World Health Organization Sri Lanka
எனது கொவிட்-19 கதை
சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி
கொவிட்-19 கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய வாழ்க்கையினுள் நுழைந்ததுடன், அன்று முதல் எதுவும் சரியாக இல்லை. பெருந்தொற்றின் நீடித்த மற்றும் உலகளாவிய போக்கு எல்லா நாடுகளிலும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அர்த்தப்படுத்தியது மற்றும், அதனுடைய தீவிரம் மற்றும் எதிர்வு கூறமுடியாததன்மை என்பன உண்மையில் சவாலை ஒன்றாக எதிர்கொள்வதற்கு, எம்மை நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.
உங்கள் கொவிட்-19 பற்றிய அனுபவத்தை எங்களிடம் கூறுங்கள்.நீங்கள் 2020-21 இல் திரும்பிப் பார்க்கும் போது எதனை நினைவிற் கொள்வீர்கள்? நாங்கள் உங்களிடமிருந்து கேட்க விரும்புவதுடன், மிகவும் கடினமான இந்த நேரத்தில் இச் செயற்பாடு சற்று நன்றாக உணர்வதற்கு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
நீங்கள் தற்போது பாடசாலையில் கற்பவராக இருந்தால்
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
உங்கள் வரைதல் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவை பென்சில்களாக, கிரேயான்ஸ் அல்லது எந்த வகையான வண்ணப்பூச்சுகளாக இருக்கலாம். மேலும், A4 அல்லது A3 தாளை தெரிவு செய்யவும்.
02 உங்கள் கொவிட்-19 கதையை வரையுங்கள். நீங்கள் பெருந்தொற்று பற்றிய எந்தவொரு எண்ணக்கருவையும் எடுக்கலாம்: உங்கள் தனிப்பட்ட அனுபவம் அல்லது உங்கள் குடும்பத்தின் அல்லது சமூகத்தின் அனுபவம் உள்ளார் அல்லது தேசிய அளவில் சுகாதாரப் பணியாளர்கள் அல்லது அரசாங்கத்தின் வகிபாகம் குறித்த உங்களின் அவதானிப்பு அல்லது, உலகளாவிய தாக்கம் மற்றும் பதிலளிப்பு பற்றிய உங்கள் அபிப்ராயம்.
03 உங்கள் ஓவியத்துடன் ஒரு சிறிய தலைப்பு மற்றும் கதை சுருக்கத்தை உள்ளடக்கவும். தலைப்பு 10 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருப்பதுடன் கதை 50 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். உங்கள் ஓவியம் உங்களின் கொவிட்-19 அனுபவத்தை எவ்வாறு உள்ளடக்குகிறது என்று எங்களிடம் சொல்ல இரண்டையும் பயன்படுத்தவும். நீங்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
04 உங்கள் பெயரையும் வகுப்பையும் உங்கள் சித்திரத்தின் வலது புறம் கீழ்மூலையில் எழுத மறக்காதீர்கள்.உங்கள் சித்திரத்தின் தெளிவான புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்
05 நீங்கள் முழு வரைபடத்தையும் படம் பிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மின்னஞ்சல்/செய்தியில் உங்கள் பெயர், வகுப்பு, பாடசாலை, பிறந்த திகதி மற்றும் முகவரி ஆகியவற்றை சேருங்கள். நீங்கள் விரும்பினால், நீங்கள் விசேட தேவையுடைய பிள்ளையாக இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும்.
06 மேலதிக தகவலுக்கு www.who.int/srilanka
.
தெரிவு மற்றும் போட்டி நியதிகள்
அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமானது. மேலே விபரிக்கப்பட்டுள்ள
விருதுக்கான வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்யும் அனைத்து
உள்ளீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
- பின்வரும் ஒவ்வொரு வகைகளிலிருந்தும் ஒரு வெற்றியாளரும் மற்றும் ஒரு இரண்டாம் இடமும் தேர்ந்தெடுக்கப்படும்:
* அனைத்து வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறுபவர்கள் (12) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிப்பாக பாடசாலைக்கான கொவிட்-19 வழிகாட்டியை உள்ளடக்கிய பாடசாலைக்கான பொதியைப் பெறுவார்கள்.
அனைத்து வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பெறுபவர்களின் (12) விபரங்களும் WHO சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும்.
* அனைத்து 12 கலைப் படைப்புகளும் WHO இலங்கையின் 2022ம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு வடிவமைப்புக்குப் பயன்படுத்தப்படும்.
- அனைத்து 12 கலைப் படைப்புகளும் WHO அலுவலகங்கள் - நாட்டுக்கான அலுவலகம், பிராந்திய அலுவலகம் (இலங்கைக்கான அறை) மற்றும் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
உங்கள் சித்திரத்தை
மின்னஞ்சல் மூலமாகவோ [email protected]
அல்லது 0769603154 வாட்ஸ்அப் செயலி மூலமாகவோ
31 அக்டோபர் 2021 அன்று மாலை 5 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்