பொதுவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக நுழைவுக்கான கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மாத்திரமே அரச பல்கலைக்கங்கள் என்பதாக பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
உயர்கல்வி அமைச்சின் வருகின்ற பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடநெறிகளும் மாத்திரமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைநூலில் குறிப்பிடப்பகின்றது. இவை தவிர சமுத்திரப் பல்கலைக்கழகம், தொழிற் பயற்சி பல்கலைக்கழகம் என இன்னும் சில அரச பல்கலைக்கழங்கள் நாட்டில் இயங்கிவருகின்றது என்பதனை மாணவர்கள் அறிவதில்லை. அல்லது இவைககள் தனியார் நிறுவனங்களுக்குரியவை என்பதாக நினைத்து இந்த நிறுவனங்களில் கல்வி பயில்வதிலிருந்து தவிர்ந்துகொள்கின்றனர்.
அந்த அடிப்படையில் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் மற்றும் அதனது பாடநெறிகள் குறித்து இந்தப்பதிவின் ஊடாக தெளிவினை வழங்க முயற்சிக்கின்றோம்.
உங்களது உயர் கல்வியினை முறையாகத் திட்டமிட்டுக்கொள்வதற்கான ஆலோசனைகள் குறித்து எமது இணையதளத்தில் பதிவான கட்டுரையை கீழ வரும் லிங்கில் வாசித்துக்கொள்ளலாம்.
சமுத்திரப் பல்கலைக்கழகம் என்றால் என்ன?
இலங்கையின் கடல் சார்ந்த துறையில் காணப்படுகின்ற மனித வளத் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக துறைசார்ந்தவர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் 2014 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டமூலத்தின் அடிப்படையில் இலங்கை சழுத்திரப் பல்கலைக்கழகம் நிருவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.
இந்தப் பல்கலைகழகத்தில் க.பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலசமாக உயர்கல்வி வழங்குகின்ற செயற்பாடு 2016 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானது.
ஆரம்ப காலத்தில் இந்தப் பல்கலைக்கழக நுழைவுக்காக கட்டுப்பாடுகள் இருக்கவில்லை என்ற போதிலும் அதன் பின்னரான வருடங்களில் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான தகைமைகளின் அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. அதிக அளவிலானவர்கள் இந்த பல்கலைக்கழக நுழைவுக்காக விண்ணப்பிப்பதன் ஊடாக போட்டித் தன்மை ஏற்படுவது இதற்கான காரணமாக அமையலாம்.
இந்த பல்கலைக்கழகம் ஊடாக விஞ்ஞான பட்டம் ஒன்றினை முற்றிலும் இலவமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதியர்களை இணைத்துககொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கின்றது.
நீங்கள் உயர் தரப்பரீட்சையில் 3 சித்திகளைப் பெற்றிருப்பவராக இருந்தால் இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகின 6 பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்கின் வாய்ப்பு உங்களுக்கு இருக்கின்றது.
ஒரு விண்ணப்பதாரி இந்தப் பல்கலைக் கழகத்தின் 3 பாடநெறிகளுக்காக ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து பாடநெறிகளுக்குமான விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.17 ஆகும்.
𝐁.𝐒𝐜. (𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐌𝐚𝐫𝐢𝐭𝐢𝐦𝐞 𝐓𝐫𝐚𝐧𝐬𝐩𝐨𝐫𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 & 𝐋𝐨𝐠𝐢𝐬𝐭𝐢𝐜𝐬
இந்தப் பாடநெறியானது
4 வருடங்கள் ~ முழு நேரம்
மொழிமூலம் - ஆங்கிலம்
இந்தப் பாடநெறிக்கு பதிவு செய்வதற்கான தகைமைகள் ; 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு துறையில் குறைந்தது 3 "S" சித்திகளை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பெறுபேறு மூன்று தடவைகளுக்கு மேற்படாத அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் தெரிவானது நுண்ணறிவுப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்ட அதில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் இடம்பெறும் .
𝐁.𝐒𝐜. (𝐆𝐞𝐧/𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐂𝐨𝐚𝐬𝐭𝐚𝐥 & 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐑𝐞𝐬𝐨𝐮𝐫𝐜𝐞𝐬 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭
இந்தப் பாடநெறியானது
3/4 வருடங்கள் ~ முழு நேரம்
மொழிமூலம் - ஆங்கிலம்
இந்தப் பாடநெறிக்கு பதிவு செய்வதற்கான தகைமைகள்
2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு துறையில் குறைந்தது 3 "S" சித்திகளை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பெறுபேறு மூன்று தடவைகளுக்கு மேற்படாத அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பாடநெறியினை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்கின்ற அனைவரும் பட்டம் ஒன்றினைப் பெறுவார்கள். இதில் அதிக திறமை காட்டுபவர்களுக்கு இன்னும் ஒரு வருட பாடநெறிய பயில வாய்பபு வழங்கப்பட்டு விசேட பட்டம் வழங்கப்டும்.
மாணவர் தெரிவானது நுண்ணறிவுப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்ட அதில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் இடம்பெறும் .
𝐁.𝐒𝐜. (𝐆𝐞𝐧/𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐅𝐢𝐬𝐡𝐞𝐫𝐢𝐞𝐬 & 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞
இந்தப் பாடநெறியானது
3/ 4 வருடங்கள் ~ முழு நேரம்
மொழிமூலம் - ஆங்கிலம்
இந்தப் பாடநெறிக்கு பதிவு செய்வதற்கான தகைமைகள் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் குறைந்தது 3 "S" சித்திகளை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பெறுபேறு மூன்று தடவைகளுக்கு மேற்படாத அடிப்பயைடில் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பாடநெறியினை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்கின்ற அனைவரும் பட்டம் ஒன்றினைப் பெறுவார்கள். இதில் அதிக திறமை காட்டுபவர்களுக்கு இன்னும் ஒரு வருட பாடநெறிய பயில வாய்பபு வழங்கப்பட்டு விசேட பட்டம் வழங்கப்டும்.
மாணவர் தெரிவானது Z-Score அடிப்படையில் இடம்பெறும்
𝐁.𝐒𝐜. (𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐎𝐜𝐞𝐚𝐧𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲
இந்தப் பாடநெறியானது
4 வருடங்கள் ~ முழு நேரம்
மொழிமூலம் - ஆங்கிலம்
இந்தப் பாடநெறிக்கு பதிவு செய்வதற்கான தகைமைகள் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் பெதீகவிலயல் / உயிரியல் விஞ்ஞானத்துறையில் குறைந்தது 3 "S" சித்திகளை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும். பௌதீகவியல் ஒரு பாடமாக உயர்தரத்தில் கற்றிருத்தல் வேண்டும். இந்தப் பெறுபேறு மூன்று தடவைகளுக்கு மேற்படாத அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும்..
இந்தப் பாடநெறியினை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்கின்ற அனைவரும் பட்டம் ஒன்றினைப் பெறுவார்கள். இதில் அதிக திறமை காட்டுபவர்களுக்கு இன்னும் ஒரு வருட பாடநெறிய பயில வாய்பபு வழங்கப்பட்டு விசேட பட்டம் வழங்கப்டும்.
மாணவர் தெரிவானது Z-Score அடிப்படையில் இடம்பெறும்
𝐁.𝐒𝐜. (𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 (𝐒𝐡𝐨𝐫𝐞 𝐛𝐚𝐬𝐞𝐝)
𝐁.𝐒𝐜. (𝐇𝐨𝐧𝐬) 𝐢𝐧 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 (𝐒𝐞𝐚𝐟𝐚𝐫𝐞𝐫)
01.விவசாயம் / உணவு தொழில்நுட்பவியலில் NVQ Level 5 சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.