>

ad

Univotec (UoVT) அரச உயர் கல்வி நிறுனம் குறித்த முழு விபரம். 2021


அறிமுகம்


தொழிற் பயிற்சி பல்கலைக்கழகம் குறித்து மாணவர்கள் சரியாக அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக அவர்களுக்காக காணப்படுகின்ற சிறந்த உயர்கல்வி வாய்ப்புகளை இழந்து விடுகின்றார்கள். எனவே இது குறித்த தௌிவினைப் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு தரப்படுகின்றது.

Univotec என்பது யாது?


Univotec என்ற பெயரைக் கேட்டதும் இது தனியார் உயர் கல்வி நிறுவனம் ஒன்று என்பதாக பலர் நினைக்கின்றனர். Univotec என்ற பெயரின் முதல் பகுதியான Uni என்பது -University of , Vo என்பது - Vocational , Tec என்பது - Technology என்பதாகவும் பொருள்படுகின்றது.

வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது ( University of Vocational Technology ) 2008 ஆம் ஆண்டின் 31 இலக்கம் பாராளுமன்ற சட்டமூலத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகும். இது இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஆக்கத்திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. அந்த அடிப்படையில் இது முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற பல்கலைக்கழகம் என்பதாகக் குறிப்பி்லாம்

தொழிலில் தகைமையின் அடிப்படையில் 05/06 ஆகிய மட்டங்களை(NVQ 05/06) பூர்ததி செய்த மாணவர்களுக்கு NVQ 07 எனும் மட்டத்தினாலான உயர் கல்வியை வழங்கி பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் பல்கலைக்கழக்கத்தின் பிரதான நோக்கமாகும். இந்தப் பல்கலைக்கழகத்திற்காக உயர் தரம் சித்தியடைந்தவர்களின் z புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்ற நடவடிக்கை 2016 ஆம் ஆண்டு முதல் இந்தப் பல்கலைக்கழத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பல்கலைக்கழகமானது அனைத்து வசதிகளுடனும் சிறந்த தரத்தில் இயங்கிவருகின்றது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் உயர் தரப் பெறுபேறுகள் வௌியான உடனேயே அவரசமாக விண்ணப்பங்களைக் கோரி மாணவர்களை இணைத்துக் கொள்கின்ற நடவடிக்கையினையும் இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொள்கின்றது. அத்துடன் தொழில்நுட்ப பட்டம் (Btec) வழங்குகின்ற நிறுவனமாகவும் இது காணப்படுக்னறது.

அன்மையில் ஊவா பல்கலைக்கழகம் நடாத்திய “Robot Battle 2018” எனும் போட்டியில் முதலாவது மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை தொழில்நுட்ப கல்லூரியே பெற்றுக் கொண்டது என்பதன் ஊடாக இந்த பல்கலைக்கத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் திறமையினை மட்டடிடலாம்

உயர் தரம் எழுதியர்களுக்காக பல்கலைக்கழகம் வழங்கும் பாடநெறிகள்

நீங்கள் 2020 ஆம் ஆண்டு உயர் தரம் சித்தியடைந்திருந்தால் உங்களது உயர் தரத்தின் பாடங்களுக்கு அமைய கீழ் வரும் படநெறிகளைத் தெரிவு செய்யலாம். (பாடநெறிக்கு பக்கத்தில் குறித்த பாடநெறியிளைப் பயில்வதற்கு அவசியப்படுகின்ற கல்வித் தகைமையாக பயின்றிருக்க வேண்டிய உயர்தரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. )
,
1. B. Tech. in Mechatronics Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
2. B. Tech. in Building Services Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
3. B. Tech. in Manufacturing Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
4. B. Tech. in Food Process Technology - உயிரியல் தொழில்நுட்பவியல் / உயிரியல் விஞ்ஞானம்.
5. B. Tech. in Software Technology – ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
6. B. Tech. in Multimedia & Web Technology – ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
7. B. Tech. in Network Technology - ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
8. B. Tech. in Industrial Management - வர்த்தகம்/ பொறியில் தொழில் நுட்பவியல் /பௌதீக விஞ்ஞானம்
9. B. Tech. in Construction Technology & Resource Management - பொறியில் தொழில் நுட்பவியல்
10. B. Edu. in English Language Training – உயர் தர ஆங்கில பாடத்திற்கு சாதாரண சித்தி அல்லது சாதாரண தர ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி

11. B. Tech. in Media Arts Production Technology - தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி பாடத்துடனான எந்த உயர் தரப்பிவில் இருப்பவர்களும்

ஏனையவர்களுக்கான பாடநெறிகள்


அத்துடன் நீங்கள் NVQ பாடநெறியினைப் பூர்த்தி செய்துவிட்டு பட்டம் ஒன்றினைத் தொடர்வதற்காக இருப்பின் கீழ் வரும் அடிப்படையில் தகைமைகளைக் கொண்டிருப்பீர்களானால் பாடநெறிகளைப் பயிலலாம்.

NVQ என்றால் என்ன என்பது குறித்து எமது இணையத்தளத்தில் பதியப்பட்டட கட்டுலையினை கீழே உள்ள லிங்கில் வாசித்து விளங்கிக்கொள்ளலாம்.

1. NVQ 05 அல்லது அதனிலும் கூடிய தகைமை
2. குறித்த துறையில் HNDE , HNDQS , HNDA , NDT , NDES , NDET அல்லது அவற்றுக்கு சமமான தகைமை
3. மூன்றாம் நிலைக் கல்வி ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட NVQ 05,06 மட்டத்திலான தகைமைகள்.
மேற்படி தகைமைகளை கீழ் குறிப்பிடப்படுகின்ற பட்டப்படிப்புக்கு எதிரில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் பெற்றிருக்கவேண்டும்.


1. B.Tech. in Mechatronics Technology - மின்னியல், இலத்திரனியல், இயந்திரவியல், உற்பத்தியியல், மோட்டார் வாகன தொழில்நுட்பம், உயிரியல் விஞ்ஞானம்.
2. B. Tech. in Building Services Technology - கட்டட நிர்மானம், இயந்திரவியல், சிவில், குளிர்சாதணம், இயந்திரவியல், கட்டிட சேவை, இலத்திரனியல் தொடர்பாடல்.
3. B. Tech. in Manufacturing Technology - உற்பத்தி, குளிர்சாதணம், இயந்திரவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பம். வேல்டிங், இரசாயனவியல்
4. B. Tech. in Food Process Technology - உணவித் தொழில்நுட்பம், விவசாயம், உணவு தயாரித்தல், கால்நடை, பால் உற்பத்தி, உணவு தரக்கட்டுப்பாடு, உணவு இரசாயன விஞ்ஞானம்.
5. B. Tech. in Software Technology - தகவல் தொடர்பாடல் தெழில்நுட்டம்
6. B. Tech. in Multimedia & Web Technology - தகவல் தொடர்பாடல் தெழில்நுட்டம்
7. B. Tech. in Network Technology - - தகவல் தொடர்பாடல் தெழில்நுட்டம் , இலத்திரனியல்
8. B. Tech. in Industrial Management Technology - ஏதாவது தொழில்நுட்ப பிரிவு
8. B. Tech. in Film & Television Production Technology (வார இறுதி நாட்கள்) - சினிமா , தொலைக்காட்சி, விடியோ தயாரிப்பு, டிஜிடல் மீடியா
9. B. Tech. in Quantity Surveying - அளவியல்
10. B. Tech. in Construction Technology and Resource Management - கட்டட நிர்மான தொழில்நுட்பம்
11. B. Tech. in Media Arts Production Technology(வாரநாட்கள்) - ஊடகம், தொடர்பாடல், அச்சு ஊடகம், ரேடியோ, சினிமா,
12. BACHELOR OF HOTEL MANAGEMENT (New) - Hospitality Management அல்லது Hotel & Tourism NVQ 05 அல்லது அதிலும் கூடிய தகைமை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற Hotel & Tourism துறையில் ஒரு வருட முழுநேர படநெறியினை அல்லது அதற்கு சமமான பகுதி நேரப் பாடநெறியினைப் பூர்திசெய்திருத்தல் அத்துடன் 03 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு வரு சேவை அனுபவம்.
13. Bachelor of Education in Technology (B. Ed. Tech) - குறித்த துறையில் NVQ 05 அல்லது அதனிலும் கூடிய தகைமை HNDE, NDT, NDES, NDET, NDICT தகைமை, தெசிய கல்வி நிறுவனத்தின் கல்வியல் டிப்லோமா (இத்துடன் இரண்டு வருட சேவை அனுபவம். (
14. Bachelor of Education in English Language Teaching (B. Ed. ELT) - NVQ 05 அல்லது அதனிலும் கூடிய தகைமை , HNDE(English) , தேசிய கல்வி நிறுவனத்தின் ஆங்கில மொழி தேசிய டிப்லோமா , அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தேசிய உயர் டிப்லோமா

15. Bachelor of Translation Studies - ஆங்கில மொழி டிப்லோமா அல்லது உயர் தரத்தில் மூன்று சித்திகள் மற்றும் ஆங்கிலத்தில் திறமைச்சித்தி

மேற்குறிப்பிட்ட அடிப்படையிலான பாடநெறிகளைப் பயில்வதற்கான வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்கு காணப்படுகின்றது. சென்ற வருடத்திற்கு முன்னைய வருடங்களில் உயர் தரம் செய்தவர்களாக இருந்தால் உங்களுக்குப் பொறுத்த மான துறைகளில் உங்களுக்குப் பொறுத்தமான NVQ 3/4 மட்த்திலான சான்றிதழி பாடநெறிகளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்ன (NVQ 5,6) மட்த்திலான டிப்லோமா பாடநெறிகளை பயின்று Univotec படநெறிகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முயற்சியுங்கள்.

உங்களுக்குப் பொறுத்தமான NVQ பாடநெறியினைத் தெரிவு செய்வது குறித்த விளக்கத்தினைப் பெற கீழுள்ள லிங்கில் கிளிக் செய்வும்.

2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக் தோற்றியவர்களை பாடநெறிகளுக்கு இணை்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரங்களில் கோரப்படவுள்ளன

இதற்கு சேர்த்துக்கொள்ளப்படும் போது உங்களது z score கவனத்தில் கொள்ளப்படும்...

z score என்றால் என்ன எனபது குறித்து அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்

பல்கலைக்கழக்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கீழே தரப்பட்டுள்ளது அதில் சென்று மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


2021 ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.Closing Date of Applications: 30.09.2021