அபிவிருத்தியடைந்து வருகின்ற தொழில்த்துறைகளின் தேவைப்பாடுகளை நிவர்த்திசெய்வதற்காக மோட்டார் வாகன பொறியியல் சார்ந்த பயிற்சிகளை வார நாட்களில் இலவசமாகவும் வார இறுதி நாட்களில் கட்டணங்களுடனும் வழங்குகின்ற நிறுவனமொன்றாக Automobile Engineering Training Institute எனும் நிறுவனம் காணப்படுகின்றது.
சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் எரிவாயு மற்றுத் டீசல் ஊடாக செயல்படுகின்ற மோட்டார் வாகங்கள் மற்றும் சிறிய ரக டிபர் வாகனங்கள் என்பவற்றை மாத்திரம் பழுதுபார்க்கின்ற மற்றும் பராமரிப்பதற்கான பயிற்சிகளையும் களப் பயிற்சிகளையும் பெற்று குறித்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் பாரிய பங்காற்றுகின்றது.
இந்த நிறுவத்தில் பயில்கின்றவர்களுக்கு கிடைக்கின்ற நலன்கள்
01. அனைவருக்கும் பயிற்சிக்கான சீருடை வழங்கப்படும்.
02. குறைந்த வருமானம் ஈட்டுகின்ற குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
03. பாடநெறிக் காலப்பகுதியில் கனனி அறிவும் ஆங்கில அறிவும் வழங்கப்படும்.
04.வாசிகசாலை வசதியுடன் சுற்றுலாக்களும் ஒழுங்கு செய்யப்படும்.
ஒப்பந்தம்.
இந்த நிறுவனத்திற்கு தெரிவாகின்றவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். பாடநெறி நிறைவடையும் வரையில் ஒழுக்கமாக இருந்துகொள்வதாகவும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கும்.
பாடநெறிகளுக்கு தெரிவு செய்யும் முறை உரிய தகைமையினைப் பூர்தி செய்தவர்களுக்கு கணிதம் மற்றும் பொது அறிவு கொண்ட 1 மணித்தியாலய வினாப்பத்திரம் ஒன்றின் ஊடாக தகுதி காண் பரீட்சை நடாத்தப்படும். இந்த பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் பாடநெறிகளுக்காகத் தெரிவு செய்யப்படுவர்.
23 வகையான தொழில்நுட்ப பாடநெறிகளை இலவசமாக வழங்குகின்ற University College நிறுவனம் தற்போது விண்ணப்பங்களைக் கோரியிருக்கின்றது அது தொடர்பான விபரங்களை கீழே உள்ள லிங்கில் பார்வையிடலாம்
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் விண்ணப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தினைப் பூரித்தி செய்து நிறுவனத்தின் பெயரில் மக்கள்வங்கி தொமடகொட கிளையில் உள்ள 071100103320674 வங்கிக் கணக்கிலக்கத்திற்கு 400 ரூபா விண்ணப்பக் கட்டணத்தை வைப்பிலிட்டு Automobile Engineering Training Institute is located at 69/A, Baseline Road, Orugodawatta, Wellampitiya.எனும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
நிறுவனத்தின் காணப்படுகின்ற பாடநெறிகளின் விபரம் கீழே தரப்பட்டிருக்கின்றன. ஒரு விண்ணப்பதாரி 3 பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிறுவனங்களில் தற்போது பயில்கின்றவர்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது.
Full Time Course (முழு நேர வகுப்புக்கள்)
இந்த நிறுவனத்தில் பாடநெறிக் காலத்தின் அடிப்படையில் மூன்று வகையான முழு நேரப் பாடநெறிகள் காணப்படுகின்றன.
3 ஆண்டுகள் கொண்ட பாடநெறி மற்றும் 2 ஆண்டுகள் கொண்ட பாடநெறிகளுக்கு பதிசெய்வதற்கான தகைமைகள் கீழே குறிப்பிடப்படிகின்றது.
சிங்களம் அல்லது தமிழ் ( தாய்மொழி), கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
1 1/2 வருட காலப் பாடநெறிகளுக்காக அரச பாடசாலை ஒன்றில் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை ஒன்றில் 8 ஆம் ஆண்டு படித்திருப்பது போதுமானதாகும்.
அத்துடன் கணனிப் பயிற்சிநெறி ஒன்றும் காணபடுகின்றது.
க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் ஆங்கிலம் என்பவற்றுடன் 4 திறமைச்சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
பாடநெறிகளில் பங்குபற்றுவதற்கான வயதெல்லை - 16 வயது முதல் 25 வயது வரையானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வார இறுதி நாட்களில் நடைபெறுகின்ற கட்டணம் செலுத்தவேண்டிய பாடநெறிகளுக்கான தகைமைகள்
அடுத்த விண்ணப்பம் எப்போது கோரப்படும்
சென்ற வருடங்களில் செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன அந்த அடிப்படையில் இந்த வருடமும் செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பங்கள் கோரப்படலாம் என எதிர்பார்க்க முடிகின்றது.
Automobile Mechanic
மோட்டர் வாகனங்கள் திருத்துவது தொடர்பான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தகைமை - கணிதம் விஞ்ஞானம், தமிழ்/சிங்களம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சை இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைதல்.
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
பயிற்சிக் கால அளவு - 3 வருடங்கள்.
பாடநெறிக் கட்டமைப்பு -
1ஆம் வருடம் - பயிற்சி வகுப்புக்கள்
2 ஆம் 3 ஆம் வருடங்களில் களப் பயிற்சி
தெரிவு செய்யும் முறை -
தகுதிகாண் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை
Automobile Electrician
மோட்டர் வாகனங்களின் மின்னியல் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தகைமை - கணிதம் விஞ்ஞானம், தமிழ்/சிங்களம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சை இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைதல்.
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
பயிற்சிக் கால அளவு - 3 வருடங்கள்.
பாடநெறிக் கட்டமைப்பு -
1ஆம் வருடம் - பயிற்சி வகுப்புக்கள்
2 ஆம் 3 ஆம் வருடங்களில் களப் பயிற்சி
தெரிவு செய்யும் முறை -
தகுதிகாண் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை
Machinist
இயந்திரவியல் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் சீ.என்.சீ புரோகிராழிங் CAM புரோகிராமிங், லேத் மெஷின் போன்ற இயந்திரப் பயன்பாடு குறித்த பூரண விளக்கத்துடன் இயந்திரவியல் பொறியியல் துறையுடன் தொடர்பான ஹெட் பெய்ன், போரிங், ஹோனின், கிரேன்க் கிரைன்டின், டூல் கடர் கிரைன்னடின் உட்பட அனைத்துவிதமான இயந்திரவியல் தொழில்நுட்பங்களும் இந்தப் பாடநெறியில் உள்ளடங்குகின்றது.
நுழைவுத் தகைமை - கணிதம் விஞ்ஞானம், தமிழ்/சிங்களம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சை இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைதல்.
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
பயிற்சிக் கால அளவு - 3 வருடங்கள்.
பாடநெறிக் கட்டமைப்பு -
1ஆம் வருடம் - பயிற்சி வகுப்புக்கள்
2 ஆம் 3 ஆம் வருடங்களில் களப் பயிற்சி
தெரிவு செய்யும் முறை -
தகுதிகாண் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை
Automobile Electrician
இயந்திரவியல் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தகைமை - கணிதம் விஞ்ஞானம், தமிழ்/சிங்களம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சை இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைதல்.
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
பயிற்சிக் கால அளவு - 3 வருடங்கள்.
பாடநெறிக் கட்டமைப்பு -
1ஆம் வருடம் - பயிற்சி வகுப்புக்கள்
2 ஆம் 3 ஆம் வருடங்களில் களப் பயிற்சி
தெரிவு செய்யும் முறை -
தகுதிகாண் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை
Automobile A/C Mechanic
வாகனங்களின் காற்றுப் பதனிடல் (எயார் கண்டிஷன்) சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தகைமை - கணிதம் விஞ்ஞானம், தமிழ்/சிங்களம் உட்பட 6 பாடங்களில் க.பொ.த (சா/த) பரீட்சை இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைதல்.
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
பயிற்சிக் கால அளவு - 2 வருடங்கள்.
பாடநெறிக் கட்டமைப்பு -
1ஆம் வருடம் - பயிற்சி வகுப்புக்கள்
2 ஆம் வருடத்தில் களப் பயிற்சி
தெரிவு செய்யும் முறை -
தகுதிகாண் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை
Automobile Tinker & Automobile Painter
வாகன மேற்பரப்பு பராமரிப்பு பழுழுபார்த்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் இந்தப் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தகைமை - அரச பாடசாலை ஒன்றில் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை ஒன்றில் 8 ஆம் ஆண்டு படித்திருப்பது
பாடநெறி ஊடாக கிடைக்கும் தகைமைகள்.
01. தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் தரம் - 4
02. மோட்டர் வாகன பொறியில் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழ்.
"இந்தப் பாடநெறிகளுக்கான தகைமைகளாக க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் அள்ளது தமிழ் மொழி மூலம் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதாக இருந்தபோதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பாடநெறி சிங்கள மொழி வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே பிரசுரமாகியிருந்தது. அதிலும் சிங்கள மொழித் தகைமைகள் மாத்திரமே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டருந்தது.
தமிழ் பேசுகின்றவர்களினதும் வரிப் பணத்தினை பயன்படுத்தியே இது போன்ற பயிற்சிநெறிகள் நடாத்தப்படுதவதானால் இந்த முறையும் சிங்கள மொழி மூலம் சாதாரண பரீட்சை எழுதியவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம் என்பதக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படுமாயின் அது குறித்து நிறுவனத்தின் தொலைபேசி இலக்கங்களில் அது குறித்து வினவுங்கள்.
Director / Principal: 0112532180 Deputy Principal (Industrial Training): 0112531843 Registrar: 0112532182 General: 0112572977 0112532180