>

ad

பிரசவ விடுமுறை இவ்வாறு தான் கணக்கிடப்படுகின்றது.



அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழந்தை பிறந்துவிடுமாயின் அல்லது கருச்சிதைவு ஏற்படுமாயின் அதற்காக அனுமதிக்கப்பட்ட லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.  நிரந்தர, தற்காலிக, அமைய அல்லது பயிலுனர் என்ற எந்த வகையான நியமனம் பெற்றவர்களும் உரித்துடையதாகும்.அந்த வகையில் பிரசவ விடுமுறை குறித்த முக்கியமான விடயங்கள் குறித்து இந்தப் பதிவில் ஆரயவிருக்கின்றோம்.


முழுச் சம்பளத்துடனான பிரசவ விடுமுறை 

நிரந்தர, தற்காலிக, அமைய அல்லது பயிலுனர் என்ற எந்த வகையான நியமனம் பெற்றவர்களும் உரித்துடையதாகும்.

சம்பளத்துடனான பிரசவ விடுமுறை
    • அனைத்து குழந்தைப் பிரசவங்களுக்கும் உரித்துடையதாகும்.
    • லீவு 84 தினங்களுக்கு பெறலாம்.
    • பிரசவம் நிகழ்ந்து 4 வாரங்களாகும் வரை உத்தியோகத்தரை  கடமைக்கு வருவதற்கு இடமளிக்கப்படுவதில்லை
    • இந்த லீவு பெறுவதற்காக வைத்திய அறிக்கை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகும்.
    • பாடசாலை ஆசிரியர்களாயின் விண்ணப்பத்தினை அதிபரின் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க வேண்டும். 
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் தவிர்ந்த அடிப்படையில்  வேலை நாட்கள் மாத்திரம் கணக்கிடப்படும். 
    • இது பூரணமாக வழங்கப்படுகின்ற விசேடமான லீவாகும்.இது மற்றைய லீவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை
    • பிறக்கும் போது குழந்தை மரணித்தாலோ அல்லது குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குள் குழந்தை மரணித்தாலோ,  குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் விடுமுறை உரித்தாகின்றது.
குழந்தை பிறந்த திகதியிலிருந்து 84 அரச வேலை நாட்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படும். 
இந்த விடுமுறைக்காக சனி 

உதாரணமா குழந்தை பிறந்த திகதி 2020.01.01 எனின்
2020.01.01 முதல் 2021.01.31 வரை 21 நாட்கள்
2020.02.01 முதல் 2021.02.29 வரை 18 நாட்கள்
2020.03.01 முதல் 2021.03.31 வரை 21 நாட்கள்
2020.04.01 முதல் 2021.04.30 வரை 18 நாட்கள்
2020.05.01 முதல் 2021.05.13 வரை 06 நாட்கள்

மொத்தமாக 84 நாட்கள்

அரைச் சம்பள விடுமுறை பெற்றுக்கொள்ளாதவிடத்து 2020.05.14 ஆம் திகதி கடமைக்கு சமூகமளிக்கவேண்டும். ஆசிரியர் ஒருவராயின் லீவுக்கான விண்ணப்பக் கடித்தினை அதிபரின் பரிந்துரையுடன் வலயக்கல்விக் காரியாலயத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அடுத்த உத்தியோகத்தர்கள் தங்களது நிறுவனத் தைலவரிடம் ஒப்படைக்கவேண்டும்

அரைச் சம்பள லீவு
    • மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
    • இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்

உதாரணமாக 
2020.08.06 முதல் 2020.08.31 வரை 18 நாட்கள்
2020.06.01 முதல் 2020.06.30 வரை 30 நாட்கள்
2020.07.01 முதல் 2020.07.31 வரை 31 நாட்கள்
2020.08.01 முதல் 2020.08.05 வரை 05 நாட்கள்

மொத்தமாக 84 நாட்கள்

சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொள்ளாதவிடத்து 2020.08.06 ஆம் திகதி கடமைக்கு சமூகமளிக்கவேண்டும். ஆசிரியர் ஒருவராயின் லீவுக்கான விண்ணப்பக் கடித்தினை அதிபரின் பரிந்துரையுடன் பிரசவ விடுமுறை முடிவடைதற்குள் சமர்ப்பிக்கவேண்டும். ஏனைய நிறுவனங்களில் பணிபுரவோர் விண்ணப்பக் கடிதத்தை தங்களது நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கலாம். 

சம்பளமற்ற பிரசவ லீவு
    • மேற்படி அரைம்பள லீவு 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
    • இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
    • அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான மாதாந்தத் தவணைக் கட்டணங்களை சம்பளமற்ற பிரசவ லீவு காலங்களில் செலுத்த வேண்டும். வங்கிக் கடன்களாயினும் அதே அடிப்படையில் செலுத்தவேண்டும்.


உதாரணமாக 
2020.08.06 முதல் 2020.08.31 வரை 26 நாட்கள்
2020.09.01 முதல் 2020.09.30 வரை 30 நாட்கள்
2020.10.01 முதல் 2020.10.28 வரை 28 நாட்கள்

மொத்தமாக 84 நாட்கள்


. ஆசிரியர் ஒருவராயின் லீவுக்கான விண்ணப்பக் கடித்தினை அதிபரின் பரிந்துரையுடன் அரைச் சம்பள பிரசவ விடுமுறை முடிவடைதற்குள் சமர்ப்பிக்கவேண்டும். ஏனைய நிறுவனங்களில் பணிபுரிவோர் விண்ணப்பக் கடிதத்தை தங்களது நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கலாம். 

கருச் சிதைவு ஏற்படும் போது
    • வைத்திய அறிக்கையில் குறிப்படுகின்ற அளவான லீவினை உத்தியோகத்தரின் ஓய்வு லீவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  • தாய்ப்பால் ஊட்டுவதற்காக வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லல்
    • அரைச் சம்பள பிரசவ லீவு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த சலுகையினைப் பெறலாம். குழந்தைக்கு 6 மாதமாகும்வரையில் மாத்திரமே இந்த லீவு வழங்கப்படும்.
  • கர்ப்பம்  தரித்து 5 மாதம் பூர்த்தியானதும் அரை மணிநேரம் தாமதமாகி வருவதற்கும் அரை மணி நேரம் முன்னதாக செல்வதற்கும் அனுமதி வழங்கலாம்.
  • அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற பிரசவ லீவு காலத்தில் குழந்தை மரணிக்குமாயின் அதிலிருந்து 7 நாட்களில் லீவு செல்லுபடியற்றதாகிவிடும்.
  • சம்பள ஏற்றம், பதவி உயர்வு, ஓய்வுதியக் கணிப்பு என்பவற்றுக்கு இந்தலீவு பதிப்பினை ஏற்படுத்தாது.
  • அவசியப்படுமிடத்து லீவினை இரத்துச் செய்துவிட்டு சேவைக்கு செல்ல முடியம்.

மொத்தமாக 84 நாட்கள்

குறித்த உத்தியோகத்தர் அரைச் சம்பள விடுமுறை பெறாவிட்டால்   2021.05.13 ஆம் திகதி கடமைக்குச் சமூகமளிக்கவேண்டும்.