அரச உத்தியோகத்தர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்கின்ற முறை படிமுறையாக.
1. பதிவு செய்துகொள்வதற்காக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் பிரவேசிக்க வேண்டும். கீழ்க் குறிப்பிடும் லிங்கின் ஊடாக நீங்கள் பிரவேசிக்கலாம்.
2. அதன் பின்னர் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்வதற்காக நீங்கள் குறித்த இணையத்தளத்தில் sign up செய்து கொள்ள வேண்டும்.
தற்போது உங்களிடம் குறித்த இணையத்தளத்தில் நுழைவதற்கான கணக்கு இருக்குமானால் இங்கு உங்களது தேசிய அடையால அட்டை இலக்கத்தையும் (NIC Number ) மற்றும் Password இனையும் உற்செலுத்தி உள்நுழையலாம்.
3. தற்போது உங்களுக்கு உரிய கணக்கு இல்லாவிடின் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று sign up என்பதில் கிளிக் செய்யவும்.
அப்பபோது கீழே படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று உங்களது .NIC Number, First Name, Last Name , Mobile Number , Email , Pass word ஆகிய விபரங்கைனை வழங்கி create என்பதில் கிளிக் செய்யவும்.
4. நீங்கள் சரியாக கணக்கினை உருவாக்கிதன் பின்னர் நீங்கள் வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு SLBFE எனும் பெயரில் ஒரு SMS வந்து சேரும்.
5. அதன் பின்னர் மேலே 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் போன்று அடையால அட்டை இலக்கத்தையும் (NIC Number ) மற்றும் Password இனையும் உற்செலுத்தி உள்நுழையலாம்.
6. அப்போது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் படத்தி போன்று Overseas job for government Employees எனும் பகுதியில் கிளிக் செய்து பிரவேசிக்கவும். இந்தப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் உங்களது CV ஒன்றினை தயாரித்து அதனை தொலைபேசியிலர் அல்லது கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
7.மேற்படி பகுதியில் கிளிக் செய்ததும் application பூரணப்படுத்துவதற்கான பகுதி காட்சிப்படும்.
இந்தப் பகுதியில்
1.Full Name(முழுப் பெயர்)
2.Nic number (தேசிய அடையலஅட்டை இலக்கம். )
3.Gender( பால்)
4.Mobile number (தொலைபேசி இலக்கம்)
5.Passport number (கடவுச் சீட்டு இலக்கம். )-பதிவு செய்வதற்கு இது கட்டாயமில்லை
6.Civil status (விவாக நிலை)
7.Email (மின்னஞ்சல்)
8.Current working place( தற்போது பணியாற்றும் இடம்)
9.Current working district (தற்போது பணியாற்றும் மாவட்டம்)
10.Interesting job category (நீங்கள் இணைய விரும்பும் தொழில் துறை)
போன்ற விபரங்களை உட்செருத்தி
உங்களது CV இனையும் upload பண்ணியதன் பின்னர் submit செய்துவிடவும்.
அதன்பின்னர் நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டீர்கள் என்பதனை அறியம் தருகின்ற reference number ஒன்று உங்களுக்குக் கிடைக்கப்பெறும். எதிர்கால தேவைகளுக்காக இந்த இலக்கத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.