அரச உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெற முடியுமான 8 சந்தர்ப்பங்கள் குறித்து முன்னைய பதிவில் பார்த்தோம். அதன் அடிப்படையில் உங்களது விருப்பத்தின் பேரில் 20 வருடத்திலோ அல்லது 55 வருடத்திலோ அல்லது 60 வருடம் வரையான காலப்பகுதியிலோ நீங்கள் ஓய்வு பெறும் போது உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்கின்றது என்பதைக் கணக்கிட்டுக்கொள்ள முடியுமானால் அது உங்களது ஓய்வூ பெறுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்வதற்கு மிகவும் துனையாக அமையும். அந்த அடிப்படைியில் ஓய்வு பெறுகின்ற ஒருவரது ஓய்வூதியக் கொடுப்பனவு எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பது குறித்து இந்தப் பதிவில் ஆராய்வோம்.
ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமைகள் குறித்து முன்னைய பதிவில் ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய 4 அடிப்படைத்தகைமைகள கீழே தரப்படுகின்றன.
01. ஓய்வூதியம் உரித்துடைய நிரந்தர நியமனம் ஒன்றினைப் பெற்றிருத்தல்
02. சேவை நிரந்தரமாக்கப்பட்டிருத்தல்
03. ஓய்வு பெறும் போது 10 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்
04. உரிய முறையில் சேவையிலிருந்து ஓய்வு பெறச்செய்யப்பட்டிருத்தல்
முறையாக ஓய்வு பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் என்ற தலைப்பில் ஓய்வூதிம் பெறுவதற்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் குறித்தும் ஓய்வு பறச்செய்கின்ற நடைமுறை குறித்தும் தௌிவான விளக்கம் கீழி வரும் லிங்கில் தரப்பட்டுள்ளது. அதனை வாசித்துககொள்ளலாம்.
மேற்படி அடிப்படைத் தகைமைகளை நீங்கள் நீங்கள் பெற்றிருப்பின் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் பணிக்கொடை என்பவற்றைப் பெற்றுக்கொவதற்கான அடிப்படைத் தகைமையினை நீங்கள் பெறுகின்றீர்கள் இன்பதாகக் குறிப்பிடலாம். எனினும் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் பணிக்கொடை என்பன கணக்கிடுவதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதுண்டு.
01. சேவைக் காலம்.
உங்களது முதல் நியமனம் தொடக்கம் நீங்கள் ஓய்வு பெறுகின்ற வரையான காலப்பகுதிக்கான உங்களது நிகர சேவைக்காலம் எவ்வளவு என்பது குறித்து, இங்கு கருத்தில் கொள்ளப்படிகின்றது. நிகர சேவைக்காலம் எனும் போது சில விடயங்கள் கருத்தில்கொள்ளப்பட்ட அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. நீங்கள் முதல் நியமனம் பெற்ற நாளிலிருந்து நீங்கள் ஓய்வு பெறுகின்ற நாள் வரையான மொத்த சேவைக்காலத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டுள்ள சம்பளமற்ற லீவு காலத்தைக் கழிக்கும் போது பெறுகின்ற காலப்பகுதியே நிகர சேவைக்காலம் எனப்படுகின்றது. நிகர சேவைன்னாலம் கணிப்பிடும் போது கீழ்க் குறிப்பிடும் விடயங்கள் கவனத்தில்கொள்ளப்படும்.
( அ) சம்பளமற்ற விடுமுறை ( No Pay leave)
உங்களது சேவைக்காலத்தின் போது உங்களுக்கு உரித்துடைய லீவுகளுக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்கின்ற லீவுகள் சம்பளமற்ற லீவுகளாக கணிக்கப்படுவதுண்டு. எனினும் ஓய்வூதியக் கொடுப்பனவு கணிப்பீட்டின்போது நீங்கள் பெற்றுக்கொண்டு சம்பளமற்று லீவு மொத்தமாகக் கழிக்கப்படுவதில்லை. சம்பளமற்ற லீவுகளில் சில லீவுகளுக்கு விதிவிலக்கு வழங்கப்படுகின்றன. இன்னும் சில லீவுகள் விதிவிலக்களிக்கப்படாமல் சேவைக்காலத்திலிருந்து கழிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கழிக்காமலிருப்பதற்கு அவகாசம் வழங்கப்படுகின்ற சம்பளமற்ற லீவுகள் சில கீழே தரப்படுகின்றது.
ஒரு வருடம் அளவிலான சம்பளமற்ற லீவுகள். - இங்கு உங்களது வேக்காலம் 30 வருடங்களுக்கு குறைவானதாக அமையுமானால் நீங்கள் பெற்றுக்கொண்ட ஒரு வருட சம்பளமற்ற லீவுகள் உங்களது மொத்த சேவைக்காலத்திலிருந்து கழிக்கப்படுவதில்லை. இந்த சம்பளமற்ற லீவுகள் ஓரே தடவையில் எடுத்திருந்தாலும் பகுதி பகுதியாக எடுத்திருந்தாலும் விதிவிலக்கு வழங்கப்படுகின்றது.
உங்களது சேவைக்காலம் 30 வருடத்திலும் அதிகம் இருக்குமாயின் உங்களது 30 வருடத்திலும் கூடிய அனைத்து வருடங்களையும் நீங்கள் பெற்றிருக்கின்ற சம்பளமற்ற விடுமுறைக்கு மாற்றூடு செய்துகொள்ளலாம்.. அதாவது நீங்கள் 35 வருட சேவைக்காலத்தைப் பெற்று 3 வருடங்கள் சம்பளமற்ற லீவு பெற்றிருக்கின்றீர்களானால் 30 வருடத்துக்கு மேலதிகமாக இருக்கின்ற 5 வருடங்களில் இருந்து இந்த மூன்று வருடங்களை கழித்துவிடலாம். இன்னும் இரண்டு வருடங்கள் லீவு பெற்றிருந்தாலும் அது உங்களது ஓய்வூதியக் கெடுப்பனவுக்கு பாதகமாக அமைவதில்லை.
உங்களது பதவி உயர்வுக்குத் தேவையான உயர் கல்வித் தகைமை ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு சம்பளமற்ற கல்வி லீவு ஒன்றினைப் பெற்றிருப்பீர்களாயின் அதுவும் கழிக்கப்படுவதில்லை.
பிள்ளை பேற்றின் பின்னர் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை உரிய அனுமதியுடன் பெற்றிருப்பீர்களானால் அதுவம் உங்களது சேவைக்காலத்திலிருந்து கழிக்கப்படுவதில்லை
1970.04.01 ஆம் திகதி ஓய்வூதியத்திட்டத்துடன் தொடர்பான சம்பளமற்ற விடுமுறைகளும் கழிக்கப்படுவதில்லை.
கீழே குறிப்பிடப்படுவது சலுகையின்றி கழிக்கப்படுகின்ற சம்பளமற்ற லீவு விபரமாகும்.
மேலே குறிப்பிட்ட சலுகை வழங்க முடியுமான சம்பளமற்ற லீவுகள் தவிர்ந்த மற்றைய அனைத்துமே மொத்த சேவைக்காலத்திலிருந்து கழிக்கப்படுவதாகும். இந்த சம்பளமற்ற லீவுகள் கழிக்கப்பட்ட பின்னர் கிடைக்கின்ற சேவைக்காலம் நிகர சேவைக்காலம் எனப்படும். இவ்வாறு கழிக்கப்படுகின்ற சம்பளமற்ற லீவுகளுக்காக உங்களது ஓய்வூதியக் கொடுப்பனவுக்கான வீதத்திவ் குறைவு ஏற்படும். இங்கு நீங்கள் பெற்றிருக்கின்ற லீவின் அடிப்படையில் 6 மாதங்கள் அல்லது அதன் பகுதிகளுக்க 1% என்ற அடிப்படையில் கழிக்கப்படும்.
(ஆ) தொழிலுடன் தொடர்பான பயிலுனர் காலப்பகுதி ஓய்வூதியத்துக்கான சேவைக்காலத்துடன் சேர்க்கப்படும். இதற்காக குறித்த பயிற்சிக் காலத்திற்காக சம்பளம் அல்லது ஏதாவது கொடுப்பனவு வழங்கப்பட்டதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கபடவேண்டும்.
(இ) பயிலுனர் பட்டதாரிகளின் அரச சேவையின் பயிலுனர் காலம். இதுவம் உங்களது மொத்த வேவைக்காலத்துடன் சேர்க்கப்படும்.
(ஈ) தற்காலிக அல்லது அமைய அடிப்படையிலான சேவைக்காலம். இந்தக். காலப்பகுதியை மொத்த சேவைக்காலத்துடன் இணைத்துக்கொள்வதற்காக குறித்த காலப்பகுதிக்குரிய விதவைகள் அநாதைகள் நிதியத்திற்கான பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்.
(எ) அரச ஊழியர் சேமலாபத்திற்கு பங்களிப்புச் செய்த காலப்பகுதி இந்தக். காலப்பகுதியை மொத்த சேவைக்காலத்துடன் இணைத்துக்கொள்வதற்காக குறித்த காலப்பகுதிக்குரிய விதவைகள் அநாதைகள் நிதியத்திற்கான பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்
(ஏ) சிலர் அரச சேவையில் இருந்துகொண்டு அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரிவதுண்டு. இந்த சேவைக்காக அவர்கள் அரச சேவையிலிருந்து செல்வதற்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அரச சேவையின் அவர்களுக்கான தொழில் அவ்வாறே இருக்கும். குறித்த காலம் முடிந்ததும் வந்து மீண்டும் அரச சேவையில் இணைந்து கொள்வார்கள் இது இரட்டை சேவை முறை என அழைக்கப்படும். இவ்வாறான சேவைக்காலங்களை மொத்த சேவைக்காலத்துடன் இணைக்க வேண்டுமாயின் சம்பளத்தில் 25% இனை மாதாந்தம் விதவைகள் அநாதைகள் நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்யவேண்டும்.
ஓய்வூதியக் கணீப்பீடானது ஓய்வு பெறுகின்றவர் இறுதியாகப் பெற்றுக்கொள்கின்ற மாதாந்த அடிப்படைச் சம்பளத்தை வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் குறித்த ஓய்வு பெறுகின்றவர் இறுதியாக சம்பள ஏற்றம் பெற்ற தினத்திலிருந்து ஓய்வு பெறுகின்ற நாள் வரையான காலத்தில் அவருக்கு கிடைக்க வேண்டி சம்பள ஏற்றாத்தின் தெகையையும் மேற்படி அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படுகின்றது. (உதாரணமாக மாதாந்த சம்பள ஏற்றம் 1000 ரூபாவாயின் அவர் முழு வருடத்துக்கும் பெறுகின்ற சம்பள ஏற்றம் 12000 ரூபாவாகும். இந்த வருடத்துக்கான சம்பள ஏற்றத்தினை 365 தினங்களால் பிரித்து அவரது சம்பள ஏற்றம் பெறுகின்ற தினத்துக்கும் ஓய்வு பெறுகின்ற தினத்திற்கும் இடையிலான மெத்த நாட்களின் கூட்டுத் தொகையால் பெருக்க வரும் தொாகை ஈட்டிய சம்பள ஏற்றம் என்ற அடிப்படையில் அவரது மொத்த சம்பளத்துடன் சேர்க்கப்படும்)
ஓய்வூதியத்துடன் உரித்துடைய கொடுப்பனவுகள்.
சில குறிப்பிட்ட பதவிகளுக்காக ஓய்வூதியம் உரித்துடைய அடிப்படையிலான கொடுப்பனவுகள் வழங்கப்படிகின்றன. (உதாரணம் - வைத்திய சேவை பொலிஸ் சேவை, ) ஓய்வூதியம் கணக்கிடும் போது மேற்படி கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெற முடியுமான 8 சந்தர்பங்கள் தொடர்பான பதிவை கீழுள்ள லிங்கில் வாசிக்கலாம்
ஒருவர் ஓய்வு பெறுகின்ற போது அவர் இறுதியாகப் பெற்றுக்கொண்ட மாதாந்த சம்பளம் அப்படியே ஓய்வூதியக் கொடுப்பனவாக வழங்கப்படுவதில்லை. அவர் இறுதியாகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட (%) விகிதமே அவருக்கு மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவாகக் கிடைக்கப்பெறும்.
இந்தி விகிதம் என்ன என்பதனைக் கண்டறிவதற்காக விசேடமான ஒரு அட்டவணை பயன்படுத்தப்படுகின்றது. குறித்த அட்டவணையில் சேவைக்காலம் 25 வருடம் முதல் 30 வருடம் வரையிலான விகிதம் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கும். இங்கு 30 வருடங்களுக்கு மேலதிகமாக வருகின்ற சேவைக்காலங்கள் கணக்கிலெடுக்கப்டுவதில்லை. அதாவது ஓய்வூதியக் கணிப்பீட்டுக்காக சேர்க்கப்படுகின்ற ஆகக்கூடிய சேவைக்காலம் 30 வருடங்களாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சம்பளமற்ற லீவுகள் 30 வருடத்திலும் கூடிய சேவைக்காலத்திலிருந்து கழிக்கப்படுகின்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இங்கு யாருக்கேனும் 25 வருடத்திலும் குறைந்த சேவைக்காலம் காணப்படுமாயின் அவ்வாறு குறைகின்ற ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அல்லது அதனது ஒரு பகுதிக்கு 1% என்ற அடிப்படையில்25 வருடத்துக்குரிய வீதத்திலிருந்து கழிக்கப்படும். உதாரணமாக ஒருவரது சேவைக்காலம் 20 வருடங்களாயின் அவருக்கான ஓய்வூதிய வீதம் கணக்கிடும் போது 25 வருடத்துக்குரிய வீதத்திலிருந்து 10% கழிக்கப்படும்.
அட்வணையினைப் பயன்படுத்தி சம்பளத்தை கணிக்கும் முறை
இந்த அட்டவணையில் மேற்பகுதியல் குறிப்பிடப்பட்டிருப்பது வருடங்களாகும்
இடது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது வருடாந்த சம்பளமாகும்
ஓய்வூதியக் கணிப்பீட்டினை சரியாக விளங்கிக்கொள்வதற்கு ஒரு உதாரணம் குறிப்பிகின்றேன்
2021.06. 01 ஆம் திகதி ஓய்வு பெறுகின்ற ஒருவரின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் சம்பளம் 50,000 ரூபா ஆகும். அவரது வருடாந்த சம்பள ஏற்றம் 1000 ரூபா என்பதுடன் அவரது சம்பள ஏற்றத் திகதி ஜனவர் 01 ஆகும். அப்படியாயின் இறுதியாக சம்பள ஏற்றம் பெற்று 6 மாதங்களில் ஓய்வு பெறுவதனால் அவர் 1000 ரூபா கொண்ட 6 சம்பள ஏற்றங்களைப் பெற்றிருக்கின்றார்.
அந்த அடிப்படையில் அவரது வருடாந்த சம்மளம் 600,000 ரூபாவுடன் 6000 ரூபாவை சேர்க்க வேண்டும். (இங்கு சம்பள ஏற்றதமான 12,000 ரூபா 365 தினங்களினால் பிரித்து அசல் சேவையாற்றிய 6 மாதங்களுக்காக தினங்களினால் பெருக்கப்படவேண்டும். இங்கு இலகு படுத்துவதற்காக 6 மாத சம்பள ஏற்றதத் தொகையினை 6000 என அண்ணலவாக எடுத்துள்ளேன்) இப்போது அவரது ஈட்டிய சம்பள ஏற்றத்துடனான வருடாந்த மொத்த அடிப்படைச் சம்பளம் 606000 ஆகும். இதுவே ஓய்வூதியம் கணிப்பதற்கான வருடாந்த அடிப்படை சம்பளமாகும் . (அத்துடன் அவர் பொலிஸ் சேவை போன்ற ஒரு சேவையில் இருந்து அவருக்கு ஓய்வூதியம் உரித்துடைய கொடுப்பனவுக்ள ஏதும் வழங்கப்பட்டுருக்குமானால் அதுவும் இங்கு சேர்க்கவேண்டும். )
அந்த அடிப்படையில் அவரது வருட சம்பளம் 606,000 ரூபா எனும் தொகை மேலே குறிப்பிடப்பட்ட அட்வணையில் இடது பக்கம் குறிப்பிடப்பட்டுள்ள சம்மபளத் தொகுதியில் எந்தத் தொகுதியில் உள்ளடங்குகின்றது என்பதனைப் பார்க்க வேண்டும்.
இந்த தொகையானது அட்டவணையில் வலது பக்கமுள்ள சம்பள தொகுதில் ரூபா 580,501 - ரூபா 747600 என்பதில் அடங்குகின்றது. அதனை மேல் பகுதியில் உள்ள 26 வருடங்கள் என்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால்
குறைக்கப்படாத வீதம் 80 என்பதாகவும்
குறைக்கப்பட்ட வீதம் 70 என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஓய்வூதியப் பணிக்கொடை கணித்தல்
ஓய்வு பெறும் தினத்தில் வருடாந்த சம்பளம் -********
கூட்டுக-
ஈட்டிய சம்பள ஏற்றம். -******
ஓய்வூதியம் உரித்துடைய *****
கொடுப்பனவுக்ள
********
------------
ஓய்வூதியம் கணிப்பதற்கான சம்பளம் ********
இப்போது ஓய்வூதியப் பணிக்கொடை கணிப்பீடாக .....
வருடாந்த ஒய்வூதியக் கணிப்பீட்டிற்கான தொகையினை குறைக்கப்பட்ட வீதத்தினால் பெருக்கி மீண்டும் 2 ஆல் பெருக்க வேண்டும்.
உதாரணத்தின் அடிப்படையில் 606000.00 X 70% X 2
இங்கு 70% என்பது அட்டவணையில் பெறப்பட்டது என்பதுடன் ஓய்வூதியப் பணிக்கொடையாக இரண்டு வருட ஓய்வூதியக் கொடுப்பனவு ஓய்வு பெறும் தினத்தில் கொடுக்கபடுகின்றது என்பதானால் 2 ஆல் பெருக்கப்படுகின்றது.
அதனையே மாத சம்பளத்தில் கணிப்பதாயின் அடிப்படைச் சம்பளமாக மாத சம்பளத்தை இட்டு குறித்த விகித்தத்ினால் பெருக்கி மீண்டும் 24 மாதங்கிளினால் பெருக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் இவரது ஓய்வூதியப் பணிககொடை 848400. ஆகும்.
குறைக்கப்பட்ட மாதாந்த ஓய்வூதியமாக 606000 /12 x 70% = 35,000.00
குறைக்கப்பlhj மாதாந்த ஓய்வூதியமாக 606000 /12 x 80% = 40,400.00
இந்த அடிப்படையில் நோக்குமிடத்து மேற்படி நபர் ஓய்வு பெற்ற நாளில் ரூபா 848,400 எனும் தெகையைப் பணிக்கொடையாககப் பெறுவாரானால் அடுத்த பத்து வருடங்களுக்கு 35350.00 மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவினைப் பெற்று 11வது வருடம் முதல் 40,400.00 ரூபா ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவார்.
இவர் குறித்த ஓய்வூியப் பணிக்கொடையினைப் பெற்றுக்கொள்ளாதவிடத்து ஓய்வு பெற்ற நாள் முதல் 40, 400 ரூபா ஓய்வூதியத்தினைப் பெறுவார்
இந்தத் தொகையுடன் ஓய்வூதியத்திற்கான வாழ்கைச் செலவுக் கொடுப்பனவு ஏனைய பொடுப்பனவுகள் என்பன வழங்க்ப்படும்.
அடுத்த பதிவில் அரச உத்தியோகத்தர் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்கின்ற கொடுப்பனவுகள் குறித்து ஆரய்வோம்.