>

ad

Admission to full time training courses - 2022 Tamil

இலங்கையில் இன்று வாகனங்களின் தொகை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக வாகனம் பழுதுபார்க்கின்ற தொழில்நுட்பவியலாளர்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது.

உங்களிடம் வாகன தொழில் நுட்பம் தெடர்பான பயிற்சியும் அதற்கான சான்றிதழும் இருக்குமாயின் மிகவும் இலகுவாக சிறந்த வருமானம் உள்ள தொழில்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஜேர்மன் டெக் என்பது இயந்திரவியல் தொழில் நுட்பப் பயிற்சினைப் பெறுவதற்காக சிறந்த ஒரு இடம் என்பதாக் குறிப்பிடலாம். இந்த நிறுவனம் வழங்குகின்ற பயிற்சிநெறிகளுக்கு இலங்கை போன்றே வௌிநாடுகளிலும் அங்கீகாரம் காணப்படுகின்றது.

நவீன தொழிநுட்ப அறிவினைக் கொண்ட பயிற்றுவிப்பாளர்களினால் நவீன தொழிநுட சாதனங்களைப் பயன்படுத்தி இங்கு கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு காணப்படுகின்ற அனைத்து பாடநெறிகளுமே 80% பிரயோகப் பயிற்சியையும் 20% வப்பறைக் கற்கையும் கொண்டிருக்கின்றது.


இந்த நிறுவனத்திவ் பகுதி நேர பாடநெறிகள் முழு நேரப் பாடநெறிகள் என இரண்டு வகையான பாடநெறிகள் காணப்படுகின்றன. தொழில் ஒன்றினை எதிர்பார்க்கின்றவர்கள் இந்த நிறுவனத்தில் முழு நேர பாடநெறி ஒன்றினை பயில்வதன் ஊடாக இலகுவாக தொழில் வாய்ப்பொன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது முழு நேர பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

எல்லாப் பாடநெறிகளும் சிங்களத்தில் இடம்பெறுவதுடன் மோட்டார் இயந்திரவியல் பாடநெறி மாத்திரம் தமிழில் நடைபெறும். சிங்களம் தெரிந்த தமிழ் மாணவர்கள் எந்தப் பாடநெறியையும் பயில சந்தர்ப்பம் அளிக்கப்படுவர்,.

இந்த பாடநெறிகளுக்காக 16 முதல் 22 வயது வரையான ஆண் பெண் இரு பாலரும் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான தகைமை (சா/த) பரீட்சையில் கணிதம் மொழி உட்பட ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அல்லது லன்டன் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

எனினும் சாதாரண தர்த்தில் சித்தி இல்லாத போதிலும் NVQ 3 ஆம் மட்ட சான்றிதழ் இருப்பவர்கள் அல்லது புத்தாக்கப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெற்றிவர்களும் விண்ணப்பிக்கலாம்,.

மேலதிக விபரங்கள அவசியப்படுவோர்' 011 2605625/ 011 2605535 எனும் தொலைபேசி ஊடாக அல்லது http://www.cgtti.lk/ எனும் இணையத்தள முகவரி ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்பேது இந்தப் பாடநெறிக்காக விண்ணப்பிக்கலாம்

விபரம்