இலங்கை பரீட்சைத் திணைக்களம் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) ப் பரீட்சை - 2021(2022) இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (Online) முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேற்படி பரீட்சைக்குத் தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் 2021 டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் இவ் அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக் கொண்டு தமது விண்ணப்பப்படிவத்தை நிகழ்நிலை முறைமையில் (ஒன்லைன்) பூரணப்படுத்த வேண்டும். விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும் போது பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தெரிவு செய்த நகரத்தையும் பாடங்களையும் சரியாக குறிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். மாற்றங்களை மேற்கொள்வதற்காக பின்னர் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.