>

ad

கல்விமுதுமாணி 2020/21 நிகழ்ச்சித்திட்டத்திற்கான அனுமதி அட்டையை ஒன்லைனில் பெறல்

 அன்பான பரீட்சார்த்திக்கு

நீங்கள் அறிந்தபடி, கல்விமுதுமாணி நிகழ்ச்சித்திட்டத்திற்காக 2021 நவம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படவிருந்த நிகழ்நிலைத் தெரிவுப்பரீட்சை 2021 நவம்பர் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இத்தெரிவுப் பரீட்சையானது 2021 நவம்பர் 27ஆம் திகதி காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிவரை நேரடியான எழுத்துப் பரீட்சையாக நடாத்தப்படவுள்ளது. 

இடைநிலை மற்றும் மூன்றாம்நிலை கல்வித்துறையானது பரீட்சார்த்திகள் தங்களுக்கு வசதியான இடத்தில் இந்த பரீட்சையை எழுத உதவும்பொருட்டு விபரங்களைத் திரட்ட இணையத்தில் கூகுள் படிவம்(google form) ஒன்றை பிரசுரித்திருக்கிறது. பரீட்சார்த்திகளிடமிருந்து பெறப்படும் துலங்கல்களின் அடிப்படையில், ஒரு நேரடி எழுத்துத் தெரிவுப் பரீட்சை திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையங்களில் 2021 நவம்பர் 27ஆம் திகதி காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிவரை நடாத்தப்படவுள்ளது.

கீழே கொடுக்கப்பட்ட இணைய இணைப்பைப் பயன்படுத்தி பரீட்சார்த்திகள் தமது தெரிவுப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதன்மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பல்கலைக்கழகத்தால கொடுக்கப்பட்ட இறுதித் திகதிக்கு முன்னர் தமது கொடுப்பனவுகளைப் பூர்த்திசெய்த பரீட்சார்த்திகளுக்கே இந்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்


தெரிவுப்பரீட்சையை எழுத தமது பிராந்தியநிலையத்தை தெரிவுசெய்யத்தவறிய பரீட்சார்த்திகள் நவம்பர் 25 ஆம் திகதிக்குமுன்
தமக்கு வசதியான பிராந்திய நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பரீட்சையில் சித்திபெற வாழ்த்துக்கள்.
நன்றி.

பதில் சிரேஸ்ட உதவிப்பதிவாளர்
பதிவாளருக்காக.