என்பதாக அமையுமாறு உரிய விண்ணப்பதாரிகள்
எண்ணிக்கை தெரிவு செய்யப்படும்.
(iஎ) குறிப்பிட்ட பாடத்துறையில் மாவட்ட/மாகாண/தேசிய என்ற அனைத்து திறமை வரிசை முறையிலும் போதுமான விண்ணப்பதாரிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் க.பொ.த.(உ.தர) பரீட்சையில் கலைப்பாடத்துறையை சிங்கள மொழி/ தமிழ் மொழி பாடம் இல்லாமல் கற்றலை மேற்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு மற்றும் வணிக பாடத்துறையை கற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரிசைப்படி முன்னுரிமை பெறும் விதத்தில் தேசிய மட்டத்தில் எஞ்சியுள்ள வெற்றிடங்களுக்காக விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவர்.
மற்றைய பாடநெறிகளுக்கான தகைமைகளை குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பார்வையிடலாம்.
கவனிக்க
2018 ஆண்டுக்காக வர்த்தமானி அறிவித்தலில் தகைமைகளைப் பூரத்தி செய்ய வேண்டிய தினம் என்பதாக சீழ் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கின்ற அனைத்து கல்வி மற்றும் ஏனைய சான்றிதழ்களினதும் செல்லுபடியாகும் திகதி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்தினம் (2020.09.25) அல்லது அதற்கு முன்னரான தினமொன்றாக இருத்தல் வேண்டும்.
எனவே நீங்கள் 2020 உயர் தரம் செய்தவர்களாக இருந்தால் 2022 ஆம் ஆண்டு விண்ணப்ப முடிவுத் திகதி வயைில் உங்களுக்காக கல்வித் தகைமையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் க/பொ.த (சா/த) பெறுபேறுகள் போதுமானதாக இல்லை என்பதாக இனம்காணுகின்ற பாடங்களுக்கு மீண்டும் சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்து உரிய பேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் காணப்படுகின்றது. எனவே நீங்கள் எதிர் பார்க்கின்ற பிரிவில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு அவசியமான தகைமைகளை வளர்த்துக் கொள்வதற்காக இந்த காலகட்டதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எமது இணையத்தளத்தில் பதியப்படுகின்ற விடயங்களை உடனுக்குடனே பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திலும் வட்சப் குழுமங்களிலும் இணைந்து கொள்ளுங்கள் அதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று குறித்த படங்களில் கிளிக் செய்வதன் ஊடாக இணையலாம்.