>

ad

GCE A/L Subject combination & Subject Combination for University Entrance in Tamil




க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்குத் தெரிவாகின்ற போது தமது எதிர்கால எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப உயர் தரப் பாடங்களையும் துறைகளையும் தெரிவு செய்து கொள்வதில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். 

மாணவர்கள் உயர் தரத்தில் தெரிவு செய்கின்ற பாடங்கள் அவர்கள் பல்கலைக் கழகங்களில் பட்டம் ஒன்றினைத் தெரிவு செய்யும் போது செல்வாக்குச் செலுத்துவதால் உயர் தரப் பாடத் தெரிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் கல்வி அமைச்சானது மாணவர்கள் உயர் தரப் பாடத் தெரிவினை மேற்கொள்வதற்கு உதவியாக சுற்றுநிருபம் ஒன்றினை வௌியிட்டிருக்கின்றது. 

அந்த சுற்று நிருபத்தின் துணையுடன் உயர் தரப் பாடப் பிரிவுக்கான வழிகாட்டலை லங்கா ஜொப் இணையத்தளம் உங்களுக்காக வழங்குகின்றது. 

உயர் தர பாடங்களின் கட்டமைப்பு 


க.பொ.த (உயர் தர) வகுப்புக்களில் மூன்று பிரதான பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன், ஒரு பாடத்துக்கென ஒரு வாரத்தில் 10 பாடவேளைகள் ஒதுக்கப்படும். இதற்கமைய, தெரிவு செய்கின்ற 03 பிரதான பாடங்களுக்கும் 30 பாடவேளைகள் ஒதுக்கப்படும். எஞ்சிய 10 பாடவேளைகளில் 06 பாடவேளைகள் பொது ஆங்கிலப் பாடத்துக்காக ஒதுக்கப்பட வேண்டியதுடன், பொது தகவல் தொழில்நுட்பம் (GIT) பாடத்துக்காக 12ஆம் தரத்தில் மாத்திரம் 02 பாடவேளைகளை ஒதுக்குதல் வேண்டும். 12ஆம் தரத்தில் எஞ்சிய 02 பாடவேளைகளையும் 13ஆம் தரத்தில் எஞ்சிய 04 பாடவேளைகளையும் பாடசாலை முகாமைத்துவக் குழுவின் விருப்பத்தின் பிரகாரம் மாணவர்களது கல்வி வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையில் பயன்படுத்துதல் வேண்டும்.


விதிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் 13ஆம் தரத்தின் இறுதியில் பிரதான 03 பாடங்களுடன் பொதுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கில பாடப் பரீட்சைக்குத் தோற்றுதல் வேண்டும். பொது ஆங்கில பாடத்தில் பெறப்படும் புள்ளியோ அல்லது சித்தியோ பல்கலைக்கழக அனுமதியின்போது கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் குறித்த பாடத்தில் பெறப்படும் பெறுபேறு க.பொ.த (உயர் தரப் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்படும்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக பிரவேசத்தின் போது உயர் தரப்படாங்களில் 3 சாதாரண சித்தியுடன் பொதுப் பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றவர்களே பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர். எதிர்காலங்களில் இந்தப் புள்ளியின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் மாணவர்கள் இந்தப் பாடத்திலும் அதிக கரிசனை காட்டவேண்டும். 

 க.பொ.த.(உயர் தர) பாடத்துறைகளுக்கான பாடச்சேர்மானங்கள்

பாடசாலைகளில் தற்போது க.பொ.த. (உயர் தர) வகுப்புகளுக்காக மூன்று பிரிவுகளின் கீழ் (கலை/ வணிகவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பவியல்) ஆறு (6) பாடத்துறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.



கலைத்துறைப் பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 

வணிகத் துறை பாடப்பிரிவு பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 


 உயிரியல் விஞ்ஞானப் பாடத்துறை பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 


பௌதீக விஞ்ஞான பாடத்துறை பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 


உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாடத்துறை பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 


பொறியியல் தொழில்நுட்ப பாடத்துறை பாடங்கள் தொகுதியின் பாடத் தெரிவுகள் குறித்த விபரம் பெற கீழுள்ள லிங்கில்  கிளிக் செய்யவும். 




பல்கலைக்கழகப் பட்டப் பாடநெறிகளுக்கான பாடச்சேர்மானங்கள்
 பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்படும் இளமாணிப் பட்டப் பாடநெறிகளுக்கு அனுமதிப்பதற்காக மாணவர்கள் க.பொ.த. (உயர் தரம்) இல் பயில வேண்டிய பாடச்சேர்மானங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக இளமாணிப் பட்டப் பாடநெறிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான அடிப்படைத் தகைமையாக க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் குறிப்பிட்ட பிரதான மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பரீட்சையில் தேவையான புள்ளி மட்டத்தைப் பெற்றிருத்தலும் கட்டாயமானதாகும். ஆனாலும், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் அடிப்படை மற்றும் தெரிவுசெய்யப்படக் கூடிய எண்ணிக்கைக்கு ஏற்ப, அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும்.
9.2 பல்கலைக்கழக இளமாணிப் பட்டப் பாடநெறிகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விதப்புரை செய்யப்பட்டுள்ள க.பொ.த. (உயர் தர) பாடச்சேர்மானங்கள் மாத்திரம் கீழே காட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படுமாயின், குறிப்பிட்ட கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் "இலங்கைப் பல்கலைக்கழக இளமாணிப் பட்டப் பாடநெறிகளுக்கான அனுமதி” எனும் கையேட்டினைப் பரிசீலனை செய்தல் வேண்டும்.



(1) கலை (ARTS) 

கலைப் பாடத்துறையின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாகத் தெரிவு செய்யப்பட்ட 03 பாடங்கள்

(2) கலை (ஸ்ரீபாளி வளாகம்) (ARTS - SRIPALI CAMPUS)

கீழே குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கலைப் பாடத்துறையின்
கீழ் தரப்பட்டுள்ள 03 பாடங்கள்
• மொழிப்பாடங்கள் இரண்டிற்கு அதிகமாகத் தோற்றாதிருத்தல் வேண்டும்
. சமயங்களும் நாகரீகங்களும் தொகுதியிலிருந்து ஒரு பாடத்திற்கு அதிகமாகத்
தோற்றாதிருத்தல் வேண்டும்
* ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பவியல் பாடங்களுக்குத் தோற்றாதிருத்தல்
வேண்டும்
 பின்வரும் பாடங்களில் ஒன்றுக்கு அதிகமாகத் தோற்றாதிருத்தல் வேண்டும்
.* கணக்கியல்
* வணிகப் புள்ளிவிபரவியல்
* பொருளியல்
க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தது சாதாரண
சித்தி (S) பெற வேண்டுமென்பதுடன், தகுதிகாண் பரீட்சையிலும் சித்தியடைதல்
வேண்டும்.

(3) கலை (சப்ரகமுவ) - (ARTS - SABARAGAMUWA)

கலை, வணிகம் ஆகிய ஏதேனும் பாடத்துறைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட
03 பாடங்கள்

(4) தொடர்பாடல் கற்கைகள்  (COMMUNICATION STUDIES)

சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கு குறைந்தது திறமைச்
சித்தி (C) உடன் ஏதேனும் 03 பாடங்கள் க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் குறைந்தது திறமைச் சித்தியைக் (C) கொண்டிருத்தல் வேண்டும்

(5) சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் (PEACE & CONFLICT RESOLUTION)

யாதேனும் மூன்று பாடங்கள்

(6) இஸ்லாமிய கற்கைகள் (ISLAMIC STUDIES) 

இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீக பாடத்துடன் வேறு ஏதேனும் இரண்டு
பாடங்கள்

(7) அரபு மொழி (ARABIC LANGUAGE)

அரபு மொழியுடன் வேறு ஏதேனும் இரண்டு பாடங்கள்

(8) சங்கீதம்/ நடனம்! சித்திரம் மற்றும் வடிவமைப்பு/ நாடகமும் அரங்கியலும்/ கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் / கட்புலக் கலை (MUSICI DANCING/ ART & DESIGN/ DRAMA & THEATRE/ VISUAL & TECHNOLOGICAL ARTS/ VISUAL ARTS)


 கற்பதற்கு எதிர்பார்க்கும் பாடநெறி தொடர்பிலான பாடத்துக்கு (சங்கீதம்/ நடனம்/ சித்திரம்/ நாடகமும் அரங்கியலும்) குறைந்தது திறமைச் சித்தியுடன் (C) ஏனைய யாதேனும் இரண்டு பாடங்கள். இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையிலும் சித்தியெய்துதல் வேண்டும்.

(9) முகாமைத்துவம் முகாமைத்துவம் (பொது) சிறப்பு சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும்/ வணிகவியல் (MANAGEMENT / MANAGEMENT (PUBLIC) SPECIAL/ ESTATE MANAGEMENT & VALUATION/COMMERCE) 


மேற்குறிப்பிட்ட பாடநெறிகளுக்காக பின்வரும் பாடச்சேர்மானங்களில் ஒரு
பாடச்சேர்மானம்
(i) வணிகக் கல்வி, பொருளியல் மற்றும் கணக்கீடு அல்லது (ii) மேலே (i) இல் குறிப்பிடப்படும் பாடங்களில் இரண்டு பாடங்களும் பின்வரும் பாடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடமும் 
  • விவசாய விஞ்ஞானம்
  • புவியியல்
  • ஆங்கிலம்
  • இணைந்த கணிதம் அல்லது கணிதம்
  • பௌதிகவியல்
  • வரலாறு
  • அளவையியலும் விஞ்ஞான முறையும் வணிகப் புள்ளிவிபரவியல்
  • ஜேர்மன்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • அரசியல் விஞ்ஞானம்
  • பிரெஞ்சு

(10) முகாமைத்துவக் கற்கைகள் (திருகோணமலை மற்றும் வவுனியா) - MANAGEMENT STUDIES (TRINCOMALEE & VAVUNIA)


எந்தவொரு பாடத்துறையின் கீழும் ஏதேனும் 03 பாடங்கள்

(11) வியாபாரத் தகவல் முறைமைகள் (சிறப்பு)
BUSINESS INFORMATION SYSTEMS) (SPECIAL)


  • கணக்கியல்
  • வணிகக் கல்வி
  • பொருளியல்
  • மேலே குறிப்பிடப்பட்ட பாடங்களில் குறைந்தது 02 பாடங்களுடன் பின்வரும்
  • பாடங்களில் ஒரு பாடம் 
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • இணைந்த கணிதம் அல்லது கணிதம்
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • பௌதிகவியல்

(12) மருத்துவம் / பல் அறுவைச் சிகிச்சை/ விலங்கு மருத்துவ விஞ்ஞானம்  (MEDICINE/DENTAL SURGERY/VETERINARY SCIENCE)


பின்வரும் மூன்று பாடங்களும்
  • உயிரியல்
  • இரசாயனவியல்
  • பௌதிகவியல்

(13) விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
( (AGRICULTURAL TECHNOLOGY & MANAGEMENT)

பின்வரும் பாடச்சேர்மானங்களில் ஒரு பாடச் சேர்மானம்
(i) இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல்
(ii) இரசாயனவியல், பௌதிகவியல் அல்லது கணிதம், உயிரியல் அல்லது
விவசாய விஞ்ஞானம்
(ii) இரசாயனவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்


(14) விவசாயம் (AGRICULTURE)
மேற்குறிப்பிடப்பட்ட விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் பாடநெறிக்கான
பாடச்சேர்மானங்கள் (இலக்கம் 13ஐப் பார்க்கவும்)

(15) உணவு விஞ்ஞானமும் போசாக்கும்(FOOD SCIENCE & NUTRITION)

மேற்குறிப்பிடப்பட்ட விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
பாடநெறிக்கான பாடச்சேர்மானம் (இலக்கம் 13ஐப் பார்க்கவும்)

(16) உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
( (FOOD SCIENCE & TECHNOLOGY)

இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களும்,

(17) ஆயுர்வேதம்/ யுனானி, சித்த மருத்துவம் (AYURVEDA/UNANI/ SIDDHA)

உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் ஆகிய மூன்று பாடங்களும்

(18) உயிரியல் விஞ்ஞானம் (BIOLOGICAL SCIENCE)
  • உயிரியல், இரசாயனவியல் மற்றும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(19) பிரயோக விஞ்ஞானங்கள் (உயிரியல் விஞ்ஞானம்) (APPLIED SCIENCE-BIOLOGICAL SCIENCE)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள உயிரியல் விஞ்ஞான பாடநெறிக்காகத் தரப்பட்டுள்ள
சேர்மானம் (இலக்கம் 18ஐப் பார்க்கவும்)

(20) சுகாதார விருத்தி (HEALTH PROMOTION)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள உயிரியல் விஞ்ஞான பாடநெறிக்காகத் தரப்பட்டுள்ள
பாடச் சேர்மானம் (இலக்கம் 18ஐப் பார்க்கவும்)

(21) தாதியியல் (NURSING)

உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் ஆகிய மூன்று பாடங்களும்
க.பொ.த. (சா.தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது சாதாரண
சித்தியைப் (S) பெற்றிருத்தல்

(22) மருந்தகவியல் (PHARMACY)

இரசாயனவியலில் குறைந்தது திறமைச் சித்தியுடன் (C) பௌதிகவியல் மற்றும்
உயிரியல் ஆகிய மூன்று பாடங்களும் க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில், குறைந்தது சாதாரண சித்தியைப் (S) பெற்றிருத்தல்

(23) மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள்
( (MEDICAL LABORATORY SCIENCES)

பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களும்
க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில், குறைந்தது சாதாரண
சித்தியைப் (S) பெற்றிருத்தல்

(24) ஊடுகதிர்ப்படவியல் (RADIOGRAPHY)

பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களும்
க.பொ.த. (சா.தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில், குறைந்தது சாதாரண
சித்தியைப் (S) பெற்றிருத்தல்

(25) இயன் மருத்துவம் (PHYSIOTHERAPY)

பௌதிகவியல் மற்றும் இரசாயனவியலுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • உயிரியல்
  • இணைந்த கணிதம்
  • உயர் கணிதம் கணிதம்
க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில், குறைந்தது சாதாரண
சித்தியைப் (S) பெற்றிருத்தல்,

(26) மூலக்கூற்று உயிரியலும் உயிரிரசாயனவியலும் (MOLECULAR BIOLOGY & BIOCHEMISTRY)
பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களும்

(27) மீன்பிடித்தலும் கடல்சார் விஞ்ஞானங்களும்
(FISHERIES & MARINE SCIENCES)

மூலக்கூற்று உயிரியலும் உயிரிரசாயனவியலும் பாடநெறிக்கான பாடச்சேர்மானம் (இலக்கம் 26ஐப் பார்க்கவும்)

(28) சூழல் பேணலும் முகாமைத்துவமும்
(ENVIRONMENTAL CONSERVATION & MANAGEMENT)

உயிரியல் மற்றும் இரசாயனவியலுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • பௌதிகவியல்
  • விவசாய விஞ்ஞானம்
  • இணைந்த கணிதம்
  • கணிதம்

(29) விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடித்தலும் (ANIMAL SCIENCE & FISHERIES)

பின்வரும் பாடச்சேர்மானங்களில் ஒரு பாடச்சேர்மானம்
(i) இரசாயனவியல், உயிரியல் மற்றும் பௌதிகவியல்
(ii) இரசாயனவியல், உயிரியல் மற்றும் விவசாய விஞ்ஞானம்
(30) உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகாமைத்துவமும்
(FOOD PRODUCTION & TECHNOLOGY MANAGEMENT)
விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் பாடநெறிக்கான பாடச்சேர்மானம்
(இலக்கம் 13ஐப் பார்க்கவும்)

(31) பொறியியல் (ENGINEERING)

பின்வரும் மூன்று பாடங்களும்-
இரசாயனவியல்
இணைந்த கணிதம்
பௌதிகவியல்

(32) பொறியியல் (EM) - நில வளங்கள் பொறியியல்
(ENGINEERING) (EM) - (EARTH RESOURCES ENGINEERING)

பொறியியல் பாடநெறிக்கான பாடச்சேர்க்கை (இலக்கம் 31ஐப் பார்க்கவும்)

இலக்கம் 31
பின்வரும் மூன்று பாடங்களும்-
  • இரசாயனவியல்
  • இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(33) பொறியியல் (TM) - புடைவை மற்றும் துணி தொழில்நுட்பம் (ENGINEERING) (TM)- (TEXTILE & CLOTHING TECHNOLOGY)

பொறியியல் பாடநெறிக்கான பாடச்சேர்மானம் (இலக்கம் 31ஐப் பார்க்கவும்)
இலக்கம் 31
பின்வரும் மூன்று பாடங்களும்-
  • இரசாயனவியல்
  • இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(34) பௌதிக விஞ்ஞானம் (PHYSICAL SCIENCE)

இணைந்த கணிதம் அல்லது உயர் கணிதம் மற்றும் இரசாயனவியல் அல்லது
பௌதிகவியலை உள்ளடக்கியதாக பின்வரும் பாடங்களில் மூன்று பாடங்கள்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • இணைந்த கணிதம்
  • இரசாயனவியல்
  • உயிரியல்
  • பௌதிகவியல்

(35) கணினி விஞ்ஞானம் (COMPUTER SCIENCE)

இணைந்த கணிதம் அல்லது பௌதிகவியல் அல்லது உயர் கணிதம் ஆகிய
பாடங்களில் ஒன்றுக்கு குறைந்தபட்சம் திறமைச் சித்தியுடன் (C) பின்வரும்
பாடங்களில் மூன்று பாடங்கள்
  • இணைந்த கணிதம் அல்லது கணிதம்
  • தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும்
  • உயர் கணிதம் இரசாயனவியல்
  • பௌதிகவியல்

(36) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
(INFORMATION & COMMUNICATION TECHNOLOGY)

பின்வரும் பாடங்களில் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் (C) ஏதேனும்
மூன்று பாடங்கள்
  • உயர் கணிதம்
  • உயிரியல்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம் பௌதிகவியல்
  • கணக்கீடு
  • இரசாயனவியல்
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • வணிகக் கல்வி
  • குடிசார் தொழில்நுட்பவியல்
  • புவியியல்
  • பொறிமுறை தொழில்நுட்பவியல்
  • பொருளியல்
  • இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • சங்கீதம் (கீழைத்தேய/ கர்நாடக மேலைத்தேய)
  • சமஸ்கிருதம்
க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு
ஆகக் குறைந்தது திறமைச் சித்தியைக் (C) கொண்டிருத்தல் வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(37) பிரயோக விஞ்ஞானங்கள் (பௌதிக விஞ்ஞானம்)
(APPLIED SCIENCES/PHYSICAL SCIENCE)
இணைந்த கணிதம் அல்லது உயர் கணிதம் மற்றும் இரசாயனவியல் அல்லது
பௌதிகவியல் பாடங்களுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • உயிரியில்
  • இரசாயனவியல்
  • இணைந்த கணிதம்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • பௌதிகவியல்

(38) போக்குவரத்தும் தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவமும்
(TRANSPORT & LOGISTICS MANAGEMENT)

பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் இணைந்த கணிதம் ஆகிய மூன்று
பாடங்களும்

(39) கைத்தொழில் புள்ளிவிபரவியலும் கணிதவியல் நிதியும்
(INDUSTRIAL STATISTICS & MATHEMATICAL FINANCE)

இணைந்த கணிதத்துடன் பின்வரும் பாடங்களில் இரண்டு பாடங்கள்
  • உயர் கணிதம்
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்

40) புள்ளிவிபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும்
(STATISTICS & OPERATIONS RESEARCH)

இணைந்த கணிதத்துடன் பின்வரும் பாடங்களில் ஏதேனும் இரண்டு பாடங்கள்
  • உயிரியல்
  • உயர் கணிதம்
  • விவசாய விஞ்ஞானம்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்
  • கணிதம்

(41) கணக்கிடலும் தகவல் முறைமைகளும்
(COMPUTING & INFORMATION SYSTEMS)

இணைந்த கணிதம், பௌதிகவியல், உயர் கணிதம் ஆகிய பாடங்களில் ஒன்றில்
குறைந்தது திறமைச் சித்தியும் (C) பின்வரும் பாடங்களுள் இரண்டு பாடங்களும்
  • இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்
  • உயர் கணிதம்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
க.பொ.த. (சா.தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது திறமைச்
சித்தியைப் (C) பெற்றிருத்தல்


(42) தகவல் தொழில்நுட்பம் (INFORMATION TECHNOLOGY- IT)

பின்வரும் பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்துக்கு திறமைச் சித்தியும் (C)
வேறு ஏதேனும் இரண்டு பாடங்களும்
  • உயர் கணிதம்
  • கணிதம்
  • இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(43) முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
(MANAGEMENT & INFORMATION TECHNOLOGY-MIT)

உயர் கணிதம், இணைந்த கணிதம், கணிதம் மற்றும் பௌதிகவியல் ஆகிய
பாடங்களில் ஒரு பாடத்துக்கான திறமைச் சித்தியுடன் (C)
(i) உயிரியல் விஞ்ஞானப் பாடத்துறையிலிருந்து அல்லது பௌதிக விஞ்ஞானப்
பாடத்துறையிலிருந்து மூன்று பாடங்களில் சித்திபெற்றிருத்தல்.
அல்லது
(i) உயிரியல் பாடத்துறையிலிருந்து அல்லது பௌதிக விஞ்ஞானப்
பாடத்துறையிலிருந்து இரண்டு பாடங்களிலும் தகவல், தொடர்பாடல்
தொழில்நுட்பம் பாடத்திலும் சித்தியடைந்திருத்தல்.
இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

(44) கணிய அளவையியல் (QUANTITY SURVEYING)

இணைந்த கணிதம், உயர் கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தது ஒரு
பாடத்திலும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடத்தில் அல்லது இரண்டு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • கணக்கீடு
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • பொருளியல்
  • வணிகக் கல்வி
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்
இதற்கு மேலதிகமாக க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் ஆங்கில மற்றும் கணித
பாடங்களில் குறைந்தது திறமைச் சித்தியைப் (C) பெற்றிருத்தல்
வேண்டுமென்பதுடன் விஞ்ஞான பாடத்தில் குறைந்தது சாதாரண சித்தியையும்
(S) பெற்றிருத்தல் வேண்டும்.

(45) அளவையியல் விஞ்ஞானம் (SURVEYING SCIENCE)
பௌதிகவியல், இணைந்த கணிதம் உடன் வேறு ஏதேனும் ஒரு பாடம்

(46) பட்டினமும் நாடும் திட்டமிடல் (TOWN & COUNTRY PLANNING)
(i) பின்வரும் பாடங்களில் குறைந்தது இரண்டு பாடங்கள்
  • கணக்கீடு
  • இரசாயனவியல்
  • உயர் கணிதம்
  • விவசாய விஞ்ஞானம்
  • இணைந்த கணிதம்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • உயிரியல்
  • பொருளியல்
  • அரசியல் விஞ்ஞானம்
  • வணிகக் கல்வி
  • கணிதம்
  • பௌதிகவியல்
  • வணிகப் புள்ளிவிபரவியல் புவியியல்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
(ii) மூன்றாவது பாடம் பின்வரும் பாடங்களுள் ஒன்றாக அமைதல் வேண்டும்.
  • அரபு
  • மலாய்
  • மனைப் பொருளியல்
  • பௌத்த நாகரீகம்
  • ரஷ்யன்
  • இந்து சமயம்
  • சீனம்)
  • சிங்களம்
  • வரலாறு
  • பிரெஞ்சு
  • கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்
  • இஸ்லாமிய நாகரீகம்
  • சித்திரம்
  • கிறிஸ்தவ நாகரீகம்
  • பௌத்த சமயம்
  • பாளி
  • ஹிந்தி)
  • கிறிஸ்தவ சமயம்
  • சமஸ்கிருதம்
  • இந்து நாகரீகம்
  • ஆங்கிலம்
  • தமிழ்
  • இஸ்லாம்
  • ஜேர்மன்
  • ஜப்பான்
இதற்கு மேலதிகமாக, க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும்
கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தது திறமைச் சித்தியைப் (C) பெற்றிருத்தல்
வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பாடநெறிக்குத் தகைமை பெறும் பொருட்டு விண்ணப்பதாரிகள்
2017/2018 கல்வியாண்டு முதல் மேலே (i) தொகுதியின் கீழ் உள்ள பாடங்களிலிருந்து மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அவ்வாறே, விண்ணப்பதாரிகள் 2017/2018 கல்வியாண்டு முதல் க.பொ.த (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் குறைந்தது (B) சித்தியையும் கணித பாடத்தில் திறமைச் சித்தியையும் (C) பெற்றிருத்தல் வேண்டும்.

(47) கட்டடக் கலை (ARCHITECTURE)
(i) பின்வரும் பாடங்களிலிருந்து குறைந்தது ஒரு பாடம்
  • சித்திரம்
  • உயர் கணிதம்
  • இணைந்த கணிதம்
  • புவியியல்
  • இரசாயனவியல்
  • உயிரியல்
  • பௌதிகவியல்
மற்றும்
(ii) பின்வரும் பாடங்களில் மேலும் ஒரு பாடம் அல்லது இரண்டு பாடங்கள்
  • கணக்கீடு
  • ஹிந்தி
  • அரபு
  • இந்து நாகரீகம்
  • பௌத்த நாகரீகம் வரலாறு
  • வணிகப் புள்ளிவிபரவியல் மனைப் பொருளியல் வணிகக்கல்வி
  • இஸ்லாமிய நாகரீகம் சீனம்)
  • ஜப்பான்
  • கிறிஸ்தவ நாகரீகம்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • பொருளியல்
  • அரசியல் விஞ்ஞானம்
  • கணிதம்
  • பாளி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம் பிரெஞ்சு
  • சிங்களம்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • ஜேர்மன்
  • கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்
  • விவசாய விஞ்ஞானம் தமிழ்
  • தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்
இவற்றுக்கு மேலதிகமாக, பின்வரும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்தல்
வேண்டும்.க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்துக்கு குறைந்தது சாதாரண சித்தி (S). க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்துக்கு குறைந்தது திறமைச் சித்தி (C).
அல்லது
க.பொ.த. (உயர் தரப் பரீட்சையில் கணித பாடத்துக்கு குறைந்தது சாதாரண
சித்தி (S) பெறுதல் வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.

(48) வடிவமைப்பு (DESIGN)

யாதேனும் மூன்று பாடங்கள்
இவற்றுக்கு மேலதிகமாக, பின்வரும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்தல்
வேண்டும்.
  • க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஆங்கில பாடத்துக்கு குறைந்தது சாதாரண சித்தி (S). 
  • க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்துக்கு குறைந்தது திறைைமச் சித்தி (C).
  • அல்லது
  • க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் கணித பாடத்துக்கு குறைந்தது சாதாரண
  • சித்தி (S).
மேலும், 2017/2018 கல்வியாண்டு முதல் இந்த கற்கைநெறிக்கு தகைமை பெறும்
பொருட்டு விண்ணப்பதாரிகள் க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில
பாடத்தில் சாதாரண சித்தியையும் (S) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய
பாடங்களில் திறமைச் சித்தியையும் (C) பெறுதல் வேண்டும்.
இவற்றுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.

(49) நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் (FASHION DESIGN & PRODUCT DEVELOPMENT)

ஏதேனும் மூன்று பாடங்கள்
க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய
பாடங்களுக்கு குறைந்தது திறமைச் சித்தி (C) பெறுதல் வேண்டும்.
இவற்றுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும்.

(50) சட்டம் (LAW)

(i) பின்வரும் பாடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட் மூன்று பாடங்கள்.
  • புவியியல்
  • அரசியல் விஞ்ஞானம்
  • விவசாய விஞ்ஞானம்
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • உயிரியல்
  • உயர் கணிதம்
  • தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் வரலாறு
  • வணிகக் கல்வி
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • இரசாயனவியல்
  • பொருளியல்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம் கணக்கீடு
  • பௌதிகவியல்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
அல்லது
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் ஒன்று அல்லது இரண்டுடன் பின்வரும்
பாடங்களில் எஞ்சிய பாடம் அல்லது பாடங்கள்.
  • பௌத்த சமயம் அல்லது பௌத்த நாகரீகம் ஆங்கிலம்
  • இந்து சமயம் அல்லது இந்து நாகரீம்
  • பிரெஞ்சு
  • கிறிஸ்தவ சமயம் அல்லது கிறிஸ்தவ நாகரீகம் சிங்களம்
  • இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீகம் ஜேர்மன்
  • ஜப்பான்
  • தமிழ்
  • சீனம்
  • அரபு
  • பாளி
  • கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்
க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஆங்கில பாடத்துக்கு குறைந்தது திறமைச் சித்தி (C).
அல்லது
க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் ஆங்கில பாடத்துக்கு குறைந்தது சாதாரண
சித்தி (S).

(51) வசதிகள் முகாமைத்துவம் (FACILITIES MANAGEMENT)

இணைந்த கணிதம் அல்லது கணக்கீட்டுப் பாடத்துடன் பின்வரும் பாடங்களில்
ஏதேனும் இரண்டு பாடங்கள்
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • பௌதிகவியல்
  • வணிகக் கல்வி
  • உயர் கணிதம்
  • இரசாயனவியல்
  • பொருளியல்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
இவற்றுக்கு மேலதிகமாக க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஆங்கிலம்
மற்றும் கணித பாடங்களில் குறைந்தது திறமைச் சித்தியும் (C) விஞ்ஞான
பாடத்துக்கு குறைந்தது சாதாரண சித்தியும் (S) பெறுதல் வேண்டும்.

(52) கணக்கிடலும் முகாமைத்துவமும் (COMPUTATION & MANAGEMENT)
பொருளியல் அல்லது இணைந்த கணிதம் உள்ளிட்ட ஏதாவது மூன்று பாடங்கள்
இவற்றுக்கு மேலதிகமாக, க.பொ.த (சாதாரண தர)ப் பரீட்சையில் கணித
பாடத்துக்கு குறைந்தது திறமைச் சித்தி (C) பெறுதல் வேண்டும்.

(53) முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (தென் கிழக்குப் பல்கலைக்கழகம்)MANAGEMENT & INFORMATION TECHNOLOGY (SOUTHEASTERN UNIVERSITY)

ஏதேனும் மூன்று பாடங்கள்

(54) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (SCIENCE & TECHNOLOGY)

உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதிக விஞ்ஞான பாடநெறிகளுக்குத்
தேவையான தகைமைகள் ஏற்புடையதாகும். (இலக்கம் 18 மற்றும் 34ஐப் பார்க்கவும்)

(55) கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
(COMPUTER SCIENCE & TECHNOLOGY)

இந்தப் பாடநெறிக்கும் உயிரியல், பௌதிக விஞ்ஞானம் மற்றும் பிரயோக
விஞ்ஞானங்கள் (பௌதிக விஞ்ஞானம்) பாடநெறிகளுக்குத் தேவையான மூன்று
பாடங்கள் (இலக்கம் 18, 34 மற்றும் 37ஐப் பார்க்கவும்)

இலக்கம் 18 
  • உயிரியல், இரசாயனவியல் மற்றும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்
இலக்கம் 34 
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • இணைந்த கணிதம்
  • இரசாயனவியல்
  • உயிரியல்
  • பௌதிகவியல்
இலக்கம் 37
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • உயிரியில்
  • இரசாயனவியல்
  • இணைந்த கணிதம்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • பௌதிகவியல்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.


(56) தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
( (ENTREPRENEURSHIP & MANAGEMENT)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(57) விலங்கு விஞ்ஞானம் (ANIMAL SCIENCE)

உயிரியல் விஞ்ஞானம் பாடநெறிக்கான தகைமைகள் ஏற்புடையதாகும். (இலக்கம் 18ஐப் பார்க்கவும்)
இலக்கம் 18 
  • உயிரியல், இரசாயனவியல் மற்றும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(58) ஏற்றுமதி விவசாயம் (EXPORT AGRICULTURE)

உயிரியல் விஞ்ஞானம் பாடநெறிக்கான தகைமைகள் ஏற்புடையதாகும். (இலக்கம் 18ஐப் பார்க்கவும்)
இலக்கம் 18 
  • உயிரியல், இரசாயனவியல் மற்றும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(59) தேயிலைத் தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும் ( (TEA TECHNOLOGY & VALUE ADDITION)

பின்வரும் பாடச் சேர்மானங்களில் ஒரு பாடச்சேர்மானம்
(i) உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
(1) இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல்

(60) கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
( (INDUSTRIAL INFORMATION TECHNOLOGY)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(61) கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்
 (MINERAL RESOURCES & TECHNOLOGY)

பின்வரும் பாடச்சேர்மானங்களில் ஒன்று
(i) உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல்
(ii) இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல்

(62) நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்
(AQUATIC RESOURCES TECHNOLOGY)

உயிரியல் விஞ்ஞானப் பாடநெறிக்கான பாடச்சேர்மானங்கள் ஏற்புடையதாகும்.
(இலக்கம் 18ஐப் பார்க்கவும்)

இலக்கம் 18 
  • உயிரியல், இரசாயனவியல் மற்றும் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்

(63) பனை இனத்தாவரம் மற்றும் இறப்பர் பால் தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும் (PALM& LATEX TECHNOLOGY& VALUEADDITION)

பின்வரும் ஒரு பாடச்சேர்மானத்திலிருந்து மூன்று பாடங்கள்
(i) உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
(ii) இணைந்த கணிதம், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல்

(64) விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் (HOSPITALITY TOURISUM & EVENTS MANAGEMENT)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(65) உடற் கல்வி (PHYSICAL EDUCATION)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(66) விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்
(SPORTS SCIENCE & MANAGEMENT)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(67) பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும் (SPEECH & HEARING THERAPHY)

உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதிகவிஞ்ஞானம் அல்லது கலைப்
பாடத்துறையின் கீழான ஏதேனும் மூன்று பாடங்கள்

(68) விவசாய வள முகாமைத்துவமும் தொழில்நுட்பமும்
(AGRICULTURAL RESOURCE MANAGEMENT & TECHNOLOGY)

விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் பாடநெறிக்கான பாடச் சேர்மானம்
(இலக்கம் 13ஐப் பார்க்கவும்)

(69) விவசாய வியாபார முகாமைத்துவம் (AGRI BUSINESS MANAGEMENT)

உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • பௌதிகவியல்
  • விவசாய விஞ்ஞானம்
  • உணவுத் தொழில்நுட்பவியல் அல்லது உயிர்வளத் தொழில்நுட்பவியல் அல்லது
  • விவசாயத் தொழில்நுட்பவியல்

(70) பசுமைத் தொழில்நுட்பம் (GREEN TECHNOLOGY)

உயிரியல், - மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றுடன் பின்வரும் பாடங்களில்
ஒரு பாடம் 
  • பௌதிகவியல்
  • விவசாய விஞ்ஞானம்
  • உணவுத் தொழில்நுட்பவியல் அல்லது உயிர்வளத் தொழில்நுட்பவியல் அல்லது
  • விவசாயத் தொழில்நுட்பவியல்
க.பொ.த (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்துக்கு குறைந்தது
திறமைச் சித்தி (C) பெறுதல் வேண்டும்.

(71) நிலத்தோற்றக் கட்டடக்கலை (LANDSCAPE ARCHITECTURE)

(i) பின்வரும் பாடங்களில் குறைந்தது ஒரு பாடம்
  • சித்திரம்
  • உயர் கணிதம்
  • இணைந்த கணிதம்
  • புவியியல்
  • இரசாயனவியல்
  • விவசாய விஞ்ஞானம்
  • உயிரியல்
  • பௌதிகவியல்
(ii) பின்வரும் பாடங்களில் மேலும் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள்
கணக்கீடு
  • அரபு
  • வரலாறு
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • ஜப்பான்
  • பொருளியல்
  • கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
  • ஹிந்தி
  • பௌத்த நாகரீகம்
  • ஆங்கிலம்
  • மனைப் பொருளியல்
  • இஸ்லாமிய நாகரீகம்
  • சீனம்
  • பாளி
  • கணிதம்
  • இந்து நாகரீகம்
  • தமிழ்
  • கிறிஸ்தவ நாகரீகம்
  • தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • அரசியல் விஞ்ஞானம்
  • பிரெஞ்சு
  • சமஸ்கிருதம்
  • சிங்களம்
  • ஜேர்மன்
  • வணிகக் கல்வி
க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்துக்கு குறைந்தது சாதாரண சித்தி (S).
க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் குறைந்தது திறமைச்
சித்தி (C) ஐ அல்லது க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் கணித பாடத்துக்கு
குறைந்தது சாதாரண சித்தி(S).
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(72) தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
(INFORMATION TECHNOLOGY & MANAGEMENT)

பின்வரும் பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் (C)
ஏதேனும் மூன்று பாடங்கள்
  • உயர் கணிதம்
  • இணைந்த கணிதம்
  • புவியியல்
  • கணிதம்
  • கணக்கீடு
  • வணிகப் புள்ளிவிபரவியல்
  • பொருளியல்
  • பௌதிகவியல்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும்
க.பொ.த (சாதாரண தர)ப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில்
குறைந்தது திறமைச் சித்தி (C).


(73) சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும் (TOURISM & HOSPITALITY MANAGEMENT)

பின்வரும் பாடச்சேர்மானத்திலிருந்து ஒரு பாடச்சேர்மானம்
(1) வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞானம்
பாடத்துறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட மூன்று பாடங்கள்
(ii) பின்வரும் பாடங்களிலிருந்து குறைந்தது ஒரு பாடம்
பொருளியல், புவியியல், வியாபாரப் புள்ளிவிபரவியல் மற்றும்
கலைப் பாடத்துறையின் கீழ் ஏனைய இரண்டு பாடங்கள்

(74) தகவல் முறைமைகள் (INFORMATION SYSTEMS)

பின்வரும் பாடங்களில் குறைந்தது இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தி (C)
சகிதம் ஏதேனும் மூன்று பாடங்கள்
  • உயர் கணிதம்
  • கணிதம் அல்லது இணைந்த கணிதம்
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்
  • கணக்கீடு
  • வியாபாரப் புள்ளிவிபரவியல்
  • பொருளியல்
  • வணிகக் கல்வி
  • உயிரியல்
  • அரசியல் விஞ்ஞானம்
  • அளவையியலும் விஞ்ஞான முறையும் புவியியல்
  • குடிசார் தொழில்நுட்பவியல்
  • பொறிமுறைத் தொழில்நுட்பவியல்
  • மின், இலத்திரனியல் மற்றும் தகவல்தொழில்நுட்பவியல்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
க.பொ.த (சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில்
குறைந்தது திறமைச் சித்தி (C) பெறுதல் வேண்டும். இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(75) மென்பொருள் பொறியியல் (SOFTWARE ENGINEERING)

இணைந்த கணிதம், பௌதிகவியல் ஆகிய பாடங்களுடன் பின்வரும் பாடங்களில் ஒன்று
இரசாயனவியல் உயர் கணிதம்
தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்

(76) மொழிபெயர்ப்புக் கற்கைகள் (TRANSLATION STUDIES)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(77) திரைப்படம், தொலைக்காட்சி கற்கைகள்
 (CINEMA & TELEVISION STUDIES)

ஏதேனும் மூன்று பாடங்கள்
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் தகுதிகாண்
பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

(78) செயற்திட்ட முகாமைத்துவம் (PROJECT MANAGEMENT)

ஏதேனும் மூன்று பாடங்கள்

(79) பொறியியல் தொழில்நுட்பம் (ENGINEERING TECHNOLOGY)

பொறியியல் தொழில்நுட்பவியல், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய இரண்டு பாடங்களுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • பொருளியல்
  • மனைப் பொருளியல்
  • தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
  • சித்திரம்
  • விவசாய விஞ்ஞானம்
  • கணிதம்
  • புவியியல்
  • ஆங்கிலம்
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • வணிகக் கல்வி
  • கணக்கீடு

(80) உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (BIOSYSTEMS TECHNOLOGY)

உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகியவற்றுடன் பின்வரும் பாடங்களில் ஒரு பாடம்
  • பொருளியல்
  • புவியியல்
  • மனைப் பொருளியல்
  • ஆங்கிலம்
  • தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
  • சித்திரம்
  • வணிகக் கல்வி
  • விவசாய' விஞ்ஞானம்
  • கணக்கீடு
  • கணிதம்

(81) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
(INFORMATION COMMUNICATIONTECHNOLOGY)

தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்துடன் தொழில்நுட்பவியலுக்கான
விஞ்ஞானம் மற்றும் பொறியியற் தொழில்நுட்பவியல் அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்கள்

(82) ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பிப்பதற்கான கற்கைப் பாடநெறி (TEACHING ENGLISH AS A SECOND LANGUAGE) (TESL)

ஆங்கிலப் பாடம் உள்ளிட்ட வேறு ஏதேனும் இரண்டு பாடங்கள்


(83) உணவு வணிக முகாமைத்துவம் (FOOD BUSINESS MANAGEMENT)

பின்வரும் பாடங்களில் மூன்று பாடங்கள்
  • இரசாயனவியல்
  • பௌதிகவியல்
  • விவசாய விஞ்ஞானம்
  • பொருளியல்
  • உயிரியல்
  • இணைந்த கணிதம்
  • வணிகக் கல்வி
  • கணக்கீடு
க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம்
ஆகிய பாடங்களில் குறைந்தது திறமைச் சித்தி (C).

(84) கடல்சார் மற்றும் நன்னீரியல் விஞ்ஞானம்
(MARINE AND FRESH WATER SCIENCE)

பின்வரும் பாடச்சேர்மானங்களிலிருந்து ஒரு பாடச்சேர்மானம்
1. இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல்
II. இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் இணைந்த கணிதம்

(85) பௌதீக விஞ்ஞானம் - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
(PHYSICAL SCIENCE-ICT)

இணைந்த கணிதம், பௌதிகவியல் மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள்


 இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் மாணவர்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றேன். பல்கலைக்கழகப் பாடநெறிகளுக்கான பாடச்சேர்மானங்களுக்கு மேலதிகமாக பாடநெறிக்கான
மொழிமூலம் மற்றும் பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்கையில் வேண்டப்படும். ஏனைய தகைமைகள் மற்றும் ஏனைய தகவல்களுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வருடந்தோறும் வெளியிடப்படுகின்ற “இலங்கைப் பல்கலைக்கழக இளமாணிப் பட்டக் கற்கைநெறிகளுக்கான அனுமதி” எனும் கையேட்டினைப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் பிரேரணை செய்யப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகளின் பிரகாரம் இந்தச் சுற்றறிக்கையின் பிரிவுகளும் திருத்தங்களுக்கு உட்படலாம். இச்சுற்றுநிருபத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஒவ்வாமை ஏற்படும்பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும். என்பதாக கல்வி அமைச்சின்  குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுற்றுநிருபத்தை பதிவிறக்கம் செய்ய. Click here

எமது வட்சப் குழுமம்

https://chat.whatsapp.com/GkqljBThj4xLowDNwVJF0b