பரீட்சைகள் திணைக்களம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 2020க்கான க.பொ.த,(உயர்தர) பரீட்சை இரு பாடத்திட்டங்களிலிருந்து (பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கள்) நடைபெறுவதாக அறிவித்ததற்கு அமைய, 2020 இல் நடைபெறும் க.பொ.த. (உயர்தர) பரீட்சை தோற்றிய அபேட்சகர்களை இரண்டு தனித்துவமான சனத்தொகைகளாகக் கருத SC( FR) விண்ணப்ப இல.29/2012 உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கமைய 2011 இல் க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. அதன்படி, க.பொ.த. (உயர்தர) பரீட்சை 2020 இல் அவர்கள் பெறும் Z-மதிப்பெண்களின் அடிப்படையில் 2020 2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை சிபாரிசு செய்ய நிபுணர் குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்தது. குறித்த நிபுணர் குழுவால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையவும். பல்கலைக்கழக அனுமதிக்கான சபையின் அறிவுறுத்தல்களுக்கமையவும், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் எண் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 15 (vii), 2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பின்வரும் முடிவுகளை எடுத்தது. அம் முடிவு செய்யப்பட்ட பொறிமுறை 07 அக்டோபர் 2020 இல், டெய்லி நியூஸ், தினமணி, லங்காதீப மற்றும் தினக்குரல் ஆகிய தினசரி செய்தித்தாள்களிலும் 08 அக்டோபர்
2020 இல், தினகரன் செய்தித்தாளிலும் சண்டே ஒப்சர்வர், சண்டே டைம்ஸ், சிலுமின, லங்காதீப, தினக்குரல், மற்றும் வாரமஞ்சரி ஆகிய 11 அக்டோபர் 2020 வார இறுதி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றவிருக்கின்ற மாணவர்களிலிருந்து பல்கலைக்கழகப் பட்ட நிகழ்ச்சித்திட்டம் (கற்கைநெறி) ஒன்றினைப் பயில்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 2020 க.பொ.த (உயர்தர) முடிவுகளின் அடிப்படையில் 2020 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதியிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல், மாவட்ட திறமை மற்றும் தீவளாவிய
திறமை ஆகிய அடிப்படைகளில் அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் சதவீதமானது 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாவது தடவைகளில் தோற்றி முறையே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட திறமை மற்றும் தீவளாவிய திறமை ஆகிய
அடிப்படைகளில் குறித்த பட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை (கற்கைநெறியை) தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் கூட்டிணைவான சராசரியின் (composite average) சதவீதமாக அமையும்.
5
2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குப் பழைய பாடத்திட்டத்தின் கீழ்
தோற்றவிருக்கின்ற மாணவர்களிலிருந்து பல்கலைக்கழகங்களின் பட்ட நிகழ்ச்சித்திட்டம் (கற்கைநெறி ஒன்றினைப் பயில்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட திறமை மற்றும் தீவளாவிய திறமை ஆகிய அடிப்படைகளில் அனுமதிக்கப்படவிருக்கின்ற மாணவர்களது சதவீதமானது 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு -
காலப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மூன்றாவது தடவை தோற்றி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட திறமை, தீவளாவிய திறமை ஆகிய அடிப்படைகளில் குறித்த பட்ட நிகழ்ச்சித்திட்டத்தினை (கற்கைநெறியை) தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் கூட்டிணைவான சராசரியின் (composite average) சதவீதமாக அமையும்.
மேலும், தெரிவு முறை குறித்த மேற்கூறிய அறிவிப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொது மக்களின் தகவல்களுக்காக வெளியிடப்பட்டது.
2021 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2020 2021 கல்வியாண்டிற்கான இலங்கையில் பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கான அனுமதி தொடர்பான கைநூலில், மேற்கண்ட பொறிமுறைகளுக்கு மேலதிகமாக, 2014 2015 கல்வியாண்டிற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட கற்கைநெறிகளுக்கு
மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை முழுமையான வருட தரவு இல்லாததால் கிடைக்கக்கூடிய தரவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்குமென குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, 2014 2015 கல்வியாண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட கற்கைநெறிகளுக்கு புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டத் திறமை மற்றும் தீவளாவிய திறமை ஆகிய அடிப்படைகளில் 2020 2021 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் சதவீதத்தைக் கணக்கிட நிபுணர் குழு பரிந்துரைத்தது. மேலும், இந்த பரிந்துரைகள் பல்கலைக்கழக அனுமதிக் குழுவின் பரிந்துரையினைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கல்வியாண்டு 2014 2015 இலிருந்து கல்வியாண்டு 2018 2019 க்கு உட்பட்ட 5 வருட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கற்கை நெறிகளுக்கு புதிய பாடத்திட்டம், மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டத் திறமை மற்றும் தீவளாவிய திறமை ஆகிய அடிப்படைகளில் பல்கலைக்கழக அனுமதிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களது சதவீதமானது அக்குறித்த கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இருந்து கல்வியாண்டு 2018 2019 க.பொ.த. (உயர்தர) இன் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட திறமை அடிப்படை. தீவளாவிய திறமை அடிப்படை ஆகிய அடிப்படைகளில் அனுமதிக்கப்பட இருக்கின்ற மாணவர்களது கிடைக்கக் கூடிய தரவுகளது கூட்டிணைவான சராசரியின் சதவீதமாக |(composite average) ஆக அமையும்.
மேலும், 2019 2020 மற்றும் 2020 2021 ஆகிய இரு கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களது சதவீதமானது, புதிய பாடத்திட்டம், மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட திறமை அடிப்படை, தீவளாவிய திறமை அடிப்படை ஆகிய அடிப்படைகளில் பல்கலைக்கழக அனுமதிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களது சதவீதமானது அக்குறித்த கல்வியாண்டு 2020/ 2021 இல் அக் கற்கைநெறியின் யுனிகோட் “uni-codes" களுக்கு விண்ணப்பித்த மாணவர்களது சதவீதமாக அமையும். மேலே குறிப்பிடப்பட்ட பொறிமுறையின்படி, 2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கு க.பொ.த. (உயர்தர)இன் பிரதான பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கணக்கிடப்பட்ட சதவீதங்கள் கீழே உள்ளன.
கூட்டு சராசரியின் சதவீதம் 0%ஆக இருக்கும் போது மாவட்டத்திற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அதேபோல் மற்ற கற்கை நெறிகளுக்கும் மேற்கூறிய அளவுகோல்களின்படி சதவீதங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற வேண்டுமானால், நீங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உயர்தர) இன் 7- மதிப்பெண்களின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தேர்வு மேற்கண்ட
பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறைக்கு மற்றும் 2021 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2020 2021 கல்வியாண்டிற்கான “இலங்கையில் பல்கலைக்கழகங்களின் இளங்கலை கற்கைநெறிகளுக்கான அனுமதி" தொடர்பான கைநூலில், குறிப்பிட்டுள்ள பொறிமுறைகளுக்கு ஏற்ப செயற்படுத்தப்படும்.
தலைவர்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இல.20, வாட் இடம், கொழும்பு- 07
21.09.2021
பத்திரிகை விளம்பரம்
பத்திரிகை விளம்பரத்தினை பதிவிறக்கம் செய்ய Click here