இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பது பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் 9 வது இடத்தில் இருக்கின்ற அரச பல்கலைக்கழகமொன்றாகும். (சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் 5 வது இடத்தில் இது இருந்தது. இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் ஊடாக 18 வகையான பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஒக்டோபர் மாதத்தில் விண்ணப்பம் கோரப்படவுள்ள Bachelor of Science பட்டப்படிப்பு குறித்த விடயங்கள் இந்த பதிவில் தரப்படுகின்றன.
இந்தப் பாடநெறிக்கான பதிவுகள் 2023 பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
இந்தப் பாடநெறிக்கான தகைமைகள் யாது.
க.பொ.த (உ/த) அல்லது விஞ்ஞானத்துறையில் 3 பாடங்கள் சித்தியடைந்திருப்பின் (ஒரே தடவையில் என்ற கட்டுப்பாடு இங்கு இல்லை) இந்த பாடநெறிக்காக பதிவுசெய்துகொள்ளலாம். ஏதேனும் ஒரு பாடம் சித்தியடையாதிருப்பின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அடிப்படைப்பாடநெறியினைப் பயின்று (foundation course) இந்தப் பாடநெறிக்காக விண்ணப்பிக்கலாம். அத்துடன் வேறுதுறைகளில் க.பொ.த (உ/த) பயின்றவர்கள் மற்றும் சாதாரண தரம் சித்தியடைந்தவர்கள் மேற்படி (foundation course) இனை பூர்த்தி செய்துவிட்டு இந்தப் பாடநெறியினைத் தொடரலாம்.
இந்தப் பாடநெறி குறித்து பூரண விளக்கத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் வாசித்து பெற்றுக்கொள்ளலாம்.
திறந்த பல்கலைக்கழகம் Bachelor of Science - BSc எனும் பட்டத்தையே இந்தப் பாடநெறிக்காக வழங்குகின்றது. இந்த பாடநெறியில் Chemistry, Physics, Pure Maths, Applied Maths, Botany, Zoology , Computer Science ஆகிய 7 பிரதான பாடங்களில் 3 பாடங்கள் தெரிவுசெய்யவேண்டும். Zoology, Botany ஆகிய பாடங்களை உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவு பயின்றவர்கள் மாத்திரமே தெரிவு செய்யலாம். Pure Maths ,Applied Maths ஆகிய பாடங்களை உயர் தரத்தில் கணிதப் பிரிவு பயின்றவர்கள் மாத்திரமே தெரிவு செய்யலாம் Physics, Chemistry, Com. Science ஆகிய பாடங்களை மேற்படி இரண்டு பிரிவினருமே தெரிவு செய்யலாம். இவை தவிர பாடநெறிக்குரிய கிரடிட்கள் பூரணப்படுத்தும் அடிப்படையிலான மேலும் பாடங்களையும் தெரிவு செய்யவேண்டும்.
கட்டண விபரம்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திப் பொறுத்த வரை பாடநெறிகளுக்காக கட்டணம் அறவிடப்படும் ஒரு முறை காணப்படுகின்றது. ஒவ்வொரு பாடநெறிகளிலும் உள்டங்குகின்ற பாடநெறிகள் credit களின் அடிப்படையில் குறிப்பிடப்படும். இந்தப் பாடநெறியினைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு 30 கிரடிட்கள் என்ற அடிப்பயைடில் 3 வருடங்களுக்கு 90 கிரடிட்களை உள்ளடக்கியிருக்கினறது. 2020 ஆம் ஆண்டில் ஒரு credit இற்கு ரூபா 2310/= கட்டணமாக அறவிடப்பட்டது. இந்தக் கட்டணம் வருடாந்தம் 10% அதிகரித்துச் செல்வதுண்டு.
அந்த வகையில் பாடநெறிக் கட்டணம் உட்பட ஏனைய கட்டண விபரம் கீழே குறிப்பிடப்படுகின்றது.
முதல் வருடத்துக்கான கட்டணமாக ரூபா 75000 ரூபா அளவில் அமையலாம். அந்த அடிப்படையில் ரூபா 225,000 எனும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் 3 வருட முடிவில் பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கட்டணங்கள் தெரிவு செய்கின்ற பாடங்களின் அடிப்படையில் வேறுபடலாம்.
கட்டணங்களில் 40% பதிவின்போது செலுத்த வேண்டும் என்பதுடன் மீதியை 5 மத முடிவில் செலுத்தலாம்.
அத்துடன் விண்ணப்பக் கட்டணம் : ரூ.350/= அரவிடப்படும்.
இவற்றுக்கு மேலதிகமாக பாடநெறிக்காலத்தில் கீழ்க்குறிப்பிடப்படும் பாடநெறிகளையும் கட்டாயமாக பயில வேண்டும்.
FDE3020 Empowering for Independent Learning ( EfIL) - (Free)
• LEE3410 English General Academic Purposes (EGAP) - Rs. 5500/=
• CSE3213 ICT Skills - Rs. 3000/=
பாடநெறிகள் காணப்படுகின்ற நிலையங்கள்.
Colombo Regional Centre
Kandy Regional Centre
Matara Regional Centre -
Batticaloa Regional Centre
Jaffna Regional Centre
Anuradhapura Regional Centre -
Badulla Regional Centre -
Kurunegala Regional Centre -
Rathnapura Regional Centre -