நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான
பொதுப் போட்டிப் பரீட்சை - 2021
பின்வரும் நாடளாவிய சேவைகளின் தரம் III பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- இலங்கை நிர்வாக சேவை
- இலங்கை கணக்காளர் சேவை
- இலங்கை திட்டமிடல் சேவை
- இலங்கை கல்வி நிர்வாக சேவை
- இலங்கை விஞ்ஞான சேவை
அதற்கான விண்ணப்பப்படிவங்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் றறற.னழநநெவள.டம எனும் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்நிலை (ழடெiநெ) முறையினூடாக மாத்திரமே விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலை மூலம் சமர்ப்பித்ததன் பின்னர் அதனை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியில் விண்ணப்பதாரியின் ஒப்பத்தை சான்றுப்படுத்தி, ஏற்புடையதாயின் நிறுவனத் தலைவரின் சான்றுரையுடன் விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று அல்லது அதற்கு முன்னர் ''பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனம் சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு"" எனும் முகவரிக்குக் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சை – 2021” எனத் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பப்படிவங்களை 2021, யு{லை மாதம் 17 ஆம் திகதி முதல் 2021, ஓகத்து மாதம் 23 ஆந் திகதி 24:00 மணி வரை அனுப்பி வைக்க முடியும்.
குறிப்பு : விண்ணப்பப்படிவத்தின் அச்சுப் பிரதியை பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் கட்டாயமானதாகும். அச்சுப் பிரதி தபாலில் காணாமற் போனதாக அல்லது தாமதமானதாகக் குறிப்பிட்டு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியாது. இறுதித் தினம் வரை விண்ணப்பப்படிவங்களைத் தாமதப்படுத்துவதன் காரணமாக ஏற்படும் நட்டங்களை விண்ணப்பதாரிகளே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
ஒன்லைனில் விண்ணப்பிக்கவும் விபரங்களைப் பதிவிறக்கவும் கிழே உள்ள தகவல்களில் கிளிக் செய்யவும்.