இலங்கையில் 11 ஆண்டுகள் கல்வி கற்றதன் பின்னர் அனைத்து மாணவர்களும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முகம் கொடுக்கவேண்டும். அதில் சித்தியடைகின்ற மாணவர்கள் மாத்திரம் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் சாதாரண தரத்தில் போதிய சித்தியில்லாமல் உயர் தரம் கற்க வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களின் தொகை 80,000 ஆயிரத்திலும் அதிகமாகும்.
அதன் பின்னர் உயர் தரம் கற்கின்ற மாணவர்களில் 10% இலும் குறைந்த மாணவர்களுக்கே பல்கலைக்கழகம் நுழைகின்ற வாய்ப்புக் கிடைக்கின்றது என்பதாக உயர் கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. க.பொ.த உயர் தரத்தினை நிறைவு செய்து உயர்கல்விக்கான வாய்ப்புக் கிடைக்காமல் கல்வியை முடித்துக்கொண்டு செல்பவர்கள் சாதாரண தரத்துடன் கல்வியை முடித்துக்கொண்டவர்கள் போன்றே சிறிய ஒரு சம்பளத்துக்காக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் இவர்கள் குறைந்த சம்பளம் பெறவதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பயிற்சிகள் போதாமையின் காரணமாக உடலளவிலும் சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இந்த நிலையினை மாற்றியமைப்பதற்காக 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி என்ற கருப்பொருளில் பாடசாலைக் கல்வியுடன் தொழில் கல்வி வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனாக க.பொ.த (சா/த) சித்தியடைந்த சித்தியடையாத அனைவருக்குமே உயர் தரம் பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அதன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு பரீட்சார்த்த திட்டமாக நாட்டின் 42 பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முதல் நாட்டின் அனைத்து மாகாணங்களும் கல்வி வலயங்களும் உள்ளடங்கும் அடிப்படையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போது 2021 ஆம் ஆண்டுக்காக 519 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
519 பாடசாலைகளின் பெயர்ப் பட்டியழல பதிவிறக்கம் செய்ய
இந்தக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஆரம்ப கட்டமாக 12 ஆம் தரத்திற்கான பாடங்களைப் பயில் வேண்டும். இந்தப் பிரிவில் பொதுவான 09 பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
01. மொழி (தழிழ்/சிங்களம்)
02. ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி மற்றும் தொடர்பாடல் திறன்கள்
03. தகவல் தொழிலநுட்பம்
04. கலை
05. குடிமகன் என்ற வகையில் அவசியமான திறன்கள்
06. முயற்சியான்மை திறன்கள்
07. மனித வாழ்ககைக்கு அவசியமான சுகாதாரம் மற்றும் வாழ்வாதார திறன்கள்
08.விளையாட்டு மற்றும் ஏனைய விடயங்கள்
09.தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள்
என தரம் 12 இற்கான பாடங்களை நிறைவு செய்ததன் பின்னர் தரம் 13 இற்கான பாடங்களாக NVQ 04 மட்டத்திலான தொழில்கல்வி சான்றிதழ் பயிற்சி நெறியினைப் பயல்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதற்காக பயில முடியுமான பாடங்கள் குறித்து கல்வி அமைச்சு கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றது. பிரயோக பாடங்களில் உள்ளடங்கும் தொழில் பாடங்களாவன.
கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து NVQ என்றால் என்ன என்பது குறித்து விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.