அரச உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருக்கும் போது மரணித்துவிடுவாராயின் அவரில் தங்கி வாழ்பவர்களாக கருதப்படுகின்றவர்கள் (விதவையாகின்றவர்கள், தபுதாரர்களாகின்றவர்கள் அனாதைகளாகின்றவர்கள்) பெற்றுக்கொள்ள முடியுமான கொடுப்பனவுகள் மற்றும் அவற்றபை் பெற்றுக்கெள்வதற்கான வழிமுறைகள் குறித்து பலர் அறிவதில்லை. இந்த விடயங்கள் குறித்து தௌிவு படுத்துவதற்காகா இந்த பதிவு தரப்படுகின்றது.
அரச சேவையில் இருப்பவர்கள் முறையாக ஓய்வு பெற்றுக்கொள்வதற்கு கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகளும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த கட்டுரையினை கீழுள்ள லிங்கில் வாசிக்கலாம்.
அரச ஊழியர் ஒருவரின் மரணத்தின் பின்னர் அவரில் தங்கி வாழ்பவர்கள் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்யவேண்டிய சில தகைமைகள் காணப்படுகின்றன.
- சட்டபூர்வமான அடிப்படையில் திருமணம் செய்திருத்தல். குறித்த அரச உத்தியோகத்தர் மரணிக்கும் போது அவரது திருமணமானது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். சட்ட ரீதியாக திருமணம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய முறையில் திருமணம் செய்திருந்து பின்னர் விவாகரத்துப் பெற்றிருப்பின் குறித்த விதவைக்கு அல்லது தபுதாரருக்கு குறித்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தில்லை.
- விதவைகள்/ தபுதாரர் அனாதைகள் கொடுப்பனவு உரித்துடனாக நியமனம் ஒன்றினைப் பெற்றிருத்தல் - குறித்த நியமனக் கடிதத்தில் நியமனம் நிரந்தரமானது என்பதாகவும் விதவைகள் அனாதைகள் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யவேண்டும் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- விதவைகள்/ தபுதாரர் அனாதைகள் நிதியத்தில் பதிவு செய்து அங்கத்துவ இலக்கம் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- விதவைகள் அனாதைகள் நிதியத்திற்கு தங்களது சம்பளத்திலிருந்து பங்களிப்புச் செய்திருத்தல் வேண்டும்.
எனவே அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்ற அனைவரும் தங்களுக்கான விதவைகள் / தபுதாரர் அனாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு தங்களைப் பரிவு செய்துகொள்வதுடன் பதிவின் போது வழங்கப்படுகின்ற அட்டையினை தங்களது துணைவர்களிடம் வழங்கி வைப்பது உத்தியோத்தரிகளி்ன் மரணத்தின் பின்னரான கொடுப்பனவுகளை துணைவர்கள் அல்லது பிள்ளைகள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும்.
அத்துடன் அரச சேவையில் இருப்பவர்கள் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றதன் பின்னர் மீண்டும் விவாகம் செய்து கொண்டிருப்பின் முறையாக விவாகரத்துப் பெற்ற விபரங்களை சுய விபரக் கோவைக்கு வழங்குவது அல்லது பாதுகாப்பாக வைத்து அவற்றை தனது மரணத்தின் மனைவியடம் கிடைக்கச்செய்வது சிறந்ததாகும். அவ்வாறில்லாத போது இவர் இன்னுமொரு திருமணம் முடித்தவர் என்பதாக யரனேும் ஒரு வாழ் மொழி மூலமாக உரிய அலுவலகத்துக்கு அறிவித்தால் கூட குறித்த திருமணம் செல்லுாடியற்றது என்பதனை நிரூபிக்கும் வரையில் மரணத்தின் பின்னரான கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியாது போகலம்.
விதவைகள் தபுதாரர் அனாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கு மீள் பதிவு செய்துகொள்வது தொடர்பான கட்டுரையினை கீழுள்ள பதிவில் பார்வையிடலாம்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் மரணிப்பாராயின் அவரது மரணம் குறித்து அவர் பணிபுரிகின்ற காரியாலயத்துக்கு அறிவிக்க வேண்டும். குறித்த உத்தியோகத்தர் ஓய்வு பெற்ற நிலையில் மரணிப்பாரானால் அவரது மரணம் குறித்து பிரதேச செயலயத்திற்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் உரிய படிவங்களைப் பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் ஊடாக அவரில் தங்கி வாழந்த விதவைகள் அனாதைகள் என்போர் ஓய்வூதியத்தினைப அல்லது நலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விதவைகள்/ தபுதாரர் அனாதைகைள் திட்டத்தின் கீழ் மரணித்த உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு கீழ்வரும் அடிப்படையிலான நலன்கள் கிடைக்கின்றன.
1 . மரணப் பணிக்கொடை
மரணப் பணிக்கொடை எனப்படுகின்ற வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவினைப் பெறுவதற்கு குறித்த அரச உத்தியோகத்தர் நிரந்தரமான அரச சேவையில் 5 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்திசெய்திருக்கவேண்டும். இந்த சேவைக்காலம் பூர்திசெய்யப்படாதவிடத்து மரணப் பணிக்கொடையானது அவரது குடும்பத்தின் உரித்துடையவர்களுக்கு கிடைப்பதில்லை.
இந்தக் கொடுப்பனவானது குறைக்கப்படாக வருடாந்த ஓய்வூதியக் கொடுப்பனவின் இரண்டு மடங்கு அல்லது இறுதியாக பெற்ற சம்பளத்தின் ஒரு வருட சம்பளம் ஆகிய இரண்டிலும் எது கூடிய தொகையாகக் காணப்படுகின்றதோ அந்தத் தொகை கிடைக்கப்பெறும்.
உரித்துடையவர்கள் என்போர் யார்?
விதவைகள், தபூதார்கள், அனாதைகள், அங்கவீனமுள்ள பிள்ளைகள் ஆகியோரே இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாகக் கருதப்படுகின்றனர். 21 வயதுக்குக் குறைந்த ஆண் பிள்ளைகள், 21 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பெண் பிள்ளைகள், 21 வயது முதல் 26 வயது வரையான தொழில் ஏதும் இல்லாத ஆண் பிள்ளைகள் 21 வயது முதல் 26 வயது வரையான தொழில் ஏதும் இல்லாத பெண் பிள்ளைகள் ஆனாதைகள் என்பதாகக் கருதப்படுகின்றனர். வைத்தியர் குழு ஒன்றினால் அங்கவீனம் உள்ளவர் என்பதாக அல்லது உளவியல் நோய்க்கு உள்ளாகியிருப்பபவர் என்பதாக சான்றுறுதிப்படுத்தப்படுபவர்கள் அங்கவீனர்களாகக் கருதப்படுவர்.
மரணித்தவர் திருமணமாகாதவராக இருப்பாரானால் அவரது தாய் தந்தை இருவருக்கும் சமமான கொடுப்பனவு வழங்கக்படும்.
மரணித்தவர் திருமணமாகாத நிலையில் தாய் தந்தையரும் இல்லாதவிடத்து அவரில் தங்கி வாழ்ந்த தொழில் இல்லாத சகோதரர்/ தகோதரியர்களுக்கு சம பங்குகளாக வழங்கப்படும்.
மரணப் பணிக்கொடை பங்கிடப்படுகின்ற முறை
மேற்குறிப்பிட்ட அடிப்படையிலான அனாதைகள் இல்லாதபோது சேவைக் காலத்தினை அடிப்படையாகக் கொண்டு மரணப் பணிக்கொடையினை கணக்கிடப்பட்டு முழுமையான மரணப் பணிக்கொடை குறித்த விதவைக்கு அல்லது தபுதாரருக்கு வழங்கப்படும். அநாதைகள் இருக்குமிடத்து மரண பணிக்கொடையில் 50% விதவைக்கு அல்லது தபுதாரருக்கும் 50% அநாதைகளுக்கும் என்ற அடிப்படையில் சமமாகப் பங்கிடப்படும்.
அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற முடியுமான 8 சந்தர்ப்பங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரையினை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிச் செய்யவும்
விதவைகள் தபுதாரர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவினை விதவை அல்லது தபுதாரர் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவதற்கு மரணித்த துணைவரின் சேவைக்காலம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அதாவது மரணித்த அரச ஊழியர் நிரந்தர ஓய்வூதியம் உரித்துடையவராக இருக்கும் போது அவர் மரணித்த தினத்திலிருந்தே (நியமனம் பெற்று சேவையினைப் பொறுப்பேற்று இவ்வாளவு காலம் சேவையாற்றியிருக்கவேண்டும் என்ன வரையறை இல்லாத அடிப்படையில்) அவரது துணைவருக்கு மாதாந்த விதவைகள் அநாதைகள் கொடுப்பனவு உரித்துடையதாகின்றது. மரணித்த அந்த உத்தியோகத்தர் இறுதியாகப் பெற்றுக்கொண்ட மாதாந்த சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு மாதாந்த விதவைகள் அனாதைகள் கொடுப்பனவு கணிக்கப்படும். குறித்த மாதாந்தக் கொடுப்பனவானது இறுதியாகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தின் 50% முதல் 85% வரை சேவைக்காலத்திற்கு அமைய கணக்கிட்டு வழங்கப்படும்.
03. அனாதைகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு.
மரணித்த அரச உத்தியோகத்தரின் துணைவரான விதவை அல்லது தபுதாரரரின் மரணத்தின் பின்னரே அனாதைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். குறித்த துணைவரான விதவை அல்லது தபுதாரர் மரணிக்கும் போது குறித்த பிள்ளைகள் மேலே குறிப்பட்ட தகைமைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறித்த வயதெல்லையினை அடையும் போது அனாதைகளுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும்.
04. அங்கவீனர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு.
அங்கவீனமுள்ள அனாதை ஒருவராயின் அவருக்கான மாதாந்த அனாதை ஓய்வூதியக் கொடுப்பனவானது குறித்த உத்தியோகத்தரின் துணைவரின் மரணத்தின் பின்னரே கிடைக்கப்பெறும். குறித்த உத்தியோகத்தரின் துணைவர் மரணித்த தினத்திலிருந்து அங்கவீனமுள்ள பிள்ளை மரணிக்கும் வரை மாதாந்தக் கொடுப்பனவு கிடைக்கப்பெறும். அங்கவீனமுள்ள பிள்ளை தனது பணிகளை தாமாகவே செய்துகொள்ள முடியாமத நிலையில் இருப்பார்களாயின் அவர் பொறுத்தமான பாதுகாவலர் ஒருவரது பராமரிப்பிற்கு உட்படுத்தி பராமரிப்பாளருக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியப் பணிக்கெடை மற்றும் மாதாந்தம் பெறுகின்ற ஓய்வூதியக் கொடுப்பனவுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்ற முழு விபரம் அடங்கிய பதிவினைப் பார்வையிட கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
05. மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் போது விதவைகள் அனாதைகள் கொடுப்பனவுகள்
விதவை அல்லது தபுதாரர் பொடுப்பனிவனைப் பெறுகின்றவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் போது கிடைக்கின்ற கொட்டுப்பனவில் 50% கிடைக்கப்பெறும். இந்த திருத்தம் 2010 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க விதவைகள் அநாதைகள் நிதிய சட்டமூலத்தின் திருத்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.