>

ad

All About Parliamentary Ombudsman Sri Lanka in Tamil




" மகள முதலாம் வகுப்புக்கு ஸ்கூலுக்கு சேக்குறதுக்கு அப்லிகேசன் போட்டன் அப்லிகேசன் போட்ட ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் தூரம் கூட என்டு காரணம் காட்டி என்ட புள்ள ஸ்கூலுக்கு சேர்த்துக்கொள்ள முடியாதுன்னு பிரின்சிபல் லெட்டர் அனுப்பி இருக்காரு.. ஆனா என்ட வீட்ட விட தூர உள்ள வீட்டுப் பிள்ளகள ஸ்கூல்ல சேர்த்திருக்காங்க.. எடியுகேசன் ஒபீஸ் போய் இதச் சொன்ன கணக்குலய எடுக்குறாங்க இல்ல.. அத நீங்கள் பிரின்சிபலோட தான் பாத்துக்கணும் என்டு விரட்டுறாங்க. நான் என்னதான் செய்ய யாருக்கிட்ட சொல்ல?"

"எனக்கு இப்ப 70 வயதாகுது என்ட பென்சன இன்னும் கிடைக்கல்ல, ஓபீஸுல அது குறைவு இது குறைவு எண்டுடு அலைக்கடிக்குறாங்க.  எப்படி பென்சன் எடுக்குறதுண்டு சொல்றாங்களும் இல்ல. அவங்க கேட்ட எல்லாத்தயும் குடுத்துட்டன் ஆனா எந்தப் பதிலும் இல்ல. நான் என்ன தான் செய்ய?"

"நான் 5 வருசத்துக்கு முன்னாடி பிரமோசன் எடுத்திருக்கணும் என்ட ஒபீசோட தலைமை அதிகாரி என்னோட சரியில்ல. அதனால என்னோட இருக்குற சொந்தக் கோவத்தால எனய பழிவாங்குறார். எனக்கு இதுக்கு மேல என்ன செய்ய முடியும்?"

"வீடு கட்ட லோன் ஒன்டு போட்டிருக்கேன் அதுக்கு பிரதேச சபைக்கி வரி கட்டின விபரம் கேக்குறாங்க.. அந்த விபரத்த கேட்டுப்போனா அதயெல்லாம் தர முடுயாது என்டு துரத்தியடிச்சாங்க. நான் வரி கட்டியிருக்கேன் ஆனா அவங்க அத உறுதிப் படுத்தி தாறாங்கள் இல்ல இத நான் எங்க போய்ச் சொல்ல"


" மகள முதலாம் வகுப்புக்கு ஸ்கூலுக்கு சேக்குறதுக்கு அப்லிகேசன் போட்டன் அப்லிகேசன் போட்ட ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் தூரம் கூட என்டு காரணம் காட்டி என்ட புள்ள ஸ்கூலுக்கு சேர்த்துக்கொள்ள முடியாதுன்னு பிரின்சிபல் லெட்டர் அனுப்பி இருக்காரு.. ஆனா என்ட வீட்ட விட தூர உள்ள வீட்டுப் பிள்ளகள ஸ்கூல்ல சேர்த்திருக்காங்க.. எடியுகேசன் ஒபீஸ் போய் இதச் சொன்ன கணக்குலய எடுக்குறாங்க இல்ல நான் என்னதான் செய்ய யாருக்கிட்ட சொல்ல?"

இது இன்று மக்களிடையே காணப்படுகின்ற உள்ளக் குழுறல்களில் சிலவாகும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையா? இவற்றை யாரிடம் முறையிடவேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள தொடரந்து பதிவை வாசியுங்கள்.

அரச காரியாலயம் ஒன்றிலிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்கின்ற பலரும் பலவகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதுண்டு. அது போன்றே அரச சேவையில் இருப்பவர்களுக்கும் தங்களது உயர் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற அநீதியான நடவடிக்கைகள் பலவற்றுக்கு  முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட விடயங்கள் குறித்து செய்வதறியாமல் சகித்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு. ஆனால் தங்களுக்கு ஏற்படும் இவ்வாறான அநீகள் தொடர்பில் அமைதியாக இருந்துகொள்ளத் தேவையில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து முறையாக அறிவித்து தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலே குறிப்பிட்டது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து சொல்வதற்கான அரசாங்க அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் ஒம்புஸ்ட்மன் என்பதாக அழைக்கப்படுகின்றார். 

ஒன்புட்ஸ்மன் எனப்படுபவர் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன் ஆணையாளராவார். அனைத்து அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள், அரச வங்கிள், மகாண வேவைள், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்கள் மூலமாகவும் பொது மக்களுக்கு  அநீதிகள் ஏற்படுத்தப்படுகின்றபோது அந்த அநீதிகள் குறித்த மக்களுக்கு செவிமடுக்கும் பொறுப்பை இந்த ஒம்புஸ்மன் எனப்படுபவர் ஏற்கின்றார். அடிப்படை உரிமை மீறல்கள், நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள், அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ஏதேனும் உரிமைகள் மீறப்படல் போன்றன தொடர்பான முறைப்பாடுகளை பக்கச்சார்பின்றி ஆராய்ந்து அநீதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அவரு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக பரிந்துரை வழங்குவதற்கு ஒம்புஸ்ட்மன் என்பவருக்கு அதிகாரமுள்ளது. 

நிர்வாகம் தொடர்பான செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற அணையாளர் காரியாலயம் என்பது சுயாதீனமாக இயங்குகின்ற ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கான நியமனங்கள் ஜனாதிபதி மூலமாகவே வழங்கப்படுகின்றது. 1981 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் சட்டமூலத்தின் ஊடாக இந்த ஓம்புட்ஸ்மன் எனும் செயற்பாடு ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில் இந்த நிறுவனத்திற்கு முறைப்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக மாத்திரமே சமரப்பிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. 1994 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க சட்டமூலத்த்தின் திருத்தத்தின் ஊடாக பொது மக்கள் எவரும் இந்த நிறுவனத்திற்கு முறைப்பாடு மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவானது.  இந்த ஓம்புட்ஸ்மன் முறையானது இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் பல நாடுகளில் காணப்படுகின்றன. நாட்டு மக்கள் அரசுடன் கருமமாற்றும்போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்குகின்ற நடவடிக்கை இந்த நிறுவனத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகிக்றது. 

இந்த நிறுவனத்திற்கு முறைப்பாடுகள் எழுத்து மூலமே சமர்ப்பிக்கப்படவேண்டும். பதிவுத் தபாலில் முறைப்பாடுகளை முன்வைப்பது மிகவும் சிறந்த முறையாகும். தற்போது ஒன்லைன் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் முறைப்படுகளை முன்வைப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர் ஒருவரின் செயற்பாட்டினால் அநீதிக்கு உள்ளான ஒரு பொதுமகன் மற்றும் அரச சேவைக்கு உள்ளாகவே அதிகாரி ஒருவரினால் அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் ஒருவர் தங்களது முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.  இவ்வாறு முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் ஒம்புஸ்ட்மன் உடாக பரிசீலனை செய்யப்பட்டு அது விசாணைக்கு உட்படுத்த முடியுமான முறைப்பாடாக அமையாளம் காணப்படுமாயின் குறித்த முறைப்பாட்டின் பிரதி ஒன்றினை குறித்த நிறுவனத்திற்கு அனுப்பிவைத்து அது குறித்த அறிக்கை ஒன்று ஒம்புஸ்ட்மன் இனால் கோரப்படும்.  அதன் பின்னர் குறித்த நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை முறைப்பாடு செய்தவருக்கு அனுப்பி அது தொடர்பான அவரது கருத்தை வினவப்படும். இந்த இரண்டு அறிக்கைகளிலும் போதுமான தகவல்கள் காணப்படுமிடத்து ஒம்புட்ஸ்மன் குறித்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வார். அல்லது மேலும் தகவல்கள் அவசியப்படுமிடத்து இரு சாராரிடமும் அது பெற்றுக்கொள்ளப்படும். அவசியப்படுமிடத்து இரண்டு சாராரும் அழைக்கப்பட்டு நீதமான விசாரணை ஒன்றினை மேற்கொண்டு பரிந்துரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 



ஒம்புஸ்ட்மன் காரியாயத்திற்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை முறைகள் குறித்து அறிந்துகொள்ள CLICK HERE

ஒம்புஸ்ட்மன் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய முன்னர் நீங்கள் ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு அரச நிறுவனத்துக்கு அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு ஆவணங்கள் அல்லது கோரிக்கைகள் அல்லது முறைப்பாடுகள் முன்வைக்கும் போது அவற்றை எப்போதும் எழுத்து மூலம் பதிவுத் தபாலில் அனுப்புவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் அனுப்புகின்ற ஆவணங்களின் பிரதிகள் பதிவுத் தபாலுக்காக கிடைக்கின்ற பற்றுச்சீட்டு என்பவற்றுடன் குறித்த விடயம் தொடர்பில் நிறுவனத்திலிருந்து கிடைக்கின்ற பதில்களை ஆவணப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான சான்றுகள் இருக்கும் போதே உங்களது கோரிக்கைகள் ஒம்புஸ்ட்மன் காரியாலயத்தினால் கருத்தில் கொள்ளப்படும். 


ஒம்புட்ஸ்மன் காரியாயத்திற்கு முறைப்பாடடொன்றை சம்ரப்பிக்கும் முறைகள் குறித்து அறித்துகொள்ள  CLICK HERE

தற்போதைய ஒம்புட்ஸ்மன்னாக ஓய்வுபெற்றஉயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி கடமையாற்றுகின்றார். 

இதற்கு முன்னர் ஒம்புஸ்ட்மன்னாக கடமையாற்றிய ஓய்வுபெற்றஉயர் நீதிமன்ற நீதிபதி  எல்.ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்க அவர்களின் கருத்துப்படி  பாதிப்புக்களுக்கு அல்லது அநீதிகளுக்கு உள்ளான ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களே  மேற்படி காரியாலயத்திற்கு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு நீதிமன்றம் சென்று பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வழக்கறிஞர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குகின்ற வசதி காணப்படுவதில்லை. அவ்வாறானவர்களுக்கு பண விரயமின்றி தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு இந்த நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது. பொதுவாக ஓய்வூதியத் திணைக்களம் குறித்த முறைப்பாடுகளே பெரும் அளவில் இந்த அலுவலகத்திற்கு கிடைக்கபெறுகின்றது.  இவற்றுக்கு மேலதிகமாக கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அமைச்சு தொடர்பிலும் மகவளி அதிகார சபை தொடர்பிலும் அதிகமான முறைப்பாடுகள் வருகின்றன. ஓய்வு பெற்றவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாக இழைக்கப்படுகின்ற அநீதிகள் தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒம்புட்ஸ்மன் காரியாலம் செயலாற்றியிருக்கின்றது. 

ஒம்புஸ்ட்மன் காரியாலயத்தினால் 2019 ஆம் ஆண்டில் தீர்த்துவைக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்த சம்பவத் தொகுதியினைப் பார்வையிட CLICK HERE

பொதுவாக வருடாந்தம் 2500-3000 வரையான முறைப்பாடுகள் ஒம்புட்ஸ்மன் காரியாலயத்திங்கு கிடைக்கின்றன.. ஆனாலும் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் மூலமாக அநீதியிழைக்கப்பட்டவர்களின் தொகை இதனிலும் அதிகமானதாகும் என்றது மறுக்கப்படமுடியாத விடயமாகும். எனினும் இது போன்ற நிறுவனங்கள் இயங்குவது தொடர்பில் மக்கள் அறியாதிருப்பதால் பலர் அவை அனைத்தையும் சகித்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர். இந்த அமைதியின் விளைவாக நீதமற்ற முறையில் இயங்குகின்ற அதிகாரிகளின் அத்தகைய நடவடிக்கைகள் வலுப்பெற்று அநீதிகள் இழைப்பது அதிகரிக்கின்றன. மக்கள் அரச சேவையின் ஊடாக தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை இது போன்ற நிறுவனங்களுக்கு அறிவிப்பார்களானால் அரச சேவையினை மிகவும் சிறந்த ஒன்றாக மாற்றியமபை்பதற்கான வாய்ப்பு கிட்டும்.  பத்தாயிரம் அளவில் முறைப்பாடுகள் கிடைக்குமாயினும் அது தொடர்பில் கடமையாற்று அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஒம்புஸ்மன் காரியாலயம் தயாராகவே உள்ளது. 

ஒம்புஸ்ட்மன் அலுவலகத்தினால் புலனாய்வு செய்யப்படாத முறைப்பாடுகள் குறித்த விபரம் அறிய CLICK HERE


ஒம்புஸ்ட்மன் காரியாலயத்தினால் மேற்கொள்ளும் புலனாய்வு நடவடிக்கைகளின் போது அவர்கள் விபரம் கோருக்கின்ற சம்பந்தப்பட்ட காரியாலயங்களிலிருந்து முறையான தகவல்கள் சரியான நேரங்களில் சிலபோது கிடைக்காமலிருந்தாலும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு முறையாக தங்களது பக்கச்சார்பின்றி சுயாதீனமாக பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். அத்துடன் அவர்களது சுயாதீனத் தன்மைக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் விடுக்கப்படுவிதில்லை என்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  எனவே அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொள்வதற்கான இது போன்ற நிறுவனங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பதும் அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்துவதும். அநீதி இழைக்கப்பட்ட பல மக்களுக்கும் உதவியாக அமையும். 


அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொள்ள உதவியாக இந்தப் பதிவு lankajobinfo.com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்படுகின்றது. ஏனையவர்களும் பயன் பெறவு நீதி பெறவும் இந்த நிறுவனம் குறித்த விபரங்களை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

இந்தப் பதிவு நிர்வாம் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் எனும் ஒம்புட்ஸ்மன் குறித்தாகும். இவை தவர இன்னும் பல ஒம்புட்ஸ்மன் வகைகள் காணப்படுகின்ற அவை குறித்து வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.


ஒம்புஸ்ட்மன் அலுவலகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் குறித்து அறிய CLICK HERE


ஒம்புஸ்ட்மன் அலுவலகத்தின் சர்வதேச உறவுகள் குறித்து அறிய CLICK HERE


தொடர்புகளுக்கு


முதலாவது மாடி, இல. 14, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை கொழும்பு -04.
தொலைபேசி: 0112588798
பெக்ஸ்: 0112501126



மின்னஞ்சல் :

[email protected]



ஓய்வுபெற்றஉயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி - நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸமன்) 

:0112501115


செல்வி. ஏச்.பி.அநுலா பத்திரன- நிர்வாக அலுவலர்
அலுவலகம்:0112588798, :0112585896


இணையத்தளம் www.ombudsman.gov.lk