படிமுறை 03.
இந்தப் பகுதியில் உங்களது பரீட்சை இலக்கத்தினைக் குறிப்பிடவும். அத்துடன் பரீட்சைக்குத் தோற்றிய வருடத்தையும் உரிய இடத்தில் குறிப்பிடவும். அதன் பின்னர் Search என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து Reference number என்பது நீங்கள் முன்னர் பதிவிறக்கம் செய்துகொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமாகும் அந்த இலக்கத்தினை இங்கு கொடுக்கவேண்டும். அதன் பின்னர் Search என்பதை கிளிக் செய்யவும்.
படிமுறை 04.
அடுத்து / தனிப்பட்ட விபரங்கள் என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள
விண்ணப்பதாரியின் முழுப் பெயர்
முதலெழுத்துக்களுடன் பெயர்
தேசிய அடையாள அட்டை இல
க.பொ.த. (உ/த) பரீட்சை தொடர்பான
க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய வருடம்
Z-புள்ளி
சுட்டிலக்கம்
கல்வியாண்டு
தெரிவுசெய்யப்பட்ட யுனிகோட்
தெரிவுசெய்யப்பட்ட பாடநெறி
தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகம்
குறிப்பு எண் (கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.)
போன்ற விபரங்களைப் பூர்த்தி செய்யவும்.
படிமுறை 05.
அடுத்து வருகின்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி எனும் இடத்தில் பயன்பாட்டில் உள்ள தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் விபரம் என்பவற்றை இங்கு வழங்கவும்.
அடுத்து தேவையற்ற யுனிகோட்களை விருப்பொழுங்குப்பட்டியலில் இருந்து நீக்குதல் எனும் பகுதியில் விபரங்கள் வழங்க வேண்டும்.
அந்ப் பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்பினை விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கும் என்பதனால் அதனை சற்று விளக்கமாக இங்கு குறிப்பிடுகின்றேன்.
நீங்கள் இப்போது ஒரு பாடநெறிக்காக தெரிவாகியிருப்பீர்கள். அவ்வாறு தெரிவான பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் (Uni-code) என்பவற்றையும் பார்க்க அதிக விருப்பமுடையது என்பதாக உங்களது பல்கலைக்கழக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புகின்ற செயன்முறையின் ஊடாக மேற்படி விருப்பத் தெரிவாகக் குறிப்பிட்ட பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் (Uni-code) என்பவற்றுக்கு உங்களை உட்படுத்தத் தேவையில்லை எனில் அதாவது வேறு பாடநெறிகளுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட வேண்டியதில்லை தற்போது தெரிவு செய்திருக்கும் பாடநெறியே எனக்கு விருப்பமானது என்பதாக நீங்கள் கருதுவீர்களானால் உங்களது பல்கலைக்கழக கைநூலின் 4.2.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றவும் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்பும் செயன்முறை என்றால் என்ன என்பதனை விளங்கிக்கொள்வதற்கு கீழ் குறிப்பிடப்படும் ஆக்கத்தினை வாசித்துக்கொள்ளலாம்.
மேற்படி அடிப்படையில் வேறு தெரிவுகள் தேவையில்லை என்பதாக கருதி தற்போது தெரிவாகியுள்ள பாடநெறியையே தெரிவுசெய்கின்றேன் என்பதாக நீங்கள் விரும்புமிடத்து. Promotion declaration என்பதைக் கிளிக் செய்யவும்.
அப்போது உங்களுக்கு மேலே காட்டப்பட்டுள்ள படத்தின் அடிப்படையில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடநெறியினை விட அதிக விருப்பமுள்ளதாக நீங்கள் முன்னர் குறிப்பிட்டிருந்த பாடநெறிகளின் விபரம் உங்களுக்குக் காட்சியளிக்கும். அவற்றில் நீங்கள் நீக்க வேண்டிய பாடத்தெரிவுகளை தெரிவு செய்து remove selected higher preference என்பதனை கிளிக் செய்து நீக்கிவிடலாம். இதில் நீங்கள் விருப்பமானவைகளை மீதம் வைத்து ஏனையவைகளை நீக்கவும் முடியும். அல்லது அனைத்தையும் நீக்கிவிடவும் முடியும் அதன் பின்னர். Back என்பதில் கிளிக் செய்யவும்.
அதனை அடுத்துக் காணப்படுகின்ற மாணவருடைய பிரகடனம் எனும் பகுகிதியர் உறுதியளிக்கின்றேன் என்பதற்கு முன்னால் உள்ள கட்டத்தில் அடையாளமிடவும்.
படிமுறை 06.
அதனை அடுத்து பதிவுக் கட்டணம் எனும் பகுதிக்குச் செல்லவும்.
இந்தப் பகுதியில் காரியாலய உபயோகத்திற்காக என்த தலைப்பில் கீழ்வரும் அடிப்படையில் ஒரு குறிப்பு தரப்பட்டிருக்கின்றது.
காரியாயலய உபயோகத்திற்காக - நீங்கள் ஒன்லைன் ஊடாக பதிவு செய்ததன் பின்ன அவ்வாறு பதிவு செய்ததன் பின்னர் குறித்த பதிவு செய்யும் படிவத்தினை அச்சுப் பிரதி எடுகத்து பணம் செலுத்தியதற்கான அத்தாட்சியினை இணைத்து (வங்கிக்கு பணம் செலுத்தியிருப்பின் அதற்கான வைப்புப் படிவம்) பாிவுத் தபாலிவ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும்
ஒன்லைன் ஊடாக வங்கி அட்டையினைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதாயின் கீழே குறிப்பிட்ட PAY BY CREDIT CARD என்பதை தெரிவு செய்யவும். அப்போது உங்களுக்கு கீழுள்ள பக்கம் காட்சி தரும்.
படிமுறை 08.
இங்கு கேட்கப்படும் விபரங்களை வழங்கி கீழே குறிப்பிட்டுள்ள Pay now என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர் உங்களது வங்கியிலிருந்து சிலவேலை OPT அனுப்பி வைக்கப்படலாம் அதனையும் உடசெலுத்தி submit என்பதை கிளிக் செய்யவும். இலங்கை வங்கியின் அட்டை ஊடாக பணம் செலுத்துவதாயின் OPT விபரம் கீழுள்ளது போன்று கேட்கப்படும்.
வங்கியில் பணம் செலுத்தல்
பதிவு தொகையான ரூபா 50/- இனை வங்கியிலுள்ள பணம் செலுத்தும் ரசீதினை நிரப்பி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இலங்கை வங்கியின் சுதந்திரச் சதுக்க கிளையிலுள்ள ப.மா.ஆ. திரட்டுக் கணக்கு இலக்கம்
0002323287 இற்கு செலுத்தி இலத்திரனியல் பதிவினைப் பூரணப்படுத்தி (வங்கி மூலமாக கட்டணம் செலுத்தப்பட்டிருப்பின் ஸ்கேன் செய்யப்பட்ட கட்டணப் பற்றுச்சீட்டு(UGC copy)] பதிவேற்றப்பட்டு(Upload), உறுதிசெய்து கொள்வதன் பொருட்டு இலத்திரனியல் கட்டணபற்றுச்சீட்டு, இலங்கை வங்கி பற்றுச்சீட்டு ஆகியவற்றை சிரேஷ்ட உதவி செயலாளாளர் பல்கலைக்கழக அனுமதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல.20, வோட் பிரதேசம், கொழும்பு-07 ற்கு முகவரியிடப்பட்டு பதிவுத்தபால் மூலம் காரியாலய தேவைகளுக்காக அனுப்பி வைத்தல் வேண்டும்.
நீங்கள் வங்கியில் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், அந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு போர்ட்டலை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், உங்கள் தெரிவுக் கடிதத்தில் கொடுக்கப்பட்ட குறியீட்டு எண்ணை பணம் செலுத்தும் ரசீதின் “குறிப்பு எண்.”(“Ref. No.”)பகுதியில் எழுதுவதுடன் வங்கி காசாளரிடம் உங்கள் கட்டணத்தைக் குறிக்கும் வகையில் அந்த குறியீட்டு எண்ணை கணினி முறைமையில் சேர்க்குமாறு தெரிவிக்கவும்.
படிமுறை 09.
இவை அனைதது நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிரைவு செயததும். கீழ்வரும் விதத்தில் உங்களுக்குக் காட்சி தரும்.
இங்கு Download என்பதனை கிளிக் செய்து உங்களது விண்ணப்பத்தினை பிரதி எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பிரதி பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.