>

ad

SLEAS Open/ limited EXAM 2021 Guide in Tamil (இலங்கை கல்வி நிர்வாக சேவை)

இலங்கை  கல்வி நிர்வாக சேவைப் பரீட்சைக்காகத்  தயார்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டி


இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன? 

இலங்கை கல்வி நிர்வாக சேவை என்பது இலங்கையின் கல்வித்துறையில் தீர்மானம் எடுக்கின்ற அளவிலான உத்தியோகத்தர்களை அரச சேவைக்கு உள்வாங்குவதற்கான மிக முக்கிய மான போட்டிப் பரீட்சையாகும்.  மிகவும் போட்டித் தன்மையுடைய இந்தப் போட்டிப் பரீட்சையில் சுமார் 200 க்கும் அதிகமான வெற்றிடங்களை நிறப்புவதற்காக வருடாந்தம் விண்ணப்ம் கோரப்படுவதுண்டு. சில காலங்கில் 500 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன. 

 மிகவும் முக்கியமான உயர் பதிவிக்கான போட்டிப் பரீட்சை என்பதால் போட்டித் தன்மையும் அதிகமாகவே காணப்படுகின்றது. வர்த்தமானி அறிவித்தலில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டபின்னர் பரீட்சைக்காக ஆயத்தமாவதில் இந்தப் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கான திறன் கிடைத்துவிடப்போவதில்லை. இந்தப் பரீட்சையில் வெற்றிகொள்ளவேண்டும் என்ற ஆர்வவமும் விருப்பமும் இருப்பவர்கள் தங்களது இலக்கினை அடைந்துகொள்வதற்காக  இந்த பரீட்சையை இலக்காகக் கொண்டு பல மாதங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

   அந்த அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவை என்றால் என்ன என்பது குறித்தும் அதற்காக தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் விளக்குகின்ற கட்டுரையினை LANKAJOBINFO.COM இணையத்தளம் உங்களுக்காக தயாரித்துத் தருக்கின்றது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை என்பது யாது?

கல்வி அமைச்சு, கல்வித் திணைக்ளங்கள், வலயக் கல்விக் காரியாலயங்கள்,  பரீட்சைத் திணைக்ளம், போன்ற அரச நிறுவனங்களில் பணிப்பாளர்களர்கள், உதவிப் பணிப்பாளர்கள் போன்ற  உயர் பவிகளுக்காகவும் தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்காகவும்  இந்த இலங்கை கல்வி  நிர்வாக சேவை உத்ததியோகத்தர்களே நியமிக்கப்படுகின்றனர்.  இலங்கையின் கல்வித்துறை சார்ந்த நிர்வாகக் கட்டமைப்பில் தீர்மானங்கள் மேற்கொண்டு செயற்படுத்துகின்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டடிருக்கின்ற பதவிகளுக்காக இவர்கள் நியமிக்கப்படுவார்கள். இலங்கை கல்வி நிர்வாக சேவை என்பது மிகவும் மரியாதைக்குரியதும் பொறுப்பு வாய்ந்துமான உயரிய சேவை ஒன்றாக் கருதப்படுகின்றது. இவர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பள அளவு அடுத்த சேவைக்கு வழங்கப்படுகின்றசம்பள அளவைவிட அதிகம் என்பதுடன் மற்றைய நிலைகளில் சேவையாற்றுகின்ற அரச ஊழியர்களிலும் பார்க்க அதிகளவிலான சலுகைகள் நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள் என்ற வகையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இலங்கை நிர்வாக சேவைக்காக ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?

பொதுவாக வருடாந்தம் ஒவ்வொருவருடத்திற்கும் ஜூன் மாதத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காக ஆட்கள் சேர்க்கப்படுவதுண்டு. குறித்த சேவைக்கான ஆட் சேர்ப்பு 

01. பொதுவான பதவியணியின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்தல்
02 விசேட பதவியணியின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்தல் 

என்ற அடிப்படையில் கீழ்க் குறிப்பிடப்படுகின்ற மூன்று முறைகளில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 


01. திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில்  


குறித்த பதவிக்காக குறிப்பிட்ட ஏதாவது ஒரு சேவையில் இத்தனை காலம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் உரிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளவர்கள் திறந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.  எனினும் அவர்களின் வயதெல்லை மிகக் குறுகியதாக இருக்கும் . 

 பொதுவான பதவியணியின் கீழ் மாத்திரமே திறந்த போட்டுப் பரீட்சையின் அடிப்படையில் தொரிவு செய்யப்படுகின்றர்.  குறித்த வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  50% ஆனவர்கள் திறந்த போட்டிப் பரீட்சை ஊடாகவே தெரிவாகின்றனர்.

02. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

ஆசிரியர்  சேவையில் அல்லது அதிபர் சேவையில் ஏற்கனவே இருக்கின்றவர்களுக்கு இந்த சேவையில் இணைவதற்காக அதிக சந்தர்ப்பம் வழங்கும் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் சேவை அனுபவம் இருக்கின்ற அதே நேரம் போதுமான கல்வித் தகுதகளையும் பெற்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவு செய்யப்படுவர். 

01. பொதுவான பதவியணியின் கீழ்  வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  20% ஆனவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில்  தெரிவாகின்றனர்.

02 விசேட பதவியணியின் கீழ் வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  100% ஆனவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில்  தெரிவாகின்றனர்.

03. சேவை மூப்பின் அடிப்படையில் போட்டிப் பரீட்சை 

அதிபர் சேவையில் பலகாலம் வேலை செய்கின்றவர்கள் அவர்களது சேவைக்காலத்தினை மாத்திரம் கருத்தில்கொள்ளப்பட்டு பரீட்சை மூலமாக இணைத்துக்கொள்ளப்படுகின்ற முறை சேவை மூப்பு அடிப்படையில் நியமித்தல் எனப்படும் 

பொதுவான பதவியணியின் கீழ் வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  30% ஆனவர்கள் தெரிவாகின்றனர்.



வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.

இந்த சேவையிலிருந்து  ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன. 

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் வெற்றிடமாகின்ற பதவிகளின் எண்ணிக்கைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த சவற்றிடங்களின் இத்தனைதான் என்றுசொல்ல முடியாது என்றபோதிலும் கடந்த காலங்களில் 100 முதல் 200 வரையான வெற்றிடங்களுக்காக ஆ்ட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை நிர்வாக சேவையின் சம்பள அளவு என்ன? 

இலங்கை நிர்வாக சேவையின் சம்பள திட்டமாக 
47615-10X1335 -8X1630 - 17X2170 என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர்

ஆரம்ப சம்பளம் - 47,615.00
வா.செ. கொடுப்பனவு 7,800.00
விசேட கொடுப்பனவு 10,000.00
வேறு கொடுப்பனவு 2,500.00
தொலைபேசி கொடுப்னவு 2,500

என மொத்த சம்பளமாக 70,415 ரூபா கிடைக்கப்பெறும். 
இதில் ஆரம்ப சம்பளத்தில் 7% விதவைகள் தபூதாரர் அனாதைகள் நிதியத்திற்கு கழிக்கப்படும்.

இவைதவிர தீர்வையற்ற வாகணம் வாங்குவதற்கான சலுகைகள் போக்குவரத்து சலுகைகள் என பல சலுகைகள்வழங்கப்படும்.

அத்துடன் பட்டப்பின் படிப்புகளுக்காக அரச செலவில் சம்பள விடுமுறையுடன் வௌிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?

பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.

பரீட்சைக்கான வயதெல்லை என்ன?

 
  • திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு  22 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 30 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
  • மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு  50 வயதுக்கு மேற்படலாகாது.
  • சேவை மூப்பின் அடிப்படையிலான போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு  55 வயதுக்கு மேற்படலாகாது

இந்தப் பரீட்சைக்காக எத்தனை முறை தோற்றலாம்?

ஒரு பரீட்சார்த்தி திறந்த அடிப்படையில்  2 முறை மாத்திரமே பங்குபற்றலாம்.
.
மடடுப்பத்தப்பட்ட அடிப்படையில்  3 முறை மாத்திரமே பங்குபற்றலாம்.  (இவ்வாஷ விண்ணப்பிப்பவர்கள் எந்த ஒரு அடிப்படையிலும் 5 தடவைகளுக்கு மேல் விண்ணப்பிக் முடியது. )


 சேவை மூப்பின் அடிப்படையில் 3 முறை மாத்திரமே பங்குபற்றலாம் (இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் எந்த ஒரு அடிப்படையிலும் 5 தடவைகளுக்கு மேல் விண்ணப்பிக் முடியது. )


திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்த்தல் 


திறந்த போட்டிப் பரீட்சைக்கான கல்வித் தகைமை என்ன?


பலகலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில்  பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் இதற்கான கல்வித் தகைமையாகும்.

ஆட்சேர்ப்பு முறை எவ்வாறு அமையும்?

எழுத்து மூலப்பரீட்சையில் தகைமை பெறுவோர் வாய்மொழிப் பரீட்சைக்காக அழைக்கப்படுவர்.  இரண்டு பரீட்சைகளிலும் அதிக புள்ளி பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்படுவர். அதனை அடுத்து வாய்மொழிப் பரீட்சை இடம் பெற்று இவை இரண்டிலும் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவர். 

எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?

திறந்த போட்டிப் பரீட்சை 4 பாட்ங்களைக் கொண்டதாக இருக்கும் 

1 கிரகித்தல் -  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
2 நுண்ணறிவுப் (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
3 பொது அ றிவு  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
4 பகுப்பாய்வுக் கற்கை. (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)


பாடங்களின் உள்ளடங்கம் என்ன?


வாய்மொழிப் பரீட்சைக்கு யார் அழைக்கப்படுவார்கள்?
பரீட்சையிக்கான ஒவ்வொருபாடத்திலும் 40% புள்ளிகளைப் பெறுபவர்கள் அந்தப் பாடத்தில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர். இவ்வாறு அனைத்து பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைபவர்களில் அனைத்துப் பாடங்களிலும்  பெற்ற புள்ளிகளி்ன் கூட்டுத்தொகையாக கூடிய புள்ளி பெறுகின்றவர்கள்  வாய்மொழிப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.  வெற்றிடங்களின் எண்ணிக்ரகையுட அளவில் 25% இணைக்கும் போது வருகின்ற தொகையினர் வாய்மொழிப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.

வாய்மொழிப் பரீட்சைக்கு 25 புள்ளிகள் வழங்கப்டும்


மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை


கீழ்க் காட்டப்பட்ட தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அரசாங்கப் பாடசாலைகளிலும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உதவி வழங்கப்படுகின்ற பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் சேவையாற்றும் பதவி நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர்கள் / அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள். ஆசிரியர் கல்வியிலாளர் சேவையில் இருப்பவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெறுகினறனர்

கல்வித் தகைமை 

01. பொதுவான பதவியணி:


(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொனறிலிருந்து அல்லது தேசிய கல்வி நிறுவனத்தின் மூலம் பட்டம் பெற்றிருத்தல்

அலலது;
(ii) போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிஶத்தல்


அனுபவம். 

(i) பட்டதாரி ஆசிரியரொருவராக இருபபின், குறைந்த பட்சம்  ஐந்து (05) வருட கற்பித்தல் அனுபவத்தைப் பெற்றிருத்தல்  

அல்லது

(ii) ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்,  அல்லது போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற பின்,  ஏழு (07) வருட கற்பித்தல் அனுபவத்தைப் பெற்றிருத்தல்  

அல்லது

(iii) ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்,  அல்லது போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரியராக இருந்து பல்கலைக்கழக பட்டம் பெற்றிருப்பின் ஐந்து (05) வருட கற்பித்தல் அனுபவத்தைப் பெற்றிருத்தல்  

(iv) இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் உத்தியோகத்தரொருவராக மேற்குறிப்பிட்ட பதவியில் ஐந்து (05) ஆண்டுகள் முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் அனுபவத்தைப் பெற்றிருத்தல்   


02. விசேட பதவியணி: 


(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றிலிருந்து அல்லது தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட உரிய பாடததை உள்ளடக்கிய பட்டம் பெற்றிருத்தல்

அலலது

(ii) உரிய பாடததில் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது உரிய பாடத்தில் போதனாவியல டிப்ளோமா சான்றிதழ் பெற்றிழுத்தல்
அலலது

(iii) தொழினுடபவியல் விடயப்பரப்பின் பொறியியல் தொழினுட்பவிடயப் பாடப்பரப்பிற்காகஇலஙகை உயர் தொழினுட்ப நிறுவனத்தினால் வழங்கப்படும் நான்கு வருட தேசிய டிப்ளோமா  (HNDE) அல்லது மொரட்டுவ பல்கலைக் கழகம் வழங்குகின்ற மூன்று ஆண்டுகளைக் கொண்ட தேசிய தொழினுட்ப டிப்ளோமா (NDT) அல்லது கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்ப நிறுவனததினால் வழங்கப்படும் நான்கு வருட பொறியியல் விஞ்ஞானம் தொடர்பான தேசிய டிபளோமாவை  (NDES) பெறறிருத்தல், அல்லது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படுகின்ற தொழினுட்பம் தொடர்பான டிப்ளோமா (DT) அல்லது இலங்கை மூனறாம ; நிலை மற்றும் தொழிற் பயிற்சி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்ற தேசிய தொழினுட்ப தகைமை மட்டம் 6 க்குரிய உயர் டிப்ளோமா (NVQ Level 6) பெற்றிருத்தல்

அனுபவம்:


(i) குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்குரிய பட்டதாரி ஆசிரியராக இருப்பின் குறித்த பாடத்தில் ஐந்து (05) வருட  கற்பித்தல் அனுபவம் 
அலலது;
(ii) குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்குரிய ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரியராக இருந்து குறித்துரைக்கப்பட்ட பாடத்தில் பட்டதாரியாக இருப்பின் குறித்த பாடத்தை கற்பித்தலில் ஐந்து (05) வருட அனுபவம். 

அலலது;

(iii) குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்குரிய ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட அல்லது போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரியராக இருப்பின், குறித்த படத்தி்ல ஏழு (07) வருட கற்பித்தல் அனுபவம். 

(iV) எவ்வாறாயினும் விசேட கல்வி/ தொழில்நுட்பம்/ உடற் கல்வி/ மேலைத்தேய சங்கீதம் ஆகிய பாடத்திற்குரிய ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்அல்லது டிப்லோமா சான்றிதழ் பெ்றிருப்பின்7 வருடத்துக்கு குறைந்த சேவைக்காலமுள்ள 5 வருடங்கள் குறித்த துறையில் கற்பித்தல் அனுபவம் 



இவர்கள் முதலாவது வினைத் திறன் தடை தாண்டலினைப் பூரித்தி செய்திருக்கவேண்டும். 


நியமனம் உறுதி செய்யப்படல் வேண்டும். 

தொடர்ச்சியான 5 வருட சேவைக்காலம்.

எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 3 பாட்ங்களைக் கொண்டதாக இருக்கும்
 
1 கிரகித்தல்,  -  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
2 . நுண்ணறிவும் உளசார்பும்  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
3 கல்வி நிர்வாகமும், முகாமை்துவமும்.(மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்)


பாடங்களின் உள்ளடங்கம் என்ன?






வாய்மொழிப் பரீட்சைக்கு யார் அழைக்கப்படுவார்கள்?

பரீட்சையிக்கான ஒவ்வொருபாடத்திலும் 40% புள்ளிகளைப் பெறுபவர்கள் அந்தப் பாடத்தில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர். இவ்வாறு அனைத்து பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைபவர்களில் அனைத்துப் பாடங்களிலும்  பெற்ற புள்ளிகளி்ன் கூட்டுத்தொகையாக கூடிய புள்ளி பெறுகின்றவர்கள்  வாய்மொழிப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.  வெற்றிடங்களின் எண்ணிக்கையுடைய அளவில் 50% இணைக்கும் போது வருகின்ற தொகையினர் வாய்மொழிப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.

வாய்மொழிப் பரீட்சைக்கு 25 புள்ளிகள் வழங்கப்டும்


சேவை மூப்பின் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்.



தகைமைகள் 


இலங்கை அதிபர் சேவை 1 ஆம் தரத்தில் 3 வருட கால சேவை அனுபவம் இருக்க வேண்டும். 

பதவி நிரந்தரமாக்ப்பட்டிக்க வேண்டும் என்பதுடன் வினைத்திறன் தடைதாணட்ல் தகைமையினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2 பாட்ங்களைக் கொண்டதாக இருக்கும்
 
1  ஒப்பீட்டுக் கல்வி  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்)
2. கல்வி நிர்வாகமும், முகாமை்துவமும்.(மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்)

பாடங்களின் உள்ளடங்கம் என்ன?


நேர்முகப் பரீட்சை எவ்வாறு அமையும் ?

பரீட்சையிக்கான ஒவ்வொருபாடத்திலும்  சித்தியடைபவர்களில் அனைத்துப் பாடங்களிலும்  பெற்ற புள்ளிகளி்ன் கூட்டுத்தொகையாக கூடிய புள்ளி பெறுகின்றவர்கள்  சேரமமுகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 இல் தொடர்ச்சியானதும், திருப்திகரமானதுமான சேவைக் காலத்தில், பரீட்சைக்கான தகைமையாகக் குறிப்பிடப்படுகின்ற 3 வருடங்களைக் கழித்து மீதமுள்ள சேவைக் காலத்தில் ஒவ்வவொரு வருட சேவைக்காலத்துக்கும் ஆகக் கூடிய புள்ளியாக 60 எனும் அடிப்படையில் வழங்கப்பட்டு சேவை மூப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்., வெற்றிடங்களின் எண்ணிக்கையுடைய அளவில் 50% இணைக்கும் போது வருகின்ற தொகையினர் வாய்மொழிப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்

வாய்மொழிப் பரீட்சைக்குபுள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

இறுதியாக. 

இந்தப் பரீட்சை இலகுவானதல்ல என்பது உண்மைதான் என்ற வினாத்தாள்களைப் புரிந்துகொண்டு அவைகள் தொடர்பில் உரியபயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளுமிடத்து இந்தப் பரீட்சை மிக இலவான ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை எனவே முயற்சிப்போம் வெற்றிபெறுவோம். 

கல்வி தொழில் சார்ந்த தகவல்களையும் வேலைவாய்ப்புச் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்

எமது இணையத்தளத்தில் பதியப்படுகின்ற விடயங்களை உடனுக்குடனே பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திலும் வட்சப் குழுமங்களிலும் இணைந்து கொள்ளுங்கள் அதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று குறித்த படங்களில் கிளிக் செய்வதன் ஊடாக இணையலாம்.