>

ad

ugc registration Guide 2021 in Tamil (with picture)





2020/2021 பல்கலைக்கழக பிரவேசத்திற்காக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பல்கலைக்கழத்திற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்கள் படிமுறை அடிப்படையில் இங்கு தரப்படுகின்றது.  பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வற்கு Letter of Selection & proceed to registration எனும் பகுதியல் தரப்பட்டுள்ள ஆவணங்கள் மிக முக்கியமானது அதில் உங்களுக்காக கடிதமும் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டர்களும் வழங்கப்ட்டுள்ளன. எனவே பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்கான பதிவுக்கடிதம் மற்றம் வழிகாட்டல்கள் அடங்கிய   ஆவணங்களைபதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  

படிமுறை 01. 


இதங்காக நீங்கள் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் https://www.ugc.ac.lk/ எனும்  உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். இங்கு 3 வது குறிப்பிடப்படிலருக்கின்றன To download the Letter of Selection & proceed to registration
என்ப தில் கிளிக் செய்ய வேண்டும்.


படிமுறை 02. 


இவ்வாறு நீங்கள் கிளிக் செய்ததும் லெகிங் எனும் பிரிவு காட்சிப்படும்.



இங்கு click here to login என்பதன் மீது கிளிக் பண்ணும் போது இன்னுமொரு பக்கத்திற்கு உங்களை அழைத்துச்செல்லும். அந்தப் பக்கம் கீழ்வருமாறு காடசி தரும். 

படிமுறை 03 



இந்தப் பகுதியில் நீங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணையத்தளத்தில் ஆரம்பத்தில் பதிவு செய்வதற்காக சமர்ப்பித்த  USERNAME , PASSWORD என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி  USERNAME , PASSWORD மறந்து பேயிருக்குமானால் forgot password என்பதில் கிளிக் செய்து கிளிக் செய்து உங்களது PASSWORD இனை சரி செய்துகொள்ளலாம். USERNAME , PASSWORD என்பவற்றைக் வழங்கி login என்பதில் கிளிக் செய்யுமிடத்து verify your identity எனும் பக்கம் உங்களுக்கு காட்சியளிக்கும். 

படிமுறை 04.





இந்தப் பகுதியில் நீங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணையத்தளத்தில் ஆரம்பத்தில் பதிவு செய்வதற்காக சமர்ப்பித்த உங்களது தேசிய அடையாள இலக்கத்தின் முதல் 6 இலக்கங்களும் Your NIC என்ற பகுதியில் காட்சியளிக்கும். இந்தப் பகுதியில் மீதமாக உள்ள இலக்கங்களை நீங்கள் பூரணப்படுத்த வேண்டும்.  Your Mobile number என்பதில் நீங்கள் சமர்ப்பித்த தொலைபேசி இலக்கத்தின் முதல் 6 இலக்கங்களும் காட்சியளிக்கும் இங்கும் நீங்கள் மீதி 4 இலக்கங்களை பூரணப்படுத்த வேண்டும். Your Email Address எனும் இடத்தில் ஆரம்பத்தில் பதிவு செய்வதற்காக பயன்படுத்திய  Email Address  இனை வழங்க வேண்டும். இவைகள் செயழற்றுப் போயிருப்பின் 1919 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு நுழைவுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

மேலே குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் உட்படுத்தியதன் பின்னர் Submit என்பதனைக் கிளிக் செய்யுங்கள். 

படிமுறை 05


இப்போது OPT எனும் வின்டோ காட்சியளிக்கும் அத்துடன் Please Click on the link sent your email.once you click on the link , an OPT will sent to your mobile number என்ற தகவலும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். 



படிமுறை 06


இப்போது நீங்கள் மேலே குறிப்பிட்ட உங்களது ஈமெய்ல் கணக்கிற்குள் பிரவேசிக்க வேண்டும்.  உங்களுக்கு கீழ் குறிப்பிடுவது போன்ற ஒரு ஈமெய்ல் செய்தி வந்திருக்கும்.


இங்கு Please click here to generate OTP  என்பதில் கிளிக் செய்யவும். இவ்வாறு கிளிக் செய்ததும் நீங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு OTP   இலக்கம் அனுப்பி வைக்கப்படும்.  குறித்த இலக்கத்தனை உரிய இடத்தில் உட்செலுத்தி  Submit என்பதனைக் கிளிக் செய்யுங்கள். 

படிமுறை 07 


இப்போது selection  எனும் பகுதி உங்களுக்கு காட்சி தரும். 

 இங்கு selection  Letters எனும் பகுதியில் உங்களது பதிவிளக்கம், unicode, தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகம், தெரிவு செய்யப்பட்ட பாடநெறி என்ற விபரங்களுடன் பல்கலைக்கழக பதிவுக்கான வழிகாட்டல்களும் அடங்கில் கோவையைப் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க என்பன தரப்பட்டிருக்கம். குறித்த லிங்கில் கிளிக் செய்து குறித்த கேவையினை பதிவறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பகுதிக்கு வந்த நீங்கள் குறித்த கடிதத்தினை பதிவிறக்கம் செய்யாது ஏதாவது காரணத்தினால் LOGOUT அகிவிட்டீர்கள் என்றால் மீண்டும் முதலிருந்து இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்ற அனைத்து படிமுறைகளையும் மேற்கொண்டே மீண்டும் இந்த இடத்திற்கு வரவேண்டும். எனவே இந்த பகுதிக்கு வந்த உடனேயே உங்களது கடிதத்தினை பதிவிற்கம் செய்துகொள்ளுங்கள். 

இப்போது தெரிவு செய்யப்பட்ட கடிதத்தினையும். அதனுடன் தரப்பட்டிருக்கும் ஆவணங்களளையும் கவனமாக வாசித்துக்கொள்ளுங்கள். Click here to go to the registration system என்பதில் கிளிக் செய்து  தெரிவு  செய்யப்பட்ட கடிதத்துடன் தரப்பட்டிருக்கும் இணைப்பு இலக்கம் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழக பதிவினைப் பூர்த்திசெய்யுங்கள். இந் செயன்முறையில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் கீழே குறிப்பிட்டுள்ள கமென்ட் பகுதியில் குறிப்பிடுங்கள். 

பல்கலைக்கழக விண்ணப்த்தினைப் பூர்த்தி செய்யும் முறை குறித்த பதிவினை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


எமது இணையத்தளத்தில் வௌியான பல்ககை்கழக மாணவர்களுக்கான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை கீழ் குறிப்பிடும் லிங்கில் பெறலாம்.