2020 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீள் பரீசீலனையின் பின்னரான பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சுமார் 51,000 பேர்களின் மீள் திருத்தப் பெறுபேறுகள் இவ்வாறு வௌியிடப்பட்டுள்தாக பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டீ. தர்மசேன குறிப்பிட்டார்.
அந்த அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதுன். தங்களுக்குக் கிடைக்கபெற்றுள்ள பாடநெறிகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.