கலைப் பாடத்துறை
மாணவர்கள் கலைப் பாடத்துறையின் கீழ் கல்வி பயில்வதற்காக கீழே காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இசைவாகப் பாடச்சேர்மானங்களைத் தெரிவுசெய்தல் வேண்டும்.
1.1 கீழே காட்டப்பட்டுள்ள சமூக விஞ்ஞானம்/ பிரயோக சமூகக் கற்கைகள் பாடத் தொகுதியிலிருந்து (1.6 அ) குறைந்தது ஒரு பாடத்தையேனும் தெரிவு செய்தல் வேண்டும். (மொழிப் பாடங்கள் 02இனை அல்லது மொழிப் பாடங்கள்
மூன்றினையும் தெரிவு செய்யும் மாணவர்களுக்கு இது ஏற்புடையதாகாது)
மாணவரது விருப்பத்தின் பிரகாரம், இத் தொகுதியிலிருந்து இரண்டு
பாடங்களையோ அல்லது மூன்று பாடங்களையுமோ தெரிவு செய்ய முடியும்.
1.2 கீழே காட்டப்பட்டுள்ள சமயங்களுக்கும் நாகரீகங்களுக்குமான பாடங்களிலிருந்து (1.6 ஆ) யாதேனும் சமயமொன்றைத் தெரிவு செய்வதாயின், அதனுடன் தொடர்புடைய நாகரீக பாடத்தை தெரிவு செய்ய முடியாது.
1.3 கீழே காட்டப்பட்டுள்ள அழகியற் கல்விப் பாடங்களிலிருந்து (1.6 இ) ஒரு
பாடத்தை அல்லது இரண்டு பாடங்களைத் தெரிவு செய்ய முடியும்.
1.4 கீழே காட்டப்பட்டுள்ள மொழிகள் பாடத் தொகுதியிலிருந்து (1.6 ஈ) எந்தவொரு மொழிப் பாடத்தையும் அல்லது பாடங்கள் இரண்டினையும் தெரிவு செய்ய முடியும். ஆனால், மூன்று பாடங்களையும் மொழிப் பாடங்களிலிருந்து தெரிவு செய்வதாயின், அது பின்வரும் விதத்தில் மாத்திரம் அமைதல் வேண்டும்.
* 1.6 (ஈ) (1) இல் குறிப்பிடப்படும் 03 பாடங்களும்
* 1.6 (ஈ) இல் (1) மற்றும் (2) ஆகிய இரண்டு உபதொகுதிகளிலிருந்தும் மாத்திரம் தெரிவுசெய்யப்படும் மூன்று பாடங்கள்
1.5 மொழிப் பாடங்கள் இரண்டினைத் தெரிவு செய்யும் ஒரு மாணவன் தனது
மூன்றாவது பாடமாக சமூக விஞ்ஞானம் பிரயோக சமூகக் கற்கைகள், சமயங்கள் மற்றும் நாகரீகம், அழகியற் கல்வி ஆகிய பாடத் தொகுதிகளிலிருந்து தாம் விரும்பிய ஒரு பாடத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.
1.6 கலைப் பாடத்துறைக்கான பாடத்தொகுதிகள்
(அ) சமூக விஞ்ஞானம்/ பிரயோக சமூக கற்கைப் பாடங்கள்
1. பொருளியல்
2. புவியியல்
3. வரலாறு (இலங்கை வரலாற்றுடன் இந்திய வரலாறு அல்லது ஐரோப்பிய வரலாறு அல்லது நவீன உலக வரலாறு)
4. மனைப் பொருளியல்
5. அரசியல் விஞ்ஞானம்
6. அளவையியலும் விஞ்ஞான முறையும்
7. கணக்கீடு அல்லது வணிகப் புள்ளிவிபரவியல்
8. விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம் அல்லது இணைந்த கணிதம்
9. தொழிட்பவியல் பாடங்களிலிருந்து ஒரு பாடம் (குடிசார் தொழில் நுட்பவியல் அல்லது பொறிமுறைத் தொழில்நுட்பவியல் அல்லது மின், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அல்லது உணவுத் தொழில்நுட்பவியல் அல்லது விவசாயத் தொழில்நுட்பவியல் அல்லது உயிர் வளத் தொழில்நுட்பவியல்)
10. தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
11. தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
(ஆ) சமயங்களும் நாகரீகங்களுக்குமான பாடங்கள்
1. பௌத்த சமயம் அல்லது பௌத்த நாகரீகம்
2. கிறிஸ்தவ சமயம் அல்லது கிறிஸ்தவ நாகரீகம்
3. இந்து சமயம் அல்லது இந்து நாகரீகம்
4. இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீகம்
5. கிரேக்க மற்றும் உரோம நாகரீகம்
(இ) அழகியற் கல்விப் பாடங்கள்
1. சித்திரம்
2. நடனம் (தேசிய அல்லது பரதம்)
3. சங்கீதம் (கீழைத்தேய அல்லது கர்நாடக அல்லது மேலைத்தேய)
4. நாடகமும் அரங்கியலும் (சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கிலம்)
(ஈ) மொழிப் பாடங்கள்
1. சிங்களம், தமிழ், ஆங்கிலம்
2. அரபு, பாளி, சமஸ்கிருதம்
3. சீனம், மலாய், பிரெஞ்சு, ஜேர்மன், ரஷியன், ஹிந்தி, ஜப்பான்
மேற்குறிப்பிடப்படும் விதத்தில் பாடத்துறைகளின் கீழ் குறிப்பிட்ட பாடச்சேர்மானங்களைத் தெரிவு செய்தல் வேண்டும். ஆனால் குறிப்பிட்ட பாடசாலையில் போதிய எண்ணிக்கையிலான மாணவர்கள் காணப்படும் பட்சத்திலும் நேர சூசியை வழங்குவதற்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இயலுமான பாடங்களுக்கு மாத்திரம் தமக்கு விருப்பமான பாடங்களைக்
கொண்ட பாடச்சேர்மானத்தைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்க முடியும். ஆயினும், பாடங்களுக்கு இடையில் "அல்லது" எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் அதிலிருந்து ஒரு பாடத்தை மாத்திரம் தெரிவு செய்தல் வேண்டும். இவ்வாறு பாடங்களைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதியின்போது தெரிவு செய்ய
வேண்டிய பாடநெறிகள் குறித்துப் பரந்த அறிவினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
2. ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்துறைகளுடன் இணைந்தொழுகாத ஏனைய பாடச்சேர்மானங்களைத் தெரிவு செய்யும் பட்சத்தில், விண்ணப்பதாரிகள் "குறித்த பாடத்துறை ஒன்றில் அடங்காத" என அறிமுகப் படுத்தப்படுவதுடன், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுகையில் "நாடளாவிய தரம்" (Island Rank) மற்றும் "மாவட்டத் தரம்" (District Rank) வெளியிடப்பட மாட்டாது.
3. க.பொ.த. (உயர் தர) த்திற்கான சகல பாடங்களும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலங்களில் கற்பிக்கப்படுவதுடன், கீழே காட்டப்பட்டுள்ள பாடங்களை ஆங்கில மொழியிலும் கற்பிக்க முடியும்.
1. உயிரியல்
2. பௌதீகவியல்
3. இரசாயனவியல்
4. இணைந்த கணிதம்
5, விவசாய விஞ்ஞானம்
6. கணக்கீடு
7. வணிகக் கல்வி
8. பொருளியல்
9. அரசியல் விஞ்ஞானம்
10. புவியியல்
இதற்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் வேறு பாடங்களைக் கற்பிப்பதற்கு தேவையாயின், மற்றும் இதற்கான வளங்கள் காணப்படுமாயின், கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கற்பிக்க முடியும்