>

ad

ஆசிரியர் சம்பளம் நிறுத்தி வைப்பதற்கு எந்த விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை



இன்று (21) ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு எந்த விதமான தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என  கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 

அவ்வாறு சம்பளத்தை நிறுத்துவதற்கு ஜனாதிபதியோ அல்லது கல்வி அமைச்சரோ தனக்கு அறிவித்தல் வழங்கவில்லை என்பதாகவும்  தெரிவித்தார்.

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு என்பது கலவரப்படாமல் நல்ல முறையில் தீர்க்கப்படவேண்டிய ஒரு விடயமாகும் என்பதாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கள் கிழமை ஆசிரியர் அதிபர்கள் அனைவரும் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக தொழிற்சங்கள் தனக்கு அறிவித்திருப்பதாகவும் செயலாளர் தொரிவிதார். 


ஆசிரியர் தொழிற் சங்கங்களிலிருந்து சாதகமான பதில்கள் கிடைத்திருப்பதால் திட்டமிடப்பட்ட அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியுமான நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


இன்று நாடு முழுவதுமுள்ள 200 க்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட 5106 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் அச்சமின்றி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் செயலாளர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார். 


சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது என்று கருதி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் பிள்ளைகளைக் கவணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்று ஆசிரியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் பாடலொன்றும் சிறுவர்களுக்காக சிறுவர்களுக்காக சிறுவர் பாடலொன்றும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.